Monday, December 17, 2012

கவிதை கு(கொ)லைகள்



கணிணி 
கற்போரையும் 
காண்போரையும் 
கவர்ந்திடும் 
கனவு கன்னி 




கடவுள் 
என்னை பொருத்தவரை 
நான்.................
குடிக்கமுடியாத 
கடல் தண்ணீர் 


அவன் வழங்கிய
 உலகசிறையில் 
இருக்கும் 
ஆயுள் கைதி நான் !


எண்ணங்கள் 
குளிர்ந்த சிந்தனைகளுக்கு 
புகை போடும்
விறகுகள் 


நட்பு 
உறைந்து போன 
ரத்த நாளங்களையும் 
உயிர்த்திடும் 
உயிர் தடிப்பு 


மன காயங்கள் 
ஈர சிமெண்ட் பூச்சில் 
பதிந்த 
கால் தடங்கள் !


மனிதனின் காதல் 
போர் அடிக்கும் போது  
கடவுள் 
பார்க்கும் 
காமெடி ஸ்பெஷல் !


காதல் 
சிரிக்க சிரிக்க
கதை பேசி 
திகில் பாதையில் 
நடக்கவைக்கும் 
திரில்லர் படம்  !


சுதந்திரமாய் 
திரிந்த பட்டாம்பூச்சிகள் 
காதல் 
தீப்பெட்டிகுள் 
அடைந்து கிடைகின்றன 









1 comment:

  1. அன்பின் மலர் பாலன் - அனைத்துக் குறும்பாக்களும் அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...