Wednesday, December 19, 2012

காதல் வந்தால் .................................................. ...பெண் 

என் அன்புகாதலா!!!!
நித்தம் 
உன்
நினைவில் ..........
நிஜம் தேடும் 
கனவில் (லாவது )
என் அருகே 
உட்காரேன் ...............


என் அன்பு காதலா ...
காத்திருக்கிறேன் .........
கை மாறி...........போகுமுன் 
கை பிடித்து விடு .

என் அன்புகாதலா .........
தட்டி கேட்க 
ஆள் இல்லை 
என நினையாதே ..........
தரம் கெடுவேன் 
என்று 
கனவு காணாதே .....
தாலாட்டு ......
பாடுவேன் 
நீ .........
தாலி கட்டிய பின் .


காற்றும் 
புகமுடியாத 
என் நெஞ்சினில்
உன் 
வியர்வை 
துளிகளை விழ .......
நினைக்கலாமா !

என் அன்பு
காதலா!!
கப்பம் கட்டியாவது 
என்னை 
உன் 
ராஜ்யத்திற்கு 
அழைத்து போ.............
உன்
காலணியாய் 
நான் 
காத்திருப்பேன்...........
அங்கு !



காதலா 
கரைந்து ........
போகிறது
என் 
அலங்காரங்கள் 
உனக்கான காத்திருப்பில் ...........
ஆனால் ......
கசங்காத 
என் 
உடையை 
துகில் உரிக்க 
பார்கிறது
பஸ் ஸ்டாண்டின் 
தோழர்களால்
சீக்கிரம்..........
வாயேன்...............!



இன்னும் ...........................

No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...