Friday, April 12, 2013

சித்திரை மகளே வருக வருக






சித்திரையே! செந்தமிழே!
சீரோடு வாழும் எங்கள்
குல மகளே !மூத்தவளே வா !

முன்னோர் போற்றிய பொன்மகளே !
வாழ்வு இனிக்க வந்த இனியவளே !

நினை மறந்திடுவோமோ
நிலை மறந்திடுவோமோ

தமிழ் அன்னைக்கு மற்றும் ஒரு மகள்
பிறந்தால் வேண்டாம் என்றிடுவோமோ!
உன்னை ஒட்டி பிறந்தவள் அவள்
தமிழ்க்கு மற்றொரு இனியவள் அவள்

ஒருதாய் மக்கள் அல்லவா
தமிழ் கொஞ்சும் மழலை அல்லவா
எங்கள் வளமிக்க வாழ்வின் வேரல்லவா!
                                                                  நீங்கள்............
உன்னை சீரோடு வரவேற்க காத்திருக்கும்
உன் உறவுகளை காத்திடு ஆசியை வழங்கிடு

உன் பிறப்பறியேன் நின் குலமறியேன்
தமிழன்னையின் தத்துபிள்ளையோ                   நானறியேன்!
எங்கள் காலங்க கடந்திட்டாலும்
காலுன்றி நிற்ப்பவளே!

நின் பிறந்த நாளெல்லாம்
எங்கள் இனிய நாளாய் பிறந்ததே!
இனி வரும் நாளும்
பாவை உன் பார்வைபட்டு
பரவசஒளி எய்தட்டுமே !
எங்கள் குலமகளே! மூத்தவளே !
வருக ! வருக  !
எங்களை சிறப்பிக்க !!!!


வலையுலக நட்புகள் அனைவருக்கும் சித்திரை தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

  

16 comments:

  1. சிறப்பு கவிதைக்கு வாழ்த்துக்கள்...

    உங்களுக்கும், உங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. சிறப்பான கவிதை மூலம் வாழ்த்திய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். உங்களை மாதிரி கவிதை எழுத தெரிந்தா கவிதை எழுதி வாழ்த்திருப்பேன்...ஆனா நான் ............ பதிவர் என்பதால் வாழ்த்தை மட்டும் இங்கு சொல்லிவிட்டு நழுவுகிறேன்

    ReplyDelete
  3. அனைவருக்கும் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
  4. அருமை...வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. சித்திரையைப் போற்றிப்பாடும் பாடல் மனந்தொட்டது. இனிய சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் பூவிழி.

    ReplyDelete
  6. சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. இனி வரும் நாளும்
    பாவை உன் பார்வைபட்டு
    பரவசஒளி எய்தட்டுமே !//
    அருமையான கவிதை.

    இனி வரும் நாள் எல்லாம் உன் பார்வையின் பட்டு
    அனைவர் வாழ்க்கையும் ஒளி பொறுந்திய வாழ்வாய் அமையட்டும்.
    உங்களுக்கும், வலையுலக அன்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. //இனி வரும் நாளும்
    பாவை உன் பார்வைபட்டு
    பரவசஒளி எய்தட்டுமே !//

    அருமை.

    இனிய “விஜய” வருஷ தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.:

    ReplyDelete
  9. விஜய வருட வாழ்த்துக்கள் மலர்.

    ReplyDelete
  10. வணக்கம் பூவிழி!

    அருமையான கவிதந்து அசத்திட்டீங்க...
    அழகிய கவிநடை. மிகவும் ரசித்தேன்.

    ரொம்பவே நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள்!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. எனக்கு்க் கவி‌தை எழுத வராதும்மா. ஆனா ரசிக்க ரொம்பப் பிடிக்கும். அழகான தமிழ்ல உங்க கவிதையை மிக ரசிச்சேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இதயம் நிறைந்த இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  13. சிறப்பான கவிதை
    இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. தமிழ்ப் புத்தாண்டை வரவேற்கும் கவிதை நன்று.
    தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. அருமையான பாடல்! உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. நன்று!புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...