புதன், 22 நவம்பர், 2017

படித்ததில் பிடித்தது

படித்ததில் பிடித்தது உங்களோடயும் பகிர்ந்து கொள்கிறேன்  ........      

எப்படியெல்லாம் மனசை தேத்தறாங்க பாருங்க 

"என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!"
"பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?" 

காலத்தின் கோலம் ......
.
“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி” 


 எல்லா கணவமாரும் பூவாங்கும் ரகசியம் ......

"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"

"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!" நீங்க என்ன ஆல்டாப்பு நாங்க அதுமேல பாருங்க .......


கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம். 


விளம்பரங்கள் செல்லாது 

செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"

"என்னாச்சு?" 

"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க" 

எப்படி சொன்னாலும் நாங்க மூளையை கசக்கி பிழிவோமில்ல இந்த மாதிரி கேள்விகள்ல.........

"எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!" 

"அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?"          

அறிவாளியாம்.......

"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!" 


கல்வி  கண்ணை துறக்கும் .......

நம்ம அப்பா முட்டாளாம்மா?"

"எதுக்குடா இப்படி கேகிறே?"

"எங்க வாத்தியார் என்னை 
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே" 

அன்பு பொங்குது  ........

மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.

கணவன்:- 
இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன் 


 அமைதிதான் இதுதான் அமைதி.........                                  


                                                                
(இதை பார்த்துவிட்டு இந்த பிளாக் பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன் சொல்லிடுவாங்களோ எது வம்பு நிறுத்துடுவோம் டார்ச்சரை )

வெள்ளி, 17 நவம்பர், 2017

நான்தான் கொசுடா கொசு

நான்தான் கொசுடா கொசு ஹா ஹா என்னை பார்த்தியா நான் எங்கே இருக்கேனு 


இப்ப இருப்பதிலேயே மனிதனை சித்திரவதை செய்ய அனுப்பட்ட மிகச்சிறிய ராட்ஷசன் ஏழை பணக்காரன் நல்லவன், கெட்டவன், கொள்ளைக்காரன் கொலைகாரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லாரையும் ஒன்றாகவே   பார்ப்பேன் 

எல்லா  இடத்துக்கும் போவேன் என்னை உன்னால் தடுக்கமுடியாது மனிதா நீ வாழும் போதே  அந்நியன் படத்தில் வருமே கருட  புராணத்தில் கூறிய எல்லவிதமான கொடுமையும் நான் உனக்கு  இங்கேயே காட்டுறேண்டா நீ பய பட  வேண்டியது எனக்கு எனக்கு   மட்டும் தான் என்னை  பார்த்து பயந்து எல்லா பிகாஷ்னும் நீ செய்துக்கணும் உன்னை ஒளிச்சிக்கணும்......


நீ எங்க? எப்படி? இருக்கேனுயெல்லாம்  பார்க்கமாட்டேன் நீ கொஞ்சிகிட்டு இருந்தாலும் சரி புலம்பிகிட்டு இருந்தாலும் சரி எனக்கு அதை பற்றியெல்லாம் கவலையில்லை ....பிரச்சனையில்லை..... ஐயோ! பாவம் என்றெல்லாம் பார்க்கமாட்டேன் அடங்காபிடாரியாய் ஆடவே வந்துள்ளேன்.


ராட்ஷன் என் வாழ்வு நிலை கம்மிதான் ஆனால் போவதற்க்கு முன் உன்னை டம்மியாகம போகமாட்டேன் என்ற  சாபத்துடனே பிறப்பெடுக்கிறேன் நீயென்னடா மமமதையோடு  அலைவது உன் மயிர்கால்களையும் தாண்டி உன் உயிருக்கும் உலைவைத்திடுவேன். 


என்னை வைத்து எத்தனை கிண்டலாய் மீமிஸ்போட்டுக்கோ ஜோக் போட்டுக்கோ  எல்லாம் போட்டு கொண்டாலும் உன் மாமிசத்தையே உருக்க வைக்கும் திறமை  எனக்கு இருக்குடா சொடுக்கு போடும் நேரத்தில் செய்திடுவேன் ஹா ஹா என்று கொக்கரிக்கும்.
  

வேப்பிலை போட்டாலும்சரி  சுத்தினாலும் சரி சுட்டாலும் சரி  அப்பிடியா என்று  பதுங்கிக்கொள்கிறது எவ்வளவு  நேரம் இது உனக்கு துணையிருக்கும் நீ வெளியில வந்துதான் ஆக்கணும் மச்சி என்னாலதாண்டா உன் நேரத்தை ஒதுக்கி நீயிதையெல்லாம்  செய்துகிட்டு இருக்கே என்கிட்ட இருந்து தப்பிக்க நீ கசப்பை முகர்வ உனக்கு ஆகாததையெல்லாம் செய்து பார்ப்ப ......நக்கலாய்  கொக்கரிக்கிறதே இப்படியாக  பயமுறுத்தி அலையும் சிறிய ராட்ஷனுக்கு பயந்து உலகின்  வல்லரசு அமெரிக்க கூட பயந்துடுச்சினா பார்த்துக்கோங்க  எதை எதையோ கண்டுபிடிக்கும் நேரத்தில் இதனுடைய டிஸ்ரேபென்ஸ்  தாங்கலையாம் அதுக்குன்னு உடனே நீயென்ன ஆடுவது  உனக்கு  ஒரு எதிரியை  உன்னை போல் ஒருவனை உருவாகிறேன் பாருன்னு சாவல் போட்டு கொண்டதுதாம் 
களத்தில் இறங்கியதாம் அது என்னனா .....


அமெரிக்க விஞ்ஞானிகள் மரபணு மாற்றத்தின் மூலம் மூன்று கண்களுடன்(நெற்றி கண் திறப்பினும் குற்றமே என்று இதுவும் அதுகூட ஒத்துழைக்க போயிட போகுதய்யா  பார்த்து கோங்க)  இறக்கை இல்லாத கொசுவை உருவாக்கியுள்ளனர்.அமெரிக்காவின் கலிஃபோர்னிநா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் பறக்க முடியாத, மூன்று கண்கள் கொண்ட கொசுவை உருவாக்கியுள்ளனர். இந்த கொசுக்கள் மஞ்சள் நிறத்தில் உள்ளன.
        eferve

CRISPR/Cas9 என்ற மரபணு மாற்ற தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்த கொசுவின் மரபணுக்களில் மாற்றம் செய்துள்ளனர். இவ்வாறு கொசுக்கள் உருவாக்கப்படுவது ஏன் என்று கேட்டால் அதற்கு சற்றும் யூகிக்க முடியாத பதில் அவர்களிடம் உள்ளது.
                                         

இந்த மாதிரி கொசுக்களை உற்பத்தி செய்தால் அவற்றின் மூலம் பெருகும் கொசுக்களும் இதேபோல குறைபாடு உள்ளவையாக இருக்கும் என்றும் உயிரைப் பறிக்கும் பயங்கர நோய்களைப் பரப்பும் கொசுக்களின் பெருக்கத்தை இது கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.(ஹா ஹா ஹா  தலையை சுற்றி மூக்கை  தொட்டிடுவோமில்ல )என்னடா இவளுக்கு  இவ்வளவு சந்தோஷமா இதை பார்த்து  என்னை  கோபத்தில் இப்போதும் வந்து பதம் பார்த்துவிட்டு போகிறது என் ரத்தத்தில் உப்பு இருக்கா ,கரி இருக்கா, சுகர் இருக்கா என்று ???
                                                             என் நாட்டுக்கு 
                                                             உன் நாட்டுக்கு 
                                                             எதிரி நாட்டுக்கு 
                                                             எல்லா நாட்டுக்கும் 
                                                             இருக்கும் 
                                                             ஒரே போராளி 

செவ்வாய், 14 நவம்பர், 2017

கேட்டிங்களா கேட்டிங்களா கதையை


                        மகாத்மா காந்தினாலே  அவர் கண்ணாடியை  தாம் முதலில் நினைவு கொள்வோம் ஏதாவது புதிர் காம்படீஷன் வந்தால் கூட  அந்த கண்ணாடியை வைத்தே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மகத்துவம் பெற்ற அவர் கண்ணாடி அடையாள சின்னம்- இது தூய்மை இந்தியாவின் அடையாள சின்னமாக உள்ளது.                          சரித்திரம் படைத்த இந்த கண்ணாடியை மாற்ற சொல்லி இந்தியாவிற்கு பயணம்  வந்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி லியோ ஹெல்லர்   சொல்லிட்டார் எப்படின்னா  "தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் பார்த்தேன். இது மோசமான நிலைமை. விரைவில் காந்தியின் கண்ணாடியில் மனித நேயத்தின் லென்ஸை மாட்ட வேண்டும்" 

                           தூய்மை படுத்த ஐடியா கொடுப்பாங்கனு பார்த்தா இவங்க கண்ணாடியை மாற்று வேஷ்டியை மாற்று என்று டிரெஸ் சென்ஸ்க்கு  சொல்விட்டு போயிருக்காரு ...                           இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது  நாமதான் சர்ச்சயை கொண்டாடுவதில் வல்லவர்கள்  ஆச்சே                           அரசு தரப்பில் இருந்து "மகாத்மா காந்தி மனித உரிமைகளுக்கு(இதபாருங்க ஜோக்கு மனித உரிமையாம் இதுதான் புரியமாட்டேங்குது இதெல்லாம் நல்ல சொல்றாங்க ஆனா பின்பற்றுகிறார்களா  இதைமட்டும் கேட்க கூடாது )  முன்னுரிமை அளித்தவர் என்பது உலகத்தில் அனைவருக்கும் தெரியும். சுகாதாரதைப் பேண தனி கவனம் செலுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவரது கண்ணாடி மிகவும் பொருத்தமானது" என்று பதிலை கொடுத்து இருக்கிறது. இதுமாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லனும்னா தெளிவா உடனே சொல்லுவோமில்ல  


ஞாயிறு, 12 நவம்பர், 2017

புதுமை என்பது இதுதான்

புதுமை என்பது இதுதானா .....
                    இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று பூனே பல்கலை கழகம்  இங்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திடிரென்று இந்த  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதாம் .                     

                 

                     அது என்னவென்றால்  இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது 


பின்னர் எப்படி  தங்க பதக்கம் வாங்குவது ?

                    


                       தங்க பதக்கத்தை  விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள்  அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம்  இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ? 


                  மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தங்கப்பதக்கம் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பழக்கவழக்கம் என்பது நெறிமுறை படுத்தபடுமா? இப்பொழுதே அங்கே போயி இதை பற்றி  ஆராயவேண்டுமென்று வேகம் வருகிறதே....... எப்படி இதை கண்காணிக்க போகிறர்கள் என்று ...


                    இதுமட்டுமல்ல பதக்கம் வாங்கும் மாணவர்கள் ஷெலர் மாமா.! என்று பட்டபெயரும் கொடுக்கப்படுமாம் இந்த விதிகளுக்கு உட்படடவர்கள் இங்கு சேர்வதற்க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறதாம்   ஏன் இப்படி திடீரென்ற முடிவு குற்றங்களை குறைக்கவா ?மாமிசம் என்பது மதுவுடன் சம்பந்த படுகிறது என்ற நோக்கத்திற்காகவே இப்படி மாமிசத்தையும் சேர்த்து தடை செய்திருக்கிறார்களா??

                     

                     இதை பெற்றோர்களே வரவேற்பார்களா என்பது சந்தேகமாகவே  இருக்கிறது ஏனென்றால் மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வாழும்  சமூகதினரிடமிருந்து இதற்கு  வரேவேற்பு நிச்சியம் இருக்காது.   

                    

புனே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியிருக்கிறதாம் . மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


உணவு என்பது பிளவை கொடுக்குமா? 
    

நீங்களும் சொல்லுங்களேன்.........