செவ்வாய், 16 ஜனவரி, 2018

பொங்கியதை ................

காணும் பொங்கலாம் பதிவுகள் காண வந்துவிட்டேன்




போகி  என்று போகிளால்
புகையின் புலம்பல் பாடி பொங்கிட 
பொங்கல் வந்தது இங்கு ....
பொங்கிய மக்கள் எல்லாம்
சுவைக்க பட்டார்களா, உணரப்பட்டார்களா 
யாம் அறியோம் பராபரமே ....
பொங்கிட அரிசியும் 
சுவைத்திட கரும்பையும்  
கொடுத்தவர்கள் சுகப்பட்டார்களா  
யாம் அறியோம்  பராபரமே 
கட்டிய சுவருக்குள் வைத்திட்ட பொங்கலின் வாசம் 
அடுத்தவர் வீட்டின் சுவர் நுகர்ந்ததா 
யாம் அறியோம் பராபரமே
தை வரும்  , பொங்கல் வரும், தொடர் விடுமுறை வரும் 
தொல்லை செய்யும்  தொலைக்காட்சி முன் 
பல்லிளித்து ,முன் நெற்றி சுருங்கி, 
வாய் குவித்து, கண்விரித்து , தலையாட்டி
நடு நடுவே  அலங்காரமாய் 
பொங்கல் வாழ்த்து 
கைபேசியில் கலைநயத்துடன் 
பொங்கல் ருசித்து, கரும்பு சக்கை குவித்து 
பொழுது முடிந்தது பராபரமே 

4 கருத்துகள்:

  1. மறைந்து போன கலாச்சாரக்கொலையை அழகாக, நாசூக்காக தாக்கிய கவிதையை மிகவும் இரசித்தேன்.

    இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. 14ம் தேதி வைத்த ப்[ஒங்கள் அக்கம்பக்கம்கொடுத்துவிட்டு இன்னும் இன்னுமென்று இருக்கிறதுஅக்கம்பக்கதவர்கள் கரும்பு கொடுத்தனர் கடிக்க இயலாமல் அதுவும் என்னை பார்த்து ஏங்குகிறது பொங்கலும் வாழ்த்துக்சளுமொரு வழியாய் ஓய்ந்தனவே

    பதிலளிநீக்கு