விழிப்புப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விழிப்புப்புணர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?

இன்று கதை ஒன்று 

நடப்பது என்ன ?1,2,3,4,5.6,7 என்ற பதிவுகளை தொடர்ந்து  அந்த விஷயங்களை தாங்கிய கதை பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . 
சிறு பிள்ளைகளை பற்றியது என்பதால் கொஞ்சம் போர் அடிக்கலாம்..... ஆனால் இதில் யார் பக்கம் தவறு என்று படித்தால் சொல்லமுடியும் உங்கள் கருத்தயும் .... 
அதை இங்கே தொடர்ந்து சிறு பதிவுகளாக கொடுக்கிறேன் இது ஒரு முழு கதை ....படித்து உங்கள் எண்ணங்களையும் கதையின் நிறை குறைகளையும் பகிருங்கள்.



 புத்திசாலி யார் ?  



“நவீன்… நவீன்… கிளம்பிட்டியாடா… வந்து டிபன் சாப்பிடு..பஸ் வந்திடும்.”

நவீன் “ம்ம் இதோ வரேன்”, கண்கள் என்னமோ டீவியில் சுவரசியமாய் நேற்று நடந்த கிரிக்கட் மேட்ச் செய்தி தொகுப்பை பார்த்து கொண்டு, கைகள் சாக்ஸ் அணிகிறது .

“ஓ காட் என்னடா பண்ற இப்பபோயி டிவி பார்த்து கொண்டு”

ஜாகிங் முடித்து உள்ளே வரும் சுந்தரை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து ஒடுக்கிறான் டைனிங் டேபிளுக்கு சாப்பிட .

“ஸ்ஸ் அப்பாடா கொஞ்சம் சீக்கிரம் வாங்கனு டெயிலி சொல்லறேன் காதில் வாங்கறிங்களா..உங்க தலை பார்த்தா ஒழுங்கு அப்படியே வந்து குவிஞ்சிடும் ராசாக்கு..என்னைய பார்த்தா திமிரு..முளைத்து மூணு இல்லை விடல” புலம்பி கொண்டே கிச்சனுக்குள் நுழைந்து கொள்ளும் ரேணு
 
“டேய் என்.ஸி.ஸி கேம்புல சேர்ந்துட்டியா..?” சோபாவில் இருந்து குரல் வருகிறது

நவீனுக்கு விக்கல் எடுக்கிறது, கேள்வியில் கிச்சனில் இருந்து எட்டி  பார்கிறாள், அம்மாவை பார்த்து வாயசைக்கிறான் “பிலீஸ்மா..”

“துரைக்கு என்.ஸி.ஸி வேண்டாமாம்.. கிரிக்கெட் கிளாஸ்ல சேரணுமாம்..”

முறைக்கிறான் சுந்தர் “நான் என்ன சொன்னேன் கொஞ்சம் பெரியவனாகு சேர்ந்துக்கலாம், இப்ப யாராவது உன்னை கொண்டு போயி கூட்டிட்டு வரணும், எங்க ரெண்டு பேருக்கும் டைமில்ல, 12 வயசுக்கு பிறகு சேர்ந்தினா நீயே போயி நீயே வரலாம் இன்னும் ஒரு 2 வருஷம் போகட்டும்.”

“இல்ல அப்பா நம்ம அப்பார்ட்மென்டுலியே பக்கத்து பிளாக்ல இருக்கற அலெக்ஸ் அண்ணா போறான் பா நான் அவங்க போற டைம்ல போறேன் பா அவங்க கூட, பிளீஸ் பா நீங்க சொன்னா அந்த அண்ணா கூட்டிட்டு போவான் பா.”

சுந்தர் ரேணுவை பார்கிறான் என்ன சொல்ற என்பது போல்.. “நான் கேட்டு பார்கிறேன் முதலில், அதாங்க ஜார்ஜ் சாரோட பையன்”

“தேங்க்யூ மா……” என்று சத்தமாய் சத்தம் நவீன்.

மாலை மணி 7 மெயின்கேட்டிலேயே காத்திருக்கும் நவீன்,ரேணுவின் வருகையை பார்த்து.

வாசலில் கேப் வந்து நிற்கிறது ரேணு ‘பை’ சொல்லி இறங்கி திரும்பினாள் நவீன்…. “என்னடா இங்கே நிக்கற ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?...”

 “முடிச்சிட்டேன்…சரிவா..அம்மாஆஆஆஆ”.... “ஏண்டா இப்படி கத்தற..?”

“நீ அந்த அண்ணா கிட்ட கோச்சிங் பத்தி கேட்கிறேன் சொன்ன…?”

“விடமாட்டியே இப்பதானே வந்தேன் இரு முகமாவது கழுவிட்டு வரேன்”

“சரி நான் கீழயே இருக்கேன் நீங்க வாங்க”

ரேணு வருகிறாள் “வாடா” இருவரும் அலெக்ஸ் வீட்டு கதவின் முன்,காலிங் பெல் அடிக்கிறாள் அலெக்சின் அம்மா ரோஸ்மேரி வெளியே எட்டி பார்கிறார், “ஹேய் ரேணு வா வா.. என்ன அதிசியம்”

“ஹாய் ஆண்டி, இதோ இந்த வாலு இழுத்துட்டு வந்து இருக்கு”

“அப்படியா வெரிகுட்.. டா பையா , சரி உட்காருங்க ,என்ன விஷயம், முதலில் என்ன சாப்பிடற காபி டீ..?”

“அத்தலம் வேண்ணாம் ஆண்டி
ஸ்கூல் ஒர்க் எல்லாம் எப்படி போகுது..?”

“ம்ம் இன்னும் எக்ஸாம் வரும் போது தான் வேலை பெண்டை  கழட்டும்

"உங்க சன்னும்  10th ஆச்சே..”

“எப்போ சமசீர் சிலபஸ் வந்ததோ அப்பதிலிருந்து எல்லாத்துக்கும் குளிர்விட்டு போயிடுச்சி ஈஸி ஈஸி-னு, கிரிக்கெட் கோச்சிங்கில் இருந்தே இன்னும் வரவில்லை..கேட்ட நான் படிச்சுக்குவேன் நீ கவலை படாதேனு சொல்லவேண்டியது..எனக்கும் 12th போர்ஷ்ன் சீவியரா  ஆரம்பிச்சசுனா வீட்டுக்கு கூட வர லேட் ஆயிடும், என்ன பண்ண போறேன் தெரியலை ரேணு.. அங்கிள் தான் பார்க்கணும் சொல்லி இருக்கேன்”

ரேணு மணியை பார்க்கிறாள் 8 “இவ்வளவு நேரம் ஆகுமா ஆன்டி கிளாஸ் முடிய..?”

”கோச்சிங் செய்யறவரை  பொறுத்துனு சொல்லுறான் ..இப்ப வேண்டாமென்றாலும் கேட்காமல் கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சி ஆட்டுது”

“ம்ம் இதோ இந்த வாலையும் தான்.. இப்பவே இவருக்கு கோச்சிங்கில்  சேரணுமாம்.. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்”

“ஓ.. அதன் இந்த பக்கமா..”

“ஆமாம் ஆன்டி நாங்க  இரண்டு பேரும்  வர இவ்வளவு லேட் ஆகிடும் சில நேரம் கூப்பிட்டு போயி கூப்பிட்டு வர முடியாது.. சொன்னா கேக்க மாட்டறான் அடம்புடிக்கிறான் அதான் உங்க பையன் போகும் நேரத்தில் சேர்த்துவிட்டா அவன் கூப்பிட்டு போயி வருவானா ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்”

“அதுக்கென்ன ரேணு இப்ப வந்திருவான் கேட்கலாம்.... இதோ வந்திட்டானே..  வாடா உனக்காதான் ஆண்டி காத்திருக்காங்க”

“ஹாய்”,

நவீன் எழுந்து ஓடி போயி அவன் கையைப்பிடித்து கொள்கிறான். “என்னடா..?”
 
“ஹாய்ண்ணா”..

“ஹாய் அலெக்ஸ், கோச்சிங் எப்படி போகுது..?”

“அங் சூப்பர் ஆன்டி”

“இவனுக்கும்  சேரணுமாம்  என்னாலயும் அவங்க அப்பாவாலையும் முடியாது சோ அதனாலதான் உன்கிட்ட  ஹெல்ப் கேட்கவந்தேன், நீ போகும்நேரம் இவனையும் கூப்பிட்டு போயி சேர்த்து டெயிலி  கூப்பிட்டுடு போயி வர முடியுமா..?” என்று தயங்கி கேட்கிறாள்.

”ஓ ஸூர்! நோ பிராப்ளம் ஆன்டி.”

“ஆனா இவ்வளவு லேட் ஆகும் அதுதான் யோசனையா இருக்கு.. இவன் ஹோம்வொர்க் பண்ணனும்..படிப்பு பாதிச்சா அங்கிள் வேற திட்டுவாங்க”

“அம்மா அம்மா பிளீஸ் மா நான் ஸ்கூல் விட்டு வந்தவுடன் செஞ்சு  வச்சிடறேன்”

“ஸ்கூல் வொர்க்ல ஏதாவது பிராப்ளம் வந்துச்சி.. உங்கப்பா அவ்வளவு தான்.”

“விடு ரேணு அவன்தான் செஞ்சு வச்சிடுறேன் சொல்றானே இப்ப 5th தானே எதுக்கு இப்பவே புடிச்சி பயப்படுற” யோசித்து கொண்டே ஓகே சொல்கிறாள்.

ஜார்ஜ் வருகிறார் “வாம்மா..”

“ஹாய் அங்கிள்” மணியை பார்கிறாள் 8.45 போன் .எடுத்து பார்கிறாள் நிறைய மிஸ்டு கால்ஸ் சுந்தரிடமிருந்து “ஓகே ஆன்டி வரேன்… அங்கிளும் இப்பதான் வந்திருக்கார் கவனிங்க ..நிறைய நேரம் ஆகிவிட்டது ..அலெக்ஸ் நாளைக்கு கூப்பிட்டுட்டு போறியா..?”

“ஓகே ஆன்டி… ஈவ்னிங் 5'க்கு ரெடியா இருடா”

“ஓகேன்னா பாய்,..... பாய்”

அடுத்த நாள் ஈவ்னிங் 5'ஓ கிளாக் நவீன் குதித்து கொண்டு அலெக்ஸை தேடி வருகிறான்.

“வாடா வந்துட்டியா இரு போகலாம் உட்கார் இதோ வரேன்” என்று உள்ளே போகிறான்.

ரோஸி வேலையில்இருந்து வருகிறார் “ஹாய் நவீன் கிளம்பிட்டியா பால் குடிச்சி சாப்பிட்டியா ஏதாவது..?” என்று கேட்டு கொண்டே உள்ளே போகிறார்.

“மாம் நான் கிளம்பறேன்.. வாடா”

“அலெக்ஸ் டிபன் வச்சிருத்தேனே சாப்பிட்டியா..?”

“அதுவேண்டாம் நான் ஜூஸ் குடிச்சிட்டேன்..பை!”

பெஸ்ட் காஸ்ட்லீ ஹீரோ சைக்கிள் அவனிடமிருக்கிறது அதனால் அவனுக்கு நவீனை  கூப்பிட்டு போவது சிரமமாக தெரியவில்லை.

கிளம்பி இரண்டு ரோட் கிராஸ் செய்த்தவுடன் அலெக்ஸ் சைக்கிளை நிறுத்திவிடுகிறான்.

“எண்ணா இங்கே நிறுத்திட்டீங்க..?”

“கொஞ்சம் இருடா ஒரு 5 மினிட்ஸ்” என்று ஒரு புக்கை எடுத்து பார்த்து கொண்டிருப்பது போல் பாவலா செய்கிறான், 
நவீனுக்கு ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டு நிற்கிறான், 

அப்போது ஒரு 13 வயது பெண் அவர்களை கிராஸ் செய்து நடக்கிறாள் இவர்களை பார்த்த்து கொண்டே.. அலெக்ஸ் நவீனை பார்த்து “டேய் இப்ப போச்சே அந்த கேர்ள் திரும்பி பார்க்க்கிறாளா பாரு சீக்கிரம் ஜல்தி” 
நவீனும் புரியாமல் பார்த்து கொண்டே இருக்கிறான்.

“ஆமாம்ண்ணா பார்க்கிறாங்க ஆனா போயிட்டாங்க.. யாருண்ணா அவங்க?”

“அதுவா..என் டாவு”

“டாவா..?” !!!!!

தொடரும் .....
நவீனுக்கு எவ்வளவு  புரிகிறது என்று பார்ப்போம் இனி....... 
இங்கு நடப்பது என்ன யார் என்ன செய்கிறார்கள்? 

செவ்வாய், 28 நவம்பர், 2017

தேவதை என்னும் அரக்கன்-நிஜம்

நடப்பது என்ன ?

                                                                    

தேவதை என்னும் அரக்கன் செய்யும்  விபரீதத்தை பாருங்க இந்த செல்போன் என்னும் அரக்கன் செய்யும் அட்டுழியங்கள் பல என்று   முன்பே பதிவு போட்டு இருக்கிறேன் கொஞ்சம் கவன குறைவாய் இருந்தாலும் சரி நம்  இழப்பை  ஈடு செய்ய முடியாமல் போய்விடும்.
இதை  பற்றி ஒரு நிஜம் இங்கே...................

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.இவர் ஒரு  ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, இவருடைய மகன் செந்தில், டிகிரி முடித்துள்ளார்.


கடந்த சில தினங்களாக. செந்திலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நாள் செல்ல செல்ல, பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயத்தை அடித்து துன்புறத்தத் துவங்கியுள்ளார்.காரணம் புரியாமல் அந்த தாய் தவித்துள்ளார்


செந்திலின் கொடுமை உச்சக்கட்டம் அடைய, வேறு வழி அற்று ஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .

போலீசும் நடவெடிக்கையில் இறங்கியது, 



செந்திலிடம் போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

அதில், கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்ததாகவும் செந்தில் கூறினார்.
தொடர்ந்து, புளூவேல் விளையாட்டில், தாயை அடிக்கச் சொல்லி கட்டளை வந்ததாகவும், அதன்படி தாயை அடிதத்தாகவும் கூறியுள்ளார்.


இவனை போல் மாக்கான்கள் இருக்கும் வரை சைக்கோ தனமாய் விளையாட்டுகளை உற்பத்தி பண்ணும் சைக்கோக்களுக்கு வசதிதான்......


விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக, பெற்ற தாயையே மகன் அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.இப்ப அதிர்ச்சி ஆகி என்ன செய்வது முதலிலேயே கவனித்து இருக்கனும் நம்ம வீட்டுது  சைக்கோ ஆகிறதா என்று .......

திங்கள், 30 அக்டோபர், 2017

டெடிக்கேஷன் (Dedication) வேண்டும் .

நடப்பது என்ன? -7 


அறியாத வயதில் டீன் ஏஜ்  நட்பு  எப்படி பட்டதாக  அமைந்துவிடுகிறது அது எம்மாதிரியான   பிரச்னைகளை  கொண்டு வந்துவிடுகிறது என்பதனை   பார்த்து வருகிறோம் போன பதிவில் நடப்பது என்ன ?-பகுதி 6ஒரு நிஜமாய் நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தேன் அதை படித்து கருத்துகள்  பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கு நன்றி..... டீன்  ஏஜில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது தான் குடும்பத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது .



ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் .கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்தாலும் வளர்த்திருந்தாலும்  எங்கே தவறிவிடுகிறோம் நாம்...... அது நம் மேல் நாமே சில நேரம் கொண்டுள்ள நம்பிக்கை நான் சரியாக வளர்கிறோம் கண்டிப்புடன் அதனால் தவறு ஏற்பட வாய்ப்பு வராது என்று நினைத்து  கொள்கிறோம். ஆனால் டின் ஏஜ் என்பது எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டது அது எந்த நேரம் எதை செய்யும்  என்று நம்மால் கணிக்கவே முடியாது. 



டீன்  ஏஜ் என்பது ஒரு புது உலகம் புரியாத வயது அங்கு பார்க்க படுவதெல்லாம் அவர்களுக்கு பிரமிப்பும் இனம் புரியாத மகிழ்ச்சியையும் கொடுக்கும் வயது .படிப்பை வைத்து  புத்திசாலி என்று இனம்காணப்படும்  பிள்ளைகளிடமும்  திமிராய் இருக்கும் அறிவுத்தனம் ,அறிவுத்தனமாய் இருக்கும் அசட்டுத்தனம் இருக்கும்.  



நாம் செய்ய வேண்டியது என்ன கண்காணிப்பு... கண்காணிப்பு ....கண்காணிப்பு பிள்ளை என்று பெற்றுவிட்டோம் அதுவே நம் வாழ்வின் முதல் கடமை எல்லாவற்றயும் விட    என்ற மனநிலை வரவேண்டும். கொஞ்சம் சோம்பலோ இல்லை வேறு காரணங்கலோ இந்தவிஷயத்தில் தடுப்பாக வர விட கூடாது.



பிள்ளைகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்.... . அவர்களின் பின்னனி  எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள்? உங்களிடம் சொல்விட்டு சென்றாலும் சொன்ன இடத்திற்கு தான் சென்று வருகிறார்கள் என்பதயும்.... சில  பல முறை கண் காணிப்பில் வையுங்கள். பழக்க வழக்கத்தில்  சின்ன மாறுதல் வந்தாலும் உஷாராகுங்கள் அவர்களின் உடல்  மொழியையும் கவனியுங்கள். திடிரென்று பணம் கேட்டால் எதற்கு  என்று நன்றாக  விசாரித்த பின் தேவையானவற்றிற்கு  மட்டும் கொடுங்கள்.  



படிப்பில் கவனம் குறைந்தால் வயது என்று காரணம் சொல்லி தள்ளி போட்டு விடாதீர்கள்.... என்னவாக காரணம் இருக்கலாம் என்று துப்பறியுங்கள். கூடா நட்பு வந்துவிட்டால் பதட்டப்பட்டு திட்டி வேறு நிலைக்கு நீங்கள் போகாமல் நாசுக்காக அவர்களை உங்களின் பால் திருப்ப நடவெடிக்கை எடுங்கள். முக்கியமாய் செல்போன் ரகசியமாய் பேசப்படுகிறதா..... கணனி ரகசியமாய்  கையாளப்படுகிறதா .......என்பதை கூர்ந்து  கவனியுங்கள். நான் தான் வாங்கி வைத்துவிட்டேனே  என்று  சமாதானம் படுத்தி கொள்ளாதீர்கள் இந்த வயது நம்மை ஏமாற சொல்லும் வயது. 



பல பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் தவறு பெரிதில்லை என்று ஓப்பிட்டு  செய்து தவற விட்டு விடாதீர்கள். தும்பை விட்டு வாலை  பிடித்த கதையாகிவிடும் நாம் கண்டிக்கும் போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு போவார்கள் இப்பொழுது அவர்களுக்கு நாம் கொடுக்க கூடியது அதிகமான கொஞ்சல் இல்லாமல் உனக்கு  நான் இருக்கிறேன் என்ற தாக்கத்தை கொடுக்கும் அரவணைப்பு. 


முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு  எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை  கண்டிக்கும் போது தாய்  எதிரான பாசதையும்  தயவையும்  குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர்  காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.

 

எல்லாத்தயும் விட  காதல் என்ற இப்பெயரில் நடக்கும்  கூத்துக்களின்  விளைவால் நிறைய பிள்ளைகள் தங்கள் உயிரை துச்சமென நினைக்கும் மடையர்களாக இருப்பார்கள்  இல்லை இச்சை என்ற மாயைகுள்  சிக்கி கொள்வார்கள் இது மிக பெரிய சங்கிலி  தொடர் போல் தவறுகளை உருவாக்கி விடும்.


 நம்  வாழ்க்கையில் பிள்ளைகளை வளர்ப்பதில்  டெடிகேஷனாக(அர்ப்பணிப்பு )இருக்க வேண்டும்.  எப்படி கடவுளிடம் இருக்கிறோமோ? அப்படி அவர் நம்மை அறிய வேண்டும் நம் வேண்டுதலுக்கு செவி சாய்க்க வேண்டும் என்று இருக்கிறோம் அல்லவா டெடிகேஷனோடு  அப்படி பிள்ளைகளின் மேலும்  இருக்க வேண்டும்.   அப்போதுதான் அவர்களின் உடல், உள்ளம் இரண்டு அலைவரிசையையும்  நம்மால் உணரமுடியும் . வழிகாட்ட  முடியும் தவறுகள் நேரும் முன் காக்கவும் முடியும் 



நாம் நாம்மட்டுமே  அவர்களை காக்கும் கரங்களாக  இருப்பதை அவர்களுக்கு உணர்த்த வேண்டும்.நாமுடைய  டெடிகேஷன்  அவர்களுடைய உள் உணர்வு அறிய வேண்டும் அவர்கள்  செய்யும் எல்லாமும், எண்ணங்களும் உணரப்படுகிறது என்று அவர்கள் உணர வேண்டும்.  அப்போது அவர்களின் செயல்களில் ஒரு கட்டுக்கோப்பு வர வாய்ப்பு இருக்கிறது . .



இந்த தொடரில் நான் ஆண்  பிள்ளைகள் வளர்ப்பை பற்றி மட்டுமே அலசி உள்ளேன் அவர்கள் செய்யும் தவறுகளின் அதீதத்தை  தொடவில்லை ஏன் என்றால் அது முடிவற்றதாக  இருக்கும். இன்று செய்தி என்று ஒன்றை கேட்க படிக்க  போனால் நாம் பார்ப்பது எல்லாம் கதிகலங்க வைக்கும்  விஷயங்களே இன்னறய இளைய தலைமுறை எதை நோக்கி போகிறது? யார் காரணம்? நாமாக வேண்டாம்........ தவறுகளின் விகிதத்தை  குறைக்க நம்மால் ஆனா முயற்சிகளை  எடுப்போம். 


எனக்கு மனதில் தோன்றியதை இதுவரை பதித்து வருகிறேன் தவறுகள் இருப்பின் எனக்கு  புரிய வையுங்கள் நானும் இன்னமும் பிள்ளை வளர்ப்பை பற்றி கருத்துக்கள் கற்று கொள்ள உங்கள் கருத்துக்களுக்காக காத்திருக்கிறேன் .  இதை தொடர்ந்து ஒரு சிறு கதையை  பதிக்கிறேன்  ஒரே டிரையா  போகுதே  கதை வழியாக சொல்லலாமென்று   அடுத்து வரும்  பதிவுகளில் அதற்க்கும்  பின்னர் பெண் பிள்ளைகளின் டீன் ஏஜ்ஜை பற்றி பார்க்கலாம்.

தொடரும் ....
 




சனி, 28 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?-பகுதி 6

நடப்பது என்ன ?-பகுதி 6



போன பதிவில் டீன் ஏஜ் நட்பு பற்றி  தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி 
நட்பு என்பதை பற்றி ஒரு நிஜ சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அது.......  


அவர்கள் மிக பாரம்பரியம் மிக்கவர்கள் அந்த வீட்டின் பெரியவர் வயது தற்பொழுது 80 தை  கடந்திருக்கும் எல்லோருக்கும் அதாவது அந்த ஏரியாவில் இருக்கும் எல்லோருக்கும் பெரியவராய் இருந்து வருபவர் மதிப்பாய் நல்லது  கெட்டதுக்கு முன்னே நின்று பார்வார் அவர் பஞ்சாயத்தாக  இருந்தாலும் அவரை  அணுகாமல் நடக்காது ....    மொத்தத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதோடு வாழ்பவர். குடும்பத்தை கட்டுக்கோப்பாய் நடத்துபவர். .அவருக்கு ஏற்ற துணைவியும், வீட்டில் இருப்போரையும்  மேலே சொன்ன க க க வை பின்பற்ற வைப்பவர் உணவு விஷயத்தில் கூட தமிழ் பராம்பரிய உணவை தினமும்  எடுப்பவர் காலையில் களி சாப்பிடுவாங்க வீட்டில் உள்ளோர் அநேகமான  நாட்கள்....... வீட்டில்  தோட்டம் போட்டு கீரைகள் வளர்ப்பார்கள்,மற்றவருக்கும் கொடுப்பார் .தேடிவந்து .... 



அந்த ஏரியா சொந்தமாய் ஒரே ஊரிலிருந்து வந்து ஒரே இடத்தில பணிக்கு சேர்ந்து ஒன்றாய் வீடுகள் வாங்கி வசிக்கும் ஒரு மிடில்கிளாஸ் ஏரியா....... இப்படி பட்டவருக்கு அவருக்கு ஒரு  மகன்  திருமணமாகி 2 பேரன்கள்  எல்லோரும் ஒன்றாய் வசிப்பவர்கள் .இரண்டு  பசங்களும்  வளர்கிறார்கள் மிகவும் மரியாதையுடன் அந்த தெருவில் உள்ளோர்களிடம் அவர்கள் பேசும் போது பேச்சில் அவ்வளவு  பணிவு மரியாதை தென்படும் அந்த பிள்ளைங்களை பார்த்து கற்றுக்கொள் அக்கம் பக்கமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூறுவார்கள். 



அதிகம் அந்த பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட மாடடார்கள் சிறுவயதில்........... டீன் ஏஜ் எட்டி பார்த்தவுடன் விளையாட மற்ற்வர்களுடன் வெளியே தலையை காண்பித்தாயிற்று......... இதில் முதல் பேரன் கொஞ்சம் கலகல டைப்பு வளவளவென்று பேசுவான் கொஞ்சம் வாலு அதிகமாய் திட்டுவாங்குபவன் படிப்புக்காகவும் , இரண்டாவது பையன்  ரொம்ப சூட்டிகை ,அழகும் கூட, திருத்தமாய் பேசும், நல்ல படிப்பவன்  அவர்கள் வீட்டின் செல்லப்பிள்ளை... தாத்தாவால் பாட்டியால் பெருமை பேசப்பட்டவன். இப்படி பட்ட பையன் நட்பினால் எப்படி வாழ்வை சிக்கலாகி கொண்டான் என்று இன்று வரை புரியவில்லை இது எங்களை பொறுத்த வரை பெற்றோரின் கவனகுறைவு என்றே  நினைக்கிறேன் சம்பவம்  நடந்து பேப்பரில் வந்த பின்பும் கூட நம்ப முடியவில்லை 


யாரால் எப்படி இந்த மாதிரி நட்பை பழகி கொண்டான் என்று புரியவில்லை படிக்க டியூஷன் அனுப்பி இருக்காங்க பத்தாவது என்று அங்கெ பழக்கம் வந்து இருக்கிறது...... போதை வஸ்துவை   எடுக்கும் நான்கு பிள்ளைகளுடன்  கூடாநட்பு அங்கெ பிடித்தது ஏழரைநாட்டு சனி...... இவனுக்கும் அந்த பழக்கம் தொற்றி கொண்டுள்ளது. அவனுடைய நடத்தையில்  மாற்றம் வந்திருக்கிறது படிப்பில் நேரம் கழித்து  விட்டு திரும்பல் படிப்பை காரணம் காட்டுதல் இப்படி நடந்து இருக்கிறது.   இங்கு அவனின் அம்மா, பாட்டி அதை பெரியவரை கவனத்திற்கு கொண்டு போகாமல் சமாளித்து இருந்திருக்கிறார் .இவர்களுக்குள் கண்டித்து இருக்கிறார்கள். முக்கியமாய் வெளியே தெரியாமல் இவனோ அந்த நட்புகளுடன்  ஐக்கியம் ஆக்கிவிட்டு இருக்கிறான் . 


பணம் தேவைபட்டு இருக்கிறது போதை வாங்க சின்ன பணதிருட்டு நடந்து இருக்கிறது பணம் பற்றவில்லை இதில் அந்த நட்புக்குள் ஒரு பையனுடைய ஒன்னுவிட்ட தாத்தா தனியாக வசிப்பவர் அந்த பையனின்  வீடு தான் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வருபவர்கள் இவனும் அவருக்கு துணையாக இருப்பவன் அப்போ அப்போ அவரின் பணவரவு வீட்டில் பணமிருக்குமிடம் என்ன பொருட்கள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்தவன் அங்கெ இருந்து பணத்தை திருடி இருக்கிறான் சில சமயம் இருந்தும் அவர் ரொம்ப உஷார் போல ஏதோ மோப்பம் பிடித்து விட்டு இருக்கிறார்  இதனால் இந்த பிள்ளைகள் கூட்டு சேர்ந்து அவர் வீட்டில்  திருடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதுங்க இரவில்....... பிளான் போட்டு போயிருக்குதுங்க எல்லாமும் சேர்ந்து அங்கெ சத்தம் கேட்டு அவர் முழித்துவிட்டார்  பார்த்துவிட்டு இருக்கிறார் சத்தமிட்டு இருக்கிறார் அவரை இந்த பிள்ளைகள்  ஆளுக்கு  ஒரு பக்கம் பிடித்து தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டதுகள் ஒட்டியும் விட்டார்கள் 



மறுநாள் போலிசாரால் கண்டு பிடுக்கப்படுகிறது யாரென்றும் விதி வலியது இங்கு இந்த தெருவிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்துவிட்டது கைதும்  செய்தாகிவிட்டது கூடா  நட்பு என்ன கொடுத்துவிட்டது...... இன்றுவரை அந்த குடும்ப உறுப்பினர்களை அதிகம்  வெளியே பார்க்க முடியவில்லை.... பேச்சில்லை  பாவம் அந்த பெரியவர் ஒடுங்கி போய்விட்டார். அவரின் மனைவியை பார்த்தே வருடங்கள் கடந்துவிட்டது. மகன் ரொம்ப சாது 40 வயதிலேயே கிழவனாய் தோற்றம் அடைந்துவிட்டார்  பிள்ளையை ஜாமினில் எடுக்க அள்ளும் பகலும் புழலின் வாசலில் என்ன செய்ய பாசம் கொல்கிறதே ...........


கண்ணால் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வாழ்வில் வந்த கூடா  நட்பு அவன் வாழ்வை கேள்விக்குறியாய் ,கேலியாக ஆகியதை யோசித்ததில் மனம் கனக்கிறது .இன்றைய கால பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கம்பி மேல் நடக்கும்  பயணம் போல் இருக்கிறது  மிகவும் கவனமுடன் நடக்க வேண்டும் இல்லை கீழே தான் விழ வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த சம்பவம் 



தொடர்கிறேன்.....




புதன், 25 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?--பகுதி 5


நடப்பது என்ன ?--பகுதி 5
செல்போன் என்னும் தேவதை என்னும் அரக்கன்  பற்றி  சில விஷயங்களை அலசினோம் முந்திய  பதிவில்  அதற்கு  பின்னுடத்தில்  தோழமைகளுடைய கருத்துக்களையும் நானும் தெரிந்து... புரிந்து கொண்டேன்  நன்றி...... இன்று பிள்ளைகளின் நட்பு பற்றி கொஞ்சம் அலசலாம் அதில் உள்ள சாதக பாதகங்கள்  என்ன என்று பார்ப்போம் ..


நடப்பது என்ன என்பதில் மிக முக்கியமான விஷயம் டீன் ஏஜ் நட்பு ....


டீன்  ஏஜில்  வரும் நட்பு அது வகைதொகை இல்லாததாக தான்  இருக்கும். நட்பை  ஆராய்ந்து தான் வைக்கணும் என்ற விஷயம் அவர்களுக்கு சிரிப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் .அவர்களை பொறுத்தவரை இந்த வயதில்  நட்பு புனிதமானது என்று ஒரு மாயைக்குள் இருப்பார்கள். நட்புக்காக எதையும் செய்ய துணிவார்கள் .தன்னால்  முடிந்தது, முடியாது அதை பற்றினா பெருமை, தாழ்வுமனப்பான்மை இதை பற்றி கூட்டாக  பேசி கொள்ளும் போது  ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதாக எண்ணி கொள்கிறார்கள். இது பெரியவர்கள் நமக்குமே பொருந்தும் ...



 பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் பிள்ளைகள் நட்பில் மிக இறுக்கமாய் பலமாய் பொருந்தி போவார்கள்.அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பு என்பது வேறு பாதுகாப்பு என்பது வேறு இங்கு பாதுகாப்பையும் சில நேரம் பெற்றோராகி  நாம் ஆண்பிள்ளைகள் விஷயத்தில் தளர்த்துகிறோம்... இது மிகவும் தவறு பல பெற்றோர்கள் இந்த வயதுக்கு இருக்கும் முக்கிய தகுதியாக நினைப்பது எதிர்பாலினத்தின் மேல் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதைத்தான் மீதி எல்லாவற்றையும்  புறம் தள்ளிவிடுகிறார்கள். ஆண்பிள்ளை ஆண்பிள்ளை கூடத்தானே நட்பாய் இருக்கான் கொஞ்சம் முன்னாபின்ன இருந்தாலும் பரவா  இல்லை என்று பல பேர் இந்த இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் .



இந்த வயதில்  அவர்கள் உடலில்  வரும் ஹார்மோன்ஸ் செயல்பாடுகளினால் தோன்றும் உணர்வுகளை.... நட்புகளுடன் ஈஷி கொள்வதிலும், முறைதவறி பேசி கொள்வதிலும், இணைந்து சுற்றுவதிலும் தீர்த்து கொள்வதாக இருக்கிறது. நண்பன்  என்ன உடை உடுத்துகிறானோ அதற்கேற்றாற் போல் தன்னையும் மாற்றி கொள்வது  பிடிக்கவில்லையென்றாலும் ரசனைகளை மாற்றி கொள்வது என்பது போன்ற செய்கைகள் ஆரம்பிப்பது இந்த நேரத்தில் தான் சில பிள்ளைகள் வயது ஏற ஏற திரும்பவும் தான் குழந்தையில் இருந்து வழிநடத்தப்பட்ட ரசனைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். சில பிள்ளை அப்படி வருவதை தன்னுடைய ஈகோ அடிபடுவதாக நினைத்து கொள்வார்கள் தாமாகவே  ஒரு அரணை அமைத்து கொள்வது.புகுந்து கொள்வது .



ஒரு சொல் வழக்கு இருக்கிறது உன் நட்பை காண்பி உன்னை அறிந்து கொள்ளமுடியுமென்று....... இதை நாம் ஆராயாமல் எடுத்து கொள்வோம் நாம் மிக அறிவாளிகள்   நடை உடை  பாவனைகள் மட்டுமே முக்கியமானது  நிர்ணயித்து கொள்வோம்  நல்லது என்பதை அளக்க... இதுதான் பல தவறுகளுக்கு வழிவகுக்கிறது.



டீக்கா டிரெஸ் செய்து  கொண்டு இருந்தால் அவன் நல்லவன் தப்புதண்டா  அதுவும் செய்யமாட்டான் என்று அவன் கூட பழகினால் பிரச்னை எதுவுமில்லை அப்படி இல்லாமல் இருப்பவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்துகொள்ளும்  அறிவாளிகள் நாம். இரண்டாவது படிப்பு நல்ல மார்க் எடுப்பவன் தவறே செய்யமாட்டான் என்னும் குருட்டாம்  போக்கு எண்ணம் கொண்டு உள்ளோம் இன்று விஞ்ஞானம் அதிகம் கற்று கொண்டவன் தான்  அதைவைத்து தீமையையும் செய்கிறான் .இன்று நவீன கருவிகளை கையாளும் திறமை கொண்டு பல கொடுமைகள் நடந்தேறுகிறது .



நாம்  ஆண்பிள்ளைகளின்  இந்த வயதில் அவர்கள் யாரிடம்? எப்படி? எவ்வளவு?  நட்பு வைத்திருக்கிறார்கள் என்பதை  கவனிக்காமல் விடுவதால் மிக பல இழப்புகளை  சந்தித்து  கொண்டு இருக்கிறோம். நிறைய இடத்தில் 'பெண்பிள்ளைகள்நட்பு சோகத்தை  கொடுக்கிறது ஆண்பிள்ளைகளின் நட்பு ஆபத்தை கொடுக்கிறது '.



 டீன் ஏஜ் பிள்ளைகளின் நட்பு என்பது என்பதை பற்றி தொடந்து பார்ப்போம் .....   இந்த நட்பினால் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்  தோழமைகள் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள கற்று கொள்ள காத்திருக்கிறேன்......


 தொடரும் .............

ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நடப்பது என்ன?-3

                                                          

                    போன பதிவுக்கு விஷயங்களை அலசி  கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

போன பதிவை படிக்க https://poovizi.blogspot.in/2017/10/blog-post_12.html

 

         எதுவும் புதிதாய் சொல்லவில்லையே ஏற்க்கனவே பல பேர் சொல்லியவை நினைப்பில் தோன்றுவது போல் இருக்கிறதுதானே என்று நினைப்பீர்கள். எல்லா பாடங்களும் எல்லோர் வாழ்விலும் தொடர்ந்து வராது ஆனால் கணக்கு பார்முலா  மட்டும் எல்லார் வாழ்விலும் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பது அதை எத்தனை முறை பார்த்தாலும் நியாபகத்தில்  இருத்தி கொள்ளாமல் போக  வாய்ப்பிருக்கிறது.  அது போல் இந்த விஷயங்களும் நமக்கு என்று வரும் போது  சில நேரம் மறந்து இடறிவிட வாய்ப்பு வந்துவிடுகிறது. சூழல்கள் அதற்கு காரணம்.  அதுமட்டுமல்லாமல் நான் முன்னரே பலரால் பகிரப்பட்டதை வைத்து பயன் அடைந்துவிட்டேன். சோ இப்ப நானும் எனக்கு புரிந்ததை பகிரலாம் என்றே இங்கே இவ்வாறு.....

                  
                  

         அரவணைப்பு தொடுகை என்பது இந்த (நண்பனா அன்பான  ஆறுதலை கொடுக்கவல்ல கட்டிப்புடி வைதியம் என்று சொல்லி கொள்ளலாமா)வயது வரும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே தேவையாக கருதுகிறேன் அதன் பின் இதன் தேவை இருக்காது அவர்களும் வளர்ந்துவிடுவார்கள்  புரிதலில் இறங்க ஆரம்பித்துவிடுவார்கள் அந்த புரிதலுக்கு அழைத்து போகத்தான் இந்த அரவணைப்பு, தொடுகை  அதன் பின் அரவணைப்பு என்பது புரிதலிலேயே அடங்கி விடும் தொடுகை தேவையில்லை..... தேவைப்படாது என்றே நினைக்கிறேன் .


                 செலவு என்பது 14,15 வயது பிள்ளைகளுக்கு  அளவுக்கு மீறிய செலவுகள் என்ன என்பதை பற்றிய விவரம் உங்கள் பார்வைக்கு வர வேண்டும். இது பிள்ளைகளுக்கு பொதுவான விதியாக வேண்டும் மேலே கீழே நடுவே என்று பாகுபாடு இல்லாமல்.


சைக்கிள் வாங்கி கொடுப்பது என்பது சரியான வயது இந்த வயது. இது எல்லோராலும் செய்யமுடியும். இதை விட்டு வசதி படைத்தவர் என்ற காரணத்தினால் மோட்டார் வண்டி வாங்கி கொடுப்பது, சில உயர்மட்டம் காரே கொடுத்துவிடுகிறது. வயதுக்கு  மீறி..... இதனால் நாம் சமூகத்தில் பார்த்து கொண்டிருப்பது என்ன ஆபத்துகள், விபத்துகள் .இந்த பிள்ளைகளின் ஆர்வத்திற்கும், ஆசைக்கும் அளவில்லாமல் இருக்கலாம் பெற்றோராகிய நாம் சிந்திக்க வேண்டும்.

            

எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்தது 14 வயது பையனின்  கட்டுப்பாடு அற்ற வண்டி ஓட்டத்தினால் அந்த 50 வயது லேடி மேல் மோதி அவர்கள் பாவம் இடுப்பு பிராக்ச்சர் ஆக்கி இன்னும் சரியாகாமல்  இருக்கிறார் . 

 

இதற்க்கு  யாரை குற்றம் சொல்வது சிறு வீதிகளில் எல்லாம் டிராவிக்  போலிஸ் வைக்க முடியுமா ?ஏன் இந்த இளைஞ்சர்களின் அதீத ஆர்வ கோளாறில் நானே வண்டியில் அடிபட்டு இருக்கிறேன் இது போல் இங்கு படிக்கும் பலருக்கு நடந்து இருக்கலாம்.


டிஸ்கி - அப்படி நிறைய பணவரவு உள்ளவர்கள் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சைக்கிள் வாங்கி தரலாமே தேவைக்கு அதிகமாய் வண்டி வாங்கி தரும் செலவில் ......

 
                       
 
                           
ஆமினாவும் ஜபினும் ஹாலில் உட்கார்ந்து லேப்டாப்பை நொண்டி கொண்டிருக்கிறார்கள் "ஏன் ஜபின் துறக்க மாட்டேங்குது"
"அம்மீ  அவன் பாஸ்வேர்ட் போட்டு வச்சிருக்கான் அவன் வந்த வுடன் கேளு ஏன்னு வாப்பா பொதுவாத்தானே வாங்கி கொடுத்திருக்கார் அவன் மட்டுமே வெச்சிக்குவானா"


"சரி விடு நான் பக்கத்துக்கு விட்டு சாரா ஆண்டிகிட்ட கேட்டு செஞ்சு தரேன் அவங்களுக்கு நல்ல வரும் இதெல்லாம் போ""அம்மீ இப்படித்தான் சொல்லுவா அப்புறம் செஞ்சு தரமாட்ட  அதான்"....


.
அப்போது கதவை திறந்து உள்ளே  நுழைகிறான் பள்ளிவிட்டு இப்போதுதான் வருகிறான் சையத்ஹாலில் இவர் இருவரும் லேப்டாப்புடன் இருப்பதை  பார்த்தவுடன் அவனுக்கு கோபம் பொங்குகிறது.




"ஏய் சாத்தனே இதை எதுக்கு எடுத்து வந்தே" பாய்ந்து வந்து பிடுங்குகிறான். வேகமாய் ஆராய்கிறான் லேப்பை


பயந்து போகிறார் ஆமினா "இல்ல சையது நான் தான் கேட்டேன் கேக்கு செய்ரது எப்படினு பாக்க்கோனும்னு"


 "அம்மீ மீ மீ எம் ரூமில் இருந்து என்னை கேட்க்காம எதையும் எடுக்காதே""சரி கோபப்படாதே போயி உடம்ப சுத்தம் பண்ணி  ஓதிட்டுவா சாப்பிட ரெடி பண்ணுறேன்" கிச்சனுக்கு போகிறாள்.

அவனை முறைத்துவிட்டு   பின்னோடு போகிறாள் அவனை விட ஒரு வயது சின்னவள்


"அம்மீ உங்களை என்ன சொன்னேன் இவ்வளவு நேரம்  ஏன்? அவனை சாயங்காலம் மைதானத்தில் யாரை பார்த்தான்  கேளுங்க  என்று சொன்னேனே  அவனிஷ்டத்திற்கு திமிரு பிடிச்சி ஆட்டுடறான்"



"ஜபின்  ,,,,பொம்பளபிள்ளயா லஸ்ட்சணமா வாயை அடக்கி பழகு நான் பார்த்துகிறேன் நீ போ அவனை கோபமூடாதே"
"அம்மீ  யாரோடோ பெரிய பசங்க அம்மீ இவன் பேசி கொண்டிருந்தான் தனியாக""யாராவது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க நின்றிருப்பான்"
ஜபின் முறைத்துவிட்டு "அம்மீ அது பெரிய பசங்கனு சொன்னேன் 
ஏன்? அம்மீ அவனை எதுவும் கேட்கறதுக்கு இப்படி பயப்படுற?10வது தானே படிக்கிறான்"



"ஜபின் உனக்கு வாய் ஜாஸியாகி விட்டது குறைய சொல்லும் படி நடந்துக்கறவன் கிடையாது படிப்பில் எப்போதும் முதலில் வருபவன். எது அவனை கேள்வி கேட்கணும்? "சரி நீ போயி அவனை போல் எப்போதும் முதல் ரெங்க எடுக்கும் வேலையை  பார் அவன் கிளாஸ் டீச்சர் எவ்வ்ளவு பெருமையா இவனை பத்தி சொன்னாங்க தெரியுமா 10வதில் ஸ்டேட் ரேங்கு கூட  வாய்பிருக்காம் சும்மா அவனை குறை சொல்லி  அவனை நோண்டிக்கொண்டு இருக்காதே"



"ம்கூம்.... அவன் படிப்பில் முதலில் வரான்னு அவனை எதுவுமே கேட்காதே அவன் லெட்டவந்தாலும் சரி..... சுத்திட்டு வந்தாலும் சரி..... இரு அடுத்தடவை நானும் பர்ஸ்ட் வந்ததுது ஊரை சுத்திட்டு வறேன்" சொல்லிவிட்டு போகிறாள்.



சையத் வருகிறான் சாப்பாடு மேஜைக்கு ஆமினா உணவு பரிமாறிக்கிறார் "சையத் வாப்பா கடைக்கு வர சொன்னார் நீ சீக்கிரம் வந்தால்" ..............
"ம்ம்"  அப்பொழுது அவநின் செல்போன் அடிக்கிறது..... எடுத்து பார்கிறான் அவசரமாய் சாப்பிடுவதை விட்டு எழுந்து போயி வெளியே சென்று விடுகிறான்.


ஆமினா ஐயோ பிள்ளை  சாப்பிடும் போது போன் வந்து விட்டதே கவலை படுகிறார். பால்க்கனியில் இருந்து எட்டி  பார்கிறார். ரோட்டில் நின்று சையத் பேசுவது தெரிகிறது சரி இங்குதான் பேசுகிறான் வந்துவிடுவான் என்று மீண்டும் சூடாக ஆப்பம் ஊற்றலாம் உள்ளே திரும்போகிறார் .



 இங்கும் நடப்பது என்ன ?



இதை பற்றி அடுத்த பதிவில்  பார்ப்போம் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன் வாருங்கள் .

             




           




வியாழன், 12 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?-2

போன பதிவுக்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. 

/poovizi.blogspot.in/2017/10/blog-post_11.html இதன் முதல் பதிவு 

                           எல்லோரும் டீன் ஏஜ் பிள்ளைகளின் பெரும் தவறுகளுக்கு பெற்றோர்கள் ஒரு வகையில் காரணம் என்பதை சொன்னீர்கள். எப்படி என்று பார்ப்போம்

                            போன பதிவில் அருணை வயது 14 லில் இருந்து 15 ..இந்த வயது பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளுக்கு கடுமையான வயது என்றே எனக்கு தொன்று கிறது ஒரு பெண் இந்த நேரத்தில் வயது வந்துவிட்டால் என்று அவளை கண்ணும் கருத்துமாய் மிகவும் அதீத கவனத்தோடும் பாதுகாப்பு பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் கொடுக்கப்படும் கவனிப்பு இங்கு ஆண்பிள்ளைகளுக்கு சரி வர வழங்கப்படுவதில்லை.

 

      

அவனும் அந்த வயதில் தான் வயதுக்கு  வருகிறான் இதுவரையும் கூட இருந்த கவனிப்பு இந்த வயதிலிருந்து அவனுக்கு விலக்களிக்க படுகிறது அவன் கேளாமலேயே பெற்றோர்கள் செய்யும் தவறு இங்குதான் ...இதுவரை அவனை தொட்டு, சாப்பாடு ஊட்டி, உரசி, கொஞ்சியவர்கள். இந்த வயதில் இருந்து அவனிடமிருந்து விலகி நிற்கிறார்கள் . முக்கியமாய் அம்மாக்கள்..... திடீரென்று அவனுக்குள் வந்த மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரத்தில் இந்த தள்ளி வைப்பு அவனுக்குள் ஒரு அசூயை கொண்டு வருகிறதோ என்று நினைக்கிறேன்.

       

     தோள்  தடவி, தலை தடவை ,அரவணைப்பு தேவை படும் நேரம் சரியாக விலகி வைக்க படுகிறான். அப்போ என்ன வயது வந்த பிள்ளையை தடவி தடவி கொஞ்ச சொல்லுறியா ?என்று கேட்டல் ஆம். இன்றைய பிள்ளைகளுக்கு அந்த அரவணைப்பு கிடைப்பது அரிதானதாக்கி போனது ... அப்போதெல்லாம் பாட்டி ,தாத்தாக்கள் யாரவது கூடவே இருப்பார்கள். அவர்கள் அந்த பிள்ளையாய் பக்கத்தில் இருந்து இதையெல்லாம் செய்வார்கள். நாம் இன்று அதை கடந்து வந்துவிட்டோம் கால மாற்றத்தினால் நம் தேவை மாற்றத்தினால்.... 

    

    ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என்பது போயி அந்த ஒன்றை இழப்பதால் இன்னும் ஒன்றையும்  இழக்கும் நிலைக்கு தள்ள பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது சரியா? நான் சாதாரண  விஷயங்களை மட்டுமே இங்கு சொல்லிருக்கிறேன் இன்னும் அதிகம் இருக்கிறது .என்ன ஆரம்பிக்கிறேன் எங்கே சென்று கொண்டு இருக்கிறேன் என்றே புரியவில்லை இங்கு தொடர்பாய் இருக்கிறதா? இல்லை கோபத்தை கொடுக்கிறதா என்றும் புரியவில்லை....

முதல் வீட்டில் அவன் வழிநடத்த படுகிறான என்றால்? இங்கு நேரமின்மை ஒரு காரணம் ... அம்மாவுக்கு வேலை வெளியேயும், வீட்டிலும் அவளின் சக்தி  அளவுக்கு அதிகமாய் செலவழிக்கப்படுகிறது. உடல் ஒய்வு ஒய்வு என்று உள்ளே அலறுகிறது.

 

அப்பாவும் பல மன அழுத்திற்கு ஆள்கிறார்கள் எதிர்கால பராமரிப்பு திட்டம் அதை நோக்கிய ஓட்டம் வீட்டில் மனைவிக்கும் உதவி  (நடக்கிறதா அப்படி ஒன்று என்றா கேள்விக்கு மற்றோரு அது தொடர்புடைய பதிவில் பார்க்கலாம்  டிராக் மாறக்கூடாது இல்லையா )   அதன் காரணமாய் அவர்களுக்கு மனதை திசை திருப்பும்  நேரம் கொஞ்சம் தேவை படுகிறது (ரிலாக்ஸேஷன்)  . நாளையை  ஓட்டத்திற்கு....


அடுத்து கண்காணிக்க படுகிறானா?  என்றால் இல்லை  முக்கியமாய் 90% பெற்றோரும் செய்யும் தவறு..... நம்பிக்கை தன்பிள்ளை தவறே செய்யமாட்டான் என்று நினைப்பது .சில இடங்களில் டீச்சர் கூப்பிட்டு வார்ன் பண்ணினாலும் நம்ப மறுத்து டீச்சரை குறை சொல்வதும் நடக்கிறது. தானும் அந்த வயதை கடந்து வந்துள்ளோம் கடந்த கால நினைவுக்குள் போக மறந்துவிடுகிறது இல்லை இன்று வளர்ந்துவிட்ட கர்வம் கண்ணை மறைத்து விடுகிறது .


அவனுடைய செலவினங்கள் என்ன என்று ஆராய படுகிறதா அதுமில்லை காலம் மாறிடுச்சு என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி கொள்வது தேவைக்கு  அதிகமான வசதிகள் நிறைவேற்றபடுகிறது .... படுகிறதா? என்று குழப்பம் வருகிறது.செலவுகள் என்பது வரையறுக்க படணும் வயது தகுந்த மாதிரி இரண்டாவது தேவைகள் என்பது எதை நோக்கி என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.             

சரி அடுத்த வீட்டு கதவை தட்டுவோம்


2வது வீட்டில் ....இரவு 8.30


வரவேற்பறை  டீவியின் முன் அம்மா சீரியலில் மூழ்கி கை பூண்டு உரித்து கொண்டு இருக்கிறது . பெட்ரூமினுள் அப்பா தன் லேப்டாப்பில் வேலையுடன்....

  

மெயின் டோரை திறந்து வருகிறான் ஜோசப்  ".என்னடா நேரமாகிவிட்டது டியூஷன் சார் லேட் பண்ணிட்டாரா ?" "வண்டி நின்று விட்டது பெட்ரோல் இல்லாமல் தள்ளி கொண்டு வந்தேன் " அச்சச்சோ .... சரி போயி ரெஸ்ட் எடு இதோ டிபன்  தரேன்" என்று இவ்வளவும் டிவியைவிட்டு கண்ணெடுக்காமல் நடை  பெறுகிறது  .



"எனக்கு வேண்டாம் சையத் வாங்கி கொடுத்துத்தான். அம்மாஆஆ .....இங்க பார் கொஞ்சம்  அப்பாகிட்ட  மணி  வாங்கி வச்சுக்கோ 500/- எனக்கு மறந்துட்டேன் சொல்லாதே..... நாளைக்கு மேச்  இருக்கு அப்புறம் வீட்டுலேயே  உட்க்கார்ந்துடுவேன் டியூஷன் போகாம பார்த்துக்கோ "

 

"உங்க அப்பாகிட்டாதானே.......நீ கேட்காதே  எல்லாத்தையும் என் தலையில கட்டிட்டு  போ ஆமாண்டா ....10 வது படிக்கும் போதே இவ்வளவு என்று அவர் என்னை முறைகட்டும், ஆனா உன்னை கேள்வி கேட்கமாட்டார் ..... வாங்கி வைக்கிறேன் நடுவுல தொனதொணன்னு  பேசாதே "

 

உள்ளிருந்து "ஆனி ஈஈ இங்கே மனுஷன் வேலை செய்யணுமா? வேணாமா? அந்த கதவை சாத்திட்டு கத்து " அப்பாவின்  குரல் கேட்டவுடன் அருண் அம்மாவை முறைத்து  பார்த்து சைகையில்' வாங்கி வை 'என்று சொல்லிவிட்டு ரூமினுள் நுழைந்து கொள்கிறான் .



இங்கும் நடப்பது என்ன


தொடர்வோம் .........வாருங்கள் கருத்துரைக்க.....