செவ்வாய், 26 செப்டம்பர், 2017

தத்துவம் புரியுமா ?

என்ன எழுதுவது ம்ம்ம் சரி கேப்போம் யார்கிட்டேனா யோசனையை 
"ஹாய் ......ஹீ ஹீ 
"என்ன ஆச்சு போனை போடு இப்படி சத்தம் கொடுக்கிற என்ன பண்ற?
"ஒண்ணுமில்ல சும்மா சிரிச்சேன் ?
"என்னது ? என்ன உடம்பு சரியில்லையா ?
"சே சே நல்லாத்தான் இருக்கேன் நீ இப்ப பிரீயா ?
"ஹான் ! பிரீ தான் ஏன் கேக்குற ?
"இல்ல பிளாக்குள்ள என்ன எழுதர்துன்னு ஒரே யோசனை அதான் உன்கிட்ட ஐடியா கேட்க்கலாம்னு..... 
"ஹாங்! நீ கிறுக்கறதுக்கு நான்தான் கிடச்சனா இன்னக்கி .....
"இல்லல்ல ஏதாவது டாபிக் ஒன்னு சொல்லேன் ...
"அரசியல் பத்தி  போடு .....
"அரசியலா அடாது செயலையும் ...அடக்கமா பேசணும் நமக்கு அது ரொம்ப குஷ்டமாச்சே ........
"சரி வுடு.. நீ எதாவது  போட யாரவது வம்புக்கு வர போறாங்க ...சினிமா ?
"ஐயோ சினிமாவா முன்னனா பரவாயில்லை கொஞ்சம் விஷயமிருந்தது இப்ப கதையிருந்தா ஆளைக்காணோம் .....,ஆள் இருந்த கதையை காணோம் ......2 ம்  இருந்தா அழகை காணோம் ....
"அழகு எதுக்கு ?
 "நிஜத்தில்தான் மேக்கப்பில்லாம... மேக்கப்போட்டு கலைஞ்சி என்ற பயத்தையெல்லாம் பார்கிறோம் சினிமாவாலயாவது ஒரு கெத்துவெனவா???? 
"சரி ஆன்மீகம்  பத்தி கொடு 
"இந்த 2ம் கூட பரவாயில்லை இது ரொம்ப டேஞ்சர் எல்லாத்துக்கும் ருசு கேட்டு அடம்பிடிப்பாங்க ......
ஸ்ஸ்ஸ்ப்பா முடியலையே இவ தொல்ல .Related image...."வியாபாரம் பத்தி சொல்லு "
"ஐயையோ...... உன் பிளாக்குல ஒரு விளம்பரம் வைக்க துப்பில்லை நீ வியாபாரம் பத்தி எழுத்தறியான்னு வீட்டுல மண்டயயை உருடுவாங்களே" 

அடியே .......இவளோட சரி தத்துவம் எழுதி தொலை 
"ஆன் இது ரொம்ப ஈஸி இல்லImage result for imagem de carinha feliz சூப்பர் அதுதான் யாருக்கும் புரியாது கேள்வியே வராது" 

இப்ப .....நமக்கு தெரிந்தையெல்லாம்  எடுத்துவிடுவோம் ரொம்ப மூளையை கசக்க வேண்டாம் 

1-டவுளிடம் சொல்லாதோ, உன் பிரச்சனைகள் எவ்வளவு பெரியது என்று..
உன் பிரச்சனைகளிடம் சொல், உன் கடவுள் எவ்வளவு பெரியவர் என்று..

2-தயக் கண்ணாடி உடையும் போதும் அதன் சில்லுகள் பிறர் காலை கீறிவிடாமல் பார்த்துக் 
கொள்ள வேண்டும்.

3-ண்கள் குருடாகலாம். ஆனால் கருத்து குருடாகக் கூடாது. உள்ளிருப்பதுதான் வெளியிலும், என்பதை உணர்ந்து கொண்டால் போதும்.

ரொம்ப போர் அடிக்காதோ Image result for imagenes de sospechaசரி ஒரு கதையா போடுவோம் ....

 குருவுக்கு வயசாகிவிட்டது. மரணப் படுக்கையில் கிடக்கிறார். சீடர்களைக் கூப்பிட்டார்.
‘‘இன்று மாலைக்குள் இறந்துவிடுவேன்’’ என்று கூறிவிட்டார். சீடர்களுக்கு கவலை.
.மூத்த சீடர் ஒருவர் திடீரென கடைவீதிக்குப் புறப்பட்டார். ‘‘ஏய்… என்ன மடத்தனம் பண்ணுகிறாய்… குரு மரணப்படுக்கையில் கிடக்கும்போது அப்படி என்ன அவசரமாக வாங்க வேண்டியிருக்கு?’’ என்றனர் மற்றவர்கள்.
மூத்த சீடர், ‘‘குருநாதருக்கு நாவல்பழம் என்றால் அத்தனை பிரியம். அதை வாங்கத்தான் போகிறேன்!’’ என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.
எல்லோரும் கவலையோடிருந்தனர். குரு கண்களைத் திறப்பதும் யாரையோ தேடுவதும் பின் மூடிக் கொள்வதுமாக இருந்தார்.
மூத்த சீடர் வந்ததும், ‘‘வந்து விட்டாயா… எங்கே நாவல்பழம்?’’ என்றார்.
அவர் கையில் நாவல் பழத்தைக் கொடுத்ததும், சற்றும் நடுக்கமின்றி, மலர்ச்சியோடு அதை வாங்கிக் கொண்டார்.
ஒரு சீடர் குருவிடம், ‘‘குருவே… தள்ளாத வயதிலும் உங்கள் கைகளில் நடுக்கமில்லையே?’’ என்றார்.
குரு சிரித்தபடி, ‘‘என் கைகள் ஒருபோதும் நடுங்கியதில்லை. ஏனென்றால் எப்போதும் எதற்கும் நான் பயந்ததே இல்லை!’’ என்று சொல்லிவிட்டு நாவல் பழத்தை ருசித்து தின்னத் தொடங்கிவிட்டார்.
இன்னொரு சீடர் குருவிடம் பணிந்து, ‘‘ஐயா, தாங்கள் சீக்கிரமே இந்த உலகை விட்டுப் பிரியப் போகிறீர்கள். நாங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டிய தங்களின் இறுதி உபதேசம் என்ன?’’ என்று கேட்டார்.
எல்லோரும் அவர் முகத்தையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.குரு சிரித்தபடி, ‘‘இந்த நாவல்பழம் என்ன அருமையான சுவையுள்ளதாக இருக்கிறது,’’ என்று சொல்லிவிட்டு தன் மூச்சை நிறுத்திக் கொண்டார்!

சரி இன்னொரு தத்துவம் போட்டுவைப்போம்  Image result for emoji tongue sticking out

ஒரு புகழ்பெற்ற அரசியல் தலைவர் தன் நாயுடன் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்.
எதிரே வந்த முல்லா "என்ன கழுதையுடன் வாக்கிங் போகிறீர்கள்?" என்று கிண்டலாகக் கேட்க தலைவருக்குக் கோபம் வந்து விட்டது.

"என்ன உனக்குக் கண் சரியாகத் தெரியவில்லையா? இது என் நாய்" என்றார்.
முல்லா தலைவரிடம் சொன்னார். "அது நாய் என்று எனக்குத் தெரியும்.
நான் கேள்வி கேட்டது அந்த நாயிடம்" என்றார்.
தலைவருக்கு தன்னைக் கழுதை என்று முல்லா பரிகாசம் செய்கிறார் என்று தெரிய சிறிது நேரம் தேவைப்பட்டது. எல்லோரும் தன்னை தலைவா என்று மரியாதையுடன் அழைக்கையில் முல்லா கழுதை என்கிறாரே என்று உடனே வெகுண்டு நீதிமன்றத்தில் முல்லா மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி முல்லா ஒரு புகழ் பெற்ற தலைவரை கழுதை என்றழைத்தது தவறு என்றும் அந்தத் தலைவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
முல்லா நீதிபதியிடம் ஒரு சந்தேகம் கேட்டார். "ஐயா நான் கழுதையைத் தலைவா என்றழைப்பதில் சட்டத்தில் ஏதாவது ஆட்சேபணை இருக்கிறதா?"
"இல்லை" என்றார் நீதிபதி.
சரி என்ற முல்லா அந்தத் தலைவரிடம் சென்று "தலைவா என்னை மன்னித்து விடுங்கள்" என்று கேட்க நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பலைகள்

 ஸ்ஸ் அப்படா தெரிஞ்சவங்க... புரிஞ்சவங்க விட்டுடுங்கோ .......
மீதி பேர் ?????? 
Image result for animated angry smiley இப்படி நினைக்கபடாது 
அடுத்தவாட்டி  நிஜமா ட்ரை பண்ணுறேன் superaaaaaaa கொடுக்க 


5 கருத்துகள்:

  1. வணக்கம் !

    பதிவு நீண்டு இருந்தாலும் நல்ல கதைகளும் தத்துவங்களும்
    சிந்திக்க வைத்தன
    தொடர வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ரசித்தேன் அனைத்தையும்.

    ஒரு ஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைக்கலாம். பதிவு வெளியான உடன் பிளஸ்சில் பகிரலாம்.

    பதிலளிநீக்கு