கடவுள் அவதரிப்பாரா ?
எப்போது ? எதற்கு? ஏன்? கடவுள் அவதரிக்க வேண்டும். அதற்கு பொத்தாம் பொதுவாய் ஒரு பேச்சு நிலவுகிறது, உலகில் அதர்மம் அதிகரிக்கும் போது கடவுள் வர வேண்டும், வருவார் .. எல்லோரும் புலம் புலம்பல் இதுதான் சரி அப்படியே வைத்து கொள்வோம் ..
தீமைகளின் வீதம் முழுவதும் அதிகரித்த பின் யாரை காப்பாற்ற கடவுள் அவதரிக்க வேண்டும் ? என்ற கேள்வி எழுகிறதா ..
அதர்மம் அதிகரிக்கும் போது கடவுள் அவதரிப்பார்
என்ற கூற்றுக்குள் ஒளிந்து கொள்கிறார்கள். தீமைக்கு
அளவுகோல் வைத்திருக்கிறார்கள்
இது பெரிசு , இது சிறுசு என்று செய்யும் தீமைக்கு.. ஒவ்வொரு மனிதனின் எண்ணமும் ஒப்புமை படுத்தி பார்கிறது நான் செய்யும் தீமையை விட பெரிதனாது இருக்கிறதா.. என்று அப்படி இருந்தால் அவனின் எண்ணம் இப்படியாக இருக்கிறது முதலில்அவங்களை கடவுள் வந்து போட்டு தள்ளட்டும்.
நான் செய்வதெல்லாம் சிறுசு, எண்ணம் மட்டும்
தான்.
'உண்மைக்கு ஆதரவு தராது என் குற்றமல்ல, கொடுமையை கண்டும் காணாமல் நான் மட்டும் தப்பித்து
கொள்வேன், இதுபோன்றே மனிதனின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கும்....... கடவுளையும் நிந்தித்து கொண்டிருப்பேன் அவனையும்
விட்டு வைக்க மாட்டேன் கண்ணுக்கு தெரிந்தையும் ஒதுங்கி நின்று திட்டுவேன், கண்ணு தெரியாத்தை
தைரியமாய் திட்டுவேன்' இதுதான் இன்றைய நிலைமை
தர்மம் அதர்மம் இது இரண்டும் இன்றைய மனிதரின்
அளவு கோல் என்ன என்பதில் நிறைய குழப்பமிருக்கிறது என்றே பார்க்க முடிகிறது
என் பதிவுகள் நீண்டு கொண்டே போவதால் படிப்பவருக்கு சிரமம் (*உன் பதிவை படிப்பதே அப்படித்தான்*என்று நினைப்பவர்களுக்கு ஹீ ஹீ ) வரலாம் சோ இதை தொடரும் என்று விடுகிறேன் ................
தமிழ்மணத்தில் இணைத்து வோட்டும் போட்டுவிட்டென்
பதிலளிநீக்குநன்றி தோழா
நீக்குஅதர்மமே இன்றைய தர்மம்
பதிலளிநீக்குஉண்மைதான் ஆனாலும் ஏற்று கொள்ள மனம் மறுக்கிறது. நல்வரவு எப்போதும் எதிர்பார்கிறேன் வழி நடத்த
நீக்குதாங்கள் சொல்ல நினைப்பதை மனம் திறந்து எழுதுங்கள் பிறருக்காக யோசிக்க வேண்டாம்
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் எல்லாம் முடிந்த பிறகு கடவுள் வந்து யாரை காப்பாற்ற.... பழைய சினிமாக்களில் பார்த்து இருப்பீர்கள் தெய்வத்தின் நகையை எடுத்தவுடன் கண்கள் பறிபோய் விடும் இப்படி இருந்தால் கடவுள் இருக்கின்றார் என்ற எண்ணம் வந்து மனிதன் நல்வழியில் நடப்பான்.
பெரியார் இதைத்தான் கேட்டார் சக்தி உள்ள கோவிலுக்கு சாவி பூட்டு எதற்கு என்று.....
தங்களது தளத்தில் இணைந்து கொண்டேன் தொடர்வேன் நண்பரே...
வாங்க ஜீ ஆமாம் ரொம்ப சரி கடவுளையே இங்கே காப்பாத்தணும்னு முட்டாள் தனம் செய்து கொண்டிருக்கிறோம் நம்ம பேராசைக்கு
நீக்குதான் செய்வது அதர்மம் என்று தெரிந்தும் துணிந்துதான் செய்கிறார்கள். அதர்மம் தழைத்தோங்குவதில் நமக்கும்பங்கு உண்டு. தெரிந்தோ தெரியாமலோ அதனை ஆதரிக்கிறோம்
பதிலளிநீக்குவாங்க நண்பரே ஆதரவு என்பதை ஒத்து கொள்ளவே மாட்டோம்
நீக்குவணக்கம் பூவிழி !
பதிலளிநீக்குகடவுள் எல்லாம் அவதரிக்க மாட்டார் மனிதனையும் படைத்து அவனுக்குள் நல்லவைகளையும் கெட்டவைகளையும் திணித்து நல்லா பதப்படுத்தி அனுப்புகிறார் நல்லவனா வாழ்வதும் கெட்டவனா வாழ்வதும் அவனவன் கையில் .........
மரணத்தில் அறிவான் வெற்றி யாருக்கு தோல்வி யாருக்கு என்று அம்புட்டுத்தேன் ......
வாங்க நண்பா அதை சொல்லுங்கோ எல்லாத்தையும் கொடுத்து அதை அவனே தாங்கிடும் இருக்கணுமாம்
நீக்கு