புதன், 2 ஆகஸ்ட், 2017

சாப்பிடுவதற்கு இப்படி

மனுஷன் வகைதொகையா சாப்பிடுவதற்கு என்றே பண்டிகைகள் பூஜைகள் ஏற்படுத்தி இருக்க வேண்டும் அதற்கு என்று ஏதாவது காரணங்களை கொண்டு வருவதில் கில்லாடி
இங்கு இப்படி ஒரு காரணம்
நாமகிரி பேட்டையில், 250 ஆண்டுகளுக்கு முன் பொங்களாயி என்ற பெண்ணுக்கு, பெண்கள் யாரும் உதவி செய்யாததால், இரட்டை குழந்தைகள் பிறந்து இறந்துவிட்டதாக கூறப்படுகிறது.இதனால், அந்த பெண் விட்ட சாபத்தால், இப்பகுதியில் பஞ்சம், பட்டினி ஏற்பட்டது. இப்பகுதியை சேர்ந்த ஆண்கள் மட்டும், தவறுக்கு மன்னிப்பு கேட்டதுடன், அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த ஆண்கள் மட்டும் விழா எடுப்பதாக கேட்டுக்கொண்டதால், விழா கொண்டாடப்படுகிறது
ஒவ்வொரு ஆண்டும் ஆடி18க்கு முன்பாக கிடா வெட்டி பூஜை நடக்கும். இந்த விழாவில் ஆண்கள் மட்டும் கலந்து கொள்வார்கள்.
அதே போன்று இந்த ஆண்டும் ஆடு, கோழி, பன்றி ஆகியவை பலியிட்டு முப்பூஜை செய்யப்பட்டது.
இவ்விழாவில், மொத்தம், 145 கிடாக்கள் பலியிடப்பட்டன. நேற்று அதிகாலை, சமைக்கப்பட்டு, 3,000த்துக்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பரிமாறப்பட்டன.
மனுஷன் மட்டும் தான் ஆண்டவன் படைப்பா ....
அந்த ஆடு கோழி பன்றி எல்லாம் சாபம்விட்டா ......அதற்கு என்ன .இன்னொரு பூஜை சாப்பிடுவதற்கு ஏதுவாக .....

விந்தை திருவிழா

பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்று சொல்லுக்கு  எதிர்ப்பதமாய் ஒரு சடங்கு
விந்தையாக இருக்கிறது பயம் என்ற உணர்வுக்கு அப்பாற்படடவர்களா இவர்கள்
பாம்பு திருவிழா  பிகாரின் சமஸ்திபூரில் நடை  பெறுகிறது ஒவ்வொரு ஆண்டும் நாகபஞ்சமியின்போது, பாம்புகளை கையில் ஏந்தியபடி மக்கள் ஊர்வலமாக செல்கின்றனர் மகிழ்ச்சியாக கொண்டாடி .சின்னசிறுசுகள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொள்கிறார்கள்
இதற்காக இவர்கள் ஒரு மாத்திற்கு முன்பே இருந்து பாம்புகளை பிடிக்கின்றனர், பாதுகாக்கின்றனர்.... அவற்றின்  நச்சுக்கள் நீக்கப்படுகின்றன
நாகபஞ்சமியின்போது போது  பாம்புகளுக்கு பால் கொடுக்க வேண்டும் என்னும்  சடங்கு ,நம்பிக்கை
பார்வதி அம்மனை வணங்கி..... பாம்புகளுடன் நதிக்கு சென்று பூஜை செய்து அங்கிருந்து காட்டுக்கு கொண்டு போய் சேர்க்கிறார்கள் இந்த பாம்புகளை.....
பூஜையில் பாம்புகளுக்கு பாலும் பொரியும் கொடுக்கப்படுகிறது ....
பாம்புகளை வாழ்வில் ஒரு அங்கமாய் இவர்கள் உணர்கிறார்கள் .....இயற்கைக்கும் தமக்குமிடையே இருக்கும் நெருங்கிய சொந்தமாகவே இதை அவர்கள் பார்க்கிறார்கள் ....
Image result for பாம்பு திருவிழா





செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

இதோ ஒரு காதல் மன்னன்

பணக்காரன் காதல் எல்லாம் காதலா என்று புறம் பேசும் மனங்களிடையே இதோ ஒரு சினிமாவை மிஞ்சும் நிஜக்காதல்
முகேஷ் அம்பானி  தெரியாதவர் யாராவது இருக்க முடியுமா இன்று ......இந்தியா மட்டுமின்றி, உலகளவில் சிறந்த தொழிலதிபராக திகழும் நபர். ஆடம்பரமான வாழ்க்கைக்கு பெயர் போனவர் முகேஷ் அம்பானி தான் எந்த துறையில் காலடி எடுத்து வைத்தாலும் அதில் வென்றே ஆகவேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.
வியாபாரத்தில் மட்டுமல்ல, காதலிலும் இவர் கெட்டி தானாம் . தனது காதல் மனைவிக்கு ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் யோசிக்க முடியாத அளவில் ஒரு வியக்கத்தக்க பரிசை கொடுத்து அசத்தும் சூப்பர் காதலனுமாம் நம்ப முடிகிறதா.....
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நீத்தா அம்பானி ஒரு பரத நாட்டிய தாரகை  ஒருசமயம் ஒரு விழாவில் நாட்டியம் நிகழ்ச்சியை வழங்கும்போது  முகேஷ் அம்பானியின் தந்தை திருபாய் அம்பானி அவரின் நாட்டிய  திறமை கண்டு தன் மகனுக்கு மணமுடிக்க கேட்டாராம்
இது தொடர்பாக  முகேஷ் அம்பானியும் நீத்தாவும் சந்தித்து பேச்சுக்கள் நடந்ததாம் ஒருமுறை இருவரும் காரில் சென்றுக் கொண்டிருந்த போது. ட்ராபிக் சிக்னலில் கார் நின்றுக் கொண்டிருக்கையில், "நீத்தா நீ என்னை திருமணம் செய்துக் கொள்வாயா?” என கேட்டுள்ளார் முகேஷ். இதற்கு பதில் கிடைக்க வேண்டும் என்ற பிடிவாதம் தோன்றியுள்ளது
சிக்னலில் பச்சை விளக்கு எரிந்தது. பின்னடி நின்ற அனைவரும் ஹார்ன் அடித்துக் கொண்டே இருந்தனர். நீத்தா நீ பதில் கூறாமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் என அடம் பிடித்துள்ளார் முகேஷ். ....... மணிரத்தனத்திற்கே டிப்ஸ் கொடுப்பார் போல இருக்கே
"எஸ். நான் உன்னை திருமணம் செய்துக் கொள்வேன்" என நீத்தா கூறிய பின்பு தான் வண்டியை எடுத்துள்ளார் முகேஷ்.
இனிதாக தொடர்ந்து கொண்டிருக்கிறது காதல் பயணம் இன்றுவரை தன் காதல் மனைவிக்கு அவர் வியக்கும் வண்ணம் பரிசுகள் வழங்குவதில் கில்லாடியாம் பணமிருந்தாலும்  அதிலும் காதலை தனித்துவமாக நிரூபிக்க திறமை வேண்டுமே முகேஷ்  அம்பானி தன்வியாபாரத்தில் மட்டுமல்ல தன் காதலிலும் கிரியேட்டிவ் மைன்ட்  உபயோகித்து சாதிக்கிறாராம்
 நீங்கள்  கேள்வி பட்ட  கதையாக இருக்கலாம்

கூகுள் வரம்

                       கூகுளுடன் வேலை செய்ய நான்..... நீ என்று போட்டி  இருக்க கூகிள் வரம் ஒரு 16 வயது பருவத்திற்கு பட்டு சாமரம் விரித்துள்ளது. இந்திய சிறுவர்கள் இன்னும் முழுமதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வண்ணம் ஒரு இளம் குருத்து இங்கே தன் வெற்றியை முழங்கி இருக்கிறது அரசு பள்ளியில் படித்த கல்வியும் உயர்ந்தவை என்று மீண்டும் நிரூபணம் .
                       சண்டிகர் மாநிலத்தின் செக்டார் 33 பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளியில் பயின்று வரும் ஹர்ஷித் சர்மா அடுத்த ஒரு மாதத்தில் அமெரிக்காவில் இருக்கும் கூகிள் நிறுவனத்தின் பணியாற்ற உள்ளார்.
தன் திறமையை கிராபிக்ஸில் தேர்ந்தெடுக்க பட்டுள்ளார்   இந்த இளம் வாலிபன்  அதற்கு அவன் வாங்க போகும் சம்பளம் பயிற்சி காலத்தில் 1 வருடத்திற்கு 4 லட்ச்மும் பயிற்சி முடிந்த பின் மாதம்ம்ம்ம்ம்ம்ம்ம் 12 லட்சம் வழங்கப்படவுள்ளது .

விடா  முயற்சி விஸ்வரூப வெற்றி தரும் என்ற வாக்குகேற்றப  10 வருடகாலம் கிராபிக்ஸ் டிசைனில் தேர்ச்சி  பெற்று தன் திறமையை வெளிப்படுத்தி கூகிள் இணைத்துவிட்டார்..... இதை தவிர கற்க்கும் காலத்திலேயே போஸ்டர்கள் தயாரித்து பாலிவுட் மற்றும் ஹாலிவுடில்  விற்று தன் திறமையை வெளிப்படுத்தியுள்ளார் ....இவரது பெற்றோர்கள் ஆசிரியர்கள்..... ஆசிரியர் பிள்ளை மக்கு என்ற வாக்கை பொய்யாகியவர் ஹர்ஷித் சர்மா!

அருவினை யென்ப உளவோ கருவியான்
காலம் அற஧ந்து செயின்.
தேவையான சாதனங்களுடன் உரிய நேரத்தையும் அறிந்து செயல்பட்டால் முடியாதவை என்று எவையுமே இல்லை.என்பதை நிரூபித்துள்ள இந்த இளம் குருத்தை பாராட்டுவோம்