கடவுள் அவதரிப்பாரா என்பதின் தொடர்ச்சியை பாருங்க
கருத்து சொன்னவர்களுக்கும் என்னை போல் ஐயம் இருப்பது புரிகிறது ஏனென்றால் எனக்கு தான் அதிக பட்ச்சமாக தோன்றுகிறதோ என்று ஒரு குழப்பம் இருந்தது .
தர்மம் அதர்மம் இரண்டுக்கும் மனிதனில் அளவுகோலில் உள்ள குழப்பம் என்னவென்றால்...
கொள்ளை அடித்துவிட்டு
கடவுளுக்கு அதில் பங்கு, வறியவருக்கு பிச்சை என்று கொடுத்துவிடுவதே தர்மம் என்றும்
அது என்னை காக்கும் என்று நினைத்து கொள்கிறார்கள் அதன் தர்மம் தலைகாக்கும் தக்க சமயத்தில்
உயிர்காக்ககும் என்ற நினைப்பு ... கொஞ்சம் அதிகம் போயி பீற்றி கொள்ளவும் செய்கிறார்கள் தாங்கள் செய்யும் தர்மத்தின் அழகை இது கொள்ளை மட்டுமல்ல சில அடாது செயலுக்கும், கொடுமைக்கும்
கூட அளவு கோடாக வைத்திருக்கிறார்கள்.இன்றைய மனிதர்கள்.
இது சாரணமக்களுக்கும் பொருந்துமா? அவன் வேண்டுதலில் சுயநலமே மேலோங்கி இருக்கிறது எனக்கு இதை கொடு.. அதை கொடு கடவுளையும் டார்ச்சர் (இம்சை )செய்யும் மனநிலை மேலும் அவன் அவன் லெவெலில் வேண்டிய அளவு சிறு சிறு தீமையும் செய்ய தான் துணிகிறான். தீமை என்பதை வளர்த்து விடுபவன். கண்ணுக்கு தெரியாமல் கண்ணுக்கு தெரிந்தும்.
வறியவருக்கு பொருந்துமா? அவனும் இந்த மனநிலைதான் கொண்டுள்ளான் எப்படிலாமோ சம்பாதிக்கிறான், எப்படிலாமோ வாழ்கிறான்,நமக்கும் கொஞ்சம் அதில்கொடுக்கட்டும் கொடுத்தே ஆகவேண்டும் என்ற பிடிவாத மனநிலையை கொண்டு இருக்கிறான் . மற்றவன் தீமையில் பங்கு கேட்க தாயாராக இருக்கிறான்.
இப்பொது யாரை தான் காப்பாற்ற கடவுள் அவதரிக்க வேண்டும்? நன்மை என்பது குறிக்கோளாய் இல்லை தீமையை என்பதை ஒதுக்கும் தைரியமும் இல்லை .
இன்றைக்கு நடக்கும் கொடுமைகளில் இருந்து இளைய தலைமுறையை வழி படுத்த கூட முடியாமல் இந்த அளவு கோல் தடுக்கிறது.. உதாரணமாக ஒரு இளைஞ்சனை தவறான படங்களையோ பேச்சுகளையோ விட்டுவிடு உன்னை அழித்துவிடும் என்று சொன்னால்.. 'உலகத்தில் நிஜமா கொடுமை பண்ணுகிறவன், பண்ணியவன் எல்லாம் நல்லாத்தான் இருக்கான் இதுவொன்னும் பெரிய விஷயமில்லை' என்று புறம் தள்ளிவிடுகிறார்கள். அவர்களை அறியாமல் தீமைகளின் பக்கம் சாய்ந்துவிடுகிறார்கள்.
ஏன் ஒரு குடும்பத்திலேயே இருந்து இந்த சாய்த்தல் ஆரம்பித்துவிடுகிறது இளையவனை வழி நடத்தினால் அவர்கள் கை மூத்தவனை நோக்கி போகிறது 'அவனை எதுவும் சொல்லமாட்டிங்க என்னை மட்டும் ஏன்?' என்ற கேள்வி.. தீமைக்கு உரம் போடுகிறது. 99% பெற்றோர்களும் தீமை செய்யயும் பிள்ளைகளுடன் தன் பிள்ளைகளின் தீமையின் அளவை ஒப்பிட்டு சமாதானம் ஆகிவிடுகிறார்கள் அவர்களாக தீர்மானித்து கொள்கிறார்கள். கெட்டது என்பதற்க்கு அளவுகோல் வைத்து. 'நல்லதை நாடு, நல்லத்துக்கு துணையாக நில்' என்பதை சொல்லி கொடுக்க தவறிவிடுகிறார்கள். அப்பொழுது மிக மெல்லியதாக அதர்மத்தின் நூலின் முனையினை பிடித்துவிடுகிறோம் எல்லோரும் .
தர்மத்தின் வாழ்வுதனை சூத்து கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும் என்று சொல்லி கொடுத்தால் இருக்கட்டும் இருந்து விட்டு போகட்டும் தீமை எல்லாரையும் புரட்டி எடுத்த பிறகு அது வென்றால் என்ன வெல்லவிட்டால் என்ன என்ற கேள்வியே இன்று எல்லோறையும் சூழ்ந்து கொண்டிருக்கும் மாபெரும் கேள்வி...
கடைசியாக அப்படி கடவுள் வந்தாலும்
இதை தான் சொல்லுவார் என்று நினைக்கிறேன்.....
'இவ்வளவு நாள் நீங்க என்னடா கிழிச்சிட்டு இருந்திங்க உங்களுக்குனு கொடுத்ததை சரியா பராமரிக்க முடியாமல் இருக்கும் போது எதற்க்கு உங்களுக்கு இது(உலகம்) காப்பாற்ற பட வேண்டும் உங்கள் பசிக்கு உங்களையே இரையாகி கொள்ளுங்கள்"
இவ்வாறு எல்லாம் கேள்வி எழுப்பமாட்டார் என்பதே மனிதனின் பக்தி கடவுள் அவதரிப்பார்
என்ற நம்பிக்கையில் மனிதன் செய்வதை மறந்து மன்னித்து பக்தி பூஜை என்று மாயம் செய்து
கொள்கிறான்.
ஒருபக்கம் இயற்கையோ கோபத்தோடு காத்திருக்கிறது மனிதனின் வளர்ந்துவிட்ட முட்டாள் தனத்திற்கு பரிசு கொடுக்க
ஒருபக்கம் இயற்கையோ கோபத்தோடு காத்திருக்கிறது மனிதனின் வளர்ந்துவிட்ட முட்டாள் தனத்திற்கு பரிசு கொடுக்க
'விதி என்பதை உலகத்தில் உள்ளவைகளுக்குமட்டுமல்ல உலகுக்கும்(பூமிகோள்) விதி என்பது எழுதப்பட்டிருக்க வேண்டும் இந்த கோட்பாட்டில் இந்த விதமான நியதியில் மட்டுமே இயக்கம் இருக்க வேண்டும் இல்லையேல் முடிவுக்கு வரவேண்டும் என்பது கடவுளின் தியரி'
சீரியஸா சொன்ன அழகாச்சி வந்திட போகுதுனு புலம்பலாய்......
ஒரு வழியா புலம்பியாச்சு நீங்களும் வந்து என் புலம்பல் சரியா? தவறா? சொல்லிட்டு போங்கோ
சீரியஸா சொன்ன அழகாச்சி வந்திட போகுதுனு புலம்பலாய்......
ஒரு வழியா புலம்பியாச்சு நீங்களும் வந்து என் புலம்பல் சரியா? தவறா? சொல்லிட்டு போங்கோ
கடவுள் எதிரில் வந்தால் பக்தன் பயந்துவிடும் காலம் இது. நைவேத்தியம் செய்யும் பண்டங்களை கடவுள் சாப்பிட ஆரம்பித்தால் பக்தன் நிவேதனம் செய்வானா?
பதிலளிநீக்கு:))))
வாங்க ஹா ஹா இதுதான் உண்மை நண்பா
நீக்குஎப்படியோ மனதில் உள்ளதை புலப்பல் மூலம் சொல்லி விட்டீர்கள்.
பதிலளிநீக்குகடவுள் உண்டா ? இல்லையா ? என்பதை அறிந்தவன் உலகுக்கு சொல்ல முடியாது இதுவே நியதி.
காரணம் அவன் இறந்த பிறகே உறுதியாக அறிய முடிகிறது.
வாங்க ஜீ எப்படி இவ்வளவு ஆணித்தரமா சொல்லிட்டீங்க
நீக்கு
பதிலளிநீக்கு//
கடவுள் அவதரிப்பாரா///
கடவுள் அவதரிப்பாரா? அவதரித்துவிட்டாரே என்னுடைய ரூபத்தில் அது கூட தெரியாமல் இப்படி தலைப்பு வைச்சிருக்கீங்கலேம்மா
வாங்க கடவுளே பார்த்திங்களா இதுகூட தெரியல இந்த பச்சை புள்ளைக்கு :D
நீக்குவணக்கம் !
பதிலளிநீக்குஅடிக்கடி நல்லா அலசுறீங்க கடவுள் பற்றியும் மனிதன் பற்றியும் இப்படியே தொடர்ந்து எழுதுங்கள் புதிய சிந்தனைகள் புதிய கண்ணோட்டத்தில் பிறக்கும் ....
யதார்த்தமான சில வரிகள் கண்டேன் மீண்டும் வந்து அலசுகிறேன் வெய்ட் அண்ட் சீ ...............
ha ha வாங்க.. அலசலா :D:D I AM WAITING......
நீக்குஈ மெயில் சப்ஸ்க்ரிப்ஷன் வைத்து விட்டீர்கள்...! நன்றி!
பதிலளிநீக்கு