புத்தாண்டு .... ஆங்கில புத்தாண்டு மக்களின் மகிழ்ச்சியை கொண்டாடி வருகிறதா இல்லை அப்பாடா இந்தாண்டு போயிற்று இந்த உலகத்தில் என்ற நோக்கத்தில் கொண்டாட படுகிறதா புரியவில்லை இருந்தும் எனக்கு தெரிந்து 40 வருஷங்களுக்கு மேல் இருந்து கொண்டாடப்பட்டுத்தான் வருகிறது....
அதற்க்கு முன்னர் எப்படியோ தெரியவில்லை அவரவர் புத்தாண்டை கொண்டாடி மகிழ்ந்தினரோ ?
இப்பொது இன்றைக்கு நாம் நமக்கு மட்டும் திடிரென்று அதில் மாற்றம் கொண்டு வர வேண்டுமென்பது எதிர்பார்க்காத வருத்தத்தை கொண்டு வரத்தான் செய்யும் மக்கள் மனதில் .....
இந்த ஒரு நாள் கொண்டாட்ட நாள் என்று மனதில் பதிந்து போய்விட்டது.
கொஞ்ச வருஷத்திற்கு முன்வரை புத்தாண்டுக்கு பட்டாசு வெடிப்பார்கள் ,புது சினிமா ரிலீஸ் ஆகும் அதற்க்கு முந்தி அடித்து போவார்கள், கோவிலுக்கு போவார்கள் .
இன்று நிலை மாறிவிட்ட்டது கலாச்சரா சீரழிவு என்ற போர்வையை போர்த்தி கொண்டது ஆங்கில புத்தாண்டு .இதன் காரணமாய் பல குற்றங்கள் புதிது புதிதாய் அலங்கரிக்கிறது சமீபமாய் ஒவ்வொரு வருஷமும்.
இன்றைய இளைய தலைமுறையினர் வரைமுறையற்று கொண்டடாத்தை திண்டாட்டமாய் ஆகிவிடுகிறார்கள் ஆண் பெண் பேதமின்றி
கண்ணுக்கு தெரிந்து சில குற்றம் கண்ணுக்கு தெரியாமல் பல ....
அதனால் இந்த நாளை கொண்டாட கூடாது என்று தடை விதிக்க படுகிறது.
பல மாநிலங்களில் இதற்க்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் காவல்துறையினாரால் நடத்தப்பட போகின்றனவாம்
தலைக்கு தலை நாட்டாமையாகிவிட்டால் என்னவாகுமோ என்ற பயமும் வருகிறது. அதே சமயம் கொஞ்சம் ஒழுங்கு படுத்த படுமோ என்ற எண்ணமும் தோன்றுகிறது
இதை எந்த அளவு மக்கள் ஏற்று கொள்வார்கள் என்பது கவலை அளிக்கிறது அப்படி ஏற்று கொள்ளாமல் இருந்தால் சட்டம் ஒழுங்கை கையில் எடுத்தால் கஷ்டப்பட போவது நாமே
உற்சாகத்தை கொண்டு வருவதற்கு பதிலாய் வருத்தத்தை தாங்கி விடுமோ இந்த நாள் என்ற அச்சம் வருகிறது......
எந்த பிரச்னைகளும் குற்றங்களுமற்று இந்த நாள் கடந்திட வேண்டுமென்று பிராத்தனை எழுகிறது
தோழமைகளும் பிராத்தனை செய்து கொள்ளுங்கள் இந்த புத்தாண்டு இனிய புத்தாண்டாய் கடந்து வர, மலர்ந்துவர......
ஃபிடேன் காஃபி ரெசிபி
காஃபி பிரியர்களுக்கு ஒரு புது காஃபியாம்
இது என்ன பார்ப்போமா
அதுவும் இப்போ குளிர்காலம் எல்லோருக்கும் சூடா காஃபி, டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றும்.... அப்படி இரண்டு மூன்று முறை காஃபி குடிப்பவர்கள் இந்த முறையை ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்
போதும் போதும் எப்பதான் குறிப்பை சொல்ல போற மாலை காஃபி குடிக்கும் நேரம் வந்துவிடுவதற்க்கு முன் எல்லோரும் பார்க்கட்டும் ........சரி குறிப்புக்கு போவோமா
காபி பொடி - 2 டேபிள் ஸ்பூன்,
பால் - 1/2 கப்
கொதிக்கும் நீர் - 1/2 கப்,
சர்க்கரை - தேவையான அளவு
செய்யும் முறை.;- (இது ரொம்ப அளப்பறையா இருக்கே)
முதலில் ஒரு கப்பில் அல்லது சின்ன கிண்ணத்தில் காபி பொடி மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பிறகு அதில் ஒரு ஸ்பூன் பால் விட்டு முட்டை அடிப்பது போல் (முட்டை அடிப்பதுனா ஆம்பிலேட் போடுவதற்க்கு அடிப்போமே (பீட்) அது) ஐந்து நிமிடம் தொடர்ந்து அடிக்கவேண்டும். அப்பொழுது அது நிறம் மாறி ஒரு பேஸ்ட் போல் வரும், வர வேண்டும்.
ஒருபக்கம் அடுப்பில் பாலை எவ்வ்ளவு தண்ணீர் நீங்க காஃபிக்கு சேர்ப்பீர்களோ அந்த அளவு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் .
பிறகு கொதிக்க வைத்த பாலை அடித்து வைத்துள்ள காஃபி பேஸ்டுடன் (பசையில் ) கலக்க வேண்டும் .
இப்போ உங்க காஃபி தயார் இது எப்போவும் நாம் குடிக்கும் காஃபி போல் இல்லாமல் வித்யாசமான சுவையுடன் அட்டகாசமாய் இருக்குமாம் காஃபி பிரியர்கள் செய்து பாருங்கள். சுவைத்து மகிழுங்கள்
ஒரு காஃபிக்கு இவ்வளவு பில்டப்பா
பின்ன வேண்டாமா
இந்த காஃபி திரவம் காலையிலும் மாலையிலும் உள்ளே செல்லவில்லையென்றால் நிறைய பேருக்கு பீபீ யே வந்துவிடும். ....
அன்று அவர்கள் மூட் அவுட் ஆகிவிடுவார்கள்.
கொஞ்சமா சாப்பிடுவதால் ஒன்றும் தப்பில்லை உடல் நலத்திற்க்கு கேடு வந்துவிடும் என்ற பயமே மனிதனை நிம்மதி இழக்க செய்யும் .... மன நிம்மதி முக்கியமில்லையா ...............
இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது எழுத இரண்டு நாளாய் என்னை படுத்தி எடுத்தது விட்டு இன்றுதான் அமைதியான என் வீட்டு பைரவன் பத்து நாள் பயணத்தில் சந்தோஷம் முழுமையாய் இல்லாமல் மனதை ஆக்ரமித்து துக்கத்தில் ஆழ்த்தியவன்
எங்கள் வீட்டு செல்ல குட்டி பைரவன் பெயர் ஜானி இப்போதுதான் ஒருவயது முடிய போகிறது அவன் எப்போதுமே என்னை வெளியே செல்லவே விடமாடடான் வீட்டைவிட்டு குலைத்து ரகளை செய்து விடுவான் இந்த பயணத்தை முழுவதுமாய் சந்தோஷத்தோடு வரவேற்க முடியாமல் அவனை பற்றி கவலை பட்டு கொண்டிருந்தேன் வீட்டில் மகன் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை அவனுக்காகவே
முதலில் நான் துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தவுடனேயே அவனுக்கு எதோ புரிந்துவிட்டது என்னையே சுற்றி சுற்றி வந்தான் நான் பேசுவது எல்லாம் அவனுக்கு புரியும் . மகனிடம் அவனை தனியே நிரம்ப நேரம் விடாமல் எப்படியெல்லாம் பார்த்து கொள்ள வேண்டுமென்று சொல்லி கொண்டு இருந்தையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தான் .
எப்பொழுது நான் வெளியே கிளம்பினாலும் என் துப்பட்டாவை அசந்த நேரம் எப்படியாவது எடுத்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வான் இல்லை கிழித்தே விடுவான் .அவனுக்கு நன்றாக தெரியும் நான் அடிக்கமாட்டேன் சும்மா கத்தி கொண்டே மட்டும் இருப்பேன் திட்டுவது போல் என்று ஊருக்கு செல்லும் நேரமும் வந்துவிட்டது.அவன் முகம் மாறிவிட்டது குரல் மாறி அழுகை குரலில் கூப்பிட ஆரம்பித்துவிட்டான் கேப்பில் ஏறவிடாமல் அப்போதே மனது கஷ்டப்பட ஆரம்பித்துவிட்டது மகன் கடிந்து கொண்டார் நான் பார்த்து கொள்கிறேன் இப்போ இப்படித்தான் செய்வான் இரண்டு நாளில் சரியாகிடுவான் என்று முதல் நாள் டிரெயினில் போனில் ஒன்றுமில்லை என்று சொன்னான் நல்ல இருக்கான் என்று என்னை சமாதானம் படுத்துவிட்டான் மகன் ட்ரைனிங் பிரியட்டில் இருக்கிறார் காலையில் 9 -ல் இருந்து மத்தியம் வரை .
அடுத்த நாள்பக்கத்துவீட்டில் இருந்து போன் காலையில்ஜானி அழுது கொண்டே இருக்கிறான்' ரொம்ப பாவமா இருக்கு குரல் கொடுத்தாலும் ரொம்ப கோவப்படறான் 'என்று
ஆம் அவன் யாரையும் உள்ளே வேறு விடமாட்டான். வீட்டு பக்கத்தில் வந்தாலே கத்தி ஒருவழியாகிவிடுவான். அதனால் யாரும் உள்ளே வரமாட்டார்கள் கேட்டை திறந்து. நாங்கள் வேறு மாடியில் இருக்கிறோம் சொந்த வீடுதான் அவனுக்கு சுற்றிவர நிறைய இடமுண்டு
மகன் மதியம் வந்தவுடன் கேட்டால் சரியாகிடுவான் நீ அங்கே பார் என்று சொன்னான் தைரியமாய்.
முதல் இரண்டு நாட்கள் சாப்பிட்டவன் பிறகு சாப்பிடமாட்டேன் என்று அடம் சாப்பாடு வைத்தால் தடடை தலைகீழ் கவிழ்த்து வைத்துவிட்டானாம். சமாளிக்க முடியவில்லை மகனும் வீடியோக்கால் போட்டு "கூப்பிடுமா அவனை" என்றெல்லாம் சொல்லி பார்த்தான்.
நான்காம் நாள் என் குரலுக்கு தேடி ஓடி ஓடி பார்த்தவன் பிறகு உர் என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டானாம் திரும்பவும் சாப்பிட ஸ்ட்ரைக் இரவு வீட்டுக்குள் தான் இருப்பேன் என்று அடம் காலை முதல் மதியம் வரை அழுகை இதையெல்லாம் சொன்னால் நான் நிரம்ப வருத்தப்பட போறேன் என்று மகன் சொல்லமால் இருந்தார். வீட்டினுலேயே பக்கத்திலேயே வைத்து கொண்டு உள்ளார். எல்லோரும் பக்கத்தில்அவன் அழுகிறான் என்று சொல்லியதில் அவனோ அப்போதும் சமாதானமாகவில்லை சாப்பிடவுமில்லை சரியாக.....
நான் அங்கு டில்லியில் திரும்புவதர்காக வண்டி ஏறுமுன் வீடியோ காலில் அவனை கூப்பிட்டால் கோபித்து கொண்டு போயி முலையில் உட்கார்ந்தவன் எழுந்தே வரவில்லையாம் சாப்பிடவுமில்லை அழுகை அழுகை டிரையின் வேறு லேட்டா வறுத்து இரவு பத்துமணி ஆகிவிட்டது சென்னையில் வந்து கேப் பிடித்து வீட்டு வந்துதான் தெரியும் என் மேல் விழுந்து புரண்டு அழுது எழுந்து கொள்ளவே மாட்டேன் என்று மடிமேல் படுத்து கொண்டான் அப்புறம் மூன்று இட்டிலி யை ஊட்டி சமாதான படுத்தி இரவு 12 மணி
வீட்டில் உள்ளோருக்கு மக்களுக்கும் என்னவருக்கும் தங்களையெல்லாம் அதிகம் கண்டு கொள்வில்லையென்று ஆச்சரியம் வேறு, மகனோ போன நாளில் இருந்து அவன் செய்த அடம், கோபம் ,அழுகை எல்லாவற்றயும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார்
அவன் சரியாக சாப்பாடு எடுக்காததால் அடுத்தநாளே அவனின் டாக்டரிடம் கூப்பிட்டு போனால் 104 டிகிரி ஜுரம் என்று சொல்கிறார் ரொம்ப பயந்து ஏக்கத்தில் வைத்திருக்கும் என்று ....மாத்திரை அப்பா அவனுக்கு மாத்திரை கொடுப்பது பெரும் பாடு ஊசி போட்டு கூப்பிட்டு வந்தால் இரண்டு நாள் என்னை ஒட்டியே கிடந்தது இப்பொது தான் கொஞ்சம் சமாதானம் ஆனான் செல்லக்குட்டி
வீட்டில் ஒரே திட்டு இனிமேல் அவனை அதிகம் கொஞ்சக்கூடாது அவனிடம் பேசி கொண்டே இருக்க கூடாது என்று.....
வெளியேயோ எல்லா வீட்டில் இருந்தும் "அம்மாதாயே நீ எங்கேயும் போகாதே உன் பெறாத மகனைவிட்டு அவன் அழுகை சமாளிக்க முடியலை கிட்டேயும் வரமுடியலை அவனையும் கூடவே அழைத்து கொண்டு போ இல்லை உன்னவரையாவது விட்டு போ" அவருக்கும் ரொம்ப செல்லம் அவன்
அவனின் சுட்டித்னத்தை எல்லாம் சொல்லனுமென்றால் அது ஒரு பெரிய கதை புத்தக்கம் போல் ஆகிவிடும்.
பயணம் அவ்னின் கவலையிலேயே கழிந்துவிட்டது மனதில் உற்சகமில்லாமல் திரும்பவும் ஒரு பயணம் இருக்கிறது அடுத்தமாதம் அது நான் மட்டும் தான் ஆனாலும் வீட்டில் கவலை இப்போதிருந்தே என்ன செய்ய செல்லமா செல்ல குட்டியை வளர்த்ததற்கு இப்போ திட்டு அதற்க்கும் அவர்களை அவன் தண்டித்து கொண்டுதான் இருக்கிறான் ஹா ஹா ஹா
வந்தேன் வந்தேன் மீண்டும் நான் வந்தேன்
அன்புள்ளம் கொண்ட என் நண்பர்களை தேடி வந்தேன்
அவர்களின் சொல்வடிவங்களை படித்து பார்க்க வந்தேன்
தலைநகரின் தலையங்கம்
ஊசியாய் குத்தும் குளிர்
நடுங்க வைத்த விரல்கள்
இறுக்கி போன கால்கள்
அப்பப்பா விருந்தோம்பல்களும்
விசாரிப்பும் கூட
புறம் தள்ளவைக்கும் குளிர்
திருமண விழாவில்கூட ஜொலிக்கமுடியாமல்
உல்லனுக்குள் ஒளிந்து கொள்வைக்கும்குளிரிலில்
விடுமுறை விடை பெற்றது
தோழமைகளுக்கு
எனக்கு கணனி மற்றும் மடிக்கணனி மட்டுமே உபோயோகித்து பழக்கம். கைபேசியில் சரளமாக உபோயோகிக்கும் முறையை பயன் படுத்தும் திறமையை வளர்த்து கொள்ளாத நிலையை எண்ணி மிகவும் வருந்தினேன். இந்த விடுமுறை எனக்கு ஒரு பாடம் ஏற்கனவே எழுதி இருந்த பதிவை (டிராஃப்ட்டில்) வரைவுவில் வைத்திருந்ததை அனுப்பிவிட்டேன். ஆனாலும் பின்னுட்டத்தை (பப்ளிஷ்)வெளியிடுவதில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன் என்றே நினைக்கிறேன்தோழமைகள் யாருடைய பின்னுட்டமாவது வெளியிடப்படாமல் போயிருந்தால் இல்லை தவறுதலாய் அழிக்கப்பட்டு இருந்தால் மன்னிக்கவும்