புதன், 20 டிசம்பர், 2017

விடுமுறை விடை பெற்றது

வந்தேன் வந்தேன் மீண்டும் நான் வந்தேன் 
அன்புள்ளம் கொண்ட என் நண்பர்களை  தேடி வந்தேன் 
அவர்களின் சொல்வடிவங்களை படித்து பார்க்க வந்தேன் 

தலைநகரின் தலையங்கம் 
ஊசியாய் குத்தும் குளிர் 
நடுங்க வைத்த  விரல்கள்
இறுக்கி போன கால்கள் 
அப்பப்பா விருந்தோம்பல்களும் 
விசாரிப்பும்  கூட 
புறம் தள்ளவைக்கும்  குளிர் 
திருமண விழாவில்கூட ஜொலிக்கமுடியாமல் 
உல்லனுக்குள் ஒளிந்து  கொள்வைக்கும்குளிரிலில் 
விடுமுறை விடை பெற்றது 


தோழமைகளுக்கு 
எனக்கு கணனி மற்றும் மடிக்கணனி மட்டுமே உபோயோகித்து பழக்கம். கைபேசியில் சரளமாக உபோயோகிக்கும் முறையை பயன் படுத்தும் திறமையை வளர்த்து கொள்ளாத நிலையை  எண்ணி மிகவும் வருந்தினேன்.  இந்த விடுமுறை எனக்கு ஒரு பாடம் ஏற்கனவே எழுதி இருந்த பதிவை  (டிராஃப்ட்டில்)  வரைவுவில்  வைத்திருந்ததை அனுப்பிவிட்டேன். ஆனாலும் பின்னுட்டத்தை (பப்ளிஷ்)வெளியிடுவதில் கொஞ்சம் தடுமாறிவிட்டேன் என்றே நினைக்கிறேன்தோழமைகள்  யாருடைய பின்னுட்டமாவது வெளியிடப்படாமல் போயிருந்தால் இல்லை தவறுதலாய் அழிக்கப்பட்டு இருந்தால் மன்னிக்கவும் 

21 கருத்துகள்:

  1. வருக வருக பயண அனுபவங்களை அள்ளித் தருக நாங்களும் பருக....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
    2. பயண அனுபவங்கள் கோர்வையாக எழுத வருமா தெரியவில்லை முயற்சிக்கிறேன்ஜி

      நீக்கு
  2. வாங்க பூவிழி!!! தில்லிக் குளிரை கொஞ்சம் இங்கும் கொண்டுவந்திருக்கலாமே!!! ஹா ஹா ஹா...எனக்கு குளிர் ரொம்பப் பிடிக்கும்...ரொம்ப எஞ்சாய் செய்வேன்!!

    அலைபேசி பயன்படுத்த தெரியலைனு எல்லாம் வருந்த வேண்டாம். நான் படற கஷ்டம் எனக்குத்தான் தெரியும் ஹிஹிஹிஹி..அதுலருந்து வாசித்துவிடலாம் ஆனால் கருத்து கொடுக்கறது என்பது ரொம்ப ரொம்ப கஷ்டம் எனக்கு....

    குளிரை ஒரு அழகான கவிதையாய் ..சூப்பர்

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சிஸ் கைபேசியின் வழியாய் பிளாக்கை கையாள்வது ரொம்ப கஷ்டம் தான் எனக்கு தோன்றியது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. அடடா... தலைநகரம் வந்திருந்தீர்களா? தெரிந்திருந்தால் சந்தித்திருக்கலாம்.

    சற்றே இடைவெளிக்குப் பிறகு பதிவு. மகிழ்ச்சி.

    தொடரட்டும் பதிவுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ ஆம் தலைநகரில் ஒரு திருமண விழாவில் கலந்து கொள்ள வந்தேன் அங்கு முதல் முறை அடுத்த முறை வரும் சந்தர்ப்பம் அமைந்தால் கண்டிப்பாய் உங்களை சந்திக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. வாங்க பூவிழி .விடுமுறை முடிந்து விட்டதா .வருக வருக

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. குளிர் பயண அனுபவங்களை சூடாக எதிர்பார்க்கலாம் என்று சொல்லுங்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராம் ஜி பயண அனுபவங்கள் கோர்வையாக எழுத வருமா தெரியவில்லை முயற்சிக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. வாங்கோ வாங்கோ வலது காலை எடுத்து வச்சு வாங்கோ...:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வரவேற்ப்புக்கு நன்றி வலதுகால் இதுதான் கொஞ்சம் உதைக்குது ஹா ஹா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  7. வலையுலகில் ஒவ்வொரு நாளும் ஒரு பாடம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  8. வாருங்கள் சகோதரியாரே
    பதிவுகளைத் தொடருங்கள்
    தம+1

    பதிலளிநீக்கு
  9. ஓ டில்லிக்கு போய் வந்தீங்களா அப்ப மோடி ஜீ நேரில் பார்த்து கைகுழுக்கி இருப்பீங்க))) தொடர்ந்து பயணிப்போம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ மோடிக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கலை ரொம்ப பிசி நான்:-))) வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. விடுமுறை விடை பெற்றதா
    இனிய பகிர்வு
    நன்றி
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு