திங்கள், 25 டிசம்பர், 2017

என் வீட்டு பைரவன்


இன்றுதான் கொஞ்சம் நேரம் கிடைத்தது எழுத இரண்டு நாளாய் என்னை படுத்தி எடுத்தது விட்டு இன்றுதான் அமைதியான என் வீட்டு பைரவன்    பத்து நாள் பயணத்தில் சந்தோஷம் முழுமையாய் இல்லாமல் மனதை ஆக்ரமித்து துக்கத்தில் ஆழ்த்தியவன்

எங்கள் வீட்டு செல்ல குட்டி பைரவன் பெயர் ஜானி இப்போதுதான் ஒருவயது முடிய போகிறது அவன்  எப்போதுமே என்னை வெளியே செல்லவே விடமாடடான்  வீட்டைவிட்டு குலைத்து ரகளை செய்து விடுவான் இந்த பயணத்தை முழுவதுமாய் சந்தோஷத்தோடு வரவேற்க  முடியாமல் அவனை பற்றி  கவலை பட்டு கொண்டிருந்தேன் வீட்டில் மகன் பயணத்தில் கலந்து கொள்ளவில்லை அவனுக்காகவே 
  
முதலில் நான் துணிமணிகளை அடுக்க ஆரம்பித்தவுடனேயே அவனுக்கு எதோ புரிந்துவிட்டது என்னையே சுற்றி சுற்றி வந்தான் நான் பேசுவது எல்லாம் அவனுக்கு புரியும் . மகனிடம் அவனை தனியே நிரம்ப நேரம் விடாமல் எப்படியெல்லாம் பார்த்து கொள்ள வேண்டுமென்று சொல்லி கொண்டு இருந்தையெல்லாம் கவனித்து கொண்டே இருந்தான் .
எப்பொழுது நான் வெளியே கிளம்பினாலும் என் துப்பட்டாவை அசந்த நேரம் எப்படியாவது எடுத்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வான் இல்லை கிழித்தே விடுவான் .அவனுக்கு நன்றாக தெரியும் நான் அடிக்கமாட்டேன் சும்மா கத்தி கொண்டே மட்டும் இருப்பேன் திட்டுவது போல் என்று ஊருக்கு செல்லும் நேரமும் வந்துவிட்டது.அவன் முகம் மாறிவிட்டது குரல் மாறி அழுகை குரலில் கூப்பிட ஆரம்பித்துவிட்டான் கேப்பில் ஏறவிடாமல் அப்போதே மனது கஷ்டப்பட ஆரம்பித்துவிட்டது மகன்  கடிந்து கொண்டார் நான் பார்த்து கொள்கிறேன் இப்போ இப்படித்தான் செய்வான் இரண்டு நாளில் சரியாகிடுவான் என்று முதல் நாள் டிரெயினில் போனில் ஒன்றுமில்லை என்று சொன்னான் நல்ல இருக்கான் என்று என்னை சமாதானம் படுத்துவிட்டான் மகன் ட்ரைனிங் பிரியட்டில் இருக்கிறார் காலையில் 9 -ல்  இருந்து மத்தியம் வரை .

அடுத்த நாள்பக்கத்துவீட்டில் இருந்து போன் காலையில்ஜானி அழுது கொண்டே இருக்கிறான்' ரொம்ப பாவமா இருக்கு குரல் கொடுத்தாலும் ரொம்ப கோவப்படறான் 'என்று

ஆம்  அவன் யாரையும் உள்ளே வேறு விடமாட்டான். வீட்டு பக்கத்தில் வந்தாலே கத்தி ஒருவழியாகிவிடுவான். அதனால் யாரும் உள்ளே வரமாட்டார்கள் கேட்டை திறந்து. நாங்கள் வேறு மாடியில் இருக்கிறோம் சொந்த வீடுதான் அவனுக்கு சுற்றிவர நிறைய இடமுண்டு 
மகன் மதியம் வந்தவுடன் கேட்டால் சரியாகிடுவான் நீ அங்கே பார் என்று சொன்னான் தைரியமாய்.

முதல் இரண்டு நாட்கள்   சாப்பிட்டவன் பிறகு சாப்பிடமாட்டேன் என்று அடம் சாப்பாடு வைத்தால்  தடடை தலைகீழ் கவிழ்த்து வைத்துவிட்டானாம். சமாளிக்க முடியவில்லை மகனும் வீடியோக்கால் போட்டு "கூப்பிடுமா அவனை" என்றெல்லாம் சொல்லி பார்த்தான். 
நான்காம்  நாள் என் குரலுக்கு தேடி ஓடி ஓடி பார்த்தவன் பிறகு உர் என்று முகத்தை தூக்கி வைத்து கொண்டானாம் திரும்பவும் சாப்பிட ஸ்ட்ரைக் இரவு வீட்டுக்குள் தான் இருப்பேன் என்று அடம் காலை முதல் மதியம் வரை அழுகை இதையெல்லாம் சொன்னால் நான் நிரம்ப வருத்தப்பட போறேன் என்று மகன் சொல்லமால் இருந்தார். வீட்டினுலேயே பக்கத்திலேயே வைத்து கொண்டு உள்ளார். எல்லோரும் பக்கத்தில்அவன் அழுகிறான் என்று சொல்லியதில் அவனோ அப்போதும் சமாதானமாகவில்லை சாப்பிடவுமில்லை சரியாக.....

நான் அங்கு டில்லியில் திரும்புவதர்காக வண்டி ஏறுமுன் வீடியோ காலில் அவனை கூப்பிட்டால் கோபித்து கொண்டு போயி முலையில் உட்கார்ந்தவன் எழுந்தே வரவில்லையாம் சாப்பிடவுமில்லை அழுகை அழுகை டிரையின் வேறு லேட்டா வறுத்து இரவு பத்துமணி ஆகிவிட்டது  சென்னையில் வந்து கேப் பிடித்து வீட்டு வந்துதான் தெரியும் என் மேல் விழுந்து புரண்டு அழுது எழுந்து கொள்ளவே மாட்டேன் என்று மடிமேல் படுத்து கொண்டான் அப்புறம் மூன்று இட்டிலி யை ஊட்டி சமாதான படுத்தி இரவு 12 மணி

வீட்டில் உள்ளோருக்கு மக்களுக்கும் என்னவருக்கும்  தங்களையெல்லாம் அதிகம் கண்டு கொள்வில்லையென்று ஆச்சரியம் வேறு, மகனோ போன  நாளில் இருந்து அவன் செய்த அடம், கோபம் ,அழுகை எல்லாவற்றயும் சொல்லி சொல்லி மாய்ந்து போனார் 
அவன் சரியாக சாப்பாடு எடுக்காததால் அடுத்தநாளே அவனின் டாக்டரிடம் கூப்பிட்டு போனால் 104 டிகிரி ஜுரம் என்று சொல்கிறார் ரொம்ப பயந்து ஏக்கத்தில் வைத்திருக்கும் என்று ....மாத்திரை அப்பா அவனுக்கு மாத்திரை கொடுப்பது பெரும் பாடு ஊசி போட்டு கூப்பிட்டு வந்தால் இரண்டு நாள் என்னை ஒட்டியே கிடந்தது இப்பொது தான் கொஞ்சம் சமாதானம் ஆனான் செல்லக்குட்டி

வீட்டில் ஒரே திட்டு  இனிமேல் அவனை அதிகம் கொஞ்சக்கூடாது அவனிடம்  பேசி கொண்டே இருக்க கூடாது என்று.....

வெளியேயோ எல்லா வீட்டில் இருந்தும் "அம்மாதாயே நீ எங்கேயும் போகாதே உன் பெறாத மகனைவிட்டு அவன் அழுகை சமாளிக்க முடியலை கிட்டேயும் வரமுடியலை  அவனையும் கூடவே அழைத்து கொண்டு போ இல்லை உன்னவரையாவது  விட்டு போ" அவருக்கும் ரொம்ப செல்லம் அவன்

அவனின் சுட்டித்னத்தை  எல்லாம் சொல்லனுமென்றால் அது ஒரு பெரிய கதை புத்தக்கம் போல் ஆகிவிடும். 

பயணம் அவ்னின்  கவலையிலேயே கழிந்துவிட்டது மனதில் உற்சகமில்லாமல் திரும்பவும் ஒரு பயணம் இருக்கிறது அடுத்தமாதம் அது நான் மட்டும் தான் ஆனாலும் வீட்டில் கவலை இப்போதிருந்தே என்ன செய்ய செல்லமா செல்ல குட்டியை வளர்த்ததற்கு இப்போ திட்டு அதற்க்கும் அவர்களை அவன் தண்டித்து கொண்டுதான் இருக்கிறான் ஹா ஹா ஹா 

35 கருத்துகள்:

  1. நெருக்கம் அதிகமானால் பைரவர்கள் இப்படித்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஜி ரொம்ப நெருக்கமாய் சுதந்திரமாய் வளர்த்துவிட்டோம்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. உண்மைதான் பூவிழி... இப்படித்தான் இருப்பார்கள்... நீங்கள் சொல்லச் சொல்ல எனக்கு எங்கள் டெய்ஷி தான் கண்ணுக்குள் வந்து போனா... அதுக்காக நம்மால் செல்லம் கொடுக்காமல் வளர்க்க முடியாதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் செல்லத்தை ஞாபகம் படுத்திவிட்டேனா செல்லம் கொடுக்காமல் இருந்தால் இப்ப படுத்தி வாங்குகிறான் ஹா ஹா
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. ஆஹா !! செல்லமே ஜானி ..கியூட்டா இருக்கான் .கண்ணெல்லாம் குறும்பு கலந்த அன்பு தெரியுது .
    ஆமாம் பூவிழி .ரொம்ப அன்பா பழகிட்டா இதுதான் பிரச்சினை பெட்ஸ் வளர்க்கிறவங்களுக்கு .
    எங்க வீட்ல ஜெஸி நாங்க ஷாப்பிங்க போயிட்டு வரதுக்குள்ளயே அப்செட்டாகிடுவா ஜன்னலில் உக்கார்ந்து பார்த்திட்டே இருப்பா ..
    சில நேரம் வால்பேப்பரை கோபத்தில் கிழிச்சி வைப்பா ...

    மகனை விட்டு போயும் இவ்ளோ கலாட்டாவா naughty ஜானி :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அஞ்சு ரொம்ப வால் டாக்டரே மலைத்துவிட்டார் நீங்க மனுஷ குழந்தை போல் வளர்க்காதீங்க என்று அட்வைஸ் செய்யுமளவுக்கு கண்கள் விதவிதமாய் பாவம் காட்டும்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. //நான் வெளியே கிளம்பினாலும் என் துப்பட்டாவை அசந்த நேரம் எப்படியாவது எடுத்து கொண்டு ஓடி ஒளிந்து கொள்வான்//

    அட குறும்புப் பையா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்பவே .....வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம் ஜி

      நீக்கு
  5. படிக்கக் கஷ்டமாக இருக்கிறது. என்னைவிட அதிகமாக மனம் கஷ்டப்பட ஏஞ்சல் வருவார். நாங்கள் வளர்த்த நாயையும் அழைத்துச் சென்றே என் திருமணமும், என் அண்ணன் திருமணமும் நடந்தது. ஏகப்பட்ட கூத்துகள். உங்கள் பதிவு அந்த நினைவுகளைக் கிளறிவிட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா சுவாரசியம் ஆனால் மற்றவர்கள் நம்மை தான் என்னதிது என்று பார்ப்பார்கள் புரியாது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம் ஜி

      நீக்கு
  6. இப்போதெல்லாம் அதனாலேயே வீட்டில் வளர்ப்பதில்லை. என் மாமனார் காலமானபோதும், அம்மா காலமானபோதும் யாரைத் துணைக்கு வைத்துவிட்டுப் போவது என்றும் தெரியாமல் கஷ்டப்பட்டோம். 'உறவு ஒருவர் செத்தே போய்விட்டார்... நாயைப் பற்றிக் கவலைப்படுகிறான் பார்' என்று கெட்ட பெயரும் வந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சோ sad கொஞ்சம் கஷ்டம் தான் திடிரென்று எங்கே விட்டு செல்வது என்று எப்படி என்று மலைப்பு வரும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராம் ஜி

      நீக்கு
  7. கீதா அக்கா படிக்கும்போது தன் செல்ல மோதி (எங்கள் ஒரு செல்லத்தின் பெயரும் அதுதான்) பற்றி நினைவு கூருவார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா ஆவலுடன் காத்திருக்கிறேன் மோதி பற்றி அறிய ஒரு பதிவு கொடுங்களேன் சுருக்கமாய் பதில் கொடுப்பவர் செல்லங்களை பற்றி என்றவுடன் மடை திறந்த வெள்ளம் போல் ஞாபகங்கல் வருகிறது மீள் வருகைகளுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி ராம் ஜி

      நீக்கு
  8. பதில்கள்
    1. உண்மை சார் நாம் சிரித்தால் அதுவும் உற்சகமாய் குதிக்கும் நாம் சோகத்திலோ கோபத்திலோ இருக்கும் நேரம் நம்மை சமாதானம் படுத்தும் அழகு நெஞ்சை உருகும் அனுபவித்து இருக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  9. உண்மைதான்
    எங்கள் வீட்டிலும் இதே நிலைதான்
    இவராலேயே பல பயணங்களைத் தவித்ததுண்டு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை என் மகனும் நான் போவதற்க்கு முழுதாய் விருப்படவில்லை 2மாதமுன்பே அவனே சாப்பாடு வைத்து பழகி அப்படியும் இப்படி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. பதில்கள்
    1. அமாம் அவனுக்கு வீட்டை பூட்டவே கூடாது இரவு மட்டுமே ஒற்று கொள்வான் வீட்டை பூட்ட அவனுடைய இடத்தில் இருந்தாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      நீக்கு
  11. அட நம்ம வளர்த்த ஜெனி கூட இப்படித்தானே இருந்தான் யாராவது பேசினால் சாப்பாட்டுக்கு நோ சொல்லிடுவான் நான் வந்து உணவு ஊட்டினால்தான் வாயே திறப்பான் பயபுள்ள....,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே வாங்க சகோ பழையபடி எல்லோரும் சிறுக சிறுக ஒன்றாய் சேர்வது மனதிற்கு மகிஷ்ச்சியை கொண்டு வருகிறது , உங்களுக்கும் இப்படி ஒரு வாலு செல்லம் இருக்கிறதா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  12. காவல் தெய்வம் வைரவரின் வாகனமாம்
    தங்கள் வீட்டுக் காவல்காரனும் பைரவனாம்
    பைரவனுக்கு ஜானி என்ற பெயராம்!
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  13. நான் உங்கள் பதிவு வந்த அன்றே எனது கருத்துரையையும் தமிழ்மணம் வாக்களிப்பும் தந்து இருந்தேன். ஏனோ எனது கருத்துரை - கூகிளின் ப்ளாக்கர் தொழில்நுட்ப பிரச்சினையாக இருக்கலாம் - பதிவாகவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்னரே வருகை செய்திர்களா பதிவாகவில்லையா உங்களுக்கும் சில சமயம் எனக்கும் நேருகிறது இது போல் குழம்பி இருக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

      நீக்கு
  14. எங்கள் வீட்டிலும் இப்படி ஒரு செல்லம் ஒன்று இருக்கிறது அதுவும் நானும் தூங்குவது ஒரே பெட்டில்தான் வீட்டில் நான் எங்கு இருக்கிறேனோ அதுவும் என் அருகிலே இருக்கும் அது கூட என்னை பிரிந்து சில நாட்கள் இருக்கும் என நினைக்கிறேன் ஆனால் என்னால்தான் அதைவிட்டு பிரிந்து இருக்க இயலாது... நான் இல்லை என்றால் மகளும் மனைவியும் பார்த்து கொள்வார்கள்.... ஆனால் என்ன நான் அணிந்து கொள்ளும் ஜீன்ஸ் பேண்ட் ஒன்றை என் பெட்டிலே போட்டு வைத்திருக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth நானும் அதை பார்த்திருக்கிறேன் நாம் படுக்கும் படுக்கைக்கு போட்டியாக பைரவர்கள் இருக்க விரும்புவதை
      உங்களை தள்ளிவிடாமல் இருக்கிறதா படுக்கையில் இருந்து உங்க செல்லம் :-)

      நீக்கு
  15. நீங்கள் வீட்டில் இருக்கும் போதே உங்கள் வீட்டில் உள்ளவர்களிடம் சொல்லி குட்டியை வெளியே கூட்டி செல்ல செய்யுங்கள் அது போல அதற்கான உணவுகளையும் அவர்களை விட்டே கொடுக்க செய்ய்து பழகுங்கள் அதன் பின் குட்டி சரியாகிவிடும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதையெல்லாம் பழக்கி விடாகிவிட்டது அவனுக்கு வீட்டை பூட்டவே கூடாது என்று அடம் பிடிப்பான் நான் மட்டும் எங்கேயும் கிளம்பு கூடாது எப்போதும்
      வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  16. பதில்கள்
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி புலவர் ஐயா

      நீக்கு
  17. வணக்கம் !

    பங்கயம் பூத்துக் கங்கை
    ....பசுமையும் கொள்ளல் போல!
    மங்கலம் பெருகி மக்கள்
    ....மகிழ்வினால் நிறைந்து துள்ள !
    எங்கிலும் அமைதி வேண்டி
    ...இறைஞ்சிடும் எல்லோர் வாழ்வும்
    பொங்கலாம் இந்நாள் தொட்டுப்
    ...பொலிவுற வாழ்த்து கின்றேன் !

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் !

    பதிலளிநீக்கு