திங்கள், 4 மார்ச், 2013

விழிகாதீர்கள்



இன்றைய இளைய தலைமுறையின் ஆரோக்கிய பிரச்ச்னையில் ஒன்றான  ஒன்றுக்கு விடை  இதோ

இன்றைய நவீன உலகத்தில் இளை  தலைமுறையினரின்  வாழ்க்கை முறையில்
  
நிறைய மாற்றங்கள் அதன் பயன்  அவர்களின் உடல் கூற்றிலும்  மாற்றம்

முக்கியமாய் கார்பரேட் என்ற மிக பெரிய கடலில் மூழ்கி வாழும் தலைஎழுத்து
  
இன்றைய தலைமுறையின் தலையில் இந்த வாழ்வினால் அவர்கள் இழந்த

ஆரோக்கியங்கள் அதிகம் அதில் மிகவும் தலையான ஒன்று  தூக்கமின்மை இது

என்ன பாதிப்பெல்லாம் கொடுக்கிறதோ அதில் முக்கியமான ஒன்று இதோ

தூக்கமின்மை மரபணுக்களை பாதிக்கும் என்று   ஐக்கிய ராஜ்ஜியத்தின் விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். தூக்கமின்மையானது மனித உடலின் செயற்பாட்டை கடுமையாக பாதிக்கவல்லது என்று இவர்கள் கூறுகின்றனர் எப்படி என்றால்?
ஒரு ஆய்வு நடத்தினர் இதற்காக  26 பேரை ஒரு வார காலம் ஒரு நாளைக்கு பத்து மணி நேரம் தூங்கவைத்து அவர்களின் ரத்தத்தை எடுத்து பரிசோதனை செய்தனர். அடுத்து இவர்களை ஒரு வாரகாலத்துக்கு ஆறுமணிக்கும் குறைவாக தூங்கவைத்து அதன்பிறகு அவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்தனர்.
இதில் எழுநூற்றுக்கும் அதிகமான மரபணுக்கள் மாற்றமடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்தனர். குறிப்பாக மனிதர்களின் அன்றாட செயற்பாட்டுக்கு பெரிதும் தேவைப்படும் மரபணுக்களில் இந்த மாற்றங்கள் கூடுதலாக இருப்பதை இந்த ஆய்வின் முடிவுகள் காட்டுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். ஆறுமணி நேரத்துக்கும் குறைவாக தூங்கும்படி செய்யப்பட்டவர்களின்   மரபணுக்களில் நூற்றுக்கணக்கானவற்றில் கடுமையான மாற்றங்கள் ஏற்பட்டதாக இந்த ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.
தூக்கமின்மையானது, மனிதர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும்
இதன் காரணமாக என்ன என்ன பிரச்சனைகள் தலைதூக்குகின்றன என்று பார்த்தல் தேவைக்கு அதிகமான உடல் பருமன் ,குறைவான மூளைதிறன்
செயல்பாடு ,இதய நோய்கள் ,சர்க்கரை நோய் ஆகியவி என்று கூறுகின்றனர் .
எனவே ஆரோக்கியமான வாழ்வை விரும்புபவர்கள் அவசியம் ஒரு நாளைக்கு எட்டுமணி நேரம் தூங்கவேண்டும் என்பது இவர்களின் அறிவுரை.

அமெரிக்கவாழ் இந்தியர்கள்



அமெரிக்க மோகம் நம்மை எப்போதும் ஆக்கரமித்து கொண்டுஇருக்கிறது அமெரிக்காவில் இருந்தால்  சொர்க்கத்தில் அவர்கள் இருப்பது போல்  
இந்தியர்கள் நாம் நினைத்து கொள்கிறோம்

 அமெரிக்காவில் இந்தியர்கள் மட்டும் 30 லட்சம் பேர் குடியேறியுள்ளனர். இவர்களில் 10 லட்சம் பேர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டுள்ளது.
இது மட்டுமா  240,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அங்கு தங்கியுள்ளனராம்  அதாவது முறையான குடியேற்ற ஆவணங்கள் இல்லாமல் சட்டவிரோதமாக இவர்கள் தங்கியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றனவாம்
 ஆனால் அங்கே நிலைமை என்னவென்றால் அங்குள்ள இந்தியர்களில் சதவிகிதத்தினர் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் என்று சமீபத்தில் அமெரிக்க அறிக்கை  வெளியிட்டது அதாவது ஆண்டுக்கு 12  லட்ச்ச்திர்க்கும் கீழே வருமானம் உள்ளவர்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பிரிவில் வருபவர்களாம் அமெரிகாவில் எழைகளாம் எப்படி ஆனா நமக்கு அப்படியா இந்தியாவுல அவங்களாம் கோடீஸ்வரர்கள் அல்லவா  
அங்கே ஓட்டாண்டி என்று சொல்லட்டும் இங்கே நாம  தான் நாம வீட்டுக்கு ஒ...........பாமா

சொர்கமே என்றாலும்
அது நம் ஊரைப் போல வருமா?
அட என் நாடு என்றாலும்
அது நம் நாட்டுக் கீடா ஆகுமா?

நாம இப்படியே பாடிட்டு திரிவோம்



...



ஞாயிறு, 3 மார்ச், 2013

முதுமை முள்ளம்பன்றியாய்



நேற்று என் மக்கள் என் தேசம் என்ற நிகழ்ச்சில் முதுமை பற்றிய கலந்துரையாடல் கோபிநாத் இதில் மிகவும் தொடாமல் பட்டும்படாமல் நடத்தி விட்டதாக இருந்தது
 
சரி எதை பற்றி என்றால் முதியோர் இல்லங்கள் வரவேற்க படுவதாக இதை எப்படி பார்க்கறீர்கள் ?எப்படி நாம் பார்க்க வேண்டும் ?இன்றை தலைமுறை இளைய தலைமுறை போக்கு இதை பற்றி அலசபட்டது
முதியோர் இல்லங்கள் வளர்ந்தற்க்கு இவர்கள் குற்றவாளிகளாக பார்க்கலாமா நாம்?எதற்கு ?

சரி என் கேள்விகள் என்ன என்றால் ?
பிள்ளைகளை பணம் காய்க்கும் மிஷினாக உருவகம் கொடுத்தது யார் ?
கல்வியை ஒரு மனம் சார்ந்தோ குணம் சார்ந்த  நிலையில் இருந்து பார்க்கவிடாமல் அவர்களை ஒரு இயந்திர மனிதனாக மாற்றியவர்கள் யார் ?நாம் தானே
நேசம் பாசம் என்னும் பயிரை விதைத்து வளர்க்காமல் பளு தூக்கும் சுமைதாங்கிகளாக வெறும் மிஷினாக உருவகம் கொண்டுவந்தது யார்?யாருக்கு பங்கு அதிகம்
குழந்தைகள் கேட்டார்களா ?என்னை மறந்து உன் பெருமையை மட்டும் நிலைநிறுத்த போராடு என்று ?
நாம் நாமே காரணம் வினையை விதைத்து விட்டு அங்கு திணை முளைக்க வேண்டும் என்று பேராசை பட்டால் எப்படி ?
பலன் துரிதமாய் கிடைத்து விட  வேண்டும் என்று நிறைய காய்கள் காய்கட்டும் என்று பூச்சி கொல்லி வீரிய  உரங்கள் இட்டு அவசரமாய் அறுவடை செய்ய வெறும் முருங்கை மரம் மட்டுமே வளர்த்துவிட்டது யார் யார் அது ஒரு புயல் மழைக்கு  தங்குமா ?
பேராசை பெரும் நஷ்டம் இன்றைய நிலை இதுவே
வாழ்க்கை என்பது ஆலமரங்களை  போல் இருக்க வேண்டும்ஆலமரங்கள் தான் விழுதுகள் பரப்பி நிழல் தந்து அடைகலம் கொடுக்கும்
மனம் சார்ந்து வாழ்
மனம் சார்ந்து கேட்டுப்பார்
மனம் என்பதை தட்டி பார்
மனம் என்பதை கொடுத்து பார்
இப்படி பட்ட கல்வியை போதிதோமா ?
கை நீட்டி குற்றம் சொல்ல ?
மனம் என்பது இரண்டாம் பட்சம் குணம் என்பது ஏமாற்று  விஷயம்
என்றெல்லாம் அவர்களை நாம் போக பொருளாய் பார்த்துவிட்டு ஆக்கிவிட்டு இன்று ஊன்றுகோலாய் அவர்கள் இல்லை என்று பழி போடுவது சரியா?
சமூக பார்வைக்காக அவர்களை இரும்பை உருவாக்கும் கருமானாய் (Blacksmith) இருந்து விட்டோம் இன்று அந்த இரும்பு அதே சமூக காலடியில் மிதிபட்டு அந்த சூட்டில் வெந்து உருகி தானாகவே உருவம் எடுத்து கொள்ளகிறது
யார் காரணம் இந்நிலைக்கு நாமே ?
எனக்குள் தோன்றும் ஒரு கேள்வி ?
ஒரு குழந்தையிலிருந்து வாலிப பருவம் வரை விடுதலையாய் வாழ்ந்துவிட்டு பிறகு ஒரு கூட்டுகுள் அடைபட்டு கொள்கிறோம் விருப்பபட்டுதான்
எல்லோரும் சொல்கிறார்கள் முதுமையும் குழந்தையும் ஒன்று என்றால் ஏன்சச்சரவு ?ஏன் வேதனை ?ஏன் விருப்பமின்மை ?
விடுதலை உணர்வுடன் இருப்பது தானே ?இழந்த சுதந்திரம் திரும்பவும் கிடைக்கும் போது  மகிழத்தானே வேண்டும் ?

துணிந்தவனுக்கு துக்கமில்லை இதை சொல்லி கொடுத்ததும் சென்ற தலைமுறைதானே

நாமாவது வெளிச்சங்களை உணர்ந்து வாழ்ந்திருக்கிறோம் பாவம் இன்று காந்தாரியாய் திருத்ராஷ்ட்டரனாய் கண்ணிருந்தும் மன குருடாய் ஆக்கிவிட்டோம் அவர்களை

கௌரவம் தேடி கௌரவர்களை வளர்த்து விட்டு பின் ஆயர் பாடியில் நாம் மட்டும் இருக்க விரும்புவது சுயநலம் அல்லவா ?

இளமை என்பது வரம்
முதுமைஎன்பது சாபமா?என்ன கோட்பாடுஇது எல்லாவற்றையும் கந்து எல்லோரும் வந்து தானே ஆக வேண்டும்

முதுமை முள்ளம்பன்றியாய் குத்த விடலாமா ? நம் மனதை
முயற்சி அற்ற முதுமை மடங்கி புலம்பி கொண்டிருப்பதால் என்ன லாபம் ?
புலம்பி புலம்பி உபயோகம் அற்ற வேறு உலகத்திற்கு புலம் பெயர்ந்து விடுவதாய் நினைப்பது மடமை நாம் நடந்து வரும் பாதையை திரும்பி பாருங்கள் எல்லோரும் அதில் நடந்து வருவதும் வந்து கொண்டிருப்பதும் தெரியும்
முதியோர் இல்லங்கள் தேவைதான் ஏனென்றால் அங்கு பல வகையில் வேலையாகட்டும் ம்ர்ரவ்ர்களுக்கு உதவுவதில் ஆகட்டும் தன்னைத்தானே பார்த்து கொள்வதிலாகட்டும் தைரியத்துடன் இருக்கும் முதுமை வீட்டில் ஏன் ஏட்டிக்கு போட்டியாய் ?
உடல் சுருங்கினால் மனமும் சுருங்கி விட வேண்டுமா?ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் தேவையா?நன்றாக இருக்குமா?
மனிதநேயத்தை முதலில் மனம் கொடுத்து உரம் போட்டு வளருங்கள் பின் முதுமையும் முகாரி பாடாது

இளைய தலைமுறையே நீங்களும் விழித்து கொள்ளுங்கள்
நாம் இப்போதுதாம் பிறந்தோம் பூமி எப்போதோ பிறந்து முதுமை அடைந்து விட்டது என்று பூமியை உதாசீனம் செய்ய முடியுமா ?

யோசியுங்கள் மோனாலிச படமும் ரவிவர்மாவின் ஓவியமும் இன்னும் பல பழைய போருட்ட்களும் விழ மதிப்பு போடமுடியாமல் மிக உயர்ந்த நிலையில் இதையும் நீங்கள் தான் செய்கிறீர்கள் ஏன் ?கேட்டு கொள்ளுங்கள் உங்களுக்குள்

உங்களுடைய இன்றைய படத்தை இது போல் விற்க முடியுமா ?
சுமை என்று நினைகாமல் முதுமையே சுலபமானவர்கள் என்ற எழுச்சியை ஏற்படுத்துங்கள்  
Old is gold

டிஸ்கி- நான் ஏன் மனதில் தோன்றியதை சொல்லிவிட்டேன் நான் சொல்லியதை பற்றி உங்கள் மனதில் தோன்றுவதை
தெரிவியுங்களேன் 

வாழ்க்கை நடைபயணத்தில்








வாழ்க்கை நடைபயணத்தில் ........
இலையுதிர்காலமாய் ....
நடைபழகாமல்
ஒடிககளித்த காலம்
ரங்கராட்டினத்தில் எறியது போல் .....

வேகமாய் நடந்து
விறு விறுப்பான நடையில்...
துரிதமாய் முடிவுகள்
தொலைந்து போன தூக்கங்கள்
தொலையாமல் நின்ற சிரிப்புகள்
சிறகு விரிக்கும் கனவுகள்
நங்கூரம் இல்ல கப்பலை போல்
கரையில் கல கலத்த காலம்

சீரான நடைக்கு பழகி
விரும்பதகாத நிகழ்வுகளுக்கெல்லாம்
விடைதேடி அலைந்து
விதி செய்த சேட்டைகளுக்கு
விருப்பமாய் தலை அசைத்து
விதைத்ததை எல்லாம்
அறுக்க பயந்து
வீம்பாய் போன காலம்

தளர்ந்து போன நடையில் .....
தயக்கமாய் முடிவுகள்
தப்பிதமாய் போன உறவுகள்
முடிவுரைக்கு .....
மூச்சிரைப்போடு காத்திருகின்றன
முகவுரைகள் முந்திகொள்கின்றன
நினைவலைகளில் ..................