நேற்று என் மக்கள்
என் தேசம் என்ற நிகழ்ச்சில் முதுமை பற்றிய கலந்துரையாடல் கோபிநாத் இதில் மிகவும் தொடாமல் பட்டும்படாமல் நடத்தி
விட்டதாக இருந்தது
சரி எதை பற்றி
என்றால் முதியோர் இல்லங்கள் வரவேற்க படுவதாக இதை எப்படி பார்க்கறீர்கள் ?எப்படி
நாம் பார்க்க வேண்டும் ?இன்றை தலைமுறை இளைய தலைமுறை போக்கு இதை பற்றி அலசபட்டது
முதியோர் இல்லங்கள்
வளர்ந்தற்க்கு இவர்கள் குற்றவாளிகளாக பார்க்கலாமா நாம்?எதற்கு ?
சரி என் கேள்விகள்
என்ன என்றால் ?
பிள்ளைகளை பணம்
காய்க்கும் மிஷினாக உருவகம் கொடுத்தது யார் ?
கல்வியை ஒரு மனம்
சார்ந்தோ குணம் சார்ந்த நிலையில் இருந்து
பார்க்கவிடாமல் அவர்களை ஒரு இயந்திர மனிதனாக மாற்றியவர்கள் யார் ?நாம் தானே
நேசம் பாசம் என்னும்
பயிரை விதைத்து வளர்க்காமல் பளு தூக்கும் சுமைதாங்கிகளாக வெறும் மிஷினாக உருவகம்
கொண்டுவந்தது யார்?யாருக்கு பங்கு அதிகம்
குழந்தைகள்
கேட்டார்களா ?என்னை மறந்து உன் பெருமையை மட்டும் நிலைநிறுத்த போராடு என்று ?
நாம் நாமே காரணம்
வினையை விதைத்து விட்டு அங்கு திணை முளைக்க வேண்டும் என்று பேராசை பட்டால் எப்படி
?
பலன் துரிதமாய்
கிடைத்து விட வேண்டும் என்று நிறைய
காய்கள் காய்கட்டும் என்று பூச்சி கொல்லி வீரிய உரங்கள் இட்டு அவசரமாய் அறுவடை செய்ய வெறும்
முருங்கை மரம் மட்டுமே வளர்த்துவிட்டது யார் யார் அது ஒரு புயல் மழைக்கு தங்குமா ?
பேராசை பெரும் நஷ்டம்
இன்றைய நிலை இதுவே
வாழ்க்கை என்பது
ஆலமரங்களை போல் இருக்க வேண்டும்ஆலமரங்கள்
தான் விழுதுகள் பரப்பி நிழல் தந்து அடைகலம் கொடுக்கும்
மனம் சார்ந்து வாழ்
மனம் சார்ந்து
கேட்டுப்பார்
மனம் என்பதை தட்டி
பார்
மனம் என்பதை கொடுத்து
பார்
இப்படி பட்ட கல்வியை
போதிதோமா ?
கை நீட்டி குற்றம் சொல்ல ?
மனம் என்பது இரண்டாம்
பட்சம் குணம் என்பது ஏமாற்று விஷயம்
என்றெல்லாம் அவர்களை
நாம் போக பொருளாய் பார்த்துவிட்டு ஆக்கிவிட்டு இன்று ஊன்றுகோலாய் அவர்கள் இல்லை
என்று பழி போடுவது சரியா?
சமூக பார்வைக்காக
அவர்களை இரும்பை உருவாக்கும் கருமானாய் (Blacksmith) இருந்து விட்டோம்
இன்று அந்த இரும்பு அதே சமூக காலடியில் மிதிபட்டு அந்த சூட்டில் வெந்து உருகி
தானாகவே உருவம் எடுத்து கொள்ளகிறது
யார் காரணம்
இந்நிலைக்கு நாமே ?
எனக்குள் தோன்றும்
ஒரு கேள்வி ?
ஒரு
குழந்தையிலிருந்து வாலிப பருவம் வரை விடுதலையாய் வாழ்ந்துவிட்டு பிறகு ஒரு கூட்டுகுள்
அடைபட்டு கொள்கிறோம் விருப்பபட்டுதான்
எல்லோரும்
சொல்கிறார்கள் முதுமையும் குழந்தையும் ஒன்று என்றால் ஏன்சச்சரவு ?ஏன் வேதனை ?ஏன்
விருப்பமின்மை ?
விடுதலை உணர்வுடன்
இருப்பது தானே ?இழந்த சுதந்திரம் திரும்பவும் கிடைக்கும் போது மகிழத்தானே வேண்டும் ?
துணிந்தவனுக்கு
துக்கமில்லை இதை சொல்லி கொடுத்ததும் சென்ற தலைமுறைதானே
நாமாவது வெளிச்சங்களை
உணர்ந்து வாழ்ந்திருக்கிறோம் பாவம் இன்று காந்தாரியாய் திருத்ராஷ்ட்டரனாய்
கண்ணிருந்தும் மன குருடாய் ஆக்கிவிட்டோம் அவர்களை
கௌரவம் தேடி
கௌரவர்களை வளர்த்து விட்டு பின் ஆயர் பாடியில் நாம் மட்டும் இருக்க விரும்புவது
சுயநலம் அல்லவா ?
இளமை என்பது வரம்
முதுமைஎன்பது
சாபமா?என்ன கோட்பாடுஇது எல்லாவற்றையும் கடந்து எல்லோரும் வந்து தானே ஆக வேண்டும்
முதுமை முள்ளம்பன்றியாய்
குத்த விடலாமா ? நம் மனதை
முயற்சி அற்ற முதுமை
மடங்கி புலம்பி கொண்டிருப்பதால் என்ன லாபம் ?
புலம்பி புலம்பி
உபயோகம் அற்ற வேறு உலகத்திற்கு புலம் பெயர்ந்து விடுவதாய் நினைப்பது மடமை நாம்
நடந்து வரும் பாதையை திரும்பி பாருங்கள் எல்லோரும் அதில் நடந்து வருவதும் வந்து
கொண்டிருப்பதும் தெரியும்
முதியோர் இல்லங்கள்
தேவைதான் ஏனென்றால் அங்கு பல வகையில் வேலையாகட்டும் ம்ர்ரவ்ர்களுக்கு உதவுவதில்
ஆகட்டும் தன்னைத்தானே பார்த்து கொள்வதிலாகட்டும் தைரியத்துடன் இருக்கும் முதுமை
வீட்டில் ஏன் ஏட்டிக்கு போட்டியாய் ?
உடல் சுருங்கினால் மனமும்
சுருங்கி விட வேண்டுமா?ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் தேவையா?நன்றாக
இருக்குமா?
மனிதநேயத்தை முதலில்
மனம் கொடுத்து உரம் போட்டு வளருங்கள் பின் முதுமையும் முகாரி பாடாது
இளைய தலைமுறையே
நீங்களும் விழித்து கொள்ளுங்கள்
நாம் இப்போதுதாம்
பிறந்தோம் பூமி எப்போதோ பிறந்து முதுமை அடைந்து விட்டது என்று பூமியை உதாசீனம்
செய்ய முடியுமா ?
யோசியுங்கள் மோனாலிச
படமும் ரவிவர்மாவின் ஓவியமும் இன்னும் பல பழைய போருட்ட்களும் விழ மதிப்பு
போடமுடியாமல் மிக உயர்ந்த நிலையில் இதையும் நீங்கள் தான் செய்கிறீர்கள் ஏன் ?கேட்டு
கொள்ளுங்கள் உங்களுக்குள்
உங்களுடைய இன்றைய
படத்தை இது போல் விற்க முடியுமா ?
சுமை என்று நினைகாமல்
முதுமையே சுலபமானவர்கள் என்ற எழுச்சியை ஏற்படுத்துங்கள்
Old is gold
டிஸ்கி- நான் ஏன் மனதில்
தோன்றியதை சொல்லிவிட்டேன் நான் சொல்லியதை பற்றி உங்கள் மனதில் தோன்றுவதை
தெரிவியுங்களேன்
மனிதநேயத்தை முதலில் மனம் கொடுத்து உரம் போட்டு வளருங்கள் பின் முதுமையும் முகாரி பாடாது
பதிலளிநீக்குஅருமையான் , நிதர்சனத்தை படமாக்கி கண்முன் காட்டும் சிரத்தையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
நன்றி வருக்கும் கருத்துக்கும்
நீக்குஅருமையான பகிர்வு...பூவிழி (அ) சுடர்விழி (அ) மலர் பாலன் ...
பதிலளிநீக்குஉங்களின் கருத்தை நான் ஆமோதிக்கிறேன் அதனுடன் கூடவே பெரியவர்களும் இந்தக் கால நிதர்சனம் உணரவேண்டும்..பணம் காய்ச்சி மரங்களை உருவாக்கிவிட்டு அவற்றிடம் பாசம் எதிர்பார்ப்பது தவறுதானே....
ஆம் எதிர் காலத்தில் ஏற்படும் பிரச்சனையை எதிர் கொள்ள தாயாராகிவிடவேண்டும்
நீக்குநன்றி வருக்கும் கருத்துக்கும்
பெரியவர்களும் பணம் காய்ச்சி மரங்களை உருவாக்கிவிட்டு அவற்றிடம் பாசம் எதிர்பார்ப்பது தவறுதானே....
பதிலளிநீக்கு