ஞாயிறு, 3 மார்ச், 2013

வாழ்க்கை நடைபயணத்தில்
வாழ்க்கை நடைபயணத்தில் ........
இலையுதிர்காலமாய் ....
நடைபழகாமல்
ஒடிககளித்த காலம்
ரங்கராட்டினத்தில் எறியது போல் .....

வேகமாய் நடந்து
விறு விறுப்பான நடையில்...
துரிதமாய் முடிவுகள்
தொலைந்து போன தூக்கங்கள்
தொலையாமல் நின்ற சிரிப்புகள்
சிறகு விரிக்கும் கனவுகள்
நங்கூரம் இல்ல கப்பலை போல்
கரையில் கல கலத்த காலம்

சீரான நடைக்கு பழகி
விரும்பதகாத நிகழ்வுகளுக்கெல்லாம்
விடைதேடி அலைந்து
விதி செய்த சேட்டைகளுக்கு
விருப்பமாய் தலை அசைத்து
விதைத்ததை எல்லாம்
அறுக்க பயந்து
வீம்பாய் போன காலம்

தளர்ந்து போன நடையில் .....
தயக்கமாய் முடிவுகள்
தப்பிதமாய் போன உறவுகள்
முடிவுரைக்கு .....
மூச்சிரைப்போடு காத்திருகின்றன
முகவுரைகள் முந்திகொள்கின்றன
நினைவலைகளில் ..................   
2 கருத்துகள்:

  1. பலரின் வாழ்க்கை நடைபயணமும் இவ்வாறே...

    மாற / மாற்ற முயல்வோம்-அடுத்த தலைமுறையினரை...

    பதிலளிநீக்கு
  2. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் ஆம்" மாற்றம் ஒன்று தான் மாறாதது அல்லவா" எங்கோ படித்தது ஒன்று கூடி தேர் இழுப்போம்

    பதிலளிநீக்கு