வெள்ளி, 21 டிசம்பர், 2012

காதல் படுத்தும்பாடு

உன் வீட்டு 
மொட்டைமாடி 
கொளுத்தும் வெயில் 
உன் வீட்டு 
துணிகள் மட்டும் 
ஈரம் சொட்ட சொட்ட 
இரவு வரை 
எனக்கான ........................உன் 
தேடல்களை 
அறிவிக்கின்றன 

சிக்கனமாய் 
சிரிகிறாய் 
உன் துப்படாவின் 
காற்று கூட 
படாமல் தள்ளி 
நிற்கிறாய் 
விரோதியிடம் 
பேசுவது போல்
பேச மறுக்கிறாய் 
வெறுத்து போய் 
விலக நினைகிறேன் 
கட்டி போடுகிறது 
உன் கண்ணின் 
காதல் ................

அலைகள் வந்து 
பரிகாசிகின்றன 
பல்இளித்து 
சுண்டல்காரன் 
சுனங்கிவிட்டு 
போகிறான் 
பலூன்காரன் 
பாவமென்று பார்கிறான் 
மணலை இறைத்து 
நககண்ணில வலி 
வருவார் போவார் 
காசு இட நினைகின்றனர் 
பிச்சைகாரனோ என்று 
அலை மோதும் 
கோபத்தில் நான் 
திரும்பினால் 
நீ .........
முச்சிரைப்போடு 
நான் துளைந்து போனேன் 
உன் 
உடல் மொழியில் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக