புதன், 26 டிசம்பர், 2012

சமைத்தால் சத்து போகுமா?


மருத்துவ அறிவியில்  விளக்கங்கள்
Tell  Me Why



‘எப்போர்ருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொரு காண்பது அறிவு ‘
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெய்வப்புலவர் சொல்லிச்சென்ற இக்கருத்தை இன்னும் நாம் முழுமையாக கடைபிடிக்கவில்லை ,
எந்தவொரு நோய் வந்தாலும் அது எதனால் வந்தது அதன் தீவிரம் என்ன,
என்ன சிகிச்சை மேற்கொள்வது எப்படி போன்றவற்றை அறிந்து கொள்ள அறிவியல் பூர்வமான அணுகுமுறை தேவை
மனிதநோய்கள் பற்றியும் அவற்றுக்கான சிகிச்சை முறைகள் பற்றியும் காலங்காலமாக பல கருத்துகளும்நம்பிக்கைகளும் மக்களிடையே நிலவி வருகின்றன .பல கருத்துகள் சரியாகவும் வேறு பல கருத்துகள் மிக மிக தவறாகவும் இருகின்றன.    இன்னும் சொல்லபோனால் நவீன மருத்துவமும் மாற்றுமுறை மருத்துவங்களும் எண்ணற்ற  சாதனைகளை படைத்து கொண்டிருக்கும் இக் கால கட்டத்தில் பல அடிப்படையான மருத்துவ உண்மைகள் கூட இன்னும் பொது மக்களை சேரவில்லை என்பதே உண்மை
மருத்துவ அறிவியலை பொறுத்தவரை ஆராய்ச்சிகள் பெருக பெருக புதிய புதிய  உண்மைகள் வெளிவருவது தொடரும் பழையன கழிதலும் புதியன புகுதலும் வழக்கம் அவற்றை எல்லாம் அவ்வபோது பொதுமக்களுக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகிறது
சரி இப்போது நோய்கள் பற்றிய கருத்துகளில் எவை சரி எவை தவறு என்பதை அறிவியல் நோக்கோடு நாம் தெரிந்துகொள்ள முயல்வோம் வாருங்கள்
டாக்டர் கு .கணேசன் மருத்துவ அறிவியல்  விளக்கத்தை எப்படி எப்படியெல்லாம் சொல்லியிருக்கிறார்  என்று பாப்போம் 




1.   சமைத்தால்  சத்து போகுமா?

 காய்கறிகளை சமைத்து சாப்பிடும்போது சத்து குறைந்து விடும் என்றும
 அவற்றை அப்படியே சாபிட்டால் அது உடல்நலத்திற்கு நல்லது என்று
 சொல்லபட்டு வருகிறது இது உண்மையா ?
  இது உண்மையில்லை ..
                சமைக்கும் போது காய்கறிகளை மிக சரியான வெப்ப நிலையில் சமைத்தால் சத்துகள் அழிவதற்கு வாய்ப்பில்லை
சொல்ல போனால் சமைக்கும் போதுதான் காய்கறிகளில் உள்ள சத்துகள் நம் உடம்பில் தேவைக்கு ஏற்ற படி உறுமாறுகின்றன சமையலின் போது காய்கறிகளின் செல்களில் உள்ள செல்லுலோஸ்(Cellulose) என்னும் பொருள்  சிதைவடைந்து செல்களுக்குள் அடங்கியிருக்கும் உணவு சத்துகள் நம் குடலில் எளிதில் ஜீரணமாகி ரத்தத்தில் உடனடியாக கலந்து பலனை தருகின்றன ..
           இதற்கு உதாரணமாக காரட்டை குரலாம் காரட்டில் இருக்கும் பீட்டா கரோட்டீன் (Beta-carotene)சத்து காரட்டை பச்சையாக சாப்பிடும் போது கிடக்கும் அளவை விட சமைத்து சாப்பிடும்போது அதிக அளவில் சத்து உடம்புக்கு கிடைகிறது .

          இதையே முட்டையை பச்சையாக சாப்பிடும் போது அதில் உள்ள ஒரு வேதிப்பொருள் நம் உணவில் உள்ள டிரிப்சின், பயாடின் என்னும் புரத சத்துகள் ஜீரனமவதை தடுக்கிறது இதை சமைத்து சாபிட்டால் அதில் உள்ள வேதிபொருள் அழிந்து விடுவதால் புர்தசத்துகள் ஜீரனமாவதில் சிரமம் ஏற்படுவதில்லை இதேபோல் பச்சை நிலக்கடலை ,அவரை,துவரை,பட்டாணி,முட்டைகோஸ்,முள்ளங்கி போன்ற காய்கறிகளிலும் இம்மாதிரியான தொந்தரவு  தரும் வேதிபொருள்கள் நிறைந்துள்ளன
இவற்றை சமைத்து சாபிட்டால் தான் பிற சத்துகள் ஜீரணமாவதற்கு பிரச்சனை ஏற்படாது .
        மற்றொன்று பச்சை காய்கறிகளை அப்படியே சாப்பிடும் போது நோய்தொற்று ஏற்படவும் வாய்ப்பு உண்டு  வயிற்று போக்கு ,சீதபேதி,மஞ்சள் காமாலை,குடல்புழுக்கள் போன்ற வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது .காய்கறிகள் விளையும் இடமும் விற்கும் இடமும் சுகாதாரமாக இருப்பதில்லை அந்த சுகாதார குறைவால் நோய்கிருமிகள் காய்கறிகள் மூலம் நம் உடம்பில் பரவ வழி உண்டு.
சமைக்கும் போது நோய்கிருமிகள் இறந்துவிடுவதால் எப்போதுமே முடிந்த வரை காய்கறிகளை சமைத்து பக்குவமாக்கி  சாப்பிடுவதே நல்லது 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக