சனி, 22 டிசம்பர், 2012

படித்ததில் பிடித்தது (Padithathil Pidithathu)



இந்தியாவிலேயே உணவுகள் மிக மலிவான விலையில் கிடைக்குமிடம்




உணவுப் பொருட்களின் விலைப்பட்டியலை கீழே கொடுத்துள்ளோம். முதலில் அதை உற்றுப்பாருங்கள்.



தேநீர் - ரூ.1.00
சூப் - ரூ. 5.50
பருப்பு - ரூ.1.50
சாப்பாடு ரூ.2.00                                     
சப்பாத்தி - ரூ.1.00
கோழி - ரூ.24.50
தோசை - ரூ.4.00
வெஜ். பிரியாணி - ரூ.8.00
மீன் - ரூ.13.00


விலைவாசி தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில் இவ்வளவு "மலிவான விலையில்" எங்கே உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான்.

ஏழை - எளிய மக்களுக்காக இவ்வளவு மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனைசெய்யப்படுகின்றன. நமது எம்.பி.க்கள் தான் இந்த ஏழை - எளிய மக்கள் ஆவர். நம் நாடாளுமன்றத்தின் உணவகத்தில் தான் மலிவு விலையில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதற்காக அரசு கோடிக்கணக்கில் மானியம் அளித்து வருகிறது.

எம்.பி.க்கள் மாதந்தோறும் சம்பளமாக ரூ.80,000/- பெறுகிறார்கள். இதுபோக படிகள் மற்றும் சலுகைகள் என சில லட்சங்களைப் பெறுகிறார்கள். எம்.பிக்களுக்கு இப்படி வாரி வழங்கப்படுகின்ற பணம் எங்கிருந்து வருகிறது? நாம் செலுத்தும் வரியிலிருந்து தன் இவை யாவும் வழங்கப்படுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக