திங்கள், 30 அக்டோபர், 2017
டெடிக்கேஷன் (Dedication) வேண்டும் .
நடப்பது என்ன? -7
அறியாத வயதில் டீன் ஏஜ் நட்பு எப்படி பட்டதாக அமைந்துவிடுகிறது அது எம்மாதிரியான பிரச்னைகளை கொண்டு வந்துவிடுகிறது என்பதனை பார்த்து வருகிறோம் போன பதிவில் நடப்பது என்ன ?-பகுதி 6ஒரு நிஜமாய் நடந்த சம்பவத்தை பகிர்ந்து இருந்தேன் அதை படித்து கருத்துகள் பகிர்ந்த அனைத்து தோழமைகளுக்கு நன்றி..... டீன் ஏஜில் செய்யும் தவறுகள் வெளிச்சத்துக்கு வரும்போது தான் குடும்பத்தையே தலைகுனிய வைத்துவிடுகிறது .
ஏன் இப்படி நடந்திருக்க வேண்டும் .கட்டுப்பாட்டுடன் வளர்ந்திருந்தாலும் வளர்த்திருந்தாலும் எங்கே தவறிவிடுகிறோம் நாம்...... அது நம் மேல் நாமே சில நேரம் கொண்டுள்ள நம்பிக்கை நான் சரியாக வளர்கிறோம் கண்டிப்புடன் அதனால் தவறு ஏற்பட வாய்ப்பு வராது என்று நினைத்து கொள்கிறோம். ஆனால் டின் ஏஜ் என்பது எல்லாவற்றுக்கும் அப்பாற் பட்டது அது எந்த நேரம் எதை செய்யும் என்று நம்மால் கணிக்கவே முடியாது.
நாம் செய்ய வேண்டியது என்ன கண்காணிப்பு... கண்காணிப்பு ....கண்காணிப்பு பிள்ளை என்று பெற்றுவிட்டோம் அதுவே நம் வாழ்வின் முதல் கடமை எல்லாவற்றயும் விட என்ற மனநிலை வரவேண்டும். கொஞ்சம் சோம்பலோ இல்லை வேறு காரணங்கலோ இந்தவிஷயத்தில் தடுப்பாக வர விட கூடாது.
பிள்ளைகள் யாரிடம் நட்பு வைத்திருக்கிறார்கள்.... . அவர்களின் பின்னனி எங்கு செல்கிறார்கள்? யாருடன் செல்கிறார்கள்? உங்களிடம் சொல்விட்டு சென்றாலும் சொன்ன இடத்திற்கு தான் சென்று வருகிறார்கள் என்பதயும்.... சில பல முறை கண் காணிப்பில் வையுங்கள். பழக்க வழக்கத்தில் சின்ன மாறுதல் வந்தாலும் உஷாராகுங்கள் அவர்களின் உடல் மொழியையும் கவனியுங்கள். திடிரென்று பணம் கேட்டால் எதற்கு என்று நன்றாக விசாரித்த பின் தேவையானவற்றிற்கு மட்டும் கொடுங்கள்.
பல பிள்ளைகள் செய்யும் தவறுகளுக்கு முன் உங்கள் பிள்ளைகளின் தவறு பெரிதில்லை என்று ஓப்பிட்டு செய்து தவற விட்டு விடாதீர்கள். தும்பை விட்டு வாலை பிடித்த கதையாகிவிடும் நாம் கண்டிக்கும் போது அவர்கள் மனஅழுத்தத்திற்கு போவார்கள் இப்பொழுது அவர்களுக்கு நாம் கொடுக்க கூடியது அதிகமான கொஞ்சல் இல்லாமல் உனக்கு நான் இருக்கிறேன் என்ற தாக்கத்தை கொடுக்கும் அரவணைப்பு.
முக்கியமாய் தாய் கண்டிக்கும் போது தந்தை அதற்க்கு எதிரான கருத்துக்கள் கூறுவது தந்தை கண்டிக்கும் போது தாய் எதிரான பாசதையும் தயவையும் குறிப்பால் உணர்த்துவது போன்ற செயல்கள் அவர்களுக்கு சாதகமாய் போய்விடும். இரண்டு பேருக்குமிடையே சண்டையை மூட்டிவிட்டு அவர்கள் குளிர் காய்ந்து கொள்வார்கள் அதில் தங்களுக்கு ஆதாயமாய்... கவனம்.
எல்லாத்தயும் விட காதல் என்ற இப்பெயரில் நடக்கும் கூத்துக்களின் விளைவால் நிறைய பிள்ளைகள் தங்கள் உயிரை துச்சமென நினைக்கும் மடையர்களாக இருப்பார்கள் இல்லை இச்சை என்ற மாயைகுள் சிக்கி கொள்வார்கள் இது மிக பெரிய சங்கிலி தொடர் போல் தவறுகளை உருவாக்கி விடும்.
ஞாயிறு, 29 அக்டோபர், 2017
அண்ணன் என்னடா தம்பி என்னடா
அண்ணன் என்னடா தம்பி என்னடா அவசரமான உலகத்திலே
இப்படி தான் இன்று நிலைமை இருக்கிறது ...பெற்றோரை கூட பாரமாய் நினைக்கும் காலம் அவசரம் அவசரம் நேரம் ஒதுக்க முடியாமல் ஆனால் இப்படி பட்ட உலகில் பிரதி பலன் பாராமல் உதவி புரிவர்களும் இருக்கிறார்கள். அதை பற்றி பகிர்ந்து நாமும் வியக்கிறோம் எங்கள் பிளாக்கில் வெள்ளி தோறும் அதை பற்றிய குறிப்புகளை வழங்கி சிறப்பிக்கிறார்கள் .மற்றவர்களுக்கும் தெரிவிக்கிறார்கள் .இப்படி பிரதி பலன் பாராமல் உதவும் தோழமைகள் இங்கு ஏராளம் என்று கேள்வி பட்டுளேன் .
இங்கே ஏன் திடீரென இதை பற்றி பேசுகிறேன் என்று நினைப்பீர்கள் அப்படி எனக்கும் நான் இந்த பிளாக் என்று ஒன்று ஆரம்பித்த நாள் 2012 முதல் வந்து ஊக்கம் அளித்த தோழமைகள் அதிகம் நடுவே இதை தொடராமல் விட்டு விட்டேன் 2013 லேயே அப்பொழுது இருந்த பிரபல வலைப்பதிவாளார்கள்
திரு.வை.கோபாலகிஷ்ணன் ஐயா (இவரை பற்றி எதுவும் இப்பொழுது தெரியவில்லை மிகவும் வருத்தம்)
திரு திண்டுக்கல் தனபாலன்
திரு அவர்கள் உண்மைகள்
திரு கோமதி அரசு
திரு நாஞ்சல் மனோ
திரு பாலகணேஷ்
திரு தமிழ்வாசி
திரு அரசன்
திரு உஷா அன்பரசு
திரு இளமதி
திரு அம்பாள்திரு முரளிதரன்
திரு ராஜலக்ஷ்மி பரமசிவம்
திரு யாதவன் நம்பி
திரு வெங்கட் நாகராஜ்
திரு ஸ்கூல் பையன்
திரு கணையாழி கண்ணதாசன்
திரு கிரேஸ்
திரு மகேந்திரன், திரு வருண் ,திரு கலியபெருமாள் புதுச்சேரி....... என்று பலர் என் பிளாக்கையும் பார்வையிட்டு கருத்துக்கள் சொல்லி ஊக்கப்படுத்தியுள்ளார்கள். இன்னும் சில பெயர்கள் விட்டு பட்டு இருக்கலாம் அவர்கள் மன்னிக்கவும் ....அவர்களில் பலரை இந்த 2017 அதிகம் பார்க்க முடியவில்லை சில பேரை தவிர அவர்களின் பதிவுகளும் அதிகம் வருவதில்லை அவர்களை நான் மிகவும் மிஸ் செய்கிறேன். நான் ஆரம்பித்த வேகத்தில் சீக்கிரம் விடுமுறையும் கொடுத்துவிட்டேன் என் பிளாக்கு மிகவும் வருத்தம் இப்பொழுது வருகிறது இவர்களையெல்லாம் ரொம்பவும் மிஸ் செய்துவிட்டேனே என்று....
மறுபடியும் நான் 2017 பிளாக்கை நீண்ட இடைவெளிக்கு பிறகு ....இடைவெளியா வருடங்கள் என்று சொல்லனும் சகோ திரு திண்டுக்கல் தனபாலன் 'ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது' என்ற பதிவை படித்தேன். என்னை போன்றொருகாவே எழுத பட்டிருக்கும் பதிவு அதை படித்தவுடன் திரும்பவும் ஒரு புத்துணர்வு மீண்டும் வலைப்பதிவுக்குள் என்னை நுழைத்து கொண்டேன் இப்பொழுதும் நீண்ட இடைவெளிக்கு பின் வந்தாலும் எனக்கு தோழமை கரம் நீட்டி உற்சாகம் கொடுப்பவர்கள் அன்று ஊக்கமளித்த பலர் இன்றும் வருகை புரிந்து ஊக்கமளிக்கிறார்கள் அவர்களில் அன்றும் இன்றும் வருபவர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.. DD சகோ, Avargal Unmaigal-நல்ல நண்பர் என் பெயரைதமிழில் எழுதிய பேனரை அளித்தவர் அன்றே பிரதிபலன் பாராமல் அதை கூட போட தெரியாமல் இருந்திருக்கிறேன் ,சிஸ் கோமதி அரசு, தனிமரம் இன்று வலைப்பதிவாளர்கள் ஊக்கம் பெரும் இடமாக இருக்கும் எங்கள் Blog என்னும் தளம் நான் அனுப்பிய கதையையும் போட்டு மகிழ்ச்சியை கொடுத்தவர்கள் இங்கு பல வலைபதிவாளர்களை புதிதாய் அறிமுக படுத்தி கொண்டேன்......., தோழமைகள் பலர் அதில் ரசிக்கவைக்கும் பதிவுகளை அள்ளித்தரும் கில்லர் ஜீ , 24 மணி நேரத்திற்குள் 2 பதிவுகளை வெளியிடும் ராஜி ,நகைசுவை மன்னி அதிரா (தேமஸ் நதியின் அன்அவிஷியல் ஓனர்) ,அவரை அந்த இருப்பிலேயே வைத்திருக்கும்அருமை தோழி ஏஞ்சலின் ,எல்லோரையும் ஊக்கப்படுத்தும் துளசிதரன், கீதா ,அமைதியாக வந்து போகும் மொஹமத் ,சிஸ் வல்லிசிம்ஹன், நெல்லை தமிழன், ஜீவி சார், நண்பர் ஏகாந்தன்,தொடருங்கள் என்று ஊக்கமளிக்கும் வருகை புரிந்திருக்கும் நண்பர் ஜீவாலிங்கம் மற்றும் அனுராதா பிரேம்குமார் இது போல் இன்னும் பலர் வலைச்சரத்தில் என் ஆன்லைன் தோழமைகள் ராணிமா ,சிந்து ,ஜாஸ் நல்ல எழுதவீர்கள் என்ற ஊக்கத்தை கொடுத்தவர்கள் என் நலனில் அக்கறை கொண்டவர்கள்.
நான் பிளாக் என்ற வலைநுட்பத்தை பற்றி சிறுக சிறுக அறிந்து வந்து கொண்டு இருக்கும் போதே கன்னிமுயற்சியிலேயே அதிலிருந்து விலகி நின்றதால் இன்று மீண்டும் பிளாக்கில் நுழைந்தவுடன் ஒன்று புரியவில்லை கண்ணை கட்டி காட்டில் விட்டது போல் ......கையிருப்பில் பழையது இருந்ததை போட்டுவிட்டு முழித்து கொண்டு இருந்தேன். பின்னர் மெல்ல மெல்ல ஒன்று ஒன்றாய் மீண்டும் பிளாக் என்பதை பற்றி படிக்கச் ஆரம்பித்தென் நான் ஆரம்பிக்கும் போது .com இருந்த பிளாக் பின்னர் கூகுள் .in என்று மாற்றி இருக்கிறது கில்லர்ஜி யால் தமிழ்மணம் என்ற திரட்டி ஏன் வேலை செய்யவில்லை என்ற கேள்வியால் இதையே அறிந்தேன் ...தமிழ்மணம் என்ற திரட்டியை கொடுத்திருப்பதையெல்லாம் மறந்துவிட்டேன் ...இப்போ தோழமைகள் சிலர் 'அடிப்பாவி' என்றும் சிலர்' ம்கூம் கிழிஞ்சு போ லச்சனம்' என்று மனசுக்குள் சொல்வீர்கள்.... என்னது?? இதுவேறயா பிளாக்லேயே திட்டுறோம் இரு என்று நினைத்தாலும் வாங்கி கொள்கிறேன் truth பிளாக்கு போயி வந்தற்கு அடையாளமாய் அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று நானும் சொல்லிவிடலாம் என்று நம்பிகை இன்று திரும்பவும் விவரங்களை நான் தேடும் போது பார்கிறேன் சகோ திண்டுக்கல் தனபாலன் அவர்களும் அதை பற்றி விளக்களுடன் சொல்லி கொடுத்து இருக்கிறார்.அவர் சொல்லியிருந்தவை என் பிளாக்கில் எடுக்கவில்லை எரர் என்றே காண்பித்தது அவரிடம் கேட்டேன் ஒன்று புரியவில்லை என்று
இப்பொழுது நீயெதுவும் குழம்ப வேண்டாம் என்று பிரதிபலன் பாராமல் உதவி புரிந்தவர் சகோ திண்டுக்கல் தனபாலன் ஆச்சிரியமாய் இருக்கிறது இவர்களை போன்றவர்களை பார்க்கும் பொழுது சந்தோஷமாய் இருக்கிறது .....நம்பிக்கையும் வருகிறது .....என்னால் இனியும் என்னுள் தோன்றுவதை பிடித்ததை உபோயோகமாய் தோன்றியவற்றை பதிக்க முடியும் தமிழ் மொழியில்.....மனதுக்கு திருப்தியாய் நம் எழுத்தை நாம் பார்க்க அடுத்தவர் முன் வைக்கும் போது ....அந்த அடுத்தவர்கள் பார்வைக்கும், பழக்கத்திற்கும் வெளியே நிற்பவர்கள்..... நட்பாய் கிடைத்து நம் எழுத்தை அவர்கள் ரசிக்கும் போது வரும் ஆனந்தமிருகே வார்த்தையில் சொல்லமுடியாது..... என்ன பெரிசா எழுதிட்ட.... அப்படி தெரியும் இருந்தாலும் மனதில் வரும் உவகை மேலும் மேலும் கிறுக்க சொல்லி தூண்டுகிறது. நாட்கள் வீணடித்து விட்டோமே நினைகிறேன் இப்போது என்ன பெரிய மனத்துவளல்,அதனால் எழுந்த சோம்பல் இங்கேயே இருந்திருந்தால் ஆறுதல் கொடுக்க தோழமைகள் இருந்திருப்பார்களே இன்னும் உற்ச்சாகமாய் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.....
இவரை போன்றவர்கள் இருத்தால்வலைத்தளத்தை பற்றி A டு Z அறியாத என்னை போல் இருக்கும் கத்துக்குட்டிகள் பிழைத்து கொள்வார்கள்.இவருடைய பின்னுட்டத்தை அநேகமாய் எல்லா வலைச்சரத்தில் பார்க்கமுடியும் ஊக்கம் கொடுப்பதில் வள்ளல் என்று பலர் நினைத்திருப்பீர்கள் எனக்கு இவர் உதவியது போல் பலர் பலருக்கு(புதிய பதிவாளருக்கு) இங்கு உதவியிருப்பார்கள் ......
நீங்க நல்லாயிருக்கோணும் தமிழ் வலையுலகம் முன்னேறதமிழ் வலையில் இருக்கும் பதிவர்களின் பதிவுகள் முன்னேறஎன்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே
என் பதிவுகளை பார்வையிட்டு தனது கருத்தை சொல்லி செல்லும் வலைச்சர தோழமைகள் அனைவருக்கும் நன்றி...... பார்வையிட்டு செல்வோர்க்கும் நன்றி ..... என் பதிவை படித்து நிறை குறைகளை கூறி ஊக்கமளித்து வழி நடத்த கேட்டு கொள்கிறேன்.
நேற்று என் பதிவில் 2 கீதா சிஸ் வருவதில் ஒன்னு மிஸ் ஆகிவிட்டது அவர் கீதாசாம்பசிவம் உங்களை விட்டுவிட்டேனே என்று நினைக்காதீர்கள் சிஸ் இன்று சேர்த்துவிட்டேன்
சனி, 28 அக்டோபர், 2017
நடப்பது என்ன ?-பகுதி 6
நடப்பது என்ன ?-பகுதி 6
போன பதிவில் டீன் ஏஜ் நட்பு பற்றி தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி
நட்பு என்பதை பற்றி ஒரு நிஜ சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அது.......
அவர்கள் மிக பாரம்பரியம் மிக்கவர்கள் அந்த வீட்டின் பெரியவர் வயது தற்பொழுது 80 தை கடந்திருக்கும் எல்லோருக்கும் அதாவது அந்த ஏரியாவில் இருக்கும் எல்லோருக்கும் பெரியவராய் இருந்து வருபவர் மதிப்பாய் நல்லது கெட்டதுக்கு முன்னே நின்று பார்வார் அவர் பஞ்சாயத்தாக இருந்தாலும் அவரை அணுகாமல் நடக்காது .... மொத்தத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதோடு வாழ்பவர். குடும்பத்தை கட்டுக்கோப்பாய் நடத்துபவர். .அவருக்கு ஏற்ற துணைவியும், வீட்டில் இருப்போரையும் மேலே சொன்ன க க க வை பின்பற்ற வைப்பவர் உணவு விஷயத்தில் கூட தமிழ் பராம்பரிய உணவை தினமும் எடுப்பவர் காலையில் களி சாப்பிடுவாங்க வீட்டில் உள்ளோர் அநேகமான நாட்கள்....... வீட்டில் தோட்டம் போட்டு கீரைகள் வளர்ப்பார்கள்,மற்றவருக்கும் கொடுப்பார் .தேடிவந்து ....
அந்த ஏரியா சொந்தமாய் ஒரே ஊரிலிருந்து வந்து ஒரே இடத்தில பணிக்கு சேர்ந்து ஒன்றாய் வீடுகள் வாங்கி வசிக்கும் ஒரு மிடில்கிளாஸ் ஏரியா....... இப்படி பட்டவருக்கு அவருக்கு ஒரு மகன் திருமணமாகி 2 பேரன்கள் எல்லோரும் ஒன்றாய் வசிப்பவர்கள் .இரண்டு பசங்களும் வளர்கிறார்கள் மிகவும் மரியாதையுடன் அந்த தெருவில் உள்ளோர்களிடம் அவர்கள் பேசும் போது பேச்சில் அவ்வளவு பணிவு மரியாதை தென்படும் அந்த பிள்ளைங்களை பார்த்து கற்றுக்கொள் அக்கம் பக்கமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூறுவார்கள்.
அதிகம் அந்த பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட மாடடார்கள் சிறுவயதில்........... டீன் ஏஜ் எட்டி பார்த்தவுடன் விளையாட மற்ற்வர்களுடன் வெளியே தலையை காண்பித்தாயிற்று......... இதில் முதல் பேரன் கொஞ்சம் கலகல டைப்பு வளவளவென்று பேசுவான் கொஞ்சம் வாலு அதிகமாய் திட்டுவாங்குபவன் படிப்புக்காகவும் , இரண்டாவது பையன் ரொம்ப சூட்டிகை ,அழகும் கூட, திருத்தமாய் பேசும், நல்ல படிப்பவன் அவர்கள் வீட்டின் செல்லப்பிள்ளை... தாத்தாவால் பாட்டியால் பெருமை பேசப்பட்டவன். இப்படி பட்ட பையன் நட்பினால் எப்படி வாழ்வை சிக்கலாகி கொண்டான் என்று இன்று வரை புரியவில்லை இது எங்களை பொறுத்த வரை பெற்றோரின் கவனகுறைவு என்றே நினைக்கிறேன் சம்பவம் நடந்து பேப்பரில் வந்த பின்பும் கூட நம்ப முடியவில்லை
யாரால் எப்படி இந்த மாதிரி நட்பை பழகி கொண்டான் என்று புரியவில்லை படிக்க டியூஷன் அனுப்பி இருக்காங்க பத்தாவது என்று அங்கெ பழக்கம் வந்து இருக்கிறது...... போதை வஸ்துவை எடுக்கும் நான்கு பிள்ளைகளுடன் கூடாநட்பு அங்கெ பிடித்தது ஏழரைநாட்டு சனி...... இவனுக்கும் அந்த பழக்கம் தொற்றி கொண்டுள்ளது. அவனுடைய நடத்தையில் மாற்றம் வந்திருக்கிறது படிப்பில் நேரம் கழித்து விட்டு திரும்பல் படிப்பை காரணம் காட்டுதல் இப்படி நடந்து இருக்கிறது. இங்கு அவனின் அம்மா, பாட்டி அதை பெரியவரை கவனத்திற்கு கொண்டு போகாமல் சமாளித்து இருந்திருக்கிறார் .இவர்களுக்குள் கண்டித்து இருக்கிறார்கள். முக்கியமாய் வெளியே தெரியாமல் இவனோ அந்த நட்புகளுடன் ஐக்கியம் ஆக்கிவிட்டு இருக்கிறான் .
பணம் தேவைபட்டு இருக்கிறது போதை வாங்க சின்ன பணதிருட்டு நடந்து இருக்கிறது பணம் பற்றவில்லை இதில் அந்த நட்புக்குள் ஒரு பையனுடைய ஒன்னுவிட்ட தாத்தா தனியாக வசிப்பவர் அந்த பையனின் வீடு தான் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வருபவர்கள் இவனும் அவருக்கு துணையாக இருப்பவன் அப்போ அப்போ அவரின் பணவரவு வீட்டில் பணமிருக்குமிடம் என்ன பொருட்கள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்தவன் அங்கெ இருந்து பணத்தை திருடி இருக்கிறான் சில சமயம் இருந்தும் அவர் ரொம்ப உஷார் போல ஏதோ மோப்பம் பிடித்து விட்டு இருக்கிறார் இதனால் இந்த பிள்ளைகள் கூட்டு சேர்ந்து அவர் வீட்டில் திருடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதுங்க இரவில்....... பிளான் போட்டு போயிருக்குதுங்க எல்லாமும் சேர்ந்து அங்கெ சத்தம் கேட்டு அவர் முழித்துவிட்டார் பார்த்துவிட்டு இருக்கிறார் சத்தமிட்டு இருக்கிறார் அவரை இந்த பிள்ளைகள் ஆளுக்கு ஒரு பக்கம் பிடித்து தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டதுகள் ஒட்டியும் விட்டார்கள்
மறுநாள் போலிசாரால் கண்டு பிடுக்கப்படுகிறது யாரென்றும் விதி வலியது இங்கு இந்த தெருவிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்துவிட்டது கைதும் செய்தாகிவிட்டது கூடா நட்பு என்ன கொடுத்துவிட்டது...... இன்றுவரை அந்த குடும்ப உறுப்பினர்களை அதிகம் வெளியே பார்க்க முடியவில்லை.... பேச்சில்லை பாவம் அந்த பெரியவர் ஒடுங்கி போய்விட்டார். அவரின் மனைவியை பார்த்தே வருடங்கள் கடந்துவிட்டது. மகன் ரொம்ப சாது 40 வயதிலேயே கிழவனாய் தோற்றம் அடைந்துவிட்டார் பிள்ளையை ஜாமினில் எடுக்க அள்ளும் பகலும் புழலின் வாசலில் என்ன செய்ய பாசம் கொல்கிறதே ...........
கண்ணால் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வாழ்வில் வந்த கூடா நட்பு அவன் வாழ்வை கேள்விக்குறியாய் ,கேலியாக ஆகியதை யோசித்ததில் மனம் கனக்கிறது .இன்றைய கால பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கம்பி மேல் நடக்கும் பயணம் போல் இருக்கிறது மிகவும் கவனமுடன் நடக்க வேண்டும் இல்லை கீழே தான் விழ வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த சம்பவம்
தொடர்கிறேன்.....
புதன், 25 அக்டோபர், 2017
நடப்பது என்ன ?--பகுதி 5
நடப்பது என்ன ?--பகுதி 5
செல்போன் என்னும் தேவதை என்னும் அரக்கன் பற்றி சில விஷயங்களை அலசினோம் முந்திய பதிவில் அதற்கு பின்னுடத்தில் தோழமைகளுடைய கருத்துக்களையும் நானும் தெரிந்து... புரிந்து கொண்டேன் நன்றி...... இன்று பிள்ளைகளின் நட்பு பற்றி கொஞ்சம் அலசலாம் அதில் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்று பார்ப்போம் ..
நடப்பது என்ன என்பதில் மிக முக்கியமான விஷயம் டீன் ஏஜ் நட்பு ....
டீன் ஏஜில் வரும் நட்பு அது வகைதொகை இல்லாததாக தான் இருக்கும். நட்பை ஆராய்ந்து தான் வைக்கணும் என்ற விஷயம் அவர்களுக்கு சிரிப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் .அவர்களை பொறுத்தவரை இந்த வயதில் நட்பு புனிதமானது என்று ஒரு மாயைக்குள் இருப்பார்கள். நட்புக்காக எதையும் செய்ய துணிவார்கள் .தன்னால் முடிந்தது, முடியாது அதை பற்றினா பெருமை, தாழ்வுமனப்பான்மை இதை பற்றி கூட்டாக பேசி கொள்ளும் போது ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதாக எண்ணி கொள்கிறார்கள். இது பெரியவர்கள் நமக்குமே பொருந்தும் ...
பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் பிள்ளைகள் நட்பில் மிக இறுக்கமாய் பலமாய் பொருந்தி போவார்கள்.அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பு என்பது வேறு பாதுகாப்பு என்பது வேறு இங்கு பாதுகாப்பையும் சில நேரம் பெற்றோராகி நாம் ஆண்பிள்ளைகள் விஷயத்தில் தளர்த்துகிறோம்... இது மிகவும் தவறு பல பெற்றோர்கள் இந்த வயதுக்கு இருக்கும் முக்கிய தகுதியாக நினைப்பது எதிர்பாலினத்தின் மேல் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதைத்தான் மீதி எல்லாவற்றையும் புறம் தள்ளிவிடுகிறார்கள். ஆண்பிள்ளை ஆண்பிள்ளை கூடத்தானே நட்பாய் இருக்கான் கொஞ்சம் முன்னாபின்ன இருந்தாலும் பரவா இல்லை என்று பல பேர் இந்த இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் .
இந்த வயதில் அவர்கள் உடலில் வரும் ஹார்மோன்ஸ் செயல்பாடுகளினால் தோன்றும் உணர்வுகளை.... நட்புகளுடன் ஈஷி கொள்வதிலும், முறைதவறி பேசி கொள்வதிலும், இணைந்து சுற்றுவதிலும் தீர்த்து கொள்வதாக இருக்கிறது. நண்பன் என்ன உடை உடுத்துகிறானோ அதற்கேற்றாற் போல் தன்னையும் மாற்றி கொள்வது பிடிக்கவில்லையென்றாலும் ரசனைகளை மாற்றி கொள்வது என்பது போன்ற செய்கைகள் ஆரம்பிப்பது இந்த நேரத்தில் தான் சில பிள்ளைகள் வயது ஏற ஏற திரும்பவும் தான் குழந்தையில் இருந்து வழிநடத்தப்பட்ட ரசனைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். சில பிள்ளை அப்படி வருவதை தன்னுடைய ஈகோ அடிபடுவதாக நினைத்து கொள்வார்கள் தாமாகவே ஒரு அரணை அமைத்து கொள்வது.புகுந்து கொள்வது .
ஒரு சொல் வழக்கு இருக்கிறது உன் நட்பை காண்பி உன்னை அறிந்து கொள்ளமுடியுமென்று....... இதை நாம் ஆராயாமல் எடுத்து கொள்வோம் நாம் மிக அறிவாளிகள் நடை உடை பாவனைகள் மட்டுமே முக்கியமானது நிர்ணயித்து கொள்வோம் நல்லது என்பதை அளக்க... இதுதான் பல தவறுகளுக்கு வழிவகுக்கிறது.
டீக்கா டிரெஸ் செய்து கொண்டு இருந்தால் அவன் நல்லவன் தப்புதண்டா அதுவும் செய்யமாட்டான் என்று அவன் கூட பழகினால் பிரச்னை எதுவுமில்லை அப்படி இல்லாமல் இருப்பவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்துகொள்ளும் அறிவாளிகள் நாம். இரண்டாவது படிப்பு நல்ல மார்க் எடுப்பவன் தவறே செய்யமாட்டான் என்னும் குருட்டாம் போக்கு எண்ணம் கொண்டு உள்ளோம் இன்று விஞ்ஞானம் அதிகம் கற்று கொண்டவன் தான் அதைவைத்து தீமையையும் செய்கிறான் .இன்று நவீன கருவிகளை கையாளும் திறமை கொண்டு பல கொடுமைகள் நடந்தேறுகிறது .
நாம் ஆண்பிள்ளைகளின் இந்த வயதில் அவர்கள் யாரிடம்? எப்படி? எவ்வளவு? நட்பு வைத்திருக்கிறார்கள் என்பதை கவனிக்காமல் விடுவதால் மிக பல இழப்புகளை சந்தித்து கொண்டு இருக்கிறோம். நிறைய இடத்தில் 'பெண்பிள்ளைகள்நட்பு சோகத்தை கொடுக்கிறது ஆண்பிள்ளைகளின் நட்பு ஆபத்தை கொடுக்கிறது '.
டீன் ஏஜ் பிள்ளைகளின் நட்பு என்பது என்பதை பற்றி தொடந்து பார்ப்போம் ..... இந்த நட்பினால் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம் தோழமைகள் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள கற்று கொள்ள காத்திருக்கிறேன்......
தொடரும் .............
வியாழன், 19 அக்டோபர், 2017
தேவதை என்னும் அரக்கன்
நடப்பது என்ன ?-4
தீபாவளி குறுக்கிட்டுவிட்டது நடுவே இதன் தொடர்ச்சியை மறந்திருந்தால் இங்கு பார்த்து கொள்ளவும் மூன்றாம் தொடர்ச்சில் https://poovizi.blogspot.in/2017/10/3.html
கருத்துக்கள் பகிர்ந்து கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் நன்றி
தேவத்தை என்னும் அரக்கன் யார் நம் இனிய செல்போன் இந்த அரக்கன் இந்த இரண்டு நாளில் நம் கையைவிட்டு அகன்றிருக்க மாட்டான் நாம் வாழ்த்துக்கள் பரிமாற சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள உதவியாய், உபத்திரவமாய் ......
இது பிள்ளைகளின் கையில் எந்த வகையில் உபயோகிக்க பட்டது என்று பார்க்க கூட நேரமற்று பிஸியாக இருந்திருப்போம் .
சிறுக சிறுக
செல்போன் என்ற அளவில் சிறிய தேவதை என்னும் அரக்கன் நம்மை ஆக்கிரமித்து கொண்டான் ஏன்
இப்படி சொல்லிறேன் என்றால் அதனால் நன்மையையும்
உண்டு தீமையும் உண்டு.
நன்மை என்னவென்றால்
இன்று காலகட்டத்தில் பெற்றோர் இருவரும் பணிக்காக செல்வதால் தன் பிள்ளைகளின் பற்றி அறிந்து
கொள்ள வாங்கி வைக்கிறார்கள் வீட்டில் வாங்கி கொடுக்கிறார்கள் அவர்கள் பணியில்
திரும்பி வருமுன் பிள்ளைகள் பள்ளியில் இருந்து வந்துவிடுவதால் விசாரிப்புக்காக இது
உபயோக படுகிறது
அடுத்தது அவர்கள் டியூஷன் அல்லது வேறு வகுப்புகளுக்கு பெறோர்கள்
இல்லாமல் பயணிப்பதால் அவர்களின் போக்குவரத்தையும் பாதுகாப்பையும் அறிய
முக்கியமாய்
இந்த இரண்டு காரணங்களுக்காக தான் செல்போன் என்பது 90%வீட்டில் வாங்கி கொடுக்க படுகிறது
என்று நினைக்கிறேன்.
இதனால் பெறோர்கள்
அவர்களை பற்றி நேரடியாக பேசி ஆசுவாச படுத்தி கொள்கிறார்கள் பணியில் இருந்து வருமுன்
அவர்கள் இல்லாமல் பிள்ளைகள் பிற வகுப்புகளுக்கு செல்லும் போது .இப்படியாக உதவி தேவதையாக
இருக்கும் செல்போன் எப்போது அரக்கனாய் உருவெடுக்கிறது என்றால்
அந்த பொருளில்
உள்ள வசதிகளை நாம் அறிமுக படுத்துவது நம் செயல்களினால்
நம்மையும் அறியாமல்
முதலில்
அதில் கேம்ஸ் என்னும் தளத்தில் விளையாட ஆரம்பிக்கிறார்கள் அதிலேயே தன் படிப்பின் நேரத்தை
இந்த அரக்கன் பிடித்து கொள்வதை அறியாமல் அடுத்து
தன் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வது நடக்கிறது மேலும் பல தகவல்கள் பரிமாற்றம் நடைபெற்று அதை கையாள்வதில் நம்மை விட அவர்கள் விரைவில்
தேர்ச்சி பெற்று விடுகிறார்கள்.
இந்த அரக்கன்
கையில் அமர்ந்தவுடன் அவர்கள் பார்வை நாக்கு
எல்லாம் முடங்கிவிடுகிறது வீட்டினுள் உறவினுள். மேலும் அதில் உள்ள வசதிகளை அனுபவிக்க
உண்டான வழிமுறைகளை அடைய பெற்றோர்களை வற்புறுத்துகிறார்கள்.
இங்கு தான் பெற்றோர்கள் விழித்து கொள்ள வேண்டும்.
இந்த வயதில் இணையம் என்பதை உபயோகிக்க ஆரம்பித்தால் அது ஆபத்தை விளைவிக்கும்
அவர்களின் வாழ்க்கை பாதையில் தீமை என்னும்
காற்று வீசிவிட வாய்ப்புள்ளது அவர்கள் வயதுக்கு
மீறிய வலைத்தளங்களை பார்வையிட விரும்புகிறார்கள் மற்ற எல்லா பிள்ளைகளும் வைத்திதிருப்பதாக
சொல்லி அடம்பிடிக்க ஆரம்பிக்கிறார்கள் தன் படிப்புக்கு அது உதவும் என்றெல்லாம் சொல்லி நாம் அதற்கு அடிபணிந்து போய்விடுகிறோம் பெரும்பாலும்.
மேலும் நிறைய
பெற்றோர்கள் என் பிள்ளைக்கு எவ்வ்ளவு விஷயம் தெரிகிறது எனக்கே சொல்லி கொடுக்கிறான்
என்று மயங்கிவிடுகிறார்கள், பெருமை பேசுகிறார்கள். முக்கியமாய் அடுத்த ஜெனெரேஷனில் அவர்களுக்கு இருக்கும் இந்த மாதிரியான நவீன பொருள்களை
கையாளும் கிரகித்து கொள்ளும் தன்மை நம்மை வியக்க வைக்கிறது. சில நேரங்களில் நாமே நமக்காக
அவர்களிடம் உதவியை நாடுகிறோம் இந்த விஷயத்தில் அது அவர்களை நம்மை மீறி போக வழியையம்
கர்வத்தையும் கொடுக்கிறது என்றே நினைக்கிறேன்.
இந்த செல்போன்
என்ற தேவதை அரக்கனை பற்றி சொல்ல ஆரம்பித்தால் இன்று இருக்கும் சூழ்நிலையில் முடிவுஅற்றதாகவே
இருப்பது போல் தோன்றுகிறது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்
.................கருத்துக்கள் சொல்ல வாருங்கள்
தொடரரும்...................
திங்கள், 16 அக்டோபர், 2017
இனிய தீப ஒளி நாள் மலரட்டும்
இனிய நண்பர்களே, நல்லோர்களே....

தீப திருநாளில்
ஒளியே திக்விஜயம் செய்திடு
தரணியெங்கும்
நல்லோர் வாழ்வில் இருளை ஒழித்திடு
திணறுகிறது தினவெடுத்து
தீமைகளின் விகிதம்
தின்றே தீருவேன் என்று
கொக்கரிக்கிறது பூமிதாயையை
ஆயிரமாயிரம் நரகாசுரங்களை
நால்திக்குமிருந்து
தடம் தெரியாமல் அழித்திடு
ஒளியின் ஒளியே முழுவீச்சில் வந்திட்டு
உன் உண்மை வெப்பத்தில்
பஸ்மாம்மாக்கட்டும்
தீமைகளின் தினவுகள் நல்லோர் நினைவில் நடனமாடிடு
இனிய தீப ஒளி நாள் மலரட்டும்