ஞாயிறு, 15 அக்டோபர், 2017

நடப்பது என்ன?-3

                                                          

                    போன பதிவுக்கு விஷயங்களை அலசி  கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

போன பதிவை படிக்க https://poovizi.blogspot.in/2017/10/blog-post_12.html

 

         எதுவும் புதிதாய் சொல்லவில்லையே ஏற்க்கனவே பல பேர் சொல்லியவை நினைப்பில் தோன்றுவது போல் இருக்கிறதுதானே என்று நினைப்பீர்கள். எல்லா பாடங்களும் எல்லோர் வாழ்விலும் தொடர்ந்து வராது ஆனால் கணக்கு பார்முலா  மட்டும் எல்லார் வாழ்விலும் எப்போதும் தொடர்ந்து கொண்டே இருப்பது அதை எத்தனை முறை பார்த்தாலும் நியாபகத்தில்  இருத்தி கொள்ளாமல் போக  வாய்ப்பிருக்கிறது.  அது போல் இந்த விஷயங்களும் நமக்கு என்று வரும் போது  சில நேரம் மறந்து இடறிவிட வாய்ப்பு வந்துவிடுகிறது. சூழல்கள் அதற்கு காரணம்.  அதுமட்டுமல்லாமல் நான் முன்னரே பலரால் பகிரப்பட்டதை வைத்து பயன் அடைந்துவிட்டேன். சோ இப்ப நானும் எனக்கு புரிந்ததை பகிரலாம் என்றே இங்கே இவ்வாறு.....

                  
                  

         அரவணைப்பு தொடுகை என்பது இந்த (நண்பனா அன்பான  ஆறுதலை கொடுக்கவல்ல கட்டிப்புடி வைதியம் என்று சொல்லி கொள்ளலாமா)வயது வரும் ஆண் பிள்ளைகளுக்கு மட்டுமே தேவையாக கருதுகிறேன் அதன் பின் இதன் தேவை இருக்காது அவர்களும் வளர்ந்துவிடுவார்கள்  புரிதலில் இறங்க ஆரம்பித்துவிடுவார்கள் அந்த புரிதலுக்கு அழைத்து போகத்தான் இந்த அரவணைப்பு, தொடுகை  அதன் பின் அரவணைப்பு என்பது புரிதலிலேயே அடங்கி விடும் தொடுகை தேவையில்லை..... தேவைப்படாது என்றே நினைக்கிறேன் .


                 செலவு என்பது 14,15 வயது பிள்ளைகளுக்கு  அளவுக்கு மீறிய செலவுகள் என்ன என்பதை பற்றிய விவரம் உங்கள் பார்வைக்கு வர வேண்டும். இது பிள்ளைகளுக்கு பொதுவான விதியாக வேண்டும் மேலே கீழே நடுவே என்று பாகுபாடு இல்லாமல்.


சைக்கிள் வாங்கி கொடுப்பது என்பது சரியான வயது இந்த வயது. இது எல்லோராலும் செய்யமுடியும். இதை விட்டு வசதி படைத்தவர் என்ற காரணத்தினால் மோட்டார் வண்டி வாங்கி கொடுப்பது, சில உயர்மட்டம் காரே கொடுத்துவிடுகிறது. வயதுக்கு  மீறி..... இதனால் நாம் சமூகத்தில் பார்த்து கொண்டிருப்பது என்ன ஆபத்துகள், விபத்துகள் .இந்த பிள்ளைகளின் ஆர்வத்திற்கும், ஆசைக்கும் அளவில்லாமல் இருக்கலாம் பெற்றோராகிய நாம் சிந்திக்க வேண்டும்.

            

எனக்கு தெரிந்தவர்களுக்கு நடந்தது 14 வயது பையனின்  கட்டுப்பாடு அற்ற வண்டி ஓட்டத்தினால் அந்த 50 வயது லேடி மேல் மோதி அவர்கள் பாவம் இடுப்பு பிராக்ச்சர் ஆக்கி இன்னும் சரியாகாமல்  இருக்கிறார் . 

 

இதற்க்கு  யாரை குற்றம் சொல்வது சிறு வீதிகளில் எல்லாம் டிராவிக்  போலிஸ் வைக்க முடியுமா ?ஏன் இந்த இளைஞ்சர்களின் அதீத ஆர்வ கோளாறில் நானே வண்டியில் அடிபட்டு இருக்கிறேன் இது போல் இங்கு படிக்கும் பலருக்கு நடந்து இருக்கலாம்.


டிஸ்கி - அப்படி நிறைய பணவரவு உள்ளவர்கள் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சைக்கிள் வாங்கி தரலாமே தேவைக்கு அதிகமாய் வண்டி வாங்கி தரும் செலவில் ......

 
                       
 
                           
ஆமினாவும் ஜபினும் ஹாலில் உட்கார்ந்து லேப்டாப்பை நொண்டி கொண்டிருக்கிறார்கள் "ஏன் ஜபின் துறக்க மாட்டேங்குது"
"அம்மீ  அவன் பாஸ்வேர்ட் போட்டு வச்சிருக்கான் அவன் வந்த வுடன் கேளு ஏன்னு வாப்பா பொதுவாத்தானே வாங்கி கொடுத்திருக்கார் அவன் மட்டுமே வெச்சிக்குவானா"


"சரி விடு நான் பக்கத்துக்கு விட்டு சாரா ஆண்டிகிட்ட கேட்டு செஞ்சு தரேன் அவங்களுக்கு நல்ல வரும் இதெல்லாம் போ""அம்மீ இப்படித்தான் சொல்லுவா அப்புறம் செஞ்சு தரமாட்ட  அதான்"....


.
அப்போது கதவை திறந்து உள்ளே  நுழைகிறான் பள்ளிவிட்டு இப்போதுதான் வருகிறான் சையத்ஹாலில் இவர் இருவரும் லேப்டாப்புடன் இருப்பதை  பார்த்தவுடன் அவனுக்கு கோபம் பொங்குகிறது.




"ஏய் சாத்தனே இதை எதுக்கு எடுத்து வந்தே" பாய்ந்து வந்து பிடுங்குகிறான். வேகமாய் ஆராய்கிறான் லேப்பை


பயந்து போகிறார் ஆமினா "இல்ல சையது நான் தான் கேட்டேன் கேக்கு செய்ரது எப்படினு பாக்க்கோனும்னு"


 "அம்மீ மீ மீ எம் ரூமில் இருந்து என்னை கேட்க்காம எதையும் எடுக்காதே""சரி கோபப்படாதே போயி உடம்ப சுத்தம் பண்ணி  ஓதிட்டுவா சாப்பிட ரெடி பண்ணுறேன்" கிச்சனுக்கு போகிறாள்.

அவனை முறைத்துவிட்டு   பின்னோடு போகிறாள் அவனை விட ஒரு வயது சின்னவள்


"அம்மீ உங்களை என்ன சொன்னேன் இவ்வளவு நேரம்  ஏன்? அவனை சாயங்காலம் மைதானத்தில் யாரை பார்த்தான்  கேளுங்க  என்று சொன்னேனே  அவனிஷ்டத்திற்கு திமிரு பிடிச்சி ஆட்டுடறான்"



"ஜபின்  ,,,,பொம்பளபிள்ளயா லஸ்ட்சணமா வாயை அடக்கி பழகு நான் பார்த்துகிறேன் நீ போ அவனை கோபமூடாதே"
"அம்மீ  யாரோடோ பெரிய பசங்க அம்மீ இவன் பேசி கொண்டிருந்தான் தனியாக""யாராவது பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக்கொடுக்க நின்றிருப்பான்"
ஜபின் முறைத்துவிட்டு "அம்மீ அது பெரிய பசங்கனு சொன்னேன் 
ஏன்? அம்மீ அவனை எதுவும் கேட்கறதுக்கு இப்படி பயப்படுற?10வது தானே படிக்கிறான்"



"ஜபின் உனக்கு வாய் ஜாஸியாகி விட்டது குறைய சொல்லும் படி நடந்துக்கறவன் கிடையாது படிப்பில் எப்போதும் முதலில் வருபவன். எது அவனை கேள்வி கேட்கணும்? "சரி நீ போயி அவனை போல் எப்போதும் முதல் ரெங்க எடுக்கும் வேலையை  பார் அவன் கிளாஸ் டீச்சர் எவ்வ்ளவு பெருமையா இவனை பத்தி சொன்னாங்க தெரியுமா 10வதில் ஸ்டேட் ரேங்கு கூட  வாய்பிருக்காம் சும்மா அவனை குறை சொல்லி  அவனை நோண்டிக்கொண்டு இருக்காதே"



"ம்கூம்.... அவன் படிப்பில் முதலில் வரான்னு அவனை எதுவுமே கேட்காதே அவன் லெட்டவந்தாலும் சரி..... சுத்திட்டு வந்தாலும் சரி..... இரு அடுத்தடவை நானும் பர்ஸ்ட் வந்ததுது ஊரை சுத்திட்டு வறேன்" சொல்லிவிட்டு போகிறாள்.



சையத் வருகிறான் சாப்பாடு மேஜைக்கு ஆமினா உணவு பரிமாறிக்கிறார் "சையத் வாப்பா கடைக்கு வர சொன்னார் நீ சீக்கிரம் வந்தால்" ..............
"ம்ம்"  அப்பொழுது அவநின் செல்போன் அடிக்கிறது..... எடுத்து பார்கிறான் அவசரமாய் சாப்பிடுவதை விட்டு எழுந்து போயி வெளியே சென்று விடுகிறான்.


ஆமினா ஐயோ பிள்ளை  சாப்பிடும் போது போன் வந்து விட்டதே கவலை படுகிறார். பால்க்கனியில் இருந்து எட்டி  பார்கிறார். ரோட்டில் நின்று சையத் பேசுவது தெரிகிறது சரி இங்குதான் பேசுகிறான் வந்துவிடுவான் என்று மீண்டும் சூடாக ஆப்பம் ஊற்றலாம் உள்ளே திரும்போகிறார் .



 இங்கும் நடப்பது என்ன ?



இதை பற்றி அடுத்த பதிவில்  பார்ப்போம் உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறேன் வாருங்கள் .

             




           




7 கருத்துகள்:

  1. பெண்ணுக்கு ஒரு நியாயம்.. பையனுக்கு ஒரு நியாயம். அதுக்காக பெண்ணை தண்ணி தெளிச்சு விடச்சொல்லல. பையனை கட்டுப்படுத்த சொல்றேன்.’

    சமீபத்துல மொட்டை மாடில பார்க்கிங்க் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கு ஒரு ப்ளஸ் ஒன் படிக்கும் பொண்ணு.. தங்கள் காரை எடுக்க ரிவர்ஸ்ல எடுக்கும்போது தவறுதலா ஆக்சிலேட்டரை மிதிக்க வண்டி கட்டுப்பாட்டை இழந்து மாடில இருந்து கீழ விழுந்து செத்துப்போச்சு. வண்டி எடுக்காதீங்கன்னு சொன்னா இதுகளுக்கு கோவம் வேற வரும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடக்கடவுளே சாதனை படைக்க எத்தனையோ விஷ்யங்கள் இருக்க இந்த மாதிரி விஷயங்களில் சாதனை படைப்பதில் இந்த பிள்ளைகளுக்கு அவசரம் அவசரம்.

      நீக்கு
  2. வணக்கம் முதலிலேயே படித்து விட்டேன் செல்வழி.

    உண்மைதான் வயதுக்கு ஏற்ற வகையில் வாகனங்களை வாங்கி கொடுப்பது அவசியமான விடயம் காரணம் இதில் பொதுநலன்களும் உண்டு பிறருக்கு பிரச்சனைகள் வரக்கூடாது.

    இவ்வயது பையன்களை செல்போனை எடுத்துக்கொண்டு தனியாக செல்வது,

    கணினிக்கு தனியாக கடவுச்சொல் போட்டு வைப்பது இவைகள் அவர்கள் ஏதோ தவறான வழியில் போகின்றார்கள் என்பதின் அறிகுறியே...

    இவைகளை 10 வயதிலிருந்தே நாம் அதட்டி வைத்தால்தான் சரி செய்ய இயலும் அதற்குப்பிறகு கஷ்டமான காரியம்.

    தமிழ்மணம் இணைய மறுக்கிறது என்னாச்சு நான் சொல்லியிருந்தபடி தொடர்பு கொண்டீர்களா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் அதை உபயோகிக்க இல்ல விஷயங்களுக்கும் வயது வரம்பு இருக்கிறது என்பதை புரியவைக்க வேண்டும் .
      ஜீ என்னுடைய பிளாக் .in என்று முடிவதால் இப்படி என்று படித்து தெரிந்து கொண்டேன் DD யும் சொன்னார் மாற்றம் செய்ய கொடுத்திருப்பதை கொடுத்தால் பிளாக் The widget settings in widget with ID BloggerButton1 aren't valid. The specified logo URL is not allowed.

      Error 500
      இம்மாதிரியான காண்பிக்கிறது மேற்கொண்டு என்ன முறையில் செய்வது என்று புரியவில்லை விட்டுவிட்டேன் பிளாக்கர் தளம் மாற்றம் வரும் முன் திறந்தது 2,3 வருடம் விட்டு போனதால் இப்படியா புரியவில்லை

      நீக்கு
  3. ஆண் பிள்ளையுக்குக் கூடுதல் செல்லம்...பெண் பிள்ளையைக் கட்டுப்படுத்தல் இருவரையும் ஈக்வலாக நடத்தாமல் அதீத உபசரிப்பு செல்லம் ஆண் பிள்ளைகளுக்கு...இது பல வீடுகளில் நடப்பது. பிள்ளை செய்வது எல்லாம் சரி என நினைப்பது..என்று..

    இதில் சோகம் என்னவென்றால் பல பெற்றோர்கள் படித்தவர்களும் சரி அத்தனை கல்வி அறிவு இல்லாதவரும் சரி ஒரே போன்றுதான் இருக்கிறார்கள்...மெச்சூரிட்டி என்பது ஏட்டுப் படிப்பினால் மட்டும் வருவதில்லை. அது தனி...பெரியவர்களுமே பிள்ளை வளர்ப்பில் கவனம் செலுத்தாமையே இப்படி. பண்டெல்லாம் இதற்கு அவசியம் இருக்கவில்லை. இப்போது எல்லாமே ந்யூக்ளியர் ஃபேமிலு என்று வந்துவிட்டதால் குழந்தை வளர்ப்பு சைக்காலஜி என்று பெற்றொருக்கும் தேவையாகிவிட்டது...டீன் ஏஜ் குழந்தைகளை என்றில்லை சிறுவய்திலிருந்தே குழந்தைகளை என்கேஜ்ட் டாக, அதீத லக்சூரியஸ் லைஃப்க்குப் பழக்காமல் இருத்தலும் அவசியம்...இன்னும் நிறைய சொல்லலாம்..இதைப் பற்றி

    நல்ல பதிவு...தொடர்கிறோம்

    பதிலளிநீக்கு
  4. எவ்வ்ளவு படித்தாலும் நாகரிகம் வளர்ந்தாலும் மன நாகரிகம் வளர்வதில்லை நன்றி வாங்க தொடரலாம் .

    பதிலளிநீக்கு
  5. ஆணென்ன, பெண்ணென்ன, இதில் பேதமென்ன? இதுவே முதல் தவறு. கட்டுப்பாடற்ற சுதந்தரம் அடுத்த தவறு. அன்பு என்கிற பெயரால் தாய் வளரும் மகனுக்கு செய்யும் துரோகம்.

    பதிலளிநீக்கு