Wednesday, October 11, 2017

நடப்பது என்ன ?

இன்று டீன் ஏஜ் பிள்ளைகளை சரியாக வழிநடத்துகிறோமா ?  பல பெரும் தவறுகள் நடக்காமல் இருக்க பெற்றோரின் பெரியவர்களின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது ஒரு அலசல் பார்ப்போமா ?

வீடு  வீ டாய்  ஒரு அலசல் செய்வோமா ?            


இரவு 8.30

ஒரு அப்பர்லோயர்மிடில்கிளாஸ் அப்பார்ட்மென்ட்

 1st வீட்டில் 


           "அருண் அருண்  என்னடா செய்யற கதவை மூடிக்கிட்டு உள்ள போனா வெளியே வருவதே இல்லை இதே  தொல்லையா போச்சி உன்னோட சாப்பிட எவ்வ்ளவு நேரம் கூப்பிட்டுனு இருக்கேன் சீக்கிரம் வாடா சாப்பிட்டன எல்லாத்தயும் எடுத்து போட்டுட்டு போயி படுப்பேன் நாளைக்கு வேற சீக்கிரம் எழுந்துக்கணும் நான் சீக்கிரம் வேளைக்கு போகணும் " 

"இவரை பாரு அப்படியே டீவியை விட்டு அப்படி இப்படினு செய்ய மாட்டார்  ,சங்கர் நாளைக்கு நான் சீக்கரம் வேலைக்கு போகணும் ஆட்டிங் இருக்கு. "இந்த உங்க புள்ளையை பாருங்க இன்னும் வெளியே வரலை கொஞ்சம் போயி என்ன செய்றான்னு பாருங்க "

"நீதான் கூப்பிட இல்ல சும்மா நயி நயி னு பண்ண அவனுக்கு எரிச்சல் வரும் விடு  வரட்டும் இல்லைனா சாப்பாட எடுத்து வச்சிட்டு நீ போ உன் வேலையை முடிச்சிட்டு  நான் இந்த மேச் முடிய இன்னும் அரைமணி இருக்கு நேரமிருக்கு நான்  வரும் போது சொல்லிட்டு வரேன் "


"ஆமாம் ஒரு வேலை கூட சேர்ந்து சாப்பிடாதீங்க அவன் படிப்பை பத்தி விசாரிப்போம்... கிடையாது 10 th போர்ஷ்ன் ஆரம்பிச்சிட்டாங்களானு? கேட்கணும் நினைத்தேன். நீங்க கேளுங்க  , சரி இன்னும் ஒரு சாப்பத்தி வைச்சிக்கோங்க எழுந்து வந்து" " நான் காய் கட் பண்ணிட்டு  இருக்கேன் " 

          சிறிது நேரத்தில் அம்மா தூங்க போய்விட்டாள் .அப்பா அருணின்  ரூம்  கதவை தட்டி .... கதவு தட்டும் சத்தத்தில் கேட்  பர பர வென லெப்பை  முடுக்கிறான்.... பென்  டிரைவ்வை மறைகிறான்.  அருண்   என்ற சத்தத்தில்  "எஸ் டாட் " டேபிளில் சாப்பாடு இருக்கு சாப்பிட்டு போயி வேலையை பாரு குட் நைட்" 

 அருண்  கதவை திறந்து" டாட் 500 /- வேணும் போன்க்கு, ஜெராக்ஸ் எடுக்கணும்" 

"அப்படியா 10th சிலபஸ் ஆரம்பிச்சிட்டாங்களா? சரி டேபிளை வைக்கிறேன் ..." அவன் பதில் கொடுக்கு முன்னரே இவர் உள்ளே போய்விடுகிறார். 

அருண்ம் ' ஸ்ஸ் போயிடார்ட்டா அப்பாடா ' சொல்லி குஷியோடு கதவை சார்த்தி கட கடவென லெப்பை ஓபன் செய்து பென்  டிரைவ் போடு உண்டாகார்ந்து... நெளிந்து...... நெளிந்து நகத்தை கடித்து சின்சியாராய் லெப்பை பார்க்க ஆரம்பிக்கிறான் .


இது முதல் வீட்டில் இருக்கும் பிள்ளையின் வாழ்க்கைஇங்கே பெற்றோர் இருவரும் வேலைக்கு போகிறார்கள்

 
இங்கு அருணின்   வயது என்ன ?

அவன் வழி நடத்த படுகிறானா?  

சரியாக  கண்காணிக்க படுக்கிறானா ? 

அவனுடைய செலவினங்கள் என்ன என்று ஆராய படுகிறதா ?


தொடர்ந்து பார்ப்போம்

நடப்பது என்ன ? 

முடிந்தால் பதிவை  படித்தவர்கள் பதில் தாருங்கள் ....

நடுநிலை பதில்களை அலசி கொடுங்கள்..... 

விவாதிக்கலாம் எல்லோரும் புரிதலோடு.....

ஏனென்றால் நான் மட்டும் இதர்கு பதில் சொல்வதாக இருந்தால் என்னுடைய கண்ணோட்டம் மட்டும் இருக்கும்.

எனக்கும் வழிகாட்டுதல் வேண்டும். ரொம்ம்ப நாளாக நினைத்து கொண்டிருந்தேன்  இப்படி கேட்கணும் பலருடைய கருத்துகளை ஆனால் தயக்கம் எப்படி எடுத்து கொள்வார்களோ என்று இருந்தும் முயற்சிக்கிறேன். 

சோ பிளீஸ் .....எல்லோரும் உங்கள் கருத்துக்களை பதியுங்கள் 2 வரி  இந்த விஷயத்திற்கு..... நன்றி, தொடர்வோம் ........உங்களை எல்லோரையும் அழைக்கிறேன். 

"அவரவர் வாழ்க்கையில் மனதினில்  ஆயிரம் ஆயிரம் ஓடங்கள் ஓட்டங்கள் "       

18 comments:

 1. நல்லதொரு சமூகத்துக்கு அவசியான விடயத்தை அலசி இருப்பதோடு அனைவரின் மனஓட்டங்களையும் அறிய நினைப்பது நன்று.

  நிச்சயம் பிள்ளகளின் வாழ்க்கையை கவனித்துக் கொண்டு வரவேண்டும் இன்றைய அவசர விஞ்ஞான வாழ்க்கையின் வேகம் அப்படி அதுவும் பெண் பிள்ளைகளை திருமணம் முடித்துக் கொடுக்கும்வரை பெற்றோர்களின் நிலை மிகவும் தர்ம சங்கமாக நகர்கின்றது

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜீ நிச்சயமாய் பீஷ்மரின் அம்பு படுக்கை போல் இருக்கிறது நிலைமை பெண் வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு

   Delete
 2. நடப்பது என்ன ?

  மனுஷன் ஆடு மாடு விலங்குகள் அனைத்தும் நடக்கின்றன என்ற என் பதிலை இங்கு சொல்லிவிட்டு வேலைக்கு செல்வதால் வேலையில் இருந்து வந்த பின் விட்டிற்குள் நடக்கும் விஷயங்களை பற்றி கருத்து சொல்லுறேன் ஹீஹீ நீங்கள் கல்லை எடுப்பதற்குள் ஒடிவிடுகிறேன்

  ReplyDelete
 3. நான் பிள்ளைகளை குறை சொல்லவே மாட்டேன். பெத்தவங்களைதான் குறை சொல்வேன். என் மகனோ இல்ல மகளோ தவறு செய்தால் அதுக்கு நானும் என் கணவரும்தான் முழுக்க காரணம். பதினெட்டு வயசு வரை கவனிப்பும், அக்கறையுடன் கூடிய சுதந்திரமும் கொடுத்து வளர்க்கும் குழந்தைகள் தவறு செய்யாது.

  ReplyDelete
  Replies
  1. சரியா சொல்லி இருக்கீங்க ராஜி கண்டிப்பாய் 18 வயது வரை அவர்களை வழி நடத்திவிட்டால் 95% தவறுகள் நிகழ வாய்ப்புகள் குறையும் என்றே நானும் நினைக்கிறேன்

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. பிள்ளைகளின் நல்வாழ்விற்காக உழைக்கும்
  பெற்றோர், அவர்கள் போகும் வழி நல்வழி தானா என்பதின் மீதும் அக்கறை கொள்ள வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ...சரிதான் வளர்த்தால் மட்டும் போதுமா கண்காணிக்கவும் வேண்டும்

   Delete
 6. அளவில்லா சுதந்திரமும், அள்வுக்கு அதிகமான கண்டிப்பும் கெடுதல்.

  நட்பாய் , அன்பாய் பேசி ,பண்ம கேட்டால் ஏன் எதற்கு நல்ல வழியில் அந்த பணம் செலவழிக்க படுகிறதா என்ற கண்காணித்தல் நல்லது.
  பழகும் நட்பு வட்டாரம் பற்றி தெரிந்து இருக்க வேண்டும்.

  தோளுக்கு உயர்ந்து விட்டால் நண்பன் எந்த விஷயத்தையும் அப்பா, அம்மாவிடம் பகிர்ந்து கொள்ளும் குழந்தைகள் தவறு செய்ய மாட்டார்கள்.

  ReplyDelete
  Replies
  1. அருமையா சொல்லிடீங்க சிஸ் நட்பு வட்டத்தை பற்றி கண்டிப்பாய் தெரிந்திருக்க வேண்டும் என்றே நானும் நினைக்கிறேன் பிள்ளைகலால் ஏற்படும் பிரச்சனையிக்கு தீர்வு கிடைக்கும்

   Delete
 7. பிள்ளைகளை கண்காணிக்க வேண்டியது பெற்றவர்களின் கடமை! தேவையற்ற செலவுகளுக்கு பணம் கொடுக்கக்கூடாது கண்டிப்பாக!

  ReplyDelete
  Replies
  1. வாங்க கண்டிப்பாய்செலவுகளும் கண்காணிக்கப்படணும்

   Delete
 8. பெரியவர்களைத்தான் சொல்லவேண்டும். வளரும் பிள்ளைகளிடம் கவனமாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால் இந்த ப்ளூ வேல் போன்ற விளையாட்டுகள் குழந்தைகளையே அழிக்குமா?

  ReplyDelete
  Replies
  1. உண்மை சமீபத்திய பெரும் தவறுகளில் அதுவும் ஒன்று....

   Delete
 9. பிள்ளைகளுக்கு சுதந்திரம் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் அதே சமயத்தில் அவர்கள் அறியாமல் அவர்களை கண்காணித்து கொண்டிருக்க வேண்டும் நாம் கண்காணிப்பது அவர்களுக்கு தெரியாமல் இயற்கையாகவே இருக்க வேண்டும்


  நான் என் குழந்தையிடம் சொல்லி வளர்ப்பது இதுதான் உன் மேல் நம்ம்பிக்கை வைத்து முழு சுதந்திரம் உனக்கு தருகிறேன் எந்த நேரத்திலும் நம்பிக்கை வீண் போகும்படி செய்ய்து மட்டும் விடாதே.. நீ தவ்று செய்தால் உனக்கு தண்டனை இல்லை ஆனால் அந்த தண்டனை எனக்குதான் அதை புரிந்து கொள் என்று சொல்லி வளர்த்து வருகிறேன்.. இது நாள் வரை எந்த வித பிரச்சனை இல்லாமல் சென்ரு வருகிறது


  என் குழந்தைக்கு பாக்கெட் மணியெல்லாம் கொடுப்பதில்லை ஆனால் அவளிடம் அவளின் அவசர தேவைக்கான பணம் எப்போதும் இருக்கும் படி பார்த்து கொள்கிறேன்.... நண்பர்களோடு வெளியே செல்லுகிறேன் என்றால் தேவைக்கு அதிகமாகவே பணம் கொடுத்து அனுப்புவேன் அதை அவ்வளவையும் செலவு செய்யாமல் தேவையானதிற்கு மட்டும் செலவழிப்பாள்.


  மற்ற நேரங்களில் அவரவர்கள் அவர்களின் ரூமில் இருந்து படிப்பது தூங்கவது என்று இருந்தாலும் இரவு நேரத்தில் அனைவரும் ஒன்றாக அம்ர்ந்து சாப்பிடுவோம் அப்போதுதான் அன்றைய தினங்களில் நடந்தை பற்றி பேசி மகிழ்வோம் என் பொண்ணு பள்லியில் நடந்தது அவளின் டீச்சர் நண்பர்கள் நடந்து கொண்ட விதம் அவர்களில் யாரூக்கும் பிரச்சனை இருந்தால் அதை எப்படி கையாண்டது என்று எங்களிடம் விவரிப்பாள் நாங்களும் எங்கள் அறிவிற்கு எட்டிய ஆலோசனை தருவோம் அப்படி பேச துவும் இல்லாத நேரத்தில் வடிவேலுவின் காமெடிகள் கை கொடுக்கும்

  ReplyDelete
 10. துளசிதரன்: பெற்றோர்கள் தான் முழுக்காரணம்...அப்புறம் பள்ளியில் ஆசிரியர்களையும் சொல்லலாம்..வழி நடத்த வேண்டிய ஆசிரியர்கள் கண்டிக்கிறேன் பேர்வழி என்று ஓவராகப் பிள்ளைகளை பனிஷ் பண்ணுவது அதுவும் கூடாது...அதேதான் வீட்டிலும்...

  கீதா: நான் சொல்ல நினைத்த கருத்துகள் அனைதும் இங்கு பகிரப்பட்டுவிட்டன...ஸோ அவற்றாய் டிட்டோ செய்கிறேன் பூவிழி..நல்ல பதிவு

  ReplyDelete
  Replies
  1. மிஸ் பண்ணாமல் கருத்தும் கொடுத்தாயிற்று நன்றி

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...