சனி, 28 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?-பகுதி 6

நடப்பது என்ன ?-பகுதி 6



போன பதிவில் டீன் ஏஜ் நட்பு பற்றி  தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அனைத்து தோழமைகளுக்கும் நன்றி 
நட்பு என்பதை பற்றி ஒரு நிஜ சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அல்லவா அது.......  


அவர்கள் மிக பாரம்பரியம் மிக்கவர்கள் அந்த வீட்டின் பெரியவர் வயது தற்பொழுது 80 தை  கடந்திருக்கும் எல்லோருக்கும் அதாவது அந்த ஏரியாவில் இருக்கும் எல்லோருக்கும் பெரியவராய் இருந்து வருபவர் மதிப்பாய் நல்லது  கெட்டதுக்கு முன்னே நின்று பார்வார் அவர் பஞ்சாயத்தாக  இருந்தாலும் அவரை  அணுகாமல் நடக்காது ....    மொத்தத்தில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்பதோடு வாழ்பவர். குடும்பத்தை கட்டுக்கோப்பாய் நடத்துபவர். .அவருக்கு ஏற்ற துணைவியும், வீட்டில் இருப்போரையும்  மேலே சொன்ன க க க வை பின்பற்ற வைப்பவர் உணவு விஷயத்தில் கூட தமிழ் பராம்பரிய உணவை தினமும்  எடுப்பவர் காலையில் களி சாப்பிடுவாங்க வீட்டில் உள்ளோர் அநேகமான  நாட்கள்....... வீட்டில்  தோட்டம் போட்டு கீரைகள் வளர்ப்பார்கள்,மற்றவருக்கும் கொடுப்பார் .தேடிவந்து .... 



அந்த ஏரியா சொந்தமாய் ஒரே ஊரிலிருந்து வந்து ஒரே இடத்தில பணிக்கு சேர்ந்து ஒன்றாய் வீடுகள் வாங்கி வசிக்கும் ஒரு மிடில்கிளாஸ் ஏரியா....... இப்படி பட்டவருக்கு அவருக்கு ஒரு  மகன்  திருமணமாகி 2 பேரன்கள்  எல்லோரும் ஒன்றாய் வசிப்பவர்கள் .இரண்டு  பசங்களும்  வளர்கிறார்கள் மிகவும் மரியாதையுடன் அந்த தெருவில் உள்ளோர்களிடம் அவர்கள் பேசும் போது பேச்சில் அவ்வளவு  பணிவு மரியாதை தென்படும் அந்த பிள்ளைங்களை பார்த்து கற்றுக்கொள் அக்கம் பக்கமுள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளிடம் கூறுவார்கள். 



அதிகம் அந்த பிள்ளைகள் வீட்டை விட்டு வெளியே வந்து விளையாட மாடடார்கள் சிறுவயதில்........... டீன் ஏஜ் எட்டி பார்த்தவுடன் விளையாட மற்ற்வர்களுடன் வெளியே தலையை காண்பித்தாயிற்று......... இதில் முதல் பேரன் கொஞ்சம் கலகல டைப்பு வளவளவென்று பேசுவான் கொஞ்சம் வாலு அதிகமாய் திட்டுவாங்குபவன் படிப்புக்காகவும் , இரண்டாவது பையன்  ரொம்ப சூட்டிகை ,அழகும் கூட, திருத்தமாய் பேசும், நல்ல படிப்பவன்  அவர்கள் வீட்டின் செல்லப்பிள்ளை... தாத்தாவால் பாட்டியால் பெருமை பேசப்பட்டவன். இப்படி பட்ட பையன் நட்பினால் எப்படி வாழ்வை சிக்கலாகி கொண்டான் என்று இன்று வரை புரியவில்லை இது எங்களை பொறுத்த வரை பெற்றோரின் கவனகுறைவு என்றே  நினைக்கிறேன் சம்பவம்  நடந்து பேப்பரில் வந்த பின்பும் கூட நம்ப முடியவில்லை 


யாரால் எப்படி இந்த மாதிரி நட்பை பழகி கொண்டான் என்று புரியவில்லை படிக்க டியூஷன் அனுப்பி இருக்காங்க பத்தாவது என்று அங்கெ பழக்கம் வந்து இருக்கிறது...... போதை வஸ்துவை   எடுக்கும் நான்கு பிள்ளைகளுடன்  கூடாநட்பு அங்கெ பிடித்தது ஏழரைநாட்டு சனி...... இவனுக்கும் அந்த பழக்கம் தொற்றி கொண்டுள்ளது. அவனுடைய நடத்தையில்  மாற்றம் வந்திருக்கிறது படிப்பில் நேரம் கழித்து  விட்டு திரும்பல் படிப்பை காரணம் காட்டுதல் இப்படி நடந்து இருக்கிறது.   இங்கு அவனின் அம்மா, பாட்டி அதை பெரியவரை கவனத்திற்கு கொண்டு போகாமல் சமாளித்து இருந்திருக்கிறார் .இவர்களுக்குள் கண்டித்து இருக்கிறார்கள். முக்கியமாய் வெளியே தெரியாமல் இவனோ அந்த நட்புகளுடன்  ஐக்கியம் ஆக்கிவிட்டு இருக்கிறான் . 


பணம் தேவைபட்டு இருக்கிறது போதை வாங்க சின்ன பணதிருட்டு நடந்து இருக்கிறது பணம் பற்றவில்லை இதில் அந்த நட்புக்குள் ஒரு பையனுடைய ஒன்னுவிட்ட தாத்தா தனியாக வசிப்பவர் அந்த பையனின்  வீடு தான் அவருக்கு வேண்டிய உதவிகள் செய்து வருபவர்கள் இவனும் அவருக்கு துணையாக இருப்பவன் அப்போ அப்போ அவரின் பணவரவு வீட்டில் பணமிருக்குமிடம் என்ன பொருட்கள் உள்ளது என்பதையெல்லாம் அறிந்தவன் அங்கெ இருந்து பணத்தை திருடி இருக்கிறான் சில சமயம் இருந்தும் அவர் ரொம்ப உஷார் போல ஏதோ மோப்பம் பிடித்து விட்டு இருக்கிறார்  இதனால் இந்த பிள்ளைகள் கூட்டு சேர்ந்து அவர் வீட்டில்  திருடுவது என்ற முடிவுக்கு வந்துவிட்டதுங்க இரவில்....... பிளான் போட்டு போயிருக்குதுங்க எல்லாமும் சேர்ந்து அங்கெ சத்தம் கேட்டு அவர் முழித்துவிட்டார்  பார்த்துவிட்டு இருக்கிறார் சத்தமிட்டு இருக்கிறார் அவரை இந்த பிள்ளைகள்  ஆளுக்கு  ஒரு பக்கம் பிடித்து தலையணை வைத்து அழுத்தி கொன்றுவிட்டதுகள் ஒட்டியும் விட்டார்கள் 



மறுநாள் போலிசாரால் கண்டு பிடுக்கப்படுகிறது யாரென்றும் விதி வலியது இங்கு இந்த தெருவிற்கு போலீஸ் விசாரணைக்கு வந்துவிட்டது கைதும்  செய்தாகிவிட்டது கூடா  நட்பு என்ன கொடுத்துவிட்டது...... இன்றுவரை அந்த குடும்ப உறுப்பினர்களை அதிகம்  வெளியே பார்க்க முடியவில்லை.... பேச்சில்லை  பாவம் அந்த பெரியவர் ஒடுங்கி போய்விட்டார். அவரின் மனைவியை பார்த்தே வருடங்கள் கடந்துவிட்டது. மகன் ரொம்ப சாது 40 வயதிலேயே கிழவனாய் தோற்றம் அடைந்துவிட்டார்  பிள்ளையை ஜாமினில் எடுக்க அள்ளும் பகலும் புழலின் வாசலில் என்ன செய்ய பாசம் கொல்கிறதே ...........


கண்ணால் பார்த்து வளர்ந்த பிள்ளையின் வாழ்வில் வந்த கூடா  நட்பு அவன் வாழ்வை கேள்விக்குறியாய் ,கேலியாக ஆகியதை யோசித்ததில் மனம் கனக்கிறது .இன்றைய கால பிள்ளைகளை வளர்ப்பது ஒரு கம்பி மேல் நடக்கும்  பயணம் போல் இருக்கிறது  மிகவும் கவனமுடன் நடக்க வேண்டும் இல்லை கீழே தான் விழ வேண்டும் என்பதை காட்டுகிறது இந்த சம்பவம் 



தொடர்கிறேன்.....




12 கருத்துகள்:

  1. நிகழ்கால உண்மைகளே.. மனம் பதறுகிறது இன்றைய பிள்ளைகளை நினைத்தால் ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜீ பதறினாலும் .... சிதறாமல் இருக்கும் கடமையில் மாட்டி கொண்டுள்ளோம்

      நீக்கு
  2. என்னதான் நாம் நன்றாக வளர்த்தாலும் இது போல தவறுகள் செய்யும் குழந்தைகளும் இருக்கிறார்கள். 24 மணீ நேரமும் நாம் அவர்களை கண்காணித்து கொண்டா இருக்க முடியும்.......

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் உண்மை அவர்களே பொழப்பையும் பார்கணுமில்ல நன்றி வருகைக்கு

      நீக்கு
    2. நான் சொல்ல நினைத்த கருத்தை மதுரை சொல்லிவிட்டார் பூவிழி...

      கீதா

      நீக்கு
  3. மனதுக்கு மிகவும் கஸ்டமாக இருக்கிறது, படிப்பறிவு குறைந்த பெற்றோர்கள் சிலர், நன்கு படிக்கும் பிள்ளையை முழுமையாக நம்பி, வீட்டிலும் அவரைப் பெரியவராக்கி மதிப்புக் குடுக்கின்றனர்... இதை அப்பிள்ளைகள் அட்வான்ரேஜ் ஆக்கிக் கொண்டு குழியில் விழுந்து விடுகின்றனர்...

    குடி , சிகரெட்டை விடப் போதை வஸ்து கொடுமையானது...
    பிள்ளைகள் வைத்திருக்கும் நமக்கு, எதைப் பற்றிப் பேசவும் பயமாக இருக்கும்... கடவுள்தான் இப்படிச் சிக்கல்களில் இருந்து எல்லாப் பிள்ளைகளையும் காப்பாற்ற வேணும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் அதிரா பயமாகவே உள்ளது நன்றி வருகைக்கு

      நீக்கு
    2. படிப்பறிவு குறைந்து என்று இல்லை படிப்பறிவு மிக்க பெற்றோரின் குழந்தைகளும் தவறு செய்கிறார்கள்.தான்..சுய உணர்தல் வேண்டும். சொல்லிக் கொடுத்தாலும் சுயமாகச் சிந்திக்கவும், உணரவும் வேண்டும்.

      கீதா

      நீக்கு
  4. என்ன சொல்லுவது! என்னைக் கேட்டால் தொலைக்காட்சிகள், திரைப்படங்கள் தான் இதுக்கெல்லாம் காரணம் என்பேன். :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாக சொன்னிர்கள் மிக முக்கிய பங்கை எடுத்து கொள்ளும் காரணம் வருகைக்கு நன்றி

      நீக்கு