புதன், 25 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?--பகுதி 5


நடப்பது என்ன ?--பகுதி 5
செல்போன் என்னும் தேவதை என்னும் அரக்கன்  பற்றி  சில விஷயங்களை அலசினோம் முந்திய  பதிவில்  அதற்கு  பின்னுடத்தில்  தோழமைகளுடைய கருத்துக்களையும் நானும் தெரிந்து... புரிந்து கொண்டேன்  நன்றி...... இன்று பிள்ளைகளின் நட்பு பற்றி கொஞ்சம் அலசலாம் அதில் உள்ள சாதக பாதகங்கள்  என்ன என்று பார்ப்போம் ..


நடப்பது என்ன என்பதில் மிக முக்கியமான விஷயம் டீன் ஏஜ் நட்பு ....


டீன்  ஏஜில்  வரும் நட்பு அது வகைதொகை இல்லாததாக தான்  இருக்கும். நட்பை  ஆராய்ந்து தான் வைக்கணும் என்ற விஷயம் அவர்களுக்கு சிரிப்பையும் எரிச்சலையும் கொடுக்கும் .அவர்களை பொறுத்தவரை இந்த வயதில்  நட்பு புனிதமானது என்று ஒரு மாயைக்குள் இருப்பார்கள். நட்புக்காக எதையும் செய்ய துணிவார்கள் .தன்னால்  முடிந்தது, முடியாது அதை பற்றினா பெருமை, தாழ்வுமனப்பான்மை இதை பற்றி கூட்டாக  பேசி கொள்ளும் போது  ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருப்பதாக எண்ணி கொள்கிறார்கள். இது பெரியவர்கள் நமக்குமே பொருந்தும் ...



 பெற்றோரின் அரவணைப்பை இழக்கும் பிள்ளைகள் நட்பில் மிக இறுக்கமாய் பலமாய் பொருந்தி போவார்கள்.அவர்களுக்கு வேண்டிய அரவணைப்பு என்பது வேறு பாதுகாப்பு என்பது வேறு இங்கு பாதுகாப்பையும் சில நேரம் பெற்றோராகி  நாம் ஆண்பிள்ளைகள் விஷயத்தில் தளர்த்துகிறோம்... இது மிகவும் தவறு பல பெற்றோர்கள் இந்த வயதுக்கு இருக்கும் முக்கிய தகுதியாக நினைப்பது எதிர்பாலினத்தின் மேல் ஆர்வம் கொள்ளாமல் இருப்பதைத்தான் மீதி எல்லாவற்றையும்  புறம் தள்ளிவிடுகிறார்கள். ஆண்பிள்ளை ஆண்பிள்ளை கூடத்தானே நட்பாய் இருக்கான் கொஞ்சம் முன்னாபின்ன இருந்தாலும் பரவா  இல்லை என்று பல பேர் இந்த இடத்தில் கோட்டை விட்டு விடுகிறார்கள் .



இந்த வயதில்  அவர்கள் உடலில்  வரும் ஹார்மோன்ஸ் செயல்பாடுகளினால் தோன்றும் உணர்வுகளை.... நட்புகளுடன் ஈஷி கொள்வதிலும், முறைதவறி பேசி கொள்வதிலும், இணைந்து சுற்றுவதிலும் தீர்த்து கொள்வதாக இருக்கிறது. நண்பன்  என்ன உடை உடுத்துகிறானோ அதற்கேற்றாற் போல் தன்னையும் மாற்றி கொள்வது  பிடிக்கவில்லையென்றாலும் ரசனைகளை மாற்றி கொள்வது என்பது போன்ற செய்கைகள் ஆரம்பிப்பது இந்த நேரத்தில் தான் சில பிள்ளைகள் வயது ஏற ஏற திரும்பவும் தான் குழந்தையில் இருந்து வழிநடத்தப்பட்ட ரசனைக்கு திரும்பி வந்துவிடுவார்கள். சில பிள்ளை அப்படி வருவதை தன்னுடைய ஈகோ அடிபடுவதாக நினைத்து கொள்வார்கள் தாமாகவே  ஒரு அரணை அமைத்து கொள்வது.புகுந்து கொள்வது .



ஒரு சொல் வழக்கு இருக்கிறது உன் நட்பை காண்பி உன்னை அறிந்து கொள்ளமுடியுமென்று....... இதை நாம் ஆராயாமல் எடுத்து கொள்வோம் நாம் மிக அறிவாளிகள்   நடை உடை  பாவனைகள் மட்டுமே முக்கியமானது  நிர்ணயித்து கொள்வோம்  நல்லது என்பதை அளக்க... இதுதான் பல தவறுகளுக்கு வழிவகுக்கிறது.



டீக்கா டிரெஸ் செய்து  கொண்டு இருந்தால் அவன் நல்லவன் தப்புதண்டா  அதுவும் செய்யமாட்டான் என்று அவன் கூட பழகினால் பிரச்னை எதுவுமில்லை அப்படி இல்லாமல் இருப்பவன் செய்தாலும் செய்வான் என்று நினைத்துகொள்ளும்  அறிவாளிகள் நாம். இரண்டாவது படிப்பு நல்ல மார்க் எடுப்பவன் தவறே செய்யமாட்டான் என்னும் குருட்டாம்  போக்கு எண்ணம் கொண்டு உள்ளோம் இன்று விஞ்ஞானம் அதிகம் கற்று கொண்டவன் தான்  அதைவைத்து தீமையையும் செய்கிறான் .இன்று நவீன கருவிகளை கையாளும் திறமை கொண்டு பல கொடுமைகள் நடந்தேறுகிறது .



நாம்  ஆண்பிள்ளைகளின்  இந்த வயதில் அவர்கள் யாரிடம்? எப்படி? எவ்வளவு?  நட்பு வைத்திருக்கிறார்கள் என்பதை  கவனிக்காமல் விடுவதால் மிக பல இழப்புகளை  சந்தித்து  கொண்டு இருக்கிறோம். நிறைய இடத்தில் 'பெண்பிள்ளைகள்நட்பு சோகத்தை  கொடுக்கிறது ஆண்பிள்ளைகளின் நட்பு ஆபத்தை கொடுக்கிறது '.



 டீன் ஏஜ் பிள்ளைகளின் நட்பு என்பது என்பதை பற்றி தொடந்து பார்ப்போம் .....   இந்த நட்பினால் ஏற்பட்ட ஒரு உண்மை சம்பவம் பகிர்கிறேன் என்று சொன்னேன் அதையும் அடுத்த பதிவில் பார்க்கலாம்  தோழமைகள் உங்கள் கருத்துக்களையும் அறிந்து கொள்ள கற்று கொள்ள காத்திருக்கிறேன்......


 தொடரும் .............

21 கருத்துகள்:

  1. அடுத்த பதிவிட்காய் காத்திருக்கிறேன்
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. ///பெண் பிள்ளைகள் நட்பு சோகத்தை கொடுக்கிறது ஆண் பிள்ளைகளின் நட்பு ஆபத்தை கொடுக்கிறது///

    மிகவும் சரியாக சொன்னீர்கள்.
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
  3. ஆஹா இம்முறை உங்கள் கருத்துக்கள் அனைத்தையும் நானும் ஏற்றுக்கொள்கிறேன்... , எதிர்க்க முடியல்லியே எனும் வருத்தமாக இருக்கு ஹா ஹா ஹா....

    ரீன் ஏஜ் வயது என்பது ஒரு பொல்லாத வயசு... ஒரு 12,13 இல் ஆரம்பிச்சு... 17,18 வரை அவர்கள் அவர்களாக இருப்பதில்லை... அருகில் ஒட்டி இருந்தவர்கள் கொஞ்சம் ஒதுங்கி இருப்பார்கள், கையைப் பிடிச்சு நடந்தவர்கள் தட்டி விடுவார்கள் பிடிக்கக்கூடாது என:).. பெற்றோரின் றூமுக்குள் வர யோசிப்பார்கள்... இப்படிக் குட்டிக் குட்டியாகப் பல மாற்றங்கள்...

    இந்நேரம் சில பெற்றோர் செய்யும் தவறு... அது ஹோமோன் சேஞஸ் என எண்ணாமல் கோபிச்சு, பேசுவது...

    இப்படி நேரம் விட்டுப் பிடிக்கோணும்... பின்பு அவர்களாகவே பழைய நிலைக்கு வருவார்கள்... ஒவ்வொரு குழந்தையின் மாற்றமும் கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசப்படும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மாற்றத்தை உற்று கவனித்து போதிய இடைவெளியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் இல்லையேல் அங்கும் பிரச்னை எழும்பும் நன்றி அதிரா விரிவான பின்னுட்டத்திற்கு

      நீக்கு
  4. நட்புப் பற்றி... இது முற்றிலும் உண்மைதான், நமக்குப் பிடிக்காட்டிலும் அவர்களுக்குப் பிடித்த நட்பெனில், நாம் குறை சொன்னால் மிகவும் கவலைப்படுவார்கள்...

    இங்கு பிள்ளைகளுக்கு ஆண் பெண் வேறுபாடே தெரிவதில்லை, ஸ்கூலிலும் புறிம்பாக எதுவுமில்லை... இரு பாலாரும் தம் விருப்பத்துக்கேற்ப மிக்ஸ்ட் ஆகவே வகுப்பில் இருப்பார்கள். சின்ன வகுப்பெனில் ரீச்சரே கலந்து இருக்க வைப்பா...
    அதனால நமக்குத்தான் ஹையோ ஒரு பெண் பிள்ளையுடன் கதைக்கிறாரே என நெஞ்சு பக்கெண்ணும்.. ஆனா அவர்களைப் பொறுத்து ..... அது ஒரு நட்பு அவ்வளவே....

    நாம் நம் பிள்ளைகளுக்குச் சொல்லி வைத்திருப்பது, ஆண் பெண் பேதம் பார்க்கத் தேவையில்லை எல்லோரோடும் நட்பாக இருங்கோ ஆனா வீட்டுக்கு வந்த பின்பும் மெசேஜ் அனுப்பி தனிப்பட்ட முறைத் தொடர்புகள் வேண்டாம்...

    முக்கியமாக பெண் பிள்ளைகளைத் தொட்டுப் பேச வேண்டாம் என... இங்கு பெண் பிள்ளைகளே ஓடிவந்து அடித்துப் பிடித்துப் பேசுவார்கள்... அது தப்பாகவும் தெரிவதில்லை...
    இன்னொன்று இப்போதைய நம் பிள்ளைகள் நல்ல விபரமாகவே இருக்கிறார்கள்... நாம் அவர்களோ நல்ல நண்பர்களாக இருந்தாலே போதும்... நல்வழிப்படுத்திடலாம்...:).

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நிறைய சொல்லி கொடுத்திட்டீங்க வித்யாசம் பார்க்காத இடத்தில் சிலவிஷயங்க தொட்டு பேசுவது என்பதெல்லாம் சாதரணமாக இருக்கும் பெரிதாக தோணாது அதில் தவறுமில்லை அங்கே ... அதே இல்லாத இடத்தில் சிலர் செய்ய பலர் செய்யாமல் தவிர்க்கும் போது எது சரி எது தவறு என்ற குழப்பம் வந்துவிடும் -முற்றிலும் அது இது தவறு என்ற கலாச்சராத்தை கட்டி அழும் போது எல்லாமே பூதகரமாகவே தெரியும் விமர்சனங்கள் விவாதங்கள் எல்லாம் வரும் .

      நீக்கு
  5. சரியாதான் சொல்லி இருக்கீங்க. இப்பலாம் காலேஜ் போற புள்ளைகக்கூட அமைதியா போய் வருது. ஆனா, இந்த எட்டாவதிலிருந்து பத்தாவது வரை படிக்கும் பசங்க பண்ணும் அழொச்சாட்டியமிருக்கே! அப்பப்பா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ராஜி வயது எற முதிர்ச்சி வந்துவிடும் அமைதி வந்துவிடும் அதுவரை அவர்களை பிடிச்சு நிறுத்திட்டா போதும்

      நீக்கு
  6. டீன் ஏஜ் நட்பு......உலகிலே சிறந்த உறவு நட்பே என்று எண்ணம் தோன்றும்,வயது....நண்பர்கள், மட்டும் போதும், என்று எண்ணமும் உருவாகும் ..கண்மூடித்தனமான நட்பாக மாறாமல்,கண்காணிக்க வேண்டியது பெற்றவர்களின் கடமையே.....” பெண் பிள்ளைகள் நட்பு சோகத்தையும்,ஆண் பிள்ளைகள் நட்பு ஆபத்தையும் கொடுக்கும்...” அருமையான வரிகள்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராணிமா சரியா சொல்லி இருக்கீங்க நானும் அதையேதான் சொல்ல நினைக்கிறேன் நன்றி

      நீக்கு
  7. அருமையான பதிவு.
    நல்ல கருத்துக்கள்.
    எல்லா பெற்றோர்களுக்கும் உதவும் விழிப்புணர்வு பதிவு.

    பதிலளிநீக்கு
  8. அருமையான தொடர்
    தொடருங்கள், தொடருகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி, வாருங்கள் உங்கள் யோசனைகளையும் கருத்துக்களும் பகிர இதை பற்றி

      நீக்கு
  9. பெண்களின் நட்பு சோகத்தை மட்டுமல்ல ஆபத்தையும் விளைவிக்கிறது எனலாம் அது போலவேதான் ஆண்களின் நட்பும்...ஆபத்தை மட்டுமல்ல சோகத்தையும் விளைவிக்கிறது. இரண்டுமே இருபாலாருக்கும் பொதுதான் என்பது எங்கள் தாழ்மையான கருத்து...கருத்துகள் அனைத்தும் மிகவும் சரியே...

    பதிலளிநீக்கு