வியாழன், 12 அக்டோபர், 2017

நடப்பது என்ன ?-2

போன பதிவுக்கு கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி. 

/poovizi.blogspot.in/2017/10/blog-post_11.html இதன் முதல் பதிவு 

                           எல்லோரும் டீன் ஏஜ் பிள்ளைகளின் பெரும் தவறுகளுக்கு பெற்றோர்கள் ஒரு வகையில் காரணம் என்பதை சொன்னீர்கள். எப்படி என்று பார்ப்போம்

                            போன பதிவில் அருணை வயது 14 லில் இருந்து 15 ..இந்த வயது பெண் பிள்ளைகளைவிட ஆண்பிள்ளைகளுக்கு கடுமையான வயது என்றே எனக்கு தொன்று கிறது ஒரு பெண் இந்த நேரத்தில் வயது வந்துவிட்டால் என்று அவளை கண்ணும் கருத்துமாய் மிகவும் அதீத கவனத்தோடும் பாதுகாப்பு பற்றியும் ஆரோக்கியம் பற்றியும் கொடுக்கப்படும் கவனிப்பு இங்கு ஆண்பிள்ளைகளுக்கு சரி வர வழங்கப்படுவதில்லை.

 

      

அவனும் அந்த வயதில் தான் வயதுக்கு  வருகிறான் இதுவரையும் கூட இருந்த கவனிப்பு இந்த வயதிலிருந்து அவனுக்கு விலக்களிக்க படுகிறது அவன் கேளாமலேயே பெற்றோர்கள் செய்யும் தவறு இங்குதான் ...இதுவரை அவனை தொட்டு, சாப்பாடு ஊட்டி, உரசி, கொஞ்சியவர்கள். இந்த வயதில் இருந்து அவனிடமிருந்து விலகி நிற்கிறார்கள் . முக்கியமாய் அம்மாக்கள்..... திடீரென்று அவனுக்குள் வந்த மாற்றம் குழப்பத்தை ஏற்படுத்தும் நேரத்தில் இந்த தள்ளி வைப்பு அவனுக்குள் ஒரு அசூயை கொண்டு வருகிறதோ என்று நினைக்கிறேன்.

       

     தோள்  தடவி, தலை தடவை ,அரவணைப்பு தேவை படும் நேரம் சரியாக விலகி வைக்க படுகிறான். அப்போ என்ன வயது வந்த பிள்ளையை தடவி தடவி கொஞ்ச சொல்லுறியா ?என்று கேட்டல் ஆம். இன்றைய பிள்ளைகளுக்கு அந்த அரவணைப்பு கிடைப்பது அரிதானதாக்கி போனது ... அப்போதெல்லாம் பாட்டி ,தாத்தாக்கள் யாரவது கூடவே இருப்பார்கள். அவர்கள் அந்த பிள்ளையாய் பக்கத்தில் இருந்து இதையெல்லாம் செய்வார்கள். நாம் இன்று அதை கடந்து வந்துவிட்டோம் கால மாற்றத்தினால் நம் தேவை மாற்றத்தினால்.... 

    

    ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என்பது போயி அந்த ஒன்றை இழப்பதால் இன்னும் ஒன்றையும்  இழக்கும் நிலைக்கு தள்ள பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது சரியா? நான் சாதாரண  விஷயங்களை மட்டுமே இங்கு சொல்லிருக்கிறேன் இன்னும் அதிகம் இருக்கிறது .என்ன ஆரம்பிக்கிறேன் எங்கே சென்று கொண்டு இருக்கிறேன் என்றே புரியவில்லை இங்கு தொடர்பாய் இருக்கிறதா? இல்லை கோபத்தை கொடுக்கிறதா என்றும் புரியவில்லை....

முதல் வீட்டில் அவன் வழிநடத்த படுகிறான என்றால்? இங்கு நேரமின்மை ஒரு காரணம் ... அம்மாவுக்கு வேலை வெளியேயும், வீட்டிலும் அவளின் சக்தி  அளவுக்கு அதிகமாய் செலவழிக்கப்படுகிறது. உடல் ஒய்வு ஒய்வு என்று உள்ளே அலறுகிறது.

 

அப்பாவும் பல மன அழுத்திற்கு ஆள்கிறார்கள் எதிர்கால பராமரிப்பு திட்டம் அதை நோக்கிய ஓட்டம் வீட்டில் மனைவிக்கும் உதவி  (நடக்கிறதா அப்படி ஒன்று என்றா கேள்விக்கு மற்றோரு அது தொடர்புடைய பதிவில் பார்க்கலாம்  டிராக் மாறக்கூடாது இல்லையா )   அதன் காரணமாய் அவர்களுக்கு மனதை திசை திருப்பும்  நேரம் கொஞ்சம் தேவை படுகிறது (ரிலாக்ஸேஷன்)  . நாளையை  ஓட்டத்திற்கு....


அடுத்து கண்காணிக்க படுகிறானா?  என்றால் இல்லை  முக்கியமாய் 90% பெற்றோரும் செய்யும் தவறு..... நம்பிக்கை தன்பிள்ளை தவறே செய்யமாட்டான் என்று நினைப்பது .சில இடங்களில் டீச்சர் கூப்பிட்டு வார்ன் பண்ணினாலும் நம்ப மறுத்து டீச்சரை குறை சொல்வதும் நடக்கிறது. தானும் அந்த வயதை கடந்து வந்துள்ளோம் கடந்த கால நினைவுக்குள் போக மறந்துவிடுகிறது இல்லை இன்று வளர்ந்துவிட்ட கர்வம் கண்ணை மறைத்து விடுகிறது .


அவனுடைய செலவினங்கள் என்ன என்று ஆராய படுகிறதா அதுமில்லை காலம் மாறிடுச்சு என்று பொத்தாம் பொதுவாய் சொல்லி கொள்வது தேவைக்கு  அதிகமான வசதிகள் நிறைவேற்றபடுகிறது .... படுகிறதா? என்று குழப்பம் வருகிறது.செலவுகள் என்பது வரையறுக்க படணும் வயது தகுந்த மாதிரி இரண்டாவது தேவைகள் என்பது எதை நோக்கி என்பதையும் அவர்களுக்கு புரிய வைக்க வேண்டும்.             

சரி அடுத்த வீட்டு கதவை தட்டுவோம்


2வது வீட்டில் ....இரவு 8.30


வரவேற்பறை  டீவியின் முன் அம்மா சீரியலில் மூழ்கி கை பூண்டு உரித்து கொண்டு இருக்கிறது . பெட்ரூமினுள் அப்பா தன் லேப்டாப்பில் வேலையுடன்....

  

மெயின் டோரை திறந்து வருகிறான் ஜோசப்  ".என்னடா நேரமாகிவிட்டது டியூஷன் சார் லேட் பண்ணிட்டாரா ?" "வண்டி நின்று விட்டது பெட்ரோல் இல்லாமல் தள்ளி கொண்டு வந்தேன் " அச்சச்சோ .... சரி போயி ரெஸ்ட் எடு இதோ டிபன்  தரேன்" என்று இவ்வளவும் டிவியைவிட்டு கண்ணெடுக்காமல் நடை  பெறுகிறது  .



"எனக்கு வேண்டாம் சையத் வாங்கி கொடுத்துத்தான். அம்மாஆஆ .....இங்க பார் கொஞ்சம்  அப்பாகிட்ட  மணி  வாங்கி வச்சுக்கோ 500/- எனக்கு மறந்துட்டேன் சொல்லாதே..... நாளைக்கு மேச்  இருக்கு அப்புறம் வீட்டுலேயே  உட்க்கார்ந்துடுவேன் டியூஷன் போகாம பார்த்துக்கோ "

 

"உங்க அப்பாகிட்டாதானே.......நீ கேட்காதே  எல்லாத்தையும் என் தலையில கட்டிட்டு  போ ஆமாண்டா ....10 வது படிக்கும் போதே இவ்வளவு என்று அவர் என்னை முறைகட்டும், ஆனா உன்னை கேள்வி கேட்கமாட்டார் ..... வாங்கி வைக்கிறேன் நடுவுல தொனதொணன்னு  பேசாதே "

 

உள்ளிருந்து "ஆனி ஈஈ இங்கே மனுஷன் வேலை செய்யணுமா? வேணாமா? அந்த கதவை சாத்திட்டு கத்து " அப்பாவின்  குரல் கேட்டவுடன் அருண் அம்மாவை முறைத்து  பார்த்து சைகையில்' வாங்கி வை 'என்று சொல்லிவிட்டு ரூமினுள் நுழைந்து கொள்கிறான் .



இங்கும் நடப்பது என்ன


தொடர்வோம் .........வாருங்கள் கருத்துரைக்க..... 


21 கருத்துகள்:

  1. இரண்டாவது வீட்டில் பாசம்ன்னு சொல்வோம். புள்ள மனசொடிஞ்சு போகக்கூடாதில்ல

    பதிலளிநீக்கு
  2. முதல் பகுதியை தவற விட்டிட்டேன் எதுவும் புரியல்ல... ஏன் ஆண்பிள்ளைகளை தடவுவதில்லை 14 வயதின் மேல் எனச் சொல்றீங்க? நான் அப்படி எங்கும் காணவில்லை... சில இடங்களில் பிள்ளைகள்தான் கொஞ்சம் கூச்சப்பட்டு விலகிப்போய் திரும்ப வந்து ஒட்டுவார்கள் நாம்தான் விட்டுப் பிடிக்கோணும்...
    எங்கள் மகன் என் தலைக்கு மேலே உயர்ந்திட்டார் ஆனா குனிஞ்சு கிஸ் பண்ணிட்டுப் போவார்... இப்பவும் பேபிதான்:)...

    நீங்க வேறு ஏதோ சொல்ல வருறீங்களோ பிளவர்கண்:)? ஹா ஹா ஹா நினைச்சதை சொல்லி முடியுங்கோ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆதிரா நீங்க கொடுத்து வைத்தவர் .நான் இந்தியாவில் இருக்கும் டீன் ஏஜர்களுக்காக அவர்களின் பிரச்னை நடக்கும் தவறுகளுக்கு காரணம் யார் ? எங்கிருந்து ஆரம்பிக்கப்படுகிறது என்ற அலசல் மட்டுமே செய்ய உள்ளேன். இங்கேயும் எக்ஸப்ஷன் இருக்கலாம் .வாருங்கள் தொடர்ந்து உங்களுக்கு தோன்றிய விஷயங்களை அலச

      நீக்கு
    2. அதிரா ஃப்ளவர்ஐ!!!! இது எப்படி இருக்கு!!

      கீதா

      நீக்கு
  3. மிகவும் அருமையாக அலசி உள்ளீர்கள் பலருக்கும் பயன் பெரும் வகையில் இந்த தொடர் செல்கிறது நன்று

    ///ஒன்றை இழந்தால் ஒன்று கிடைக்கும் என்பது போயி அந்த ஒன்றை இழப்பதால் இன்னும் ஒன்றையும் இழக்கும் நிலைக்கு தள்ள பட்டுவிட்டோமோ என்று தோன்றுகிறது சரியா ?///

    மிகவும் சரியான சொல்லாடல்

    ///தோள் தடவி, தலை தடவை ,அரவணைப்பு தேவை படும் நேரம் சரியாக விலகி வைக்க படுகிறான். அப்போ என்ன வயது வந்த பிள்ளையை தடவி தடவி கொஞ்ச சொல்லுறியா ? என்று கேட்டல் ஆம்.///

    உண்மைதான் இது நிச்சயமாக அவனுக்கு அவசியப்படுகிறது
    //கட்டிப்புடி வைத்தியத்தை//
    பலரும் தவறான சிந்தனையில் நினைக்கின்றார்கள் அது நிச்சயமாக மனதுக்கு இதமானது வாழ்வின் நம்பிக்கையை இழந்து போகின்றவனுக்கு நிச்சயமாக அந்த அரவணைப்பு ஆறுதல் தரும்

    ///அப்போதெல்லாம் பாட்டி ,தாத்தாக்கள் யாரவது கூடவே இருப்பார்கள். அவர்கள் அந்த பிள்ளையாய் பக்கத்தில் இருந்து இதையெல்லாம் செய்வார்கள்.///

    நிதர்சனமான உண்மை அவர்கள் இதை செய்வதை பாசத்துக்காக மட்டுமல்ல கடமையாகவும் நினைத்தார்கள் ஆகவேதான் அன்றைய காலங்களில் தாத்தா பாட்டி இறந்தால் பேரன்கள் நெய்ப்பந்தம் பிடித்தார்கள் அது அன்று தொடங்கி வந்த பந்தத்தின் உணர்வு, உறவு இன்று அந்த சடங்குகளே மறைந்து விட்டன.

    தொடர்ந்து நல்ல விடயங்களை அளித்து வருவமைக்கு எமது வாழ்த்துகள்.


    தமிழ் மணம் இணைக்கவில்லையா ? நான் முயன்றேன் இணைய மறுக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜி மிக விரிவான அலசல் செய்து இருக்கீங்க தொடருங்கள் நான் சொல்லியவை சரியாக உள்ளதா என்பதை நானும் அறிய

      நீக்கு

  4. பேசணும் பேசணும் குழந்தைகளிடம் மனம் திற்ந்து பேசனும் குழந்தைகள் எவ்வள்வு பெரிதாக ஆனாலும் அணைப்பு அவ்சியம் அது ஆண் குழந்தை ஆனாலும் சரி பெண் குழந்தையானும் சரி.. இங்கே வீக்கெண்டுகளில் குழந்தைக்கு ஹோம்வொர்க் ஏதும் இல்லையெனில் என் குழந்தையும் என் பெட்டில் வந்து பேசிக் கொண்டே தூங்குவாள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் பேசணும்... மனம் திறந்து... நேரத்தை ஒதுக்கனும் அதுவும் நாம் மட்டும் பேசினால் போதாது அவர்களையும் அறியாமல் அவர்களை பேச வைக்க தெரியணும்

      நீக்கு
  5. ஆண் குழந்தைகளை சரியாக கவனிப்பதில்லை என்பது உண்மைதான். சிந்திக்க வேண்டிய விஷயம். முதலிலிருந்தே பெண்ணை மதிக்கக் கற்றுக் கொடுக்கவேண்டும். ஆணாயினும் பெண்ணாயினும், குழந்தையிலிருந்தே 'வாழ்வில் கேட்டதெல்லாம் கிடைக்காது, ஏமாற்றங்கள் சகஜம்' என்பது அவசியம் கற்றுக் கொடுக்கப்படவேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம் நண்பா உண்மை அதுதான் தோலுக்கு மேல் வளர்ந்துவிட்டான் கேள்விகள் அட்வைஸுகள் வைக்க தயங்குகிறார்கள் முதலில் ஏதாவது வந்தால் பார்த்துக்கலாம் என்று தள்ளி போடுகிறார்கள்

      நீக்கு
  6. //தோள் தடவி, தலை தடவை ,அரவணைப்பு தேவை படும் நேரம் சரியாக விலகி வைக்க படுகிறான்.//

    அரவணைப்பு தேவைதான், அதை வேற்று ஆள் முன்னிலையில் பிள்ளைகள் விரும்புவது இல்லை.

    ஆண்மகனை அவனுக்கு மனைவி வந்த பின்னும் மடியில் படுக்க வைத்து கொஞ்சும் அம்மாக்களை பார்த்து இருக்கிறேன் அதுவும் பிரச்சனையாக மாமியார், மருமகளிடம் ஏற்படுத்துவதை கண்டு இருக்கிறேன்.

    கண்டிப்பும், அரவணைப்பும் அவசியம். குழந்தைகள் பள்ளி , கல்லூரி விட்டு வரும் போதுமுகம் பார்க்க வேண்டும், அதில் பயம், கோபம், வருத்தம் இருந்தால் அரவணைத்து அவர்களின் விவரம் கேட்டு தீர்வு உடனுக்குடன் கொடுத்தால் வெளியில் ஆறுதலை தேடி செல்ல மாட்டான்.

    பதிலளிநீக்கு
  7. எஸ் அனுபவம்சாலிகள் என்பது இதை தான் சொல்கிறார்கள் சரியா சொல்லி இருக்கீங்க அடுத்தவர் முன் இதை செய்ய கூடாது .நான் எப்பொழுது தேவை படுகிறது என்கிறேன் என்றால் 14,15 மட்டுமே அதன் பின் அவர்கள் கொஞ்சம் புரிதலில் இறங்க ஆரம்பித்துவிடுவார்கள் அந்த புரிதலுக்கு அழைத்து போகத்தான் இந்த வயது அதன் பின் அரவணைப்பு என்பது புரிதலிலேயே அடங்கி விடும் தொடுகை தேவையில்லை தேவைப்படாது. சில விஷயங்கள் வேண்டுமென்றே செய்வது அது வளர்ந்த பின் பிள்ளைகள் தீர்மானிக்க வேண்டியது

    பதிலளிநீக்கு
  8. நிச்சயம் ஆண்பிள்ளைகளிடம் நேரம் ஒதுக்கி அவர்களின் செயல்பாடுகளை கேள்வி கேட்க வேண்டும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கண்டிப்பாய் கேள்வி கேட்கும் உரிமையை இழக்க கூடாது அது பின்னர் பிரச்சனையை உருவாகும்

      நீக்கு
    2. லேட்டாய் வந்ததால் கருத்துகள் வந்துவிட்டன....மதுரை, ஸ்ரீராம் கருத்தை அப்படியே!! கில்லர்ஜி கோமதிக்கா கருத்தும் தான்..

      நல்ல பதிவுத் தொடர்!!! தொடர்கிறோம்''

      கீதா

      நீக்கு
  9. அது சரி 2 வது வீட்டுல ஜோசஃப் எப்படி அருண் ஆனான்??!!ஹிஹிஹிஹி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிஸ் இப்படி ஒரு கேள்வி வரும் என்றே 3 வதில் குறிப்பு கொடுத்துவிட்டேன்

      நீக்கு
  10. வெகு அருமை. இந்த ஊரில் அன்புக்கு அரவணைப்புக்கு கம்மி வைப்பதே இல்லை. நான் எப்படி இருந்தேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். பெண்ணுக்குச் செலுத்திய கவனத்தைப் பிள்ளையின் பால் கொடுத்தேனா என்பது நெருடுகிறது. கவலை ,அன்பு எல்லாம் உண்டு. அணைத்தல் இருந்ததா
    ம்ஹூம். பிள்ளைகளையும் அவர்கள் கோப தாபங்களையும் தாண்டி வந்தது நினைவுக்கு வருகிறது.
    மிக அருமையான வழிகாட்டல் பதிவு. நன்றி பூவிழி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க வல்லி சிஸ் ரொம்ப சந்தோஷம் உங்கள் வருகை முதல் முறை இங்கே .... உங்களுக்கும் நான் சொல்லும் விஷ்யதில் கருத்து ஒத்து போகிறதா ....என் மகனுடன் நான் அதிகம் பேசுவேன் எல்லாவற்றயும் பற்றி இருந்தும் அவனுக்கு குறையிருந்து இருக்கிறது என் கவனிப்பில் அவனே சொன்ன போது திடுக்கிட்டு விட்டேன் பிறகு அவனுடைய தோழர்கள் 7,8 பேர் ரொம்ப குளோஸ் வீட்டுடன் அவர்கள் வாயிலாகவும் அவர்கள் மனக்குறையை இந்தமாதிரி விஷயத்தில் உணர்ந்தேன் இதன் பொருட்டே நிறைய பிள்ளைகள் இளம் வயதிலேயே வெளியே வடிகால் தேடுகிறார்கள் என்று அவர்கள் வாக்குமூலம்

      நீக்கு