வெள்ளி, 6 அக்டோபர், 2017

வெள்ளையை மஞ்சளாக்கலாமா ?


வெள்ளையை மஞ்சளாக்கலாமா ? தலைப்பை பார்த்துவிட்டு சாயம் போடுறதை பற்றி சொல்ல போறேன் நினைத்துவிடாதீங்க....
எல்லோரும் சமையல் குறிப்பு போடறாங்க நாமளும் உதவியா  ஏதாவது  சொல்லி தருவோம் எல்லோரும் ஆஹா இப்படித்தான் உதவனும் பாராட்டுவாங்கனு அதீத நம்பிக்கைதான்


இது  ஒரு சமையல் டிப்பு, டிரிக்கு சொல்லலாம் ..... எல்லா வீட்டிலேயும் வரும் பிரச்னை என்னா சாதம் மீந்துவிடுவது.
இந்த காலேஜ் போற பசங்க இருக்கற  வீட்டுல முக்கால் வாசி இந்த பிரச்னை வரும் . இந்த பிள்ளைங்க திடீர் திடீர்ரென்று வெளியே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுங்க வீட்டில் சாப்பாடு வேணாம் என்று சொல்லிடுங்க....
அப்புறம் வீட்டில் இருக்கிற நண்டுகளும், சிறுசுகளும் ஏதாவது நொறுக்குத்தீனி அதிகமா சாப்பிட்டுவிட்டாலும் இந்த பிரச்னை வரும்.
முக்கியமானவரை விட்டுட்டேனே வீட்டில் இருக்கும் பெரிய ஆண்  இனங்கள் வேலையைவிட்டு வரும்போது ஏதாவது பிரண்ட்ஸ் கூட சாப்பிட்டுவிடுவாங்க வீட்டில் சொல்லமாட்டாங்க காமுக்கமா பசியில்லை  இன்னக்கி என்னமோ அப்படினு சொல்வாங்க.... இல்லனா கொஞ்சம் பெயருக்கு  சாப்பிடுவாங்க (படிக்கும் ஆண் குலங்க சண்டைக்கு வராதீங்க) எல்லாநாளுமில்லை இப்படி எதோ ஒரு சில நாள்
நம் வீட்டுலேயும் சாதம் மீந்துவிடும்..... அதை அடுத்தநாள் என்ன செய்யறதுன்னு குழப்பம் வரும்... பழசா குடுத்தா மூஞ்ச் ஒரு முழு நீளத்துக்கு  தூக்கி வச்சிப்பாங்க ஏதோ மிக பெரிய கொடுமை அவங்களுக்கு நடக்கற மாதிரி அதனால் அதை புதுசாக்கிடலாம் யாரும் கண்டு பிடிக்காத மாதிரி..... டிபனா மாத்திவிடலாம்  எப்படி?? இப்படி ...
பெயர் -மஞ்சள் பொங்கல் (ஹான் !!இப்படி பார்க்கக்கூடாது) 
செய்முறை;- (இதுக்கேவா ம்ம் நடத்து  என்று நிறைய பேர் சொல்ல போறீங்க   )முதலில் 
1-மீந்த சாத்தை எவ்வளவு அளவோ அதுக்கு முழுதும் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி விடுங்கள் *அடிப்பாவி 
    பழையது செய்வதற்க்கா  இவ்வளவு பில்டப்பு* இல்ல இல்ல கவனிங்க அடுத்து 
2-பாசி பருப்பு பொங்கலுக்கு போடுவாங்களே அது சாத்துக்கு ஏற்ற மாதிரி எடுத்துக்கோங்க அளவு 1அழக்கு 
   சாதமென்றால் 1/4 பருப்பு லைட்டா வறுத்துக்கோங்க அப்புறம் தண்ணீர் விட்டு அலசிவிடுங்கள்
3-நாம் குக்கரில் செய்வதாக இருந்தால் நேரம் குறைவாக செய்துவிடலாம் குக்கரில்  சாதம் பருப்பு வைப்போம் 
  அல்லவா அப்படி  தனி தனியே இதையும் வைத்து எடுத்து கொள்ளுங்கள்
4- இப்பொழுது ஒரு தாளிக்கும் வாணலியில்  தாளிக்க ...வேண்டிய அளவு (ஒரு ஸ்பூன் வைத்து கொள்ளுங்கள்) 
    மிளகு, சீரகம்,ஒரு துண்டு இஞ்சி ,கறிவேப்பிலை ,ஒரு கைப்பிடி அளவு வறுத்த 
    வேர்க்கடலை(வேண்டியவர்கள் இணைத்து கொள்ளுங்கள் ..போடுதல் நன்றாக இருக்கும் )முக்கியமாய் 
    பச்சைமிளகாய் ஒன்று பொடியாக நறுக்கியது (என்னது பச்சை மிளாகாயா பொங்கலில் என்று மிரள கூடாது 
   போட்டு பாருங்க புதுசா பொங்கல் செய்யும்  போதும் சேர்ப்பீர்கள்  இனிமே அப்புறம் வந்து பாராடுவீர்கள் 
     (இது கொஞ்சம் ஓவரா இருக்கே )இப்போ அதி முக்கியமானது இந்த சமையலுக்கு 
    1/4 டீஸ்பூன் மஞ்சத்தூள் தாளிக்க எண்ணெய் கொஞ்சம் பிறகு கொஞ்சம் நெய் ருசிக்கு, மணத்திற்க்கு 
5-இப்போ பருப்பு சாதம் இரண்டையும் ஒன்றாகி தாளிக்க வேண்டியதை தாளித்து அதில் போட்டு அடுப்பில் ஒரு 
   ஐந்து நிமிடம் வைத்து கிளறுங்கள் நெய் ஊற்றி .........இப்பொழுது மஞ்சள் பொங்கல் தயார் சூப்பரா இருக்குங்க 

   செய்து பாருங்க இதற்கு தேங்காய்யுடன் கொஞ்சம் கொத்தமல்லி ,இஞ்சி ஒரு துண்டு ,பொட்டுக்கடலை 
   வைத்து அரைத்த சட்டினி நல்லா  பொருந்தும்.
எல்லோரும் படித்து பயனடைய வேண்டி கொள்கிறேன் ......அப்படியே  படித்தவர்கள் கொஞ்சம் தாளித்து விட்டும் போங்க இங்கே

12 கருத்துகள்:

  1. என்னாது பழஞ்சோறுக்கு இவ்ளோ பில்டப்பாஆஆ:)) ஹா ஹா ஹா அருமையான சாத ரெசிப்பி.. நல்லாத்தான் இருக்கும்...

    ஆண்களை வகைவகையாப் பிரிச்சு மேய்ஞ்சு வச்சிருக்கிறீங்க:) வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம் ஆதிரா பில்டப்பு கொடுத்துடுவோமில்ல வீட்டிலும் இதுமாதிரி கைவசம் நிறைய இருக்கு ஐடியா எப்பவும் பழசுன்னு காண்பிப்பதில்லைஎது மீந்து போனாலும் கவலை படுவதுமில்லை ஐடியா வை திறந்து வைத்து விடவேண்டியது வீட்டில் கிண்டல் ஒரு மெஸ் ஆரம்பித்துவிட்டுணு

      நீக்கு
  2. நல்ல யோசனை நண்பா... இதில் சின்ன டவுட்டு மஞ்சள் கலருக்கு பதிலாக எனக்கு பிடித்த கலர் நீலம் ஆகவே துணிகளுக்கு போடும் நீலம் சேர்க்கலாமா ?

    த.ம. ஓட்டளிக்க இணைப்பு வைத்தால் பலருக்கும் பலனளிக்கும் காரணம் நான் பெரும்பாலும் செல் வழி வருபவன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஜீ பார்த்திங்களா இதுதான் போட்டு வாங்கி கிண்டல் பண்றது நீங்க வீட்டில் உதவுவதில்லைனு புரியுது போர்கொடியை தூக்குறோம் இருங்க ஜீ பார்த்திங்களா இதுதான் போட்டு வாங்கி கிண்டல் பண்றது நீங்க வீட்டில் உதவுவதில்லைனு புரியுது போர்கொடியை தூக்குறோம் இருங்க
      த.ம என் பிளாக்கில் இல்லையா ஜீ புரியலை நான் செய்யணும் என்று பார்கிறேன் முடிந்தால் சொல்லி கொடுங்கள்

      நீக்கு
  3. பதில்கள்
    1. தோழா தெளிவா சொல்லிட்டேனே பழையதை புதியது ஆகிவிட வேண்டும் யாருக்கும் புரிய கூடாது இதுமாதிரி நிறைய இருக்கு உங்க வீட்டுக்கு அனுப்பவா

      நீக்கு
  4. தமிழ் மணம் இணைய மறுக்கிறது அதனால் வாக்கு அளிக்க முடியவில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பரவாயில்லை ஜீ நீங்க வந்தே சந்தோஷம் பல நாள் பிறகு ஆரம்பித்து இருக்கேன் முதலில் என்னை வழிநடத்துங்கள்

      நீக்கு
  5. ஹிஹிஹிஹி...பூவிழி இப்படி நானும் தில்லுமுல்லு செய்ததுண்டு. காலையில் மீந்துபோவது சில சமயம் இரவு...அல்லது முந்தைய நாள் சாதம் என்று வாய் திறக்க மாட்டேனே!!! ஃபிரிட்ஜில் வைத்தாலும் யார் கண்ணிலும் படாமல் வைத்துவிடுவேன்.....இந்த ரகசியத்தை வெளில சொல்லிட்டேன் எங்க வீட்டாளுங்க யாரும் வாசிக்க மாட்டாங்கனு தைரியம்தான் ஹிஹிஹிஹிஹி...

    கீதா

    பதிலளிநீக்கு