செவ்வாய், 5 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ?

இன்று கதை ஒன்று 

நடப்பது என்ன ?1,2,3,4,5.6,7 என்ற பதிவுகளை தொடர்ந்து  அந்த விஷயங்களை தாங்கிய கதை பகிர்கிறேன் என்று சொல்லியிருந்தேன் . 
சிறு பிள்ளைகளை பற்றியது என்பதால் கொஞ்சம் போர் அடிக்கலாம்..... ஆனால் இதில் யார் பக்கம் தவறு என்று படித்தால் சொல்லமுடியும் உங்கள் கருத்தயும் .... 
அதை இங்கே தொடர்ந்து சிறு பதிவுகளாக கொடுக்கிறேன் இது ஒரு முழு கதை ....படித்து உங்கள் எண்ணங்களையும் கதையின் நிறை குறைகளையும் பகிருங்கள்.



 புத்திசாலி யார் ?  



“நவீன்… நவீன்… கிளம்பிட்டியாடா… வந்து டிபன் சாப்பிடு..பஸ் வந்திடும்.”

நவீன் “ம்ம் இதோ வரேன்”, கண்கள் என்னமோ டீவியில் சுவரசியமாய் நேற்று நடந்த கிரிக்கட் மேட்ச் செய்தி தொகுப்பை பார்த்து கொண்டு, கைகள் சாக்ஸ் அணிகிறது .

“ஓ காட் என்னடா பண்ற இப்பபோயி டிவி பார்த்து கொண்டு”

ஜாகிங் முடித்து உள்ளே வரும் சுந்தரை பார்த்தவுடன் அவசரமாய் எழுந்து ஒடுக்கிறான் டைனிங் டேபிளுக்கு சாப்பிட .

“ஸ்ஸ் அப்பாடா கொஞ்சம் சீக்கிரம் வாங்கனு டெயிலி சொல்லறேன் காதில் வாங்கறிங்களா..உங்க தலை பார்த்தா ஒழுங்கு அப்படியே வந்து குவிஞ்சிடும் ராசாக்கு..என்னைய பார்த்தா திமிரு..முளைத்து மூணு இல்லை விடல” புலம்பி கொண்டே கிச்சனுக்குள் நுழைந்து கொள்ளும் ரேணு
 
“டேய் என்.ஸி.ஸி கேம்புல சேர்ந்துட்டியா..?” சோபாவில் இருந்து குரல் வருகிறது

நவீனுக்கு விக்கல் எடுக்கிறது, கேள்வியில் கிச்சனில் இருந்து எட்டி  பார்கிறாள், அம்மாவை பார்த்து வாயசைக்கிறான் “பிலீஸ்மா..”

“துரைக்கு என்.ஸி.ஸி வேண்டாமாம்.. கிரிக்கெட் கிளாஸ்ல சேரணுமாம்..”

முறைக்கிறான் சுந்தர் “நான் என்ன சொன்னேன் கொஞ்சம் பெரியவனாகு சேர்ந்துக்கலாம், இப்ப யாராவது உன்னை கொண்டு போயி கூட்டிட்டு வரணும், எங்க ரெண்டு பேருக்கும் டைமில்ல, 12 வயசுக்கு பிறகு சேர்ந்தினா நீயே போயி நீயே வரலாம் இன்னும் ஒரு 2 வருஷம் போகட்டும்.”

“இல்ல அப்பா நம்ம அப்பார்ட்மென்டுலியே பக்கத்து பிளாக்ல இருக்கற அலெக்ஸ் அண்ணா போறான் பா நான் அவங்க போற டைம்ல போறேன் பா அவங்க கூட, பிளீஸ் பா நீங்க சொன்னா அந்த அண்ணா கூட்டிட்டு போவான் பா.”

சுந்தர் ரேணுவை பார்கிறான் என்ன சொல்ற என்பது போல்.. “நான் கேட்டு பார்கிறேன் முதலில், அதாங்க ஜார்ஜ் சாரோட பையன்”

“தேங்க்யூ மா……” என்று சத்தமாய் சத்தம் நவீன்.

மாலை மணி 7 மெயின்கேட்டிலேயே காத்திருக்கும் நவீன்,ரேணுவின் வருகையை பார்த்து.

வாசலில் கேப் வந்து நிற்கிறது ரேணு ‘பை’ சொல்லி இறங்கி திரும்பினாள் நவீன்…. “என்னடா இங்கே நிக்கற ஹோம் வொர்க் முடிச்சிட்டியா?...”

 “முடிச்சிட்டேன்…சரிவா..அம்மாஆஆஆஆ”.... “ஏண்டா இப்படி கத்தற..?”

“நீ அந்த அண்ணா கிட்ட கோச்சிங் பத்தி கேட்கிறேன் சொன்ன…?”

“விடமாட்டியே இப்பதானே வந்தேன் இரு முகமாவது கழுவிட்டு வரேன்”

“சரி நான் கீழயே இருக்கேன் நீங்க வாங்க”

ரேணு வருகிறாள் “வாடா” இருவரும் அலெக்ஸ் வீட்டு கதவின் முன்,காலிங் பெல் அடிக்கிறாள் அலெக்சின் அம்மா ரோஸ்மேரி வெளியே எட்டி பார்கிறார், “ஹேய் ரேணு வா வா.. என்ன அதிசியம்”

“ஹாய் ஆண்டி, இதோ இந்த வாலு இழுத்துட்டு வந்து இருக்கு”

“அப்படியா வெரிகுட்.. டா பையா , சரி உட்காருங்க ,என்ன விஷயம், முதலில் என்ன சாப்பிடற காபி டீ..?”

“அத்தலம் வேண்ணாம் ஆண்டி
ஸ்கூல் ஒர்க் எல்லாம் எப்படி போகுது..?”

“ம்ம் இன்னும் எக்ஸாம் வரும் போது தான் வேலை பெண்டை  கழட்டும்

"உங்க சன்னும்  10th ஆச்சே..”

“எப்போ சமசீர் சிலபஸ் வந்ததோ அப்பதிலிருந்து எல்லாத்துக்கும் குளிர்விட்டு போயிடுச்சி ஈஸி ஈஸி-னு, கிரிக்கெட் கோச்சிங்கில் இருந்தே இன்னும் வரவில்லை..கேட்ட நான் படிச்சுக்குவேன் நீ கவலை படாதேனு சொல்லவேண்டியது..எனக்கும் 12th போர்ஷ்ன் சீவியரா  ஆரம்பிச்சசுனா வீட்டுக்கு கூட வர லேட் ஆயிடும், என்ன பண்ண போறேன் தெரியலை ரேணு.. அங்கிள் தான் பார்க்கணும் சொல்லி இருக்கேன்”

ரேணு மணியை பார்க்கிறாள் 8 “இவ்வளவு நேரம் ஆகுமா ஆன்டி கிளாஸ் முடிய..?”

”கோச்சிங் செய்யறவரை  பொறுத்துனு சொல்லுறான் ..இப்ப வேண்டாமென்றாலும் கேட்காமல் கிரிக்கெட் பைத்தியம் பிடிச்சி ஆட்டுது”

“ம்ம் இதோ இந்த வாலையும் தான்.. இப்பவே இவருக்கு கோச்சிங்கில்  சேரணுமாம்.. அதான் கேட்டுட்டு போலாம்னு வந்தேன்”

“ஓ.. அதன் இந்த பக்கமா..”

“ஆமாம் ஆன்டி நாங்க  இரண்டு பேரும்  வர இவ்வளவு லேட் ஆகிடும் சில நேரம் கூப்பிட்டு போயி கூப்பிட்டு வர முடியாது.. சொன்னா கேக்க மாட்டறான் அடம்புடிக்கிறான் அதான் உங்க பையன் போகும் நேரத்தில் சேர்த்துவிட்டா அவன் கூப்பிட்டு போயி வருவானா ஹெல்ப் கேக்கலாம்னு வந்தேன்”

“அதுக்கென்ன ரேணு இப்ப வந்திருவான் கேட்கலாம்.... இதோ வந்திட்டானே..  வாடா உனக்காதான் ஆண்டி காத்திருக்காங்க”

“ஹாய்”,

நவீன் எழுந்து ஓடி போயி அவன் கையைப்பிடித்து கொள்கிறான். “என்னடா..?”
 
“ஹாய்ண்ணா”..

“ஹாய் அலெக்ஸ், கோச்சிங் எப்படி போகுது..?”

“அங் சூப்பர் ஆன்டி”

“இவனுக்கும்  சேரணுமாம்  என்னாலயும் அவங்க அப்பாவாலையும் முடியாது சோ அதனாலதான் உன்கிட்ட  ஹெல்ப் கேட்கவந்தேன், நீ போகும்நேரம் இவனையும் கூப்பிட்டு போயி சேர்த்து டெயிலி  கூப்பிட்டுடு போயி வர முடியுமா..?” என்று தயங்கி கேட்கிறாள்.

”ஓ ஸூர்! நோ பிராப்ளம் ஆன்டி.”

“ஆனா இவ்வளவு லேட் ஆகும் அதுதான் யோசனையா இருக்கு.. இவன் ஹோம்வொர்க் பண்ணனும்..படிப்பு பாதிச்சா அங்கிள் வேற திட்டுவாங்க”

“அம்மா அம்மா பிளீஸ் மா நான் ஸ்கூல் விட்டு வந்தவுடன் செஞ்சு  வச்சிடறேன்”

“ஸ்கூல் வொர்க்ல ஏதாவது பிராப்ளம் வந்துச்சி.. உங்கப்பா அவ்வளவு தான்.”

“விடு ரேணு அவன்தான் செஞ்சு வச்சிடுறேன் சொல்றானே இப்ப 5th தானே எதுக்கு இப்பவே புடிச்சி பயப்படுற” யோசித்து கொண்டே ஓகே சொல்கிறாள்.

ஜார்ஜ் வருகிறார் “வாம்மா..”

“ஹாய் அங்கிள்” மணியை பார்கிறாள் 8.45 போன் .எடுத்து பார்கிறாள் நிறைய மிஸ்டு கால்ஸ் சுந்தரிடமிருந்து “ஓகே ஆன்டி வரேன்… அங்கிளும் இப்பதான் வந்திருக்கார் கவனிங்க ..நிறைய நேரம் ஆகிவிட்டது ..அலெக்ஸ் நாளைக்கு கூப்பிட்டுட்டு போறியா..?”

“ஓகே ஆன்டி… ஈவ்னிங் 5'க்கு ரெடியா இருடா”

“ஓகேன்னா பாய்,..... பாய்”

அடுத்த நாள் ஈவ்னிங் 5'ஓ கிளாக் நவீன் குதித்து கொண்டு அலெக்ஸை தேடி வருகிறான்.

“வாடா வந்துட்டியா இரு போகலாம் உட்கார் இதோ வரேன்” என்று உள்ளே போகிறான்.

ரோஸி வேலையில்இருந்து வருகிறார் “ஹாய் நவீன் கிளம்பிட்டியா பால் குடிச்சி சாப்பிட்டியா ஏதாவது..?” என்று கேட்டு கொண்டே உள்ளே போகிறார்.

“மாம் நான் கிளம்பறேன்.. வாடா”

“அலெக்ஸ் டிபன் வச்சிருத்தேனே சாப்பிட்டியா..?”

“அதுவேண்டாம் நான் ஜூஸ் குடிச்சிட்டேன்..பை!”

பெஸ்ட் காஸ்ட்லீ ஹீரோ சைக்கிள் அவனிடமிருக்கிறது அதனால் அவனுக்கு நவீனை  கூப்பிட்டு போவது சிரமமாக தெரியவில்லை.

கிளம்பி இரண்டு ரோட் கிராஸ் செய்த்தவுடன் அலெக்ஸ் சைக்கிளை நிறுத்திவிடுகிறான்.

“எண்ணா இங்கே நிறுத்திட்டீங்க..?”

“கொஞ்சம் இருடா ஒரு 5 மினிட்ஸ்” என்று ஒரு புக்கை எடுத்து பார்த்து கொண்டிருப்பது போல் பாவலா செய்கிறான், 
நவீனுக்கு ஒன்றும் புரியவில்லை முழித்து கொண்டு நிற்கிறான், 

அப்போது ஒரு 13 வயது பெண் அவர்களை கிராஸ் செய்து நடக்கிறாள் இவர்களை பார்த்த்து கொண்டே.. அலெக்ஸ் நவீனை பார்த்து “டேய் இப்ப போச்சே அந்த கேர்ள் திரும்பி பார்க்க்கிறாளா பாரு சீக்கிரம் ஜல்தி” 
நவீனும் புரியாமல் பார்த்து கொண்டே இருக்கிறான்.

“ஆமாம்ண்ணா பார்க்கிறாங்க ஆனா போயிட்டாங்க.. யாருண்ணா அவங்க?”

“அதுவா..என் டாவு”

“டாவா..?” !!!!!

தொடரும் .....
நவீனுக்கு எவ்வளவு  புரிகிறது என்று பார்ப்போம் இனி....... 
இங்கு நடப்பது என்ன யார் என்ன செய்கிறார்கள்? 

27 கருத்துகள்:

  1. //என் டாவு//
    தமிழில் எவ்வளவு இலக்கிய வார்த்தைகள் இருக்கிறது.

    பெற்றோர் கணக்கு ஒன்று பிள்ளையின் போக்கு வேறு.

    இதற்கு அடிப்படை பணஆசை தவறாக நினைக்க கூடாது தாய் வீட்டிலிருந்து வளர்த்த, வளர்க்கும் பிள்ளைக்கும், தாயும் வேலைக்கு சென்று இருக்கும் குடும்பத்து பிள்ளை வளர்ந்த, வளர்க்கும் பிள்ளைகளுக்கும் வேறுபாடு அதிகம் உண்டு.

    ஒன்றைப்பெற ஒன்றை இழந்தே தீர்வது இறைநியதி
    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான் ஜி ஆனால் இன்றைய கால சூழ்நிலை அதற்க்கு ஒத்து போவதில்லை பணம் என்ற தேவை பலவழிகளிலும் மனிதனை நெருக்குகிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
    2. பணம் தேவைப்படுவது உண்மையே... இருப்பினும் நாம் அனைவரும் வறட்டு கௌரவத்துக்கு பேராசைப்பட்டு இந்த சமூகத்தோடு ஓடுகிறோம் அனைவரும் உணர்ந்தால் மாற்றம் நிகழும் ஆனால் மாற்றம் ஒன்றே மாறாதது.

      நீக்கு
    3. /இதற்கு அடிப்படை பணஆசை தவறாக நினைக்க கூடாது தாய் வீட்டிலிருந்து வளர்த்த, வளர்க்கும் பிள்ளைக்கும், தாயும் வேலைக்கு சென்று இருக்கும் குடும்பத்து பிள்ளை வளர்ந்த, வளர்க்கும் பிள்ளைகளுக்கும் வேறுபாடு அதிகம் உண்டு.// நிச்சயமாக இல்லை ஜி!! எங்கள் வீடுகளில் இருவருமே வேலைக்குச் செல்பவர்கள்தான். நான் மட்டும் தான் வீட்டில் இருப்பவள். ஆனால் என்னால் அடித்துச் சொல்ல முடியும், என் மகனை விட அக்குழந்தைகள் இன்னும் ஒரு படி மேலேயே மிகவும் நல்ல வகையில் இருக்கின்றார்கள். பெற்றோரிடமும் புரிதலுடன் இருக்கிறார்கள். பாசத்துடனும் இருக்கிறார்கள். என் சுற்றுப் புறத்திலும் அப்படித்தான்.

      ஜி இருவரும் வேலைக்குச் செல்வதால் பிள்ளைகள் கெட்டுப் போகும் என்று சொல்வதற்கில்லை. அதுவும் பணம் என்ற ஆசை இல்லாமல் வேறு வழியின்றி செல்வோரும் எத்தனையோ பேர் உளர். இங்கு பூவிழி கதையில் சொல்வது பணம் என்ற அடிப்படையில் அல்ல. இருவரும் வேலைக்குச் சென்றாலும் சரி, குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க முடியும். பெற்ரோரின் புரிதலில் குழந்தைகளுடன் நேரம் ஒதுக்குவதில்தான் இருக்கிறது. அதே சமயம் வீட்டில் தாய் இருந்தாலும் பிள்ளை கெட்டுப் போகிறார்களே! எத்தனையோ குடும்பங்களில் இதுவும் நடக்கிறதே... பணக்காரக் குடும்பத்துப் பிள்ளைகளும் நல்ல முறையில் வளர்பவர்களும் இருக்கிறார்கள். அதே சமயம் ஏழ்மை நிலையில் அல்லது மிடில்க்ளாஸ் குடும்பத்தில் இருக்க்கும் குழந்தைகள் கெடுபவர்களும் இருக்கிறார்கள். இதில் பூவிழி சொல்ல வருவது பெற்றோரின் கவனிப்பும், தோழமையும், புரிதலும் தான் என்பது எனது கருத்து.

      கீதா

      நீக்கு
    4. வேலைக்கு போவது போகாமல் இருப்பது பிரச்னையில்லை பிள்ளைகளை கவனிப்பதில்தான் பிரச்னை அவர்களுக்காக தான் நம் வாழ்வே வாழ்வின் செயல்களே என்னும் போது அது அர்த்தமற்று போய்விட கூடாது என்பதை தான் விரும்புகிறேன் நானும்
      மீள் வருகைக்கும் கருத்து பரிமாற்றத்துக்கும் நன்றி... ஜி , கீதா சிஸ்

      நீக்கு
    5. உண்மைதான் ஜி அவங்க வேலைக்கு போறாங்க நானும் போகணும் என்று ஸ்டேட்டஸ் மெயின்டன் செய்யவும் வேலைக்கு போறாங்க அப்படியே போனாலும் பரவாயில்லை இந்த ஸ்டேட்டஸை எல்லவற்றிலும் கடைபிடிக்காமல் பிள்ளைகள் விஷயத்தில் கோட்டைவிடாமல் இருந்தால் சரி கீதா சிஸ் சொன்னமாதிரி பிள்ளைகளுக்கு நேரம் ஒதுக்கணும் அவர்கள் நல் வாழ்வுக்கு

      நீக்கு
  2. கிரிக்கெட் கோச்சிங்கில் தவறு இல்லை ஆனால் பெற்றோர் குழந்தைகளை அழைத்துச் சென்றுவிட்டு வருவதுதான் நல்லது. அல்லது கூடப் போகும் பையன் எப்படிப்பட்டவன் என்பதையும் கொஞ்சம் ஆராய்ந்து அனுப்புவது நல்லது. நவீன் வீட்டில் வந்து பெற்றோரிடம் சொன்னால் ஒரு தீர்வு கிடைக்கலாம்...அதைப் புரிந்து கொள்ளும் பெற்றோர் என்றால். பருவ வயதுப் பையனுக்கு ஈர்ப்பு வரும்தான்...அதையும் பெற்றோர் அழ்காக டீல் செய்யலாம்....ஆனால் சரி அடுத்து வருப் பார்ட்டைப் பார்த்துவிட்டு...மீதி...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எஸ்நம் கவனிப்பில் கொண்டு போவதே நல்லது முக்காவாசி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சிஸ்

      நீக்கு
  3. நல்ல தொடக்கம்.

    பள்ளியில் படிக்கும் போதே காதல்.... இப்போதெல்லாம் இது ரொம்பவே அதிகமாகத்தான் இருக்கிறது....

    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. படிச்சேன் முழுதும் பூவிழி ..இது முதலில் பெற்றோர் தங்கள் சிறு பிள்ளைகளை பிறரை நம்பி விடுதல் தவறு .உறவினர் ஆனாலும் என்னை பொறுத்தவரை சிறுவர் சிறுமியரை பெற்றோர் அவங்க பாதுகாப்பில்தான் கொண்டு போகணும் .
    அதுவும் அலெக்ஸ் நவீனை விட வயதில் மூத்தவன் என்பதால் நன்கு யோசிச்சி இருக்க வேண்டும் .இருவரது எண்ணங்களும் சிந்தனைகளும் வயதிற்கேற்ப மாறுபாடானவையாக இருக்குமே .

    பதிலளிநீக்கு
  5. சரியா கணித்து இருக்கீங்க எஸ் பிள்ளைகளை யாரை நம்பிவிடுகிறோம் என்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஞ்சு

    பதிலளிநீக்கு
  6. விடிய வந்து வோட் போட்டிட்டு கதை படிக்காமல் ஓடிட்டேன்ன்..இப்போதான் படிச்சேன். அனைத்தும் வயதுக்கோளாறுதானோ... இதுவரை நல்லாத்தானே போய்க் கொண்டிருக்குது.. இனியும் நல்லாத்தான் போகும் என நினைத்துக்கொண்டிருக்கிறேன்ன்.. ஏனெனில் அவசரப்பட்டு ஆரையும் திட்டிடக்கூடாதெல்லோ:) தீர விசாரிச்சுட்டுத்தான் திட்டுவேன்ன்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாயிண்ட் தீர விசாரிக்காமல் எப்படி யாரை திட்டுவவது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மா.செ.அதிரா

      நீக்கு
  7. பெற்றோர்கள் கிரிக்கெட் கிளாஸ்ல சேர்த்து விடாமல் பக்கத்து வீட்டு பையனை நம்பி அனுப்பலாமா?

    அலெக்ஸ் நவீனை கிரிக்கெட் கிளாஸ்ல சேர்ப்பானா?
    தானும் கெட்டு நவீனையும் கெடுத்து விடுவானா?
    நவீன் புரிந்து கொள்வானா?
    தொடர்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியா பாயிண்டை பிடித்தீர்கள் சிஸ் எஸ் பெற்றோர் கொண்டு சேர்த்தவிவரம் அறியாமல் இருப்பது எப்படி சரியாகும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சிஸ்

      நீக்கு
  8. கிரிக்கெட் கோச்சிங் செல்வது ஓகே. பாருங்க கோஹ்லிக்கு வருட வருமானம் 12 கோடியாம்! ஆனா கூடா நட்பால் வீணாய் போனாத்தான் கஷ்டம். பிஞ்சு நெஞ்சம் நஞ்சாகி கல்வி திசைமாறிப்போகுமே...

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் தோழி ,மக்கள் தொலைக்காட்சியில் "மனதோடு பேசு" நிகழ்ச்சியில் புத்தகம் பற்றியா விமர்சனம் ,கருத்து நீங்கள் காலத்து கொள்ளவேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. வணக்கம் தோழி ,மக்கள் தொலைக்காட்சியில் "மனதோடு பேசு" நிகழ்ச்சியில் புத்தகம் பற்றியா விமர்சனம் ,கருத்து நீங்கள் காலத்து கொள்ளவேண்டும்.என்னுடைய கைபேசி-9514403881

    பதிலளிநீக்கு
  11. கூடா நட்பு ஆபத்து தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

    பதிலளிநீக்கு
  12. டாவு...என் பள்ளிக்கால நினைவுகள் நினைவிற்கு வந்துவிட்டன.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா வாங்க சார் பள்ளி கல்லூரி வாழ்வை கடந்துவந்தவர்கள் மட்டுமல்ல எல்லோரும் தன் இளமைக்காலத்தில் இந்த வார்த்தையை கண்டிப்பாக கேட்டு இருப்பார்கள் உபோயோகித்துமிருக்கலாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  13. இந்த பதிவு எப்படி என் கண்ணில் இருந்து தப்பியது என்று தெரியவில்லை. இன்றுதான் பார்த்தேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth எப்படியோ மிஸ் ஆகிவிட்டது என்று சொன்னதால் விடுகிறேன்

      நீக்கு
  14. வயதில் மூத்தவன் இளையவன் என்று எல்லாம் பார்க்க தேவையில்லை எல்லாமே பிஞ்சிலே பழுத்தாகத்தான் இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இன்றைய நிலைமை நீங்கள் சொல்வது போல்தான் அந்த புண்ணியத்தை கட்டி கொள்ளத்தான் இன்றயை மீடியாக்கள் இருக்கிறதே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  15. இந்த காலப் பிள்ளைகள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்வார்கள்

    பதிலளிநீக்கு