செவ்வாய், 12 டிசம்பர், 2017

விடுமுறை கடிதம்



விழாக்கள் விருந்துண்ண அழைக்கின்றன
விதிமுறை விளக்கங்களோடு
அடையாளம் தெரியாமல்
அலைய வேண்டுமாம்
தலைநகரின்  குளிரில்
முகமூடியிட்டு தலை குல்லாவோடு

விருந்தின் வாசம் பிடித்தாலும் சரி பிடிக்காவிட்டாலும்  சரி
கை நனைக்கும்  கட்டாயம்
கல  கலப்புக்கு பஞ்சமில்லை
கை செலவுக்கும் பஞ்சமில்லை

பத்து நாட்கள்
வலையை வாசல் தெளித்து 
கோலமிட வகையில்லை
முணுமுணுப்புகள்  ரீங்காரமிட போகின்றன
'இருந்துட்டாலும்  வகை வகையாய்
கோலமிட்டதுபோல் தினமும் '
ஹி ஹி ஹி  ஹி
 
இருந்தாலும் அடுத்த வீட்டு கோலத்தை
ரசிப்பதில் இருக்கிறதே ஆர்வம்
அது ரங்கோலியா ,பூ கோலமா
தேர் கோலமா ,தேரை நடுவில் இழுத்துவிட்ட கோலமா
புள்ளி கோலமா  ,புன்னகை கோலமா
புதுமை கோலமா ,அருள் கோலமா
பயண கோலமா, பண்பு கோலமா 
அடாது கோலமா ,அடக்க கோலமா
நேர் புள்ளி கோலமா, ஊடுபுள்ளி கோலமா 
என்பதை ரசித்து
உணர்ந்ததை உரைத்திட
உவகை வருகிறதே

சரிதான் 
நீ சொல்லவிட்டால் வண்ணம் தீட்டாமல்
போய்விடாது அலட்டி கொள்ளாதே
அலங்காரமாய் இருக்க விடுமுறை அழைக்கிறது
விடை பெற்று கொள்
வந்து உன் வியாக்கியானங்களை வைத்து கொள்
நீ இல்லையென்று
உன் வலை  தூசியும் ஒட்டடையும்
அடையாமல் இருக்க வேண்டுகோள் வைத்து கொள்


25 கருத்துகள்:

  1. போயிட்டு வாங்க பூவிழி ..10 நாள்தானே :) உங்கள் விடுமுறை விண்ணப்பக்கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டது :)enjoy your trip :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஞ்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி தவறுதலாய் விடுபட்டுவிட்டது உங்கள் கருத்து மன்னிக்கவும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா தவறுதலாய் விடுபட்டுவிட்டது உங்கள் கருத்து மன்னிக்கவும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. 10 நாள் விடுமுறைக்கே இவ்ளோ கூக்குரலோ?:).. சரி சரி சந்தோசமா போய் விருந்துண்டு 2 கிலோ வெயிட் ஏத்தி வர வாழ்த்துகிறேன் ஹா ஹா ஹா:)..

    பதிலளிநீக்கு
  5. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க G.M.B சார் தவறுதலாய் விடுபட்டுவிட்டது உங்கள் கருத்து மன்னிக்கவும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ/கீதா தவறுதலாய் விடுபட்டுவிட்டது உங்கள் கருத்து மன்னிக்கவும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு

  7. நாந்தான் முதலில் வந்தேன் கவிதையில் ஏதோ சொல்ல வ்ரீங்க என்பதுமட்டும் புரிந்தது ஆனால் என்ன சொல்ல வ்ரீங்க என்பது புரியவில்லை அதனால் மற்றவர்கள் என் கருத்து போடுகிறார்கல் என்று பார்த்துவிட்டுவருவோம் என்று நினைத்தேன் ...நமக்கும் கவிதைக்கும் கொஞ்சம் அலர்ஜி அதுமட்டுமல்ல நேற்று வீட்டாம்மாவிடம் அடி வாங்கியதால் ஒரு சைடு முளை வேலை செய்யவில்லை ( ஹலோ உங்களுக்கு எல்லாம் மூளை இருக்க என்று கேட்டு கிண்டல் எல்லாம் பண்ணப்[படாது) எனக்கும் மூளை இருக்கு ஆனால் கல்யாணதிற்கு அப்புறம் அதன் பயன்பாடு நிறுத்தி வைக்கப்பட்டதால் உடனடியாக வேலை செய்வதில் தாமதம் ஏற்படுகிறது அவ்வளவுதான் ஹீஹீ இப்ப நம்ம மக்கள் கருத்து சொன்னப்பதான் புரிந்தது நீங்கள் ஹனிமுனுக்கு போகிறேன் என்று ..ஒகே சென்ரு வாருங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க TRUTH HA HA உங்க KK பறக்குதே வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  8. விடுமுறைதானே? என்ஜாய்.. அதுதான் முதலில்... இதெல்லாம் அப்புறம்தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராம் ஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  9. விடுமுறை நாட்கள்
    மகிழ்வான நாட்களாய் நகரட்டும்
    வாழ்த்துக்கள் சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  10. என்கருத்துகள் நீக்கப்படுவதற்கான காரணங்களையாவது எனக்கு மெயில் செய்யலாமே

    பதிலளிநீக்கு