புத்திசாலி யார் ? 1,2 கதையின் முதல் பதிவுகள்
போன பதிவில் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு தங்கள் எண்ணங்களையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள் பல
அலெக்சின் மன சுணக்கம் அத்தையை தொடர்ந்து கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் விஷயங்களை பார்த்தோம் மேலும் என்ன நடக்கிறது அவனுக்கு என்று பார்ப்போம்
எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள் அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.
அப்போது அங்கே வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”
“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”
அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”
“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?”
போன பதிவில் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டு தங்கள் எண்ணங்களையும் அனுமானங்களையும் பகிர்ந்து கொண்ட தோழமைகளுக்கு நன்றிகள் பல
அலெக்சின் மன சுணக்கம் அத்தையை தொடர்ந்து கிரிக்கெட் கிரவுண்டில் நடக்கும் விஷயங்களை பார்த்தோம் மேலும் என்ன நடக்கிறது அவனுக்கு என்று பார்ப்போம்
புத்திசாலி யார் ? -3
எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள் அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.
அப்போது அங்கே வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”
“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”
அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”
“ஹாங்
ரெடி பைசா ரெடியா?”
“எஸ்,
இந்தாங்க சீக்கிரம்” சொல்லி சில நூறுகளை கொடுக்கிறான் அபி, வாங்கி கொண்டு அவனிடம் இரு
சிறிய பாக்கெட்டை கொடுக்கிறான் கரீம், கொடுத்தவுடன் அந்த இடத்தைவிட்டு நகர்கிறான்,
போகும் போதே சொல்கிறான் “நிம்பள் போன் பண்ண வேணாம் அடுத்து நானே மெசஜ் கொடுக்கான் ஓகே.”
அவர்கள்
போன பின் அங்கே ....”கெடச்சிடுச்சாடா?” கேட்டவாறு ஹரிஷ் வருகிறான்,
அபி-“நீயெண்டா இப்போவந்த?
மாஸ்டர் பார்த்திட போறான்.”
அப்போ
அவர்கள் பேசும் சின்ன மதிலுக்கு பின்புறம் அலெக்ஸ் உட்கார்ந்திருப்பதை பார்க்கிறான்
அபி, ஒரு நிமிஷம் திக்கென்று ஆகிறது அவனுக்கு, பிறகு இவன்தான் அழுமூஞ்சி எதுவும் புரியாது
என்று
“டேய் என்னடா அழுமூஞ்சி, இங்கே உட்கார்ந்து
அழுதுனு இருக்கியா?”
“ஹா
ஹா டேய் அந்த கிழவன் ரொம்ப தாளிச்சிடான்டா இன்னிக்கு இவன” என்று ஹரிஷ் சிரிக்கிறான்
அதை பார்த்து அலெக்ஸ் திரும்பவும் காலில் முகத்தை புதைத்து கொள்கிறான். “டேய் சீ! எழும்பிவா
அவன் திட்னதுக்கெல்லாம் சோகமாய் ஆயிடுவியா? லூசா விடு” என்கிறான் அபி அதற்குள்
ஹரிஷ் “அபி எனக்கு
எப்படா தருவ? எவ்வளவுடா? சீக்கிரம் சேம்பிள் கொஞ்சம் காட்டேன் மேட்ச் சூப்பரா விளையாடலாம்”
“இர்ரா..அவசரப்படாதே”
பாக்கெட்டை பிரித்து ஒரு துளி எடுத்து ஹரிஷ் கையில் வைக்கிறான்.
ஹரிஷ் அதை மோர்ந்து
பார்த்து நக்கி எடுக்கிறான்
அலெக்ஸ் நிமிர்ந்து பார்கிறான்.
அபி-“அழுமூஞ்சி உனக்கு வேணுமா? எல்லா சோகமும் பறந்து போயிடும் மறந்து போயிடும்
ஒருதுளி எடுத்தா”
ஆர்வமாகிறான் அலெக்ஸ் “என்னது அது?”
“அதுவா எனர்ஜி பவுடர்”
“இத
போட்ட மேட்ச் சூப்பரா ஆடலாம்னு சொல்லறானே… நிஜமாவா?”
“ஆமாண்டா
வெண்ண.. பிச்சு உதிரலாம் பிச்சு எகிற இதை போட்டவுடன்”
“ஏ
பிளீஸ் டா எனக்கும் தாடா”
“உனக்கா?
வேணாம்பா நீ போய் எல்லார்கிட்டயும் உளறி வச்சனா அவ்வளவுதான்”
“இல்லடா
இல்லடா பிளீஸ் சொல்லமாட்டேண்டா”
“தரேன்..
ஆனா யார்கிட்டயும் சொல்லக்கூடாது. இதனாலதான் நாம நல்ல விளையாடுறோம் தெரிந்தா மாஸ்டர்
வூட்டுக்கு சொல்லிடுவான்.. தள்ளி வச்சிடுவான்.. அப்புறம் சும்மா தரமுடியாது, விலைக்குத்தான்
தருவேன். அவன்கயில குடுத்தேன் பார் ஒரு துளி அது நுறு ரூபா.. இருக்கா?”
“நுறு
ரூபாவா?..இன்னிக்கு மேட்சுல தோத்துட்டா பார்ட்டி கொடுக்க காசுபோட தான் எடுத்துட்டுவந்தேன்”
“போடா
லூசு இப்ப நீ எங்க டீம் கீழ் வந்துடுவ சோ ஜெயிக்க போறது நாமதான்”
“ஹாங்?!”
வாயை பிளக்கிறான் அலெக்ஸ் “நிஜமாவா? உங்க டீம்லயா? அப்ப சரி இந்தா” என்று நுறு ரூபாய் எடுத்து நீட்டுகிறான்.
யோசனையோடு பார்கிறான் அபி “டேய் உளறி வச்ச அவ்வளவுதான் அடுத்தவாரம் விளையாட கால் இருக்காது”
“இல்லடா
சொல்லமாட்டேன் நீங்களும் நான் வாங்குனதை சொல்லாதிங்கடா”
“சரி
கையை காட்டு” என்று அவனுக்கும் தடவுகிறான் ஒரு துளி பிறகு கிரவுண்டுக்குள் போகிறார்கள்
கிளாஸ் முடிகிறது நவீன் ஓடி வருகிறான் “எங்கண்னா போனீங்க நேத்திக்கும் அந்த பொண்ணால
சோகமாயிட்டீங்க இன்னிக்கு மாஸ்டர் திட்டிட்டார்”
“ஹான்?!”
என்று இப்போது ஹரிஷும் அபியும் அலெக்ஸை பார்கிறார்கள் அலெக்ஸ் நெளிகிறான் தலைகுனிந்து கொள்கிறான் “என்னடா
விஷயம்” காதை கடிக்கிறார்கள். “சும்மா”..
ஹா ஹா ஹா சிரிக்கிறார்கள்.
நவீன் ஒன்றும்
புரியாமல் முழிக்கிறான். அதற்க்குள் அலெக்ஸ்க்கு மெல்ல மெல்ல போதை ஏறுகிறது …..அவன்
தனனை மிக லேசாக உணர்கிறான் வாய்விட்டு சத்தமாய் சிரிக்கிறான்.
நவினை கட்டி பிடித்து
கொள்கிறான் “தேங்க்ஸ்ட்டா தேங்க்ஸ்ட்டா” என்று அபிக்கு கை கொடுக்கிறான்.
நவீன் முக்கியமான
குரூப்பு கூட அலெக்ஸ் சேர்ந்துவிட்டதில் மிகவும் உற்சகமாகிறான் அவன் கண்னுக்கு அலெக்ஸ்
ஹீரோபோல் தோன்றுகிறான்.
நாட்கள்
நகர்கிறது இப்பொழுதெல்லாம் அலெக்ஸ் நடவெடிக்கையில் நிறைய மாற்றம்.. படிப்பில் கவனமற்று
போய்விட்டான்.. வீட்டில் கேள்விகேட்டால் சத்தம் போட்டு கத்துகிறான்.. தான் செத்து போகிறேன்
என்று பயம்புறுத்துகிறான் ரோஸியை . இதன் காரணமாய் ரோஸி அவனிடம் பேச பயப்படுகிறார்…மார்க்
கம்மி என்று கேட்க போயி ஏதாவது செய்து விட போகிறான் என்று பிள்ளை பாசத்தில் மெல்ல மெதுவாய்
அட்வைஸ் மட்டும் கூறுகிறார். ‘ஏன் இப்படி திடீரென்று’ என்று யோசிக்க தவறிவிடுகிறார்.
இப்பொழுதெல்லாம் புதிய பிரண்ட்ஸ்களுடன்தான் சுற்றல். எப்போதும் அவர்கள் என்னென்ன சொல்கிறார்களோ
அதையெல்லாம் அடிமை போல் செய்கிறான். பதிலுக்கு அவனுடனே சுற்றி கொண்டிருக்கும் நவீனை
இவனது அடிமையாய் நடத்தி கொள்கிறான்.
“நவீன்
ஒரு ஹெல்ப்புடா.. என் பாக்கெட் மணி தீர்ந்து
போயிடுச்சிடா ..இந்த தடவை அபிக்கு கப்பம் வைக்கலானா நம்மள மேட்ச்சில் அவங்க
சைடில் இருந்து தூக்கிடுவான் டா. ஒரு தீரி ஹன்ரட் எடுத்துட்டுவாடா நீ சின்னப்பையன்
உன்ன சேர்த்துக்கமாட்டேன் சொன்னாங்க உனக்காக நான் எவ்வளவு பேசி இருக்கேன்.”
கிரிக்கெட்
ஆசையில் நவீன் வீட்டில் ரேணுவின் ஹன்பேக்கில் இருந்து தெரியாமல் பணத்தை எடுத்து கொண்டு
வருகிறான், அலெக்சிடம் தருகிறான்.
“எதுடா? என்ன சொல்லி வாங்கன?” நவீன் மெதுவாய் தெரியாமல்
எடுத்து வந்தாய் சொல்கிறான்...
“டேய் மூஞ்சியை இப்படி வச்சிக்காத மாட்டிக்குவ”
“பயமா
இருக்குண்ணா”
“விடுடா சின்ன அமோன்ட் தானே தெரியாது” மெல்ல மெல்ல இதுபோல்
எப்போதும் தொடர்கிறது இருவர் வீட்டிலும் 1,2 நூறுகள் தொலைவது.
இப்படியாக
ஒரு நாள் நவீன் பள்ளியில் இருந்து அழைப்பு வருகிறது, “அரையாண்டு முடிந்து என்னடா மார்க்
சரியா வாங்கலையா இரு அப்பா போன் வரட்டும் உனக்கு இருக்கு” என்று நவீனிடம் கத்துகிறாள்
ரேணு
சுந்தர்
பிராஜெக்டுக்காக சிங்கப்பூர் சென்று இருக்கிறான் 2 மாதமாய். பேரண்ட் மீட்டில் நவீனின்
கிளாஸ் டீச்சர் அவனுடைய போரொக்கரசை பற்றி குறை
சொல்கிறார்.
படிப்பில் கவனமில்லை என்று வீட்டுக்கு
வந்தவுடன் ரேணு நவீனை திட்டுகிறாள் “இனிமே கிரிக்கெட் அது இதுனு ஏதாவது பார்த்த பாரு..
எப்பப்பாரு கிரிக்கெட்டு… படிப்பு வீணா போச்சி..
கோச்சிங்கை விட்டு நிறுத்திவிடுகிறேன்.”
நவீன் அழுது கொண்டே சாப்பிடமாட்டேன் என்று அடம் பிடிக்கிறான் அலெக்சிடம் போயி சொல்கிறான் அழுது கொண்டே
“டேய் அழாதடா.. நான் வந்து ஆண்டிகிட்ட பேசறேன்… லூசு முதலிலேயே என்கிட்ட சொல்றது தானே.. சரியா படிக்கலைனா வேற ஏற்பாடு பண்ணி இருக்கலாமில்ல ..சரியா படிக்கலைனா இரண்டு பிட்டு எடுத்துனு போயிடனும், அப்புறம் பாஸ்தான்..
அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி
எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “
“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?”
தொடரும்
...
அலெக்சின் நடத்தையின் மாற்றம் நவீனை எப்படிஎல்லாம் ஆட்டி படைக்கிறது என்பதை பார்த்து கொண்டிருக்கிறோம்... இங்கு யார்? யார்? என்ன செய்திருக்கலாம், யார் மேல் தவறு என்று உங்கள் எண்ணங்களில் தோன்றும் நியாயங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்.
பிள்ளை வளர்ப்பை பற்றி இவர் எவ்வளவு தெளிவாக சொல்கிறார் என்றும் பாருங்கள்
.
பிள்ளைகளின் நட்புகளையும் கவனிக்க வேண்டியது பெற்றோர்களின் கடமையாகிறது
பதிலளிநீக்குதொடர்கிறேன்...
காணொளி பிறகு காண்பேன்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
நீக்குபிள்ளைகளை அடிக்கடி அவர்களின் செயல்பாட்டை உற்று நோக்கினால் இப்படியான போதைப்பழக்கம் தேடிப்போகாதவாறு காத்துக்கொள்ளமுடியும்.
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழா
நீக்குசில பள்ளிகளின் முன் தின்பண்டக் கடை வைத்திருப்பார்கள் அவர்களுடைய இலக்கு சின்ன பிள்ளைகள் தின்பண்டங்களில் போதைப் பொருளைக் கலந்து விற்பார்கள் அதை வாங்கித்தின்னும் குழந்தைகள் அடிக்ட் ஆவார்கள். மிகவும் கவனம் தேவை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி G.M.B சார்
நீக்குயார் தவறு ?? இதில் நிறைய குற்றவாளிகள் இருக்காங்க முதல் குற்றவாளிகள் பெற்றோர் அப்பறம் ஆசிரியர் ,சமூகம் எல்லாம் தான் :(
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஞ்சு
நீக்குகூடா நட்பு....ம்ம்ம் என்ன சொல்ல?
பதிலளிநீக்குபெற்றோர்கள், அடுத்து ஆசிரியர்கள் அடுத்து இந்தச் சமூகம் இதில் படித்த பெற்றோர்களும் அடக்கம். வீட்டிலும் நீதிக்கதைகள் சொல்லப்படுவதில்லை....பள்ளியிலும் மாரல்ஸ்யின்ஸ் க்ளாஸ்கள் இல்லை...என் தாத்தா பாட்டி சொன்ன நீதிக்கதைகள், .என் பள்ளியை நினைக்காமல் இருக்க முடியலை...என் டீச்சர் மேரில் லீலா, ஸ்டெல்லா மேரி, கல்லூரி பேராசிரியை உஷா தாமஸ் அவர்கள் அளித்த நல்ல விஷயங்கள் இதோ இப்போதும் மனதில்... நிறைய பேசலாம் இந்த சப்ஜெக்ட்டில்..
கீதா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சிஸ்
நீக்குஇப்போதெல்லாம் பள்ளியிலும் ஒன் டு ஒன் அதாவது ஆசிரியர் மாணவர் இன்டிமஸி இல்லை அது போல் பெற்றோர் பிள்ளைகள் இன்டிமஸி...
பதிலளிநீக்குகீதா
உண்மை தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சிஸ்
நீக்குசம்பவங்கள் கோர்வையாக இருக்கின்றன. டீனேஜ் பிள்ளைகளை கொஞ்சம் கவனிக்காமல் விட்டால்...
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா
நீக்குபிள்ளைகளை அவர்களின் செயல்பாடுகளை, திடீரெனத் தோன்றும் வித்தியாசமான செய்கைகளை பெற்றோர் கவனிக்க வேண்டும்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
நீக்குதொடர்கிறேன்...
பதிலளிநீக்குஎப்படி சீரழிகிறார்கள்.... படிக்கும்போதே மனதில் வலி.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ
நீக்குஇங்கு வர லேட்டாகிட்டுது மன்னிச்சுக்கோங்ங்ங்ங்ங்:))..
பதிலளிநீக்கும்ம்ம்ம்ம் இப்படிப் பல கதைகள் உலா வருகிறதுதான்.
////அதுவா எனர்ஜி பவுடர்”///
இப்படியான விசயத்தைக் குழந்தையிலிருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டியது பேற்றோரதும், ஆசிரியர்களதும் கடமை.
இங்கு ஸ்கூலியே சின்ன வகுப்பிலேயே இதுபற்றி நிறையச் சொல்லிக் கொடுக்கிறோம்... கொம்பியூட்டர் கிரபிக்ஸ் மூலம், ஒவ்வொரு குழந்தையையும் படமெடுத்து.. அசிங்கமான முகமாக மாற்றி... அதுக்கு விளக்கம் கொடுப்போம்ம்.. நீங்கள்.. குடி போதைக்கு அடிமையானால் உங்கள் முகம் இப்படி ஆகிடும் எண்டெல்லாம்...
ஆனா என்ன இருந்தாலும் பெற்றோரோ ஆசிரியரோ 24 மணி நேரமும் கூட இருக்கவும் முடியாது, அதே நேரம் ஆண்பிள்ளைகளை எப்பவும் வீட்டில் அடைச்சு வைக்கவும் முடியாது, எனவே கெட்டுக் குட்டிச் சுவராகோணும் எனும் விதி இருந்தால்ல்ல்... நம் ஊரில் ஒரு பழமொழி இருக்கு..
“கெடுகுடி சொற்கேளாது”...:))
விளக்கமான கருத்துக்கள் சொல்லியிருக்கீங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றிஅதிரா
நீக்கு
பதிலளிநீக்குநான் பெற்றோரைத்தான் குறை சொல்லுவேன் இந்த விஷயத்தில்
வாங்க truth வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்கு