புத்திசாலி யார் ? - 1,2,3
போன பதிவில் கதையின் போக்கிற்கு தன் எண்ணங்களை கருத்துக்களாக பகிர்ந்து கொண்ட தோழமைகள் அனைவருக்கும் நன்றிகள் பல
நம்முடைய ஆழ்ந்த கவனிப்பை நாம் தளர்த்தும் போது பிள்ளைகளின் போக்கு எவ்வண்ணம் போகிறது எங்கே நாம் தவற விடுகிறோம் என்பதை பார்த்து வருகிறீர்கள் இனியும் இங்கு என்ன பிள்ளைகளின் சமூகம் அவர்களை எப்படி குழப்பியது அவர்கள் எப்படி தடம்மாறி போனார்கள் என்று நிறைவு பகுதியாக பார்ப்போம்
புத்திசாலி யார் ?
அடுத்தடவை நீ சுமாரா படிச்சிக்கோ இரண்டு பிட்டு முக்கியமான கோஸ்டினுக்கு ரெடி பண்ணி எடுத்துனு போய்ட்டு செம மார்க்க எடுத்துடு. “
“எப்படிண்ணா..மாட்டிக்கிட்டா?”
“நான் சொல்லித்தரேன் எப்படினு” சொல்லி கட்டிபிடிச்சிகிறான் டைட்டா. நவீனுக்கு சந்தோஷமாய் இருக்கு.
அடுத்த வாரம் கோச்சிங்க முடிந்து மேட்ச் நடக்குது.. முடிந்தவுடன் அபிஷேக் “அலெக்ஸ் நாங்க ஒரு பார்ட்டிக்கு போறோம் வரியா?”
“எங்கேடா அது?”
“ஒரு பிரண்டு வீட்டில்”
“ம்ம் வரேண்டா எவ்வ்ளவு நேரம் ஆகும்?”
“நைட் எட்டு ஆகலாம் வீட்டில் குரூப் ஸ்டெடினு சொல்லிட்டுவா ஹீ..ஹீ..” அப்பத்தான் அனுப்புவாங்க முடிஞ்சா பணம் எடுத்துகினுவா ஒரு 1000/-துக்கு மேல, “பேய் முழி முழிக்காதடா போற இடம் அந்த மாதிரி சூப்பரா இருக்கும் மச்சி முக்கியமா இந்த அமுல் பேபியை கூட்டிட்டு வராதடா உனக்கு புண்ணியமா போகும்” அபிஷேக்கும் ஹரிஷும் இன்னும் அவன் கூட்டாளிகள் இரண்டு பேர்
“எனர்ஜி பவுடருக்கும் பைசா கொண்டுவா”
“நீங்க?”
“நீ பார்க் ஸ்டேஷன்கிட்ட வந்துடு அங்கெ ஜாயின் பண்ணிக்கலாம்”
வீட்டில் ரோஸி “சர்ச்சுக்கு வராம கோச்சிங்கு போவேன்னு அடாவடி.. இப்ப குரூப் ஸ்டெடியா?”
பையில் புக்ஸ்கள் வாரி வைத்து கொள்கிறான் “சும்மா கத்தாதீங்க வேணும்னா நீங்களும் வாங்க பார்க்க”
“டேய் ஈவ்னிங் கெஸ்டு-வேற வராங்கடா.. டாடி எங்கேன்னு கேட்பாரு..கேக் வேற நான் செய்யணும்..படுத்தாதடா”
“படிக்க போயிருக்கேன்னு சொல்லு.. சரி ஒரு 100/- தா”
“எதுக்குடா படிக்கிறதுக்கு?”
“எல்லோரும் சேர்ந்து ஸ்னேக்ஸ் வாங்கிறோம் பிளான்”
“ஒழுங்கா படி நல்ல மார்க் வரணும் அப்பதான் சயின்ஸ் குரூப் கிடைக்கும்” என்று கொடுத்து அனுப்புகிறார். அலெக்ஸ் போன பிறகு *அட யார் வீட்டில் என்று கேட்க மறந்துட்டேனே*
பார்ட்டிக்கு போய்ட்டு வந்த பிறகு அலெக்ஸ் இன்னும் மோசமாகிறான். அது போன்ற பார்ட்டி அது…. திரும்பவும் நவீனை கூப்பிட்டு கொண்டு வேறொரு பெண்ணை பின்னால் சுற்றுகிறான். அவன் வயது ஹார்மோன்ஸ் அவனை மிக மோசமாய் ஆட்டி படைக்கிறது. அபி அவனை குழப்புகிறான் பலதும் சொல்லி அபி பெரிய வசதி படைத்தவன் வெளிநாடு பணம் விளையாடும் வீடு அவனுக்கு ஸ்லாம் போட இந்த மாதிரி அடிமைகள் தேவை என்று பார்த்து வளர்ந்தவன்
“டேய் உன் கூடவே சூப்பர் கழுக்குமொழுக்குன்னு ஆளை வச்சிகிட்டு ஏண்டா வெளியே அலையற”
புரியாமல் முழிக்கிறான் அலெக்ஸ் “உன் கூடவே உன் அடிமையா ஒன்னு சுத்துதே அதுக்கும் கொஞ்சம் லைட்ட வாயில தடவி விடு அப்புறம் நீ சொல்வதையெல்லாம் கேட்பான்”.
அபியால் நவீனின் சிறு பிராயம் தடம்மாறி போய் விடுகிறது. பணிவு என்பது மருந்துக்குமில்லாமல்பள்ளியில் மார்கெல்லாம் அலெக்ஸ் ஐடியாவில் நடந்தேறுகிறது அலெக்ஸ் எப்படி வழி நடத்துகிறானோ அப்படி கேர்புல்லா நடந்து கொள்கிறான்.
சுந்தர் இல்லாதது அவனுக்கு வசதியாக போய்விடுகிறது ரேணுவை ஈசியாக ஏமாற்ற முடிகிறது. ரேணுவின் சின்ன சின்ன நகைகூடகாணாமல் போகிறது. அவள் வேலைக்காரியை சந்தேகப்பட்டு நிறுத்திவிடுகிறாள், குழம்புகிறாள். நவீனின் மாற்றம் வேறு அவளை குழப்புகிறது.
சுந்தரிடம் போனில் கவலை படுகிறாள் தன்னிடம் அவன் பேசுவது கூட இல்லையென்று “விடு டீன் ஆரம்பிக்குதில்ல அதனாலயா இருக்கும் நான் வந்து பார்த்துகிறேன் அடுத்த வராம் அநேகமா ரிலீவ் ஆயிடுவேன் நினைக்கிறேன்”
இப்பொது புதுவருட ஆரம்பத்திற்க்கு பின் ரோஸிக்கு வேலை பளு இன்னமும் அதிகமாகிறது பள்ளியில் இப்பொழுதெல்லாம் அலெக்சின் மார்க் அவளை நிம்மதி கொள்ள வைக்கிறது அதனால் அவனை எதுவுமே கேட்ப்பதில்லை அவன் ரூமை விட்டு வரவில்லையென்றால் படிக்கிறான் என்று நினைத்து கொள்கிறாள் அலெக்ஸ் போதை, பார்ட்டி, கிரிக்கெட் கோச்சிங்.. என்று தன் நண்பர்களுடன் சுற்றி வருகிறான் படிப்பு என்ற போர்வையில்
இப்பொழுதெல்லாம் நவீன் யாருடனும் போவதில்லை. பேசுவதில்லை அலெக்ஸை தவிர தனக்குள் ஒடுங்கி போய்விட்டான். தனிமையில் அழுகிறான் .அதை பார்த்து அலெக்ஸ் வருந்துகிறான்.. அபியிடம் ஷேர் செய்கிறான்.நவீனின் வருத்தத்தை
அபி “அப்படியா விடு அவனை வேற மாதிரி சுறு சுறுப்பாகிடுவோம் என்று சொல்லி இந்த கேமை விளையாட சொல்லு என்ன பண்ணறான் பார்க்கலாம் மீதியெல்லாம் மறந்துடுவான்”.
“என்ன கேம்டா?”
பாரு அவன் கூடவே இருந்து என்று சொல்லி நவீனுக்கு கேமை விளையாட சொல்லி கொடுத்து போனையும் கொடுக்கிறான்.
அது ஒரு அதிநவீன பயங்கரமான சேலஞ்சிங் கேம் 50 கட்டளைகளை உள்ளடக்கியது ஒரு ஒரு கட்டளையாக வீழ்த்தி வரவேண்டும். அந்த கட்டளைகள் எப்படி பட்டது என்றால் ஆபத்தானவை நம்மை நாமே பிளேடால் கிழிப்பது, ஊசியால் குத்திக்கொள்வது, மற்றவரை துன்புறுத்துவது இப்படி பல பயங்கரங்களை அடுக்கடுக்காய் சொல்லி கொண்டே வரும் கட்டளைகள் இந்த கேமின் பொறுப்பாளர்கள் மூலம் வழங்கப்படும். இப்படி தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஏதாவது திகலை தாங்கியது .
நவீன் இருக்கும் மனநிலைக்கு அந்த பயங்கரங்கள் அவனுக்கு தனக்கு கொடுத்து கொள்ளும் தண்டனையாவே நினைத்து கொள்கிறான். அலெக்ஸை விட்டு பிரிகிறான். அலெக்ஸ் கவனியாமல் அவன் போதை உலகத்தில் இந்த டாஸ்குகளில் வலிகள் கொடுப்பதை மறக்க அலெக்ஸின் மருந்தின் உதவியை நாடுகிறான்.
நடுநடுவே அபி நவீனை பார்க்க வருகிறான் கேமுக்கு உண்டான போன் வசதி செய்து கொடுத்து கேமின் நிலைகளை பார்த்து ரசிக்கிறான்.
ரேணு நவீனின் முகத்தினை பார்த்து “என்னடா ஒரு மாதிரி இருக்க என்ன உடம்பு சரியில்லையா இங்கேவா கையில் என்ன கட்டு”
“ஒண்ணுமில்லமம்மி கோச்ங்கில் கீழே விழுந்துட்டேன் மாஸ்டரே மருந்து போட்டுட்டார்”
“என்ன வா டாக்டர்கிட்ட போலாம்……
மம்மி மி மி மி நான் தான் ஒண்ணுமில்ல சொல்றேனில்ல” கத்திவிட்டு உள்ளே போகிறான்
அவன் இரவில்வெளியே செய்ய வரும் டாஸ்க்கு ரேணுவிற்கு தூக்கமாத்திரை கொடுத்து தூங்க வைத்துவிட்டு போகிறான். அலெக்சின் உதவியை பெற்று அலெக்ஸும் கேம் தானே என்று முடிந்தவுடன் எல்லாம் சரியாகிடும் என்று நினைத்து கொள்கிறான். இதன் நடுவே ஒரு தடவை பிட்டு அடிக்கும் போது மாட்டி கொள்கிறான் ரோஸிக்கு அவனது பள்ளியில் இருந்து அழைத்து சொல்லப்படுகிறது சாமாளித்து விடுகிறான் ‘இல்லமா என் பிரண்டு எடுத்துட்டு வர சொன்னான் அவனுக்காக தான் பாவம்மா அவங்க அப்பா செம அடி அடிபார்மா’
ரேணு சுந்தருக்கு பேசுகிறாள் “என்ன… சுந்தர் இந்த வாரம் வந்துடுவேன் சொன்னிங்க என்னாச்சு?”
“என்னபண்ணறது ரேணு கூட வேலை செய்யறவன் மிஸ்டேக் பண்ணாலும் பிராஜெக்ட் டிலே ஆகுதே”
“போங்க சுந்தர் உங்களை நம்பி நான் பேசாம எங்க அப்பாம்மாவையாவது வரவழைச்சு இருப்பேன் நீங்கதான் உங்க பேர்ன்ஸ் ஏதாவது நினைச்சுக்குவாங்கனு வேண்டாம் சொல்லிட்டீங்க இப்ப உங்க பையனை சமாளிக்கவே முடியலை ஒரே அடம் எப்போதும் அலெக்ஸ் கூட இல்லனா ரூம்குள்ள டல் ஆயிட்டான் சம்திங் ராங் மாதிரி இருக்கு நான் அப்பம்மாவை வர சொல்ல போறேன்”
“சரி சரி புலம்பாதே அவனை கூப்பிட்டு .....
"அவன் எங்கே இங்கே அவங்க வீட்டில் இருக்கான் சரி சீக்கிரம் வர ட்ரை பண்றேன் அவனை ரொம்ப திட்டுரியா திட்டதே அவனை பிரீயாவிடு”
இரண்டு நாள் கழித்து அப்பார்ட்மெண்டிலிருந்து அழைப்பு “மேம் நீங்க கொஞ்சம் சீக்கிரம் வாங்க கிளம்பி” “என்ன என்னாச்சு?”
“நீங்க வாங்க மேம்........... மேல. யாரவது ஏறுங்க குவிக் பையர் இஞ்சனுக்கு போனை போடுங்க” போன் வைக்கப்படுகிறது. .இதெல்லாம் போன் வழியாக கேட்கிறாள் ரேணு ஒன்று புரியவில்லை வீட்டுக்கு விரைகிறாள் எதோ நெருப்பு பிடித்துவிட்டது என்று…..
இவள் உள்ளே நுழைய மாடியிலிருந்து நவீன் கீழே குதிக்கிறான் “சாரிமா……”
என்று கத்தி கொண்டே
எல்லா வீட்டு ஆட்களும் வீல் என்று அலறுகிறார்கள்.
ரேணு அதை பார்த்து ஓடி வருகிறாள் என்ன என்று அங்கெ தன் மகனை ரத்தவெள்ளத்தில் பார்த்து மயங்கி விழுகிறாள்.
அதற்குள் பக்கத்தில் இருந்த ஆஸ்பிடலில் இருந்து ஆம்புலன்ஸ் வந்து கீழே விழுந்த நவீனை எடுத்து கொண்டு செல்கிறது.
எல்லோரும் ரேணுவை தூக்கி மயக்கம் தெளியவைத்து கூப்பிட்டு கொண்டு ஓடுகிறார்கள் ஆஸ்பிடலுக்கு… ரேணு பிரமை பிடித்தவளாய் நிற்கிறாள்.
அவள் அப்பவும்அம்மாவும் அங்கே அப்போது வருகிறார்கள். தலை தலையா அடித்து கொண்டு கதறி கொண்டும் வந்து ரேணுவை பளார் பளாரென்று அறைகிறார் அவள் அம்மா “என்னடி என்னடி ஆச்சு நேற்று தானே போன் பண்ண அவனுக்காக வாம்மா என்று வரத்துக்குள் பிள்ளையை விட்டுட்டியேடி பாவி பாவி”… என்று அடிக்கிறாள்.
ரேணுவின் அப்பா “ஏம்மா ஏன் அவன் இன்னைக்கு ஸ்கூலுக்கு போகாம வீட்டில் இருந்தான் ஏன் நீ அவனை விட்டுட்டு ஆபிஸ் போன?”
“தெரியலையேப்பா….. தெரியலையே ஒன்னும் புரியலையே ஐயோ அவர் வந்து கேட்ட நான் என்ன சொல்லுவேன் நான் அனுப்பினேன் ப்பா எப்படி வீட்டுக்கு வந்தான்”….
அப்பார்ட்மெண்ட் வாட்ச்மேனை நோக்கி ஓடுகிறாள் “அண்ணே நீங்க காலைல வேன் வந்தப்ப இவன் பார்கலையா?”
“அவன்தான் வந்து இன்னிக்கு அம்மா கூட போவேன் சொல்லிட்டு போனான் சரிதான் நானும் நினைச்சுக்கிட்டேன் நீயும் நான் பின்பக்கம் மோட்டார் போட போயிருக்கும் போது போய்ட்டு இருக்க போல இவன் எங்கே இருந்தான் எப்ப மொட்டைமாடிக்கு போனான் தெரியலையேமா மேலே ஏறி நிக்கும் போதுதான் பார்த்தேன் என்னடானா நம்ம நவீனு மாதிரி இருக்கேனு பாவி பையன் இப்படி பண்னண்ணிட்டானே ராசாத்தி”…..
இதற்குள் போலீஸ் வருகிறது விசாரணை நடக்கிறது.
ஆப்ரேஷன் ரூமில் இருந்து வரும் டாக்டர்களை நோக்கி பாய்கிறாள் ரேணு “மேம் பிளேட் ஆரேஞ்சு பண்ணுங்க சீக்கிரம்” என்று ஓடுகிறார்கள். நிற்காமல் …..அப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள் உதவுகிறார்கள். ரேணுவை கேள்வி மேல் கேள்வி கெடுக்கிறார்கள் என்ன? ஏன்?.... என்று எல்லாவற்றிற்கும் ரேணு ….புரியலையே என்று தலையில் அடித்து கொள்கிறாள்.
மிக கடுமையான நேரம் நகர்கிறது. பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு ஆப்பிரேஷ்ன் தியேட்டரில் இருந்து டாக்டர் வெளியே வந்து உயிர் இருக்கிறது ஆனால் கோமாவில் என்று சொல்லி செல்கின்றார்.
இதற்குள் நவீனின் ஸ்கூல் பேக் மாடியில் இருந்து கண்டுபிடிக்கப்படுகிறது அதில் ஒரு உயர்ரக செல்போன் மற்றும் ஸ்கூல்நோட்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கடிதம் அதில் விரிவாய் இல்லாமல் தான் இந்த கேமுக்காக இறப்பதாக எழுதி இருக்கிறான்…. அப்போதும் அலெக்ஸை காப்பாற்றுகிறான் அந்த சிறுவன் .
இதற்கு நடுவே இங்கே போதைமருந்து வாங்கும் போது கிரைம் போலீசால் வளைத்து பிடிக்கப்படுகிறார்கள்.
ஹரிஷும்,அலெக்ஸும்….. அபி தப்பித்து கொள்கிறான் இவர்களை முன்னேவிட்டு. க்ரீமும் தப்பித்து ஓடுகிறான் ரோடில் .... பொதுமக்கள் .பிரஸ்காரங்க படம் பிடிக்கிறார்கள்.
தகவல் போகிறது. அலெக்ஸ் வீட்டிற்க்கு….. ஜார்ஜும் ரோஸியும் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடுகிறார்கள்.
போலீஸ் இரண்டும் இரண்டும் நாலு என்று கணக்கு போட்டு நடந்தவைகளை கண்டு பிடிக்கிறது.
பெற்றோர்களை இப்படி எதுவும் கவனிக்காமல் இருப்பீர்களா என்று கண்டிக்கிறது.
இரு பெற்றோரும் தலை குனிந்து மனம் உடைந்து என்று நிற்கிறார்கள். அப்பார்மெண்டில் எல்லோரும் பாவமாய் பார்கிறார்கள்.
ஒரு சிறுவன் கோமாவில் ,சமூக சீர்திருத்த பள்ளியில் ஒருவன் .காலம் என்ன வைத்திருக்கிறது இவர்களுக்கு வாழ்வுக்கு தெரியாது
இன்றைய பெற்றோராகிய நாம் மிகவும் கவனமுடன் பிள்ளைகளை கையாளனும் கவனித்து ஏனென்றால் இன்று இருக்கும் விஞ்ஞான வளர்ச்சியினால் அவர்கள் நம்மைவிட புத்திசாலிகளாக ஆகிவிடுகிறார்கள் அந்த புத்திசாலித்தனம் நன்மைக்கும் உதவும் தீமைக்கும் உதவும்.
டிஸ்கி --எல்லா பிள்ளைகளும் இப்படியா என்றால் ..........நூற்றில் ஒரு பிள்ளைக்கு இப்படி நடக்க வாய்ப்புகள் வந்துவிடும் .அந்த நூற்றில் ஒரு பிள்ளை நம் பிள்ளையாகாமல் காப்பது பெற்றோரின் கடமை
குறிப்பு - ரேணு செய்யாதவறியவை பிள்ளையின் அளவுக்கு மீறிய நடவடிக்கைளை கவனிக்காமல் விட்டது.... கவலை வந்தும் உடனடி தீர்வு காணாமல் அதை தள்ளி போட்டது. ரேணு சொன்னால் கவலைகளை ஆராயாமல் போனது சுந்தரின் தவறு பெற்றோர் இருவரும் வேளைக்கு போகும் பட்ச்த்தில் இருவரும் ஒருவர் மாறி ஒருவர் நேரம் அமைத்து கொண்டு பிள்ளைகளின் நடவடிக்கைளை கூர்ந்து கவனித்து வழி நடத்த வேண்டும்
பிள்ளைகளின் வளர்ப்பை பற்றி இவர் கூறுவதையும் கேளுங்கள் நேரம் ஒதுக்கி

இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குவாங்க ஜி உங்கள் கருத்து தவறுதலாய் விடுபட்டு விட்டது மன்னிக்கவும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஅவசியமான பதிவு...
பதிலளிநீக்குஎன் பிள்ளைகளுக்கு பிட் அடிக்க தெரியாது. எப்படிம்மான்னு கேக்கும். நல்லா படிக்குதுங்களோ இல்லியோ ஆனா, பிட் அடிக்காதுங்க
நல்லவிஷயம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி
நீக்குஇந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குவாங்க G.M.B சார் உங்கள் கருத்து தவறுதலாய் விடுபட்டு விட்டது மன்னிக்கவும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஅருமையாச் சொல்லியிருக்கிறீங்க படிக்க படிக்கப் பதறுது... இப்படியான விசயங்களை எல்லோரும் தெரிந்து வைத்திருப்பது நல்லதுதான்.
பதிலளிநீக்குவாங்க அதிரா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குகதைகள் படிப்பதில்லை!வாழ்த்துகள்
பதிலளிநீக்குவாங்க ஐயா பரவாயில்லை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்கும்ம்ம்ம் பெற்றோரின் சரியான கவனிப்பும் பிள்ளைகளைப் புரிந்து கொள்ளாததும் எப்படியான முடிவிற்குத் தள்ளுகிறது...
பதிலளிநீக்குஇப்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் பெற்றோர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்....வீடியோ பேச்சி அருமை...
நல்ல தொடர்..
வாங்க சகோ /கீதா சிஸ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குகாணொளி நன்றாக இருக்கிறது. அலெக்ஸ் போன்ற உதாரண சிறுவர்களை செய்திகளில் அடிக்கடி பார்க்கிறோம். பெற்றோர்கள்தான் கவனமாக இருக்க வேண்டி இருக்கிறது. இப்போதெல்லாம் பெரியவர்கள் யாரும் உடன் இருக்க முடியாத நிலை வேறு.
பதிலளிநீக்குவாங்க ராம் ஜி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்கு//ஒரு சிறுவன் கோமாவில் ,சமூக சீர்திருத்த பள்ளியில் ஒருவன் .காலம் என்ன வைத்திருக்கிறது இவர்களுக்கு வாழ்வுக்கு தெரியாது //படிச்சி முடிஞ்சதும் மனதுக்கு வேதனையாகிடுச்சுப்பா ..இவ்வளவுக்கும் காரணம் அந்த இரு பிள்ளைகளின் பெற்றோர் .
பதிலளிநீக்குதன் பிள்ளை என்ன செய்கிறது என்பதை கூடவா கவனியாது இருப்பார்கள் .
நூற்றில் ஒன்றில்லைப்பா பரவலா நடக்குது எல்லா இடத்திலும் ..சின்ன பொய் சொல்லும்போதே கவனித்து சரி செய்யணும் எது வாழ்க்கைக்கு அவசியம் என்பதை விளக்கணும் பிள்ளைகளுக்கு
வாங்கஅதிரா மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குHaaaa it's me Angel
நீக்குyes very sorry friend
நீக்குஇது இரண்டாம் முறை என்று நினைக்கிறேன்
பதிலளிநீக்குசார் அது கைபேசியில் எனக்கு செயல்பட தெரியவில்லை நான் டிராவல் செய்யும் பொழுது திறந்து கருத்தை பப்லிஷ் செய்ய முனைந்தேன் சிக்கனல் இல்லாமல் போகும்மிடத்திலோ இல்லை கை தவறுதலாக நடைபெற்று இருக்க வேண்டும் கருக்கள் மிஸ் ஆனதற்கு மிகவும் வருந்துகிறேன்
நீக்குபயனுள்ள அருமையான தகவல்
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்
நீக்கு