தேவதை என்னும் அரக்கன்-நிஜம்
நடப்பது என்ன ?
தேவதை என்னும் அரக்கன் செய்யும் விபரீதத்தை பாருங்க இந்த செல்போன் என்னும் அரக்கன் செய்யும் அட்டுழியங்கள் பல என்று முன்பே பதிவு போட்டு இருக்கிறேன் கொஞ்சம் கவன குறைவாய் இருந்தாலும் சரி நம் இழப்பை ஈடு செய்ய முடியாமல் போய்விடும்.
இதை பற்றி ஒரு நிஜம் இங்கே...................
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கருப்பையா நகரைச் சேர்ந்தவர் ஜெயம்.இவர் ஒரு ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியை, இவருடைய மகன் செந்தில், டிகிரி முடித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக. செந்திலின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்துள்ளது. நாள் செல்ல செல்ல, பெற்ற தாய் என்றும் பாராமல் ஜெயத்தை அடித்து துன்புறத்தத் துவங்கியுள்ளார்.காரணம் புரியாமல் அந்த தாய் தவித்துள்ளார்
செந்திலின் கொடுமை உச்சக்கட்டம் அடைய, வேறு வழி அற்று ஜெயம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் .
போலீசும் நடவெடிக்கையில் இறங்கியது,
செந்திலிடம் போலீசார் விசாரிக்கையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
அதில், கடந்த சில தினங்களாக புளூவேல் விளையாட்டை விளையாடியதாகவும், விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வந்ததாகவும் செந்தில் கூறினார்.
தொடர்ந்து, புளூவேல் விளையாட்டில், தாயை அடிக்கச் சொல்லி கட்டளை வந்ததாகவும், அதன்படி தாயை அடிதத்தாகவும் கூறியுள்ளார்.
இவனை போல் மாக்கான்கள் இருக்கும் வரை சைக்கோ தனமாய் விளையாட்டுகளை உற்பத்தி பண்ணும் சைக்கோக்களுக்கு வசதிதான்......
விளையாட்டில் கொடுக்கப்பட்ட கட்டளைக்காக, பெற்ற தாயையே மகன் அடித்து கொடுமைப்படுத்தியுள்ள சம்பவம் அனைவரையும் அதிரச்சிக்குள்ளாக்கியுள்ளது.இப்ப அதிர்ச்சி ஆகி என்ன செய்வது முதலிலேயே கவனித்து இருக்கனும் நம்ம வீட்டுது சைக்கோ ஆகிறதா என்று .......
தனிமை படுத்தும் பாடு
பதிலளிநீக்குபிரமிப்பான, அதிர்ச்சியான தகவல்.
பதிலளிநீக்குஎதிர்காலத்தில் நமக்கு குழந்தைகள் வேண்டாம் என்று எண்ணும் சூழல் நிச்சயம் அடுத்த தலைமுறையினருக்கு வரும்.
இது சாபக்கேடு இல்லை எனது கணிப்பு.
ஆமாம் ஜி பயம் தொற்றி கொள்ள வாய்ப்பு இருக்கிறது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஉங்கள் தளத்தில் முதல் வோட்டே என்னோடதுதேன்ன்:)...
பதிலளிநீக்குவிளையாட்டுக்கள் விபரீதமாகும் கதைகள் பல கேள்விப்பட்டே வருகிறோம்ம்.. ஆனா இது வளர்ந்த படிச்ச பிள்ளை அதனால, அவருக்கு சின்ன வயதிலிருந்தே ஏதும் மனநோய் இருந்திருக்கலாமோ என எண்ணத் தோணுது.. இல்லை எனில் இப்படி மாறுமளாவுக்கு புத்தி கெட்டுப்போயிடாதே.
அதேதான் அதிரா ஏன் இந்த அளவுக்கு தன்னை இழக்கணும் புரியலை மன கோளாறுதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஎன்னப்பா இது கொடுமையா இருக்கே :(
பதிலளிநீக்குஅம்மா என்ற உணர்வு கூட போக்கடிச்சுடுமா இந்த கேம்ஸ் ..
மன கோளாறுதான் அஞ்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குவிளையாட்டு படுத்தும் பாடு படிக்க வருத்தமாய் இருக்கிறது.
பதிலளிநீக்குவருத்தமாய்த்தான் இருக்கிறது சிஸ் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்கு
பதிலளிநீக்குஎன்னுடைய மனைவி பூரிக்கட்டையால் அடிப்பதும் புளுவேலுவின் வேலையாக இருக்குமோ?யார்கிட்ட ரிப்ப்போர்ட் பண்ணுவது
வாங்க truth என்ன பெரிய லீவ் போட்டாச்சு போல ஹா ஹா அடி பலமோ இப்ப நலமா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குபெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் (அலைபேசியில்) என்ன செய்கிறார்கள் என்பதை கண்காணிப்பில் வைத்திருக்க வேண்டும். யாருடைய வக்கிர எண்ணங்களின் வெளிப்பாடா இந்த ப்ளூவேல் ஆட்டம்....
பதிலளிநீக்குசரியா சொன்னீங்க வக்கிரமாய்தான் இருக்கு கண்டுபிடிச்சி மாறுகால் மாறுகை வாங்கணும் இப்படி ஒரு விளையாட்டை கொண்டுவருபவர்களை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குஇந்த ப்ளூ வேல் ஆட்டத்தை நிறுத்த வேண்டாம இந்த ஆப்பை தரவிறக்கம் செய்வதே தடுக்கப்பட வேண்டும்
பதிலளிநீக்குஆமாம் சார் தடுத்துவிட்டால் நல்ல இருக்கும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்கு