Monday, April 15, 2013

ஞானப் பழம் நீ -அஜீரணம்


வந்துவிட்டேன் ..................

இன்று பழ மருத்துவத்தில் முதலில் நான் குறிப்பு கொடுக்கபோவது அஜீரணத்திற்கு

அஜீரணம் என்ற சொல்லுக்கு அர்த்தம் தமிழில் பசியுன்மை ,வயிற்றி; வாயுவின் சீற்றம்,உப்பசம் ,வயிற்று பொருமல்,வயிற்று வலி ,வயிறு எரிச்சல் ,அடிகடி ஏப்பம் ,மலச்சிக்கல் போன்றவைதான்

அஜீரணம் இந்தசொல் அனேகமாக சமஸ்கிரத சொல்லாக இருக்கவேண்டும் இது நம் நடைமுறையில் வந்து விட்டது  ‘ஜீ என்பதற்கு அர்த்தம் இருகிறதா தமிழில் என்று தெரியவில்லை  வேற எங்கயோ போறேன் பாருங்க சரி விஷயதிற்கு வருகிறேன்

ஒரு பழமொழி சொல்லுவாங்க ‘அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் விஷமாகும் ‘


இது எதுக்கு பொருந்தாதோ இல்லையோ உணவுக்கு பொருந்துங்க

அதிகமான உணவை உண்பது ஒருபக்கம்னா இன்றைய நவீன  மாறுபட்ட உணவுகள் மிக பெரிய காரணம் இதுக்கு

இன்றைய அவசரயுகத்தில் அதற்கு ஏற்றார் போல் உணவுகள் மேலும் அதையும் அவசரம் அவசரமாக சாப்பிடுதல்

மேலும் சரியான நேரம் காலம் இல்லாமல் உணவை உண்பது  உண்டஉணவிற்கு ஏற்றார் போல் தண்ணீர்  பருகாதது 
தண்ணிருக்கு பதில் சாப்பாட்டுடன்   கோக் போன்ற இரசயானம் கலந்த பானங்கள் பருகுவது

மன அழுத்தம் கூட அஜீரணத்திற்கு காரணமாக முடியுமாம்

இராசயானம் கலந்த உணவு பொருட்களை சாப்பிடுவது இன்று சகஜமாகிவிட்டது  இதுதாங்க பெரிய பிரச்சனையே ........


 இந்த பெண்ணை பாருங்க ஒரே ஒரு ரோட்டி துண்டை வச்சுகிட்டு சாப்பிடலாமா வேண்டாமா என்று பலத்த யோசனை 
  ஏன்?நேற்றைக்கு இரசயானம் கலந்த  அளவுகதிகமான உணவு தூக்கமின்மை இதுலேயே மறுபடியும் அஜீரணம் வந்துவிடும்

 
இவர பாருங்க எவ்வளவு தொல்லையா உணவை நினைத்தால் இப்படி தள்ளுவாரு ஏன்?முதலில் எடுக்கபட்ட அளவுகதிகமான  உணவு  இவரை இப்படி செய்ய வைக்கிறது

இந்த அஜீரணத்தை சரி பண்ண மறுபடியும் இராசயனத்தையே மருந்த எடுத்தா எப்படி அதுக்குதான்


இந்த இயற்கை வைத்தியம் நான் மிகவும் எளிமையான மூன்று குறிப்பு கொடுக்கிறேன்


1 அஜீரணம் ஏற்ப்படும் சமயத்தில் ஒரு கோப்பையை திராட்சைபழ சாற்றை இரண்டுவேளை இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து அருந்தி வந்தால் குணம் தெரியும்


2 இரண்டாவது முறை கொஞ்சம் புளிப்புள்ள ஆப்பிள் பழத்தை காலை வெறும் வயிற்றிலும் இரவும் சாப்பிட்டு வந்தால் குணம் தெரியும்


3 மூன்றாவது முறை மிக எளிமையானதும் எளிதில் கிடைக்க கூடியதுமாகும் ஒருபங்கு எலுமிச்சை சாருடன் நான்கு பங்கு தண்ணீர் கலந்து ஒரு வேலை பருகி வந்தால் போதும் அஜீரணம் குணமாகும்

சரி வயிறை முதலில் சரி செய்து கொள்ளுங்கள்  ஜான் வயித்துகுதான் எல்லா பொழப்பும்

மீண்டும் மற்றொரு குறிப்புடன் வருகிறேன் 

28 comments:

 1. பயன் தரும் குறிப்புகள்...

  மூன்றாவதை தற்சமயம் தினமும் செய்வதுண்டு... அடிக்கிற வெயிலுக்கு அது தான் காப்பி, டீ எல்லாம்...

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் மூன்றாவது எல்லாவற்றிக்கும் சிறந்த மருந்து

   Delete
 2. நீங்கள் சொல்லியிருக்கும் அனைத்தும் உண்மை தான் பூவிழி! மூன்றும் முத்தான குறிப்புகள், திராட்சைப் பழச் சாறு குறிப்பு புதியது, நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்
   சீசனில் செய்து குடித்து மகிழுங்கள் மிக நல்லது

   Delete
 3. Replies
  1. நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 4. எண்சான் உடம்பில் அரைஜான் வயிறே பிரதானம் என்பது உண்மை தானே. நல்ல பயனுள்ள குறிப்புகள்.

  ReplyDelete
 5. பயணுள்ள தகவல் ஜீ என்றால் மரியாதை நிமித்தம் என்றும் சொல்ல முடியும் :))) காந்திஜீ !

  ReplyDelete
  Replies
  1. தமிழில் அர்த்தம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள விரும்பினேன் தெரியவில்லை நன்றி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 6. அருமை... நல்ல தகவல்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிதோழி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 7. நல்ல பயனுள்ள குறிப்புகள். எளிதில் கடைபிடிக்கலாம்.
  நன்றி.

  ReplyDelete
  Replies
  1. நன்றிசகோதரி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 8. அஜீர்ணம் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ள பகிர்வு. [அஜீர்ண்ம் ஏதும் இல்லை. ஆனால் அடிக்கடி பசிக்குது. எதையாவது உள்ளே தள்ளிக்கிட்டே இருக்கணும் போல இருக்குது. அது தான் என் பிரச்சனை.]

  பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  ReplyDelete
  Replies
  1. பழங்கள் சாலட் மூளைகட்டிய பாசிபயிறு இப்படி சாப்பிடுங்கள்ஐயா சிவப்பு அவல் பச்சையாக சிறிது சாப்பிடுங்கள் நிறைய சாப்பிடதோன்றாது பசியும் குறைவாகும்

   Delete
 9. இன்றைய வலைசர் பாராட்டுக்கு வாழ்த்துக்கள் மலர்.

  ReplyDelete
 10. அஜீரணத்துக்கான காரணங்களையும் அதனால் படும் அவதிகளையும் விவரித்து கூடவே அதற்கான தீர்வையும் அழகாக விளக்கிவிட்டீர்கள். நன்றி பூவிழி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 11. பயனுள்ள தகவல்கள். வெயில் கொளுத்துகின்ற கோடையில் எலுமிச்சை பானம் மிகவும் நல்லது....

  ReplyDelete
  Replies
  1. நன்றி சகோ வருகைக்கும் கருத்துக்கும்

   Delete
 12. உங்கள் வலைப்பூ பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். நன்றி, லிங்க் இதோ http://blogintamil.blogspot.in/2013/04/blog-post_16.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி வருகைக்கும் விவரத்திற்கும் அறிமுகத்திற்கும்

   Delete
 13. எளிமையான அருமையான குறிப்புகள்
  பயன்மிக்கவை ..பாராட்டுக்கள்..

  ReplyDelete
 14. ஏ...வ்!
  பழச்சாறு கொண்டாப்பா!

  ReplyDelete
 15. அருமையான குறிப்புகள் விழி, எங்கே பிடிக்கிறீர்கள் பதிவிற்கேற்ற படங்களை....படங்கள் மிகவும் அருமை பதிவை ஜஸ்டிபை செய்து பதிவிட்டால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

  ReplyDelete
 16. விழி எழுத்துக்கள் சில பெரியதாகவும் சில சிறியதாகவும் தோன்றுகிறது அதையும் சரி செய்துவிடுங்கள்.

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...