சகோ திரு வெங்கட்நாக ராஜ் அவர்கள் March20,2013
அன்று சுதேசமித்திரனின் ஓவியத்தை பார்த்து அதற்கு தகுந்த கவிதைகள் எழுதி அழைப்பு கொடுத்திருந்தார் நண்பர்களுக்கு அந்த
ஓவியத்திற்கு ஒளியுட்ட சொன்னீர்கள்
புலம்பிவிட்டேன்
கண்டவுடன்
பதுங்கிவிட்டேன்
பகிர பயந்து
புலம்பல்கள்
எல்லாம் புகல்வீரோ ...............
பதித்துவிட்டேன்
தைரியத்துடன்
கவிதை
சாம்ராஜ்யங்களின் நடுவே
சிற்றெறும்பாய்
நான் கடிக்க வந்துவிட்டேன்
பொறுத்தருள்வீர் நண்பர்களே
அழகான
ஓவிய தாரகையே
மயக்கும் மாலை
இள வெயிலில்
மாலை தென்றல்
மடி தவழ
யாரோடு உறவாட
நீ
வந்தாய்
........
பறவைகள்
இன்னிசைக்க
தாமரைகள் மலர
காத்திருக்க
வானுயர்ந்த
மரங்களின் நடுவே
தன்னந்தனியாய்
தேவமங்கையவள்
மதிவதனம் சிந்தனையின்
வசமிருக்க
ஆற்றங்கரையின்
பசுமைமடியினில்
அமர்ந்த நேரம்
வெண்ணிற சிறகு
அடித்து
உன்னை காண
தேவதைகள் .....
இறங்கியதோ
அன்னமாய்
வான்மீதினில்
இருந்து
உன்னோடு
உரையாட
மான்விழியாள்
மருண்டு பார்க்க
‘ஏனடி இந்த
விரத கோலம்
யாருக்காக
இந்த வேஷம்’ என்றதோ
உன் சாகாகள்
‘என் செய்வேன்
தோழி ......
பேதையாய் மாறி
பெரும்துயர்
அடைந்துவிட்டேனடி
இந்த பாரினில்
உள்ளவன் மேல்
காதல் கொண்டு
கலந்துவிட்டேன்
மாலையிட மாறன்
அவன் வருகிறேன் ...
காத்திரு
என்றான்
சென்றவனை
காணோம்
இங்கு வருவான்
இன்று வருவான்
என
காத்திருக்கிறேன் ...............
தூது செல்வார்களோ
என்று .......
வியப்போடு அன்னங்கள்
அவள் விழி நோக்கியதே !
கவிதை ஓவியம் போலவே அழகு.
பதிலளிநீக்குஅருமையாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.
பதிலளிநீக்குமுதல் பாராட்டு உங்களிடமிருந்து கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா மேலும் வந்து பார்வையிட்டு கருத்து சொல்லி வழி நடத்துங்கள்
நீக்குகவிதை நன்றாக இருக்கிறது.
பதிலளிநீக்குதேவதைகள் .....
இறங்கியதோ அன்னமாய் //
தேவதைகளாய் வந்த அன்னங்கள் உதவட்டும் தேவமங்கைக்கு.
வாழ்த்துக்கள் கவிதைக்கு.
நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குநல்ல கற்பனை. அழகிய கவிதை. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!
பதிலளிநீக்குநன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
நீக்குதூது வரிகள் அருமை...
பதிலளிநீக்குதொடர வாழ்த்துக்கள்....
(வியப்பபோடு - வியப்போடு)
கவனித்து வழி நடத்தலுக்கும் கருத்துக்கும் நன்றி
நீக்குநல்ல வரிகள்
பதிலளிநீக்குஇனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வாருங்கள் தோழி வாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேலும் உங்கள் கருத்தை வந்து சொல்ல விழைகிறேன்
நீக்குதூது நன்று!
பதிலளிநீக்குநன்றி தோழி
நீக்கு