Sunday, April 21, 2013

பருவத்தே பயிர் செய்
அப்படினா பருவத்தில் நல்லா அந்த வயதை என்ஜாய் செய்யணும் அர்த்தமா ?இப்பதான் நான் நிம்மதியா இருக்க முடியும் என்று பல இளைஞ்சர்கள் சொல்வதை நாம் பார்கிறோம் அப்புறம் வாழ்க்கைனாலே கஷ்ட்டம் தான் பேசி திரிந்து அவர்கள் வாழ்வின் முன்னேறத்தை தாமத படுத்த விரும்புகிறார்கள்

காலம் என்பது பொன்போன்றது அட என்னங்க நீங்க அது ஏறுத்து இறங்குது அதை போய் காலத்து கூட ஓப்பிடால் எப்படி  பொன் என்பதற்க்கு எப்பவுமே  மதிப்பு உண்டு சில நேரம் காலத்தை பொன்னைவிட மேலானது என்று சான்றோர்கள் சொல்லி இருக்கிறார்கள் பொன் போன கூட வாங்க முடியும் காலம் போன வரவே வராது

எனக்கு பொழுது போகவில்லை என்று சொல்பவர்கள் காலத்தின் அருமை உணரதவங்க இன்று இளஞ்சர்கள் இப்படிதான் சொல்கிறார்கள் சும்மாவே உட்கார்ந்து கொண்டு ‘இன்னிக்கு செம போருடாஅப்படினு வெட்டியாய் பேசி அலைகிறார்கள்


ஓர் ஆண்டு முழுவதும் படித்தவன் முழு ஆண்டு தேர்வில் தோல்வி கண்டால் அவனுக்குத்தான் ஓர் ஆண்டின் அருமை தெரியும் அப்புறம் மூஞ்சிய தொங்க போட்டு அலைவது எதுக்கு இது

தினக் கூலி வாங்கும் ஆளுக்கு ஒரு நாள் வேலை இல்லையென்றால் அவனுக்கு ஒரு நாளின் அருமை தெரியும் அடுத்த வேலை சாப்பாடிற்கு என்ன செய்வது என்று

வாரம் ஒரு முறை வரும் இதழை வெளியிடும் ஆசிரியருக்குத்தான் ஒரு வாரம் என்பது எவ்வளவு முக்கியம் என்பது புரியும் எவ்வாறு பக்கங்களை நிரப்புவது எதை வெளியிடுவது என்று தலையை பிச்சி கொள்ளும் அவருக்குதான் தெரியும் ஒரு வாரத்தின் அருமை
எப்பவும் நாம் முடிந்த பிறகுதான் அடடா இதை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என்று அங்கலாயிப்போம்

ஒரு நிமிட தாமதமாக இரயில் நிலையம் வந்ததால் வண்டியை தவற விட்டவர்களுக்குதான் தெரியும் நிமிடத்தின் மதிப்பு ‘சே ஒரு நிமிஷத்தில் வண்டிய விட்டுடேனே என்று பலர் புலம்புவதை கேட்டு இருப்பீர்கள்

ஓட்ட பந்தியத்தில் கஷ்ட்டபட்டு ஓடி ஒரு வினாடியில் வெற்றி பெரும் வாய்ப்பை  இழந்தவருக்குதான் தெரியும் வினாடியின் மதிப்பு

ஒரு மாதம் முன்னதாக பிறந்துவிடும்  குழந்தைளை காப்பாற்ற போராடும் மருத்துவனுக்கும் அந்த குழந்தையின் தாயிக்கும் தான் ஒரு மாததின் அருமை புரியும்
ஆண்டவன் என்னமோ நமக்கு அளித்த24 மணி நேரத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைபொறுத்து தான் நம்முடைய வெற்றி தோல்வி நிர்ணயிக்க படுகிறது வெற்றி பெருவத்ர்ர்கு நிறைய பிளான் போட்டாலும் அதை நிறைவேற்ற கடும் உழைப்பே வெற்றியை மூலதனமாகிறது

இதைதான் நம் வள்ளுவரும் சொல்லிருகிறார்

நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும்
கெடுநீரார் காமாக் கலன் .

என்ன சொல்கிறார் என்றால் நம்முடைய தேவையற்ற காலாதாமதம் ,மறதி ,சோம்பல்,எபோழுதும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பது ஆகிய இந்த நான்கு இயல்புகளையும் கொண்டிருந்தால் ஒன்னை சரி பண்ண ஒன்னு 
செய் வேண்டி வரும் அதாவது தன் தவறுகளுக்கு மற்றவரை குறை கூறும் தன்னமை அல்லது கெடுதல் செய்யும் குணம் மேலோங்கி, அதுவே அவர்களின் வாழ்க்கையாகி ஆகிவிடும்   


பூமி தினம் 

      
  இன்று உலக பூமி தினமாம் பாருங்க இந்த பூமியை காப்பாற்ற நாம் நம் காலத்தை நேரத்தை நல்ல முறையில் உபயோக படுத்தி காத்து கொள்ளவோம் நாம் நாம் செய்யும் ஒர்வொரு செயளையும் உணர்ந்து செய்வோம் நம்மை தாங்கி வாழ்வளிக்கும் இந்த பூமியை அதற்கு ஊறு விளைவிக்கும் இன்றை பிரச்னை எதுவென்று கண்டறிந்து அதை முடிந்த வரை களைய போராடுவோம்  
           

23 comments:


 1. எப்பவும் நாம் முடிந்த பிறகுதான் அடடா இதை இப்படி செய்து இருக்கலாமே, அப்படி செய்து இருக்கலாமே என்று அங்கலாயிப்போம்//உண்மைதான் சரியாச் சொன்னீங்க

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கவிஞ்சரே

   Delete
 2. நல்ல கருத்துக்கள் ... நன்றி

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ

   Delete
 3. அருமையான விடயத்தை அழகாகச் சொன்னீர்கள்.

  பூமி தினம் நினைவுகொள்ளும் தருணத்தில் பூமித்தாயை வணங்கி அவளுக்கு ஏற்படும் இன்னல்களை தவிர்க்கும் வழிகளைப்பற்றி சற்று கவனத்தில் கொள்வோம் நாமே.
  பகிர்விற்கு நன்றி தோழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

   Delete
 4. நேரத்தின் அருமையை அழகாய் சொல்லியிருக்கிங்க.. !

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

   Delete
 5. பூமி தினத்திற்கேற்ற நல்லதொரு பகிர்வு... வாழ்த்துக்கள்...

  எழுத்தின் அளவு கொஞ்சம் பெரிது... சிறிது விழுங்கி விட்டது... கவனிக்கவும்.... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தனபாலன் சார்
   சில நேரம் இப்படிதான் எழுத்துகள் வருகிறது ஏன் புரியவில்லை லதா font உபயோகிக்கிறேன் இருந்தும் இப்படி

   Delete
 6. முதலில் பூமி தின வாழ்த்துக்கள். பூமி தினத்தன்று நேரத்தின் அருமையை உணர்த்திய மலருக்கு நன்றி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ராஜி

   Delete
 7. உலக பூமி தினத்தை அருமையாக பகிர்ந்த
  பொன்னான ஆக்கத்திற்குப் பராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

   Delete
 8. நேரத்தி்ன் முக்கியத்தை எடுத்துச் சொன்ன விதம் அருமை பூவிழி! இழந்தால் திரும்பப் பெற முடியாததாயிற்றே! அருமையான பகிர்வு! மிக்க நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே

   Delete
 9. நேரத்தின் அருமையை விளக்கும் அருமையானதோர் பதிவு. பகிர்வுக்கு நன்றி தோழி !!!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி முகில்

   Delete
 10. உலக பூமிதினத்திற்கு அருமையான பகிர்வு.
  பொன்விளையும் பூமியாக மாற்ற வேண்டும் என்று முன்னோர் சொன்னதை தவறாய் புரிந்து கொண்டவர்கள் விளை நிலங்களை விற்று பொன் வாங்குகிறார்கள்.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி

   Delete
 11. பதிவு அருமை.
  வாழ்த்துக்கள் பூவிழி.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி

   Delete
 12. நேரத்தின் அருமை சொல்லிய உங்கள் பதிவு மிகவும் அருமை சகோ....
  வாழ்த்துகள்....

  ReplyDelete

Related Posts Plugin for WordPress, Blogger...