Wednesday, April 3, 2013

ரிஸ்கெல்லாம் ரஸ்க்கா சாப்பிடுவோமா ......


ஒரு கதையிலிருந்து ஆரம்பிக்கட்டுமா விஷயத்தை (திரும்பவுமா நடத்து) ஒருத்தன் ஒரு கழுதையை வளர்த்து வந்தானாம் அந்த கழுதை மீது அவனுக்கு சில கோபங்கள் இருந்து வந்தன அந்த கழுதை ஒரு நாள் அவனோட பாழும் கிணற்றில் விழுந்துவிட்டது அவனுக்கு வந்ததே கோபம்
சீ ஒரு வேலையும் உருப்பிடியா செய்யமாட்ட ,இப்ப கிணத்துல வேற விழுந்து தொலைச்சிடியா ? என்று திட்டி கொண்டே கிணற்று அருகில் இருந்த மண்ணை கூடை கூடையாய் அள்ளி அதன் மேல் போடறான் கழுதை இதோடு காலி என்று நினைக்கிறான் ஆனால் அந்த கழுதையோ ஒவ்வொரு கூடை மண்ணும்  போதும் அதை மிதித்து மிதித்து மேலே வந்திவிட்டது என்கிட்ட நடக்குமா என்பது போல்
இது இதுதாங்க  நாம எல்லோரும் எதிர் நோக்க வேண்டிய விஷயம்


அதாவது நம் எதுவுமே செய்யாதபோது ஒரு நாய் கூட திரும்பி பாக்கதுனு சொல்லுவாங்க எதவாது செய்ய ஆரம்பிச்சா அதை பற்றி கருத்து சொல்ல 2 பேராவது வருவாங்க அதுவும் 'காச்ச மரத்தில் கல்லடி படத்தாம்' செய்யும் ஒரு சொலவடை இருக்கு அதுக்கு பேருதான் விமர்சனம்...... 

நாம ஏதாவது செய்ய வரும் போது  விமர்சனங்களை வரவேற்று எத்துகனும் விமர்சனங்களை வெறுப்பவர்கள் வெற்றியாளராக முடியாதாம் தன்னம்பிகை நூல் எழுதிய நெப்போலியன் ஹில் சொல்றாரு 
சில நேரம் விமர்சனங்கள் நம்மை போடு தாக்கு தாக்குன்னு தாக்கும் அந்த மாதிரி சமயத்தில் அவைகளை நம்ம திறமையை வெளியே குத்தி கொண்டுவரும் கடப்பாறையா பாக்கனும்


நாம செய்ற வேலைகளுக்கு கிடைக்கும் சாவல்னும் அதை நேருக்கு நேரா நின்னு சாமளிக்கனும். சாவலே சாமளினு. அதுமட்டுமில்லை நமக்கு வர விமர்சனங்களை நாகரிகமாக சமாளிக்க தெரியனும்  சாமர்த்தியமாகவும் மடக்க தெரியனும்
  
ஒரு விஷயத்தை படிச்சி இருக்கேன்
ஒரு கட்சி 1960யில் இன்று எதிர் கட்சி கம்யூநிஸ்ட கட்சியை சாடுச்சாம் வயித்துக்கு சோறா,இனத்தின் மானமா என்று பார்த்தால் நாங்கள் மானத்தை தேர்ந்து எடுப்போம் அவர்கள் சோற்றை தேர்ந்தெடுப்பார்கள் என்று விமர்சனம் வந்த போது ‘ஆம் ,நமக்கு இல்லாத்தைதானே எடுக்க வேண்டும் ‘ என்றாராம் ஜீவா இது தான் சாதுர்யாமாக மடக்குதல் எல்லாம் சரிதான் அந்த கழுதை கதை எதுக்குனு கேட்பது புரியுது .......சில சமயங்களில் விமர்சனங்களை ஸ்பிரிங் மேடையாக பயன்படுத்தி நாம மேல வந்துவிட வேண்டுங்க அதுக்கு தான் அந்த கதை

சார்லின் சாப்பினை எல்லோருக்கும் தெரியுமுன்னு நினைகிறேன் அவருக்கு எப்பவும் ரிஸ்கான நிகழ்ச்சியில்  அவரே முக்காவாசி நடிப்பார் அவருடைய சர்க்கஸ் என்ற படத்தில் சிங்கத்தின் உடன் நடிக்கும் சீனில்
இவர் தானே நடித்தார் சீன் சரியாக வரவில்லை என்று  63 முறை இந்த டேக் எடுக்கபட்டதாம் சிங்கத்துக்கு ரஸ்க்கு கொடுத்துட்டு இந்த மனுஷன் ரிஸ்க்கு எடுத்து இருக்கார் அதுமட்டுமா ஹிட்லரை பற்றி தைரியமாக இரண்டாம் உலபோரின் நேரத்தில் படம் எடுத்து இவரே நடித்தவர் ஹிட்லராக தி கிரேட் டிக்டேட்டர் பார்த்து இருகீங்களா இவருக்கு  எல்லோரையும் சிரிக்க வைக்க ரிஸ்க்கெல்லாம் ரஸ்க்கு சாப்பிடறமாதிரி

அதனால் தான் வெற்றி என்னும் கதவு இவருகாக திறந்து வைக்க பட்டது

இப்ப புரியுதுங்களா எதிர்படும் சாவல்களில் சமாளித்து எதிர் நீச்சல் போட தெரியலனா வெற்றியை விரல் நுனியில் கூட  தொடமுடியதுங்கோ
சரி  ஈசியா  புரியற மாதிரி ஒன்னு
17 comments:

 1. நாம ஏதாவது செய்ய வரும் போது விமர்சனங்களை வரவேற்று எத்துகனும்//
  உண்மைதான் .பொதுமனிதராக எட்ட்ருக்க் கொள்ளத்தான் வேண்டுமே

  ReplyDelete
  Replies
  1. ஆம் விமர்சனம் நம்மை சில நேரம் தொய்ந்து போக வைக்கும் இல்லை மயங்கி போகவைக்கும் இரண்டிற்கும் ஆட்படாமல் வெளியேற தெரிய வேண்டும்
   நன்றி வருகைகும் கருத்துக்கும்

   Delete
 2. நல்லதொரு கதையுடன் ஆரம்பித்து நகைச்சுவையுடன் முடித்தது அருமை....

  சுவையான ரஸ்க்... தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. உங்கள் ஊக்கம்மும் கருத்தும் எப்போதும் தொடர நன்றி

   Delete
 3. கதையும் அதற்கான கோர்வையான செய்திகளும் சுவாரஸ்யமாக படிக்க தூண்டுகிறது நல்ல செய்திகளை பகிர்ந்து சென்ற உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி வருகைகும் உடனடி கருத்துக்கும் ரசிப்புக்கும்

   Delete
 4. ரிஸ்க் எடுத்து உங்க பதிவை படித்தேன் அதன் பின் அது ரஸ்க்காக சுவைத்தது. இலவசமா ரஸ்க் கொடுத்து உபசரித்தற்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. ரிஸ்கை எப்பவும் ரஸ்க் ஆக்கவே முயற்ச்சித்து ஆர்வத்தோடு சாப்பிடும் உங்களுக்கு இது என்ன ரிஸ்க் படித்து கருத்து இட்டதற்கு நன்றி

   Delete
 5. வணக்கம் உறவே

  மீனகம் திரட்டியில் உங்கள் இணையத்தை பதியவும். உங்களின் இடுகைகள் செய்தியோடை (RSS Feed) வாயிலாக எளிதாக திரட்டப்படும்...

  http://www.thiratti.meenakam.com/

  ReplyDelete
 6. அருமை அருமை...:) அசத்தலான சிந்தனை. நல்ல கதை.
  கடைசியில் சொன்ன ஜோக் நினைத்து நினைத்துச் சிரித்தேன். ஒளிமயமான எதிர்காலம் அந்தக் கழுதைக்கு தெரிகிறது....:)))

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. போகட்டும் எப்பவும் கழுதை கெட்ட குட்டிசுவரு என்றே வசை பாடுவோம்
   நன்றி தோழி வருகைகும் கருத்துக்கும் ரசிப்புக்கும்

   Delete
 7. ஹா..ஹா கழுதை ஜோக் ரொம்ப நல்லாருக்கே..!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி வருகைகும் உடனடி கருத்துக்கும் ரசிப்புக்கும்

   Delete
 8. ரொம்ப ரொம்ப சுவையாக ரஸ்க் கொடுத்து இருக்கிறீர்கள்.
  நல்ல மொரு மொரு என்று தான் இருக்கிறது.
  தொடர வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி வருகைகும் மொரு மொருப்பான உடனடி கருத்துக்கும்

   Delete
 9. விமர்சனங்களை எதிர்கொள்ளும் மனப்பக்குவம் இருந்தாலே போதும், முன்னேற்றம் தானாய் அமைந்துவிடும் என்னும் கருத்தை சுவையாகவும், சிறு கதைகள் மூலமும் எடுத்துரைத்த விதத்துக்குப் பாராட்டுகள். கடைசி ஜோக்கை நினைத்து இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தோழி வருகைகும் கருத்துக்கும் ரசிப்பிற்கும்

   Delete

Related Posts Plugin for WordPress, Blogger...