திங்கள், 8 ஏப்ரல், 2013

திருக்குறளும் காந்தியும் .......


       



என்னடா இது நேற்று தான் எதோ பழ மருத்துவத்தை பகிர போவதாய்  சொல்லிவிட்டு இன்று வேறொன்றுக்கு தவிவிட்டேன் நினைப்பது புரியுது நேற்றைய குறிப்புகாக ஔவை பாடலை பகிரும் போது இது நியாபகம் வந்துவிட்டது நம் உயிர் மூச்சு தமிழ் பற்றியது அல்லவா  ... ஒரு ஆவல்



  தமிழனாய் பிறந்ததில் கர்வம் கொள்வோம்...! உங்க எல்லோருக்கும் திருக்குறள் பற்றி சொல்லவேண்டாம்  உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் பரவி இருக்கும் இந்த இரண்டடி செய்யுள் அல்லது கவிதை  அல்லது அறிவுரை அல்லது நீதி நெறி இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் இன்றுவரை இதை பற்றி ஆராய்ச்சிகள் நடந்து கொண்டே இருக்கிறது இது  உலககின் பல மொழிகளிலும் மொழி பெயர்க்கபட்டு உள்ளது இதன் மகத்துவம் அறிந்தவர்களால்  நம்மை உலகம் திரும்பி பார்க்கவைத்த இந்த நூலின் பெருமை நாம் அறிந்திருக்கிறோமோ இல்லையோ மற்றவர்கள் இதன் பயனையும் புகழையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள் அப்படி பட்டவருள் ஒருவர் தான்......


உலக புகழ் பெற்ற லியோ டால்ஸ்டாய்  இவர் ஒரு தலைசிறந்த எழுத்தாளர் இவர் நம் திருக்குறளின் பெருமையை உணர்ந்தவர் இவருக்கும் நம் தேசத்தந்தை காந்தியடிகளுக்கும்  நட்பும் கடித போக்குவரத்தும் இருந்தன ஒரு சமயம் ஒரு கடிததில் காந்தியடிகள் இவருக்கு கடிதம்  எழுதிய போது டால்ஸ்டாய் எழுதிய வரிகளை நினைவு கூறி பெருமை படுத்தி எழுதுகிறார் காந்தியடிகள் அந்த வரிகள்
    
அக்கடிதத்தில் 'தம்மைத் துன்புறுத்து வோரையும் தண்டிக்காது மன்னிக்கும் குணம் பற்றித் தாங்கள் கூறியிருக்கும் செய்தி, என்னை மிகவும் கவர்ந்தது'

இதை படித்த டால்ஸ்டாய் அவ்வரிகளை தமதாக்கி  கொள்ளவா விரும்புவார்  அவர்தான் திருக்குறளை படித்து புரிந்தவர் ஆயிற்றே உடனே அவர் காந்தியாடிகளுக்கு பதில் அனுப்பினாராம்  ....

'இந்தப் பெருமையும், புகழும் எனக்கு உகந்ததல்ல. உங்கள் தேசத்தில், தமிழ்நாட்டில் பிறந்து, திருக்குறள் எனும் அற்புத நூலைப் படைத்த திருவள்ளுவரையே சாரும். இதோ, அப்பொருள் உணர்த்தும் குறள்' என்று ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளைக் குறிப்பிட்டிருந்தார். அந்தக் குறள்...

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்
நாண நன்னயம் செய்து விடல்


அட என்று காந்தியடிகளுக்கு வியப்பு தோன்றி ஆங்கிலத்தில்
மொழி பெயர்க்கபட்ட திருக்குறளை படித்து பார்த்து மனம் உவகை கொண்டு 'நான் அடுத்த பிறவியில் தமிழனாகப் பிறக்க வேண்டும். ஏன் தெரியுமா? ஆங்கிலத்தில் படிக்கும்போதே... இத்தனை சுவையாக இருக்கிற திருக்குறளின் மூலநூலை தமிழ்மொழியில் படிக்க வேண்டும். அதற்காகவே, நான் ஒரு தமிழனாகப் பிறக்க வேண்டும்' என்றாராம்
இப்படி நம் மொழின் ஆதிகத்தையும் பெருமையையும்  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே நமக்கு அளித்து போன நம் முன்னோர்களின் என்னவென்று புகழ்வது நானும் தமிழன் தமிழச்சி என்று சொல்வதை விட முடிந்தவரை குறைந்த பட்ச அளவிலாவது திருக்குறளின் நீதியை  பின்பற்றினால்  வாழ்வு சுபிட்சம் பெரும்
.

திருக்குறள் இறை நூல் என்றும் போற்ற படுகிறது இந்நூல் கி.முக்கும் முன்னரே வந்தக கண்டறியபட்டதால் இதன் காரணமாகவே இது இன்று வரை ஆராய்ச்சிக்கு  உட்பட்டுள்ளதாக இருக்கிறது அதுமட்டுமல்ல
இது உலக பொதுமறை  நூல் என்று சொல்ல படுகிறது  ஏனென்றால் இதில் இனம் ,நாடு ஒருவருக்கு மட்டும் உரித்தான காலாச்சாரம் என்று எந்த அடையாளங்களும்  தன்னடயாளமாக இந்த நூலில் இல்லையாம் ஒன்றே ஒன்று இது தமிழ் மொழில் எழுதபட்டுள்ளது இது இது ஒன்றே போதுமே நாம் பெருமை கொள்ள காலத்தின்  கோலம் எப்படி போகும்..... அவர் அவர்க்கு இது தீர்வாக கொள் என்று இறைவனே.... வந்து சட்டம் என்று கொண்டாலும் சரி நீதி என்று நினைத்தாலும் சரி என்று இயற்றிவிட்டு போனதோ !!!!!!!!
விழித்து கொண்டால் விழித்து கொள்ளுங்கள் இல்லையேல் ........

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக்கொண்டார்-உன்போல்
குறட்டை விட்டோரெல்லாம் கோட்டைவிட்டார்!

தமிழும் வாழ வேண்டும் மனிதன்
தரமும் வாழ வேண்டும்
அமைதி என்றும் வேண்டும் ஆசை
அளவு காண வேண்டும்!



10 கருத்துகள்:

  1. அருமை... குறள் சிறப்பிற்கு மிக்க நன்றி... பாராட்டுக்கள்...

    உள்ளுதொறும் உள்ளுதொறும்
    உள்ளம் உருக்குமே
    வள்ளுவர் வாய்மொழி மாண்பு

    - மாங்குடி மருதனார்...

    வாழ்த்துக்கள் பல...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தனபாலன் சார் திரும்பவும் நான் இந்த பதிவிலும் தாவி என்பதற்கும் கடிதத்தில் என்பதற்கும் எழுத்து பிழை செய்து விடேன் கவனிக்காமல் கொடுத்தற்கு வருந்துகிறேன்

      நீக்கு
  2. திருக்குறள்-வாழ்க்கை நெறிகள் அத்தனையும் கொட்டி கிடக்கும் பொக்கிஷம்!

    பதிலளிநீக்கு
  3. லியோ டால்ஸ்டாய் பற்றிய செய்தி புதிது.
    திருக்குறள் சிறப்பு பற்றி அருமையாய் சொன்னீர்கள் மலர்.
    காந்தியும் திருக்குறளை சிலாகித்திருக்கிறார் என்பதும எனக்கு செய்தியே!

    பதிலளிநீக்கு
  4. அருமையான நல்ல பதிவு.
    பகிர்வுக்கு மிக்க நன்றி தோழி!

    பதிலளிநீக்கு
  5. தமிழும் வாழ வேண்டும் மனிதன்
    தரமும் வாழ வேண்டும்//திருக்குறளைப் போற்ற வேண்டும்

    பதிலளிநீக்கு
  6. குறைந்த பட்ச அளவிலாவது திருக்குறளின் நீதியை பின்பற்றினால் வாழ்வு சுபிட்சம் பெரும்//

    உண்மை , அருமையாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு

  7. வணக்கம்!

    குறளின் பெருமையைக் கொட்டிக் கொடுத்தீா்!
    சிறக்கும் வளங்கள் செழித்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு
  8. நன்றி வருகைக்கும் கருத்துக்கும் வேறு என்ன சொல்ல திருக்குறளே ஒரு மகத்துவம் நிறைந்த கடல் அதன் ஆழம் நான் முழுவதும் அறியாதது அதை பற்றி நான் எனக்கு தெரிந்தை மட்டுமே பகிர்ந்துள்ளேன் படித்து மகிழ்ந்த அனனவருக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  9. அறியாத செய்தியை அறிந்த திருக்குறளோடு பகிர்ந்தமைக்கு தங்களுக்கு பாராட்டும் நன்றியும்!

    பதிலளிநீக்கு