வியாழன், 18 ஏப்ரல், 2013

பார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........


கடவுள் நம்பிக்கை


மக்களே நான் இன்னிக்கு ஒரு கதை சொல்ல போறேன்

இந்த கடவுள் நம்பிக்கையை பற்றி  ரொம்பவே சர்ச்சை இருக்குங்க கடவுள் இருக்காரா? இல்லையா?காண்பிக்க முடியுமா கேள்வி சரி கடவுள் இருகார் என்று ஆதாரங்கள் எல்லாம் என்னால சொல்லமுடியுமா தெரியலைங்க கடவுள் இருக்காருன ஏன் இவ்வளவு கொடுரம் துன்பம் என்று எல்லாம் கேட்க்கிரவங்க  இருப்பாங்க எதை படைத்தாலும் அதுக்கு முடிவும் வேணுமே அதனாலதான் மனுஷன் உருவானான் ஐயோ இத பற்றி பேச ஆரம்பிச்ச அதுக்கு முடிவே வராதுங்க  அதனால் இந்த சிறு கதையை சொல்லாம் நாமளா முடிஞ்ச உதவியை செய்வோம்னு இறங்கிடேன்ங்க நானும் குடைச்சல் கொடுக்க

கடவுள் நம்பிக்கை என்பது..........

கடவுளுக்கு சந்தேகம் வருதோ இல்லையோ இந்த கலகமூட்டரவங்க எங்கேயும் இருப்பாங்க அவங்களுக்கு யாரையாவது குடைச்சல் கொடுக்கலைன மண்டையே வெடிச்சிடும் இப்ப நம்ம நாரதரற்க்கு அந்த மாதிரி ஒரு நிலைமை நாம இந்த கடவுள் நம்பிக்கையை பத்தி பேசரதை எல்லாம் ஒட்டு கேட்டுட்டு போய் கடவுள் கிட்ட வத்தி வைக்கிறாரு




நாராயண!!! நம்ம நாராயணன் நிம்மதியாய் தூங்கிகிட்டு இருக்காரு

இவரு விட்டாதானே நாராயணா !!!!!!!!!

இவருக்குதான் வந்த வேலையை முடிக்கலைனா மண்டை வெடிச்சிடுமே

வந்துடியா இன்னைக்கு தூங்கினா போலதான் ம்ம் “என்ன நாரத எதற்கு என்னை அன்புடன் அழைத்தாய்

இம்கும் காட்டு கத்தல் கத்திகிட்டு இருகேன் இப்போதான் அன்புடன் கொம்புடனு டயலாக் விடறாரு ....சரி வந்த விஷயத்தை பத்தவைப்போம்


“நாராயணா நீயோ இந்த அகண்ட உலகத்தை படைத்து உயிர்களையும் படைத்து பராமரிக்கிறாய் ஆனா இந்த நன்றி கெட்ட ஆறறிவு கொடுத்த விட்ட ஒரே காரணத்திற்காக இந்த மனிதன் மட்டும் ஏதேதோ கண்டுபிடித்து உன் ப்ராஜக்டை சீக்கரம் கவிழ்த்து விட வேண்டும் என்று பார்கிறான் நீ வைத்திருக்கும் காலகெடுவிற்க்கும் முன்னரே இந்த உலகத்தை அழித்து விடவேண்டுமென்று துடிக்கிறான் போலிருக்கிறதே  அதில் வேறு உன்னையே நீ படைத்த உயிர்களில் பாதி நம்ப மறுக்கிறதே இவ்ர்களுகெல்லாம் எப்படி மோட்சம் வழங்க போகிறீர்கள்

“அப்படியா இது உனக்கு எப்படி தெரிந்தது நீ பூலோகம் சென்றாயா ?

“இல்லை பிரபோ நாம் வைத்திருக்கும் வெப்சைடில் பார்வையிட்டபோது கூகுள் ஒன்னை நம்மளுடையத்தை போலவே  கண்டு பிடித்து வைத்திருகிறார்கள் நமக்கெதிராக அதில்தான் இப்பவெல்லம் நான் பார்த்து தெரிந்து கொள்வது 

“நமக்கு வாய்த்த அடிமைகளல் மிக மிக புத்திசாலிகள் சரி உனகென்ன சந்தேகம் தீர வேண்டும் என்னை நம்புகிறார்களா இல்லையா?என்று தானே யார் யார் எப்படி எவ்வகையில் நம்புகிறார்கள் யார் மோட்சம் பெற தகுதியுடைவர்கள் என்று கண்டு வா போ

இவர தூண்டி விடலாம் என்று பார்த்தால் நமக்கே வேலை கொடுத்து விடுவாரே .........சரி பாப்போம் வேலையை  பூலோகம் வருகிறாற் நாரதர்.

மூன்று பேரை சந்திகிறார் ஒருவன் பணக்காரான் ஒருவன் மெத்த படித்தவன் ,ஒருவன் விவசாயி மூன்று பேரிடமும் மோட்ச்சத்தை பற்றி பேசுகிறார்

மூவரும் எங்களுக்கு “மோட்சம் கிடைக்குமா என்று கேட்டனர் அதற்கு என்ன தகுதி வேண்டும் ? என்றனர்

“இதற்கு நான் பதில் சொல்ல முடியாது மகாவிஷ்ணுவிடம் கேட்டு சொல்கிறேன் என்றார்

வைகுண்டம் வருகிறார் நாரதர் மூவரும் கேட்ட வரத்தை  பற்றியும் நாராயனனிடம் சொல்கிறார்

அதற்கு மகாவிஷ்ணு இப்போது “ஊசியின் காதுக்குள் யானையை நுழைத்து கொண்டிருப்பதாக சொல்

என்ன இதுவா பதில் என்பது போல் பார்கிறார் என்ன உன் லீலை என்கிறார் நாரதர்



மீண்டு பூலோகம் வந்த நாராதர் முதலில் மெத்த படித்தவனை சந்திக்கிறார்

அவன் ஆவலுடன் “என்ன நாராதரே எனக்கு மோட்சம் கிடைக்குமா? என்கிறான்

அதற்கு நாரதர் “அய்யா நான் சென்ற போது மகாவிஷ்ணு ஊசியின் காதுகுள் யானையை நுழைத்து கொண்டிருந்தார் அதனால் பேச முடியவில்லை இதை கேட்ட நம்ம படிச்சவரு “என்ன ஊசியின்  காதுகுள்ள யானையை நுழைப்பதா ? வேடிக்கையாக இருக்கே நீங்க சொல்லவது என்று நக்கலா சிரிக்கிறான் மேதாவி



பின்பு பணக்காரனை சந்திகிறார் அவனும் “மோட்சம் கிடைக்குமா ?என்ன
சொன்னார் மகாவிஷ்ணு என்கிறான்

“ஊசியின் காதுகுள் மகாவிஷ்ணு யானையை நுழைத்து கொண்டிருந்ததால் என்னால் பேச முடியவில்லை-நாரதர்

இதை கேட்ட நம் அப்பாடக்கருக்கும் சிரிப்பை அடக்க முடியவில்லை விழுந்து விழுந்து சிரிகிறான்



மனம் தளராத விக்ரமாதித்தன் போல் நாரதர் விவசாயியையும்
சந்திகிறார் அவனும் தன் மோட்ச்ச்சத்தை பற்றி மகாவிஷ்ணு என்ன சொன்னார்? என்று கேட்கிறான். மத்தவங்க கிட்ட சொன்ன டயலாக்கையே இவனிடமும் சொல்றாரு நாரதர்

இதை கேட்டவுடன் விவசாயி “ஆஹா ஆஹா கடவுள் சக்தியே சக்தி !

“ஊசி காதினுள் யானையை அவரை தவிர யாரால் நுழைக்க முடியும்

“சின்ன விதை மூலம் பெரிய மரத்தை உருவாக்குபவரால் இதுவும் முடியும் 


நாரதருக்கு  ஆச்சரியம் தாங்க முடியவில்லை 
வைகுண்டம் வருகிறார் மகாவிஷ்ணுவிடம்  நடந்தை சொல்கிறார்




பார்த்தாய நம்பிக்கை என்பது இதுதான் .........



உங்களுக்கும் புரிந்திருக்கும் நினைக்கிறேன் அந்த விவசாயி நிம்மதியா போயிடு இருப்பான் எல்லாம் நடக்கும் நடக்கும் போது என்று ஆனா மற்ற இரண்டு பேர் யானை நுழைந்தா முடியுமா எப்படி என்று மன வாதத்தில் தூக்கம் வராமல் பாயை பிறாண்டி கொண்டு இருப்பாங்க




  

தெய்வம் என்றால் அது தெய்வம் - அது
சிலை என்றால் வெறும் சிலை தான்

உண்டென்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை
இல்லை என்றால் அது இல்லை...


24 கருத்துகள்:

  1. கடவுள் இருந்தாலும் இல்லாவிட்டாலும்
    நம்பிக்கையே வாழ்க்கை

    பதிலளிநீக்கு
  2. சின்ன விதை மூலம் பெரிய மரத்தை உருவாக்குபவரால் இதுவும் முடியும்”

    அருமையான பதிவு...பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நம்புபவர்களுக்கு நாராயணன்.இந்த கலியுகத்தில் படித்தவனும் பணக்காரனும் ஊழல் அதிகாரிகளும் அமைச்சர்களும் நிம்மதி இன்றி வாழ்கின்றனர்.
    கதை அருமை. நன்றி. மேலும் தங்கள் பனி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  4. நம்புபவர்களுக்கு நாராயணன்.இந்த கலியுகத்தில் படித்தவனும் பணக்காரனும் ஊழல் அதிகாரிகளும் அமைச்சர்களும் நிம்மதி இன்றி வாழ்கின்றனர்.
    கதை அருமை. நன்றி. மேலும் தங்கள் பனி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  5. கதையும் உங்கள் கற்பனையும் மிக அருமை

    பதிலளிநீக்கு


  6. //உங்களுக்கும் புரிந்திருக்கும் நினைக்கிறேன் அந்த விவசாயி நிம்மதியா போயிடு இருப்பான் எல்லாம் நடக்கும் நடக்கும் போது என்று ஆனா மற்ற இரண்டு பேர் யானை நுழைந்தா முடியுமா எப்படி என்று மன வாதத்தில் தூக்கம் வராமல் பாயை பிறாண்டி கொண்டு இருப்பாங்க//

    விவசாயி நிம்மதியா இருப்பான், மெத்த படித்தவன் அதைப்பற்றி நிம்மதியா ஒரு காமெடிப் பதிவு போட்டுவிட்டு போய்கிட்டே இருப்பான். பணக்காரன் பணம்தான் கடவுள் மற்றது எல்லாம் டூப்புன்னு போய்கிட்டு இருப்பான்.


    இதைப்பார்த்த அல்லது கேட்ட கடவுள்தான் தூக்கம் வராம பால்கடலை கடைந்து கொண்டே இருப்பாருங்க

    பதிலளிநீக்கு
  7. ஹா... ஹா... ரசித்தேன்...

    நல்லதொரு பாடலுடன் முடித்தமைக்கு வாழ்த்துக்கள்... நன்றி...

    பதிலளிநீக்கு
  8. அருமையான கதை சொல்லி அசரவைத்தீர்கள் தோழி!
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  9. கடவுள் கதை அருமை மலர்.
    இது தான் நம்பிக்கை என்பது அழகாகவே புரிகிறது.
    எனக்கும் ஒரு கதை நினவு வருகிறது.
    ம்ஹஊம்.....இங்கே இல்லை ஒரு பதிவில் சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  10. கடவுள் இருப்பதாகவே நம்புவோம்..கடவுள் என்ற சொல்லும் காவல்துறை என்ற சொல்லும் இல்லையென்றால் நம்மவர்கள் எல்லோரும் எப்போதோ கொலை கொள்ளையில் ஈடுபடத்தொடங்கியிருப்பார்கள்..அருமையான கற்பனைக்கு வணக்கங்கள்..

    பதிலளிநீக்கு
  11. அன்பும் மனிதநேயமும் இருந்தாலே ஆண்டவனுக்கு சேவை செய்வதற்கு சமம். அன்பே சிவம்! நம்பிக்கையே வாழ்க்கை!

    சொல்லவந்த கருத்தை எழுதிச் சென்றவிதம் மனம் கவர்ந்தது. பல இடங்களில் முறுவல் எழுந்தது.பாராட்டுகள் பூவிழி.

    பதிலளிநீக்கு
  12. //“ஆஹா ஆஹா கடவுள் சக்தியே சக்தி !”

    “ஊசி காதினுள் யானையை அவரை தவிர யாரால் நுழைக்க முடியும்”

    “சின்ன விதை மூலம் பெரிய மரத்தை உருவாக்குபவரால் இதுவும் முடியும்” //

    மிகவும் ரஸித்தேன். பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  13. ஹாய் பூவிழி! ‘நம்பிக்கைதான் கடவுள்’ங்கற அழகான தத்துவத்தைச் சொல்லும் அருமையான கதையை என்ன மாதிரி சின்னப் பையனுக்கும்(?) புரியற மாதிரி சூப்பரா சொல்லியிருக்கீங்க! நாரதர் கேரக்டரை வெச்சு நகைச்சுவை தூவி அழகா கதை சொல்லியிருக்கற உங்க திறமைக்கு மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
  14. நல்ல பாடல் வரிகள் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் வரிகள். நல்ல பகிர்வுங்க.

    எங்கள் பகுதியில் மின்சாரப்பிரச்சனை மற்ற தளங்கள் செல்ல முடியவில்லை அதனால் தாமத வருகை மன்னிக்கவும்.

    பதிலளிநீக்கு
  15. கவிஞ்சரே நம்பிகை பற்றிதான் நானும் சொல்லியிருகேன் கடவுள் நம்பிகை என்பது ஒரு வகையில் நாமே நம்மேல் வைத்து கொள்ளும் நம்பிக்கைதான் மனதுகு கொடுத்து கொள்ளும் டானிக்

    உண்மைகளே அவருதான் வேலை முடிந்தது என்று தூங்கிகிட்டு இருக்காரே எப்படினா அடிச்சி கிட்டு வாழ்ந்து முடிங்கடா எல்லாரும் என்கிட்ட வந்து சரண் அடஞ்சிதான் ஆகணும்னு

    ராஜி உங்க பதிவு எல்லாமே கதை போல் சுவ்ரசியாமாதான் இருக்கும்

    அன்னபை சார்ந்தது தான் நம்பிக்கையும் கீதா யார் மேல நம்பிக்கை வைப்போம்

    நண்பர் கணேஷ் நகைசுவை மன்னன் என் கதையை நகைசுவையுனு சொன்னதுக்கு நன்றிங்க

    சசி தோழமைகுள் மன்னிப்பு எதற்கு நீங்கள் எப்ப வந்தாலும் நாம் தொடர்பில் இருக்கிறோம் என்று சந்தோஷ படுவேன்

    மற்றும் வருகை புரிந்து கருத்து சொன்ன என்றும் ஊக்கமளிக்கும் தனபாலன் சார் ,வை.கோபாலகிருஷ்ணன் ஐயா ,வெங்கட்ஜீ ,தோழி இளமதி,தோழி உஷா, சகோதரி ராஜேஸ்வரி ,அனனவருக்கும் நன்றி

    வாங்க சேதுராமன் சார் ,வாங்க சகோ கலியபெருமாள் வருகைகும் கருத்துக்கும் மிக்க நன்றி

    பதிலளிநீக்கு
  16. கலக்கிட்டீங்க பூவிழி. நல்ல கதை புதுமையா சொல்லி இருக்கீங்க
    சில விஷயங்களை ரொம்ப ஆராய்ச்சி பண்ணா நிம்மதி போயிடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில விஷயங்களை ரொம்பவும் தோண்டி பார்க்கவும் தைரியம் வேண்டும் அது இல்லையென்றால் நிம் மதியை சுலபமாவும் எடுத்துக்கலாம் வருகைக்கு நன்றி

      நீக்கு
  17. என்ன சொல்றீங்க? கடவுள் இருக்கார்னா? இருந்துட்டுப் போகட்டும்! என்ன இப்போ?

    கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்னு கட்டி அழுங்க! அதனால எங்களுக்கென்ன பிரச்சினை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதுசரி வேணும் சொல்லரவங்களுக்கு தான் அது கடவுள்இல்லையென்றால் இல்லை கடைசியில் கொடுத்தோமே அது என்ன எங்களுக்குனு ஒத்துமையா பேச்சு அப்ப இப்படிதான் இருக்கனும்

      'ஒண்ணா இருக்க கத்துக்கணும்
      இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
      காக்கா கூட்டத்தை பாருங்க
      அதுக்கு கத்து கொடுத்தது யாருங்க
      ஒண்ணா இருக்க கத்துக்கணும்
      இந்த உண்மையை சொன்னால் ஒத்துக்கணும்
      வீட்டை விட்டு வெளியே வந்தால் நாலும் நடக்கலாம்
      அந்த நாலும் தெரிஞ்சி நடந்துகிட்டா நல்ல இருக்கலாம்
      உன்னைக்கேட்டு என்னைக்கேட்டு எதுவும் நடக்குமா
      அந்த ஒருவன் நடத்தும் நாடகத்தை நிறுத்த முடியுமா
      ……… ஒண்ணா இருக்க கத்துக்கணும்……….

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மிஸ்டர் ஒய்ட்

      நீக்கு
  18. இந்தாங்க எதிர் பாட்டு!

    உலகம் ஆயிரம் சொல்லட்டுமே!
    உனக்கு நீதான் நீதிபதி
    மனிதன் எதையோ பேசட்டுமே
    உன் மனசைப் பார்த்துக்கோ நல்லபடி!

    (இங்கே கவனிச்சுப் பார்த்தால் ஒண்ணா இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்கிற பொருள் அடங்குமாக்கும்! :))) )



    பூவிழி!

    உங்களோட பாட்டுக்குப் பாட்டு (எதிர்பாட்டு) பாட முடியாதுனு நினைக்காதீங்க! நாங்களும் பாடுவோமாக்கும்! :)))

    இறைவன் இருக்கின்றானா? மனிதன் கேட்கிறான்
    அவன் இருந்தால் உலகத்திலே எங்கே வாழ்கிறான்?

    இதுக்கு பதில் பாட்டுப் பாடுங்க! நான் தொடருறேன்.

    ஆமா யார் அந்த "ஒய்ட்"? :))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிஸ்டர் ஒய்ட்O.o இன்றைய பதிவில் (சொல்லுறதை சொல்லிபுட்டேன்) உங்களுகான எதிர் பாட்டு இருக்கு பாருங்க கடைசியில்

      நீக்கு