வியாழன், 7 டிசம்பர், 2017

புத்திசாலி யார் ? -2

புத்திசாலி யார்?  (முதல் பகுதியின் லிங்க் இது) என்ற கதையை தொடர்கிறேன் 
முதல் பகுதிக்கு கருத்து சொன்ன அனைத்து  தோழமைக்கும் நன்றி 
நான் சொல்ல நினைப்பது மற்றவருக்குள்ளும் இருக்கிறதா அப்படி இருந்தால் படிப்பவர்களுக்கு  வழி காட்டுதலாக  இருக்கும் பல பேர் ஒருமித்த கருத்தை வழிமொழியும் போது 
இனி தொடர்ந்து  அலெக்ஸின் போக்கையும் அதனால் நவீனனின் மாற்றத்தையும் இங்கு   பெற்றோரின் நடவடிக்கையும் பார்க்கலாம் ..


புத்திசாலி யார்? -2

“அதுவா..என் டாவு” 



“டாவா..?” தொடரும் ....


“அமாம் என் கிளாஸ் தான்  உனக்கு  புரியாது  போலாம்.. இதோ பார் நவீன் நம்ம செய்ர சீக்கிரட் நமக்குள்ள மட்டும் தான் இருக்கணும்… வீட்டுலையோ வேற எங்காயாவது  சொன்னே நா வேற டைம் மாத்திக்குவேன் நீயே போயிகோனு..” 


“ஐயோயோ வேண்டாண்ணா யார்கிட்டயும் உங்களை  பற்றி  எதுவும் சொல்லமாட்டேன். நீங்க என் தோஸ்த்துண்ணா.”


இருவரும் hi fi போட்டு கொள்கிறார்கள்.


நவீன் வெற்றிகரமாய் கோச்சிங்கில் சேர்ந்து ஒரு மாதம் கடக்கிறது. தினமும் இரண்டு ரோட் கிராஸ் செய்தவுடன் அலெக்ஸ்க்காக நிற்பதும் நடக்கிறது. கோச்சிங்கில் வசதி படைத்த மேல் மட்ட பசங்களும் வருகிறார்கள். ஒரு சிலபசங்க ஒரு குரூப் போல் தனியாக இருக்கிறார்கள், பிராக்டிஸில் தவறு செய்தால் இவர்களை அதிகம் திட்டும் மாஸ்டர் அவர்களை அந்தந்தளவுக்கு திட்டுவதில்லை. நவீன் சிறுவன் என்பதால் லேசான பிராக்டிஸ் மட்டுமே.


வீட்டில் நவீனின் ஆட்டம்பாட்டம் குறைகிறது. எப்போதும் அலெக்ஸ் கூடவே சுத்தி கொண்டு திரிகிறான் அவனோடேயே அவன் வீட்டில் இருக்கிறான், இரவு உணவுநேரம் வரை படிப்பும் அங்கேயே செய்கிறேன் என்று சொல்கிறான், ரேணுவும் சரி டீச்சர் வீட்டில் தானே அவன் படிக்கும் போது இவனும் அமைதியாக படிப்பான் தொந்தரவு என்றால் சொல்லுவார்கள் என்று விட்டுவிடுகிறாள்.


இதற்க்கு  நடுவே  சனி ஞாயிறு அலெக்ஸ் கிட்டார், ஸ்விம்மிங் கிளாஸ் போகிறான் என்று நவீனும் சேர்ந்து கொள்கிறான். சுந்தரிடமும் இதே காரணத்தையே கூறிவிடுகிறாள் “விடுங்க, வீட்டில் இருந்தால் எப்போதும் டிவி முன்னாடியே உட்க்கார்ந்து இருப்பான், இப்போ அதவிட்டானே அதுவே போதும், ஹோம் வொர்க் எல்லாம்  அவனே செய்துவிடுகிறான் அந்த பையனை கேட்டு.”, என்று இவர்களாக சமாதானம் ஆகி கொள்கிறார்கள். எல்லா இடத்திற்கும் அலெக்ஸே  சேர்கிறான்..... பணம் மட்டும் கொடுக்கிறார்கள்.



இரண்டு மாதம் கழித்து ஒரு நாள் ரோடில் எப்போதும் போல் நிற்கும் போது “நவீன் ஒரு ஹெல்ப் பண்ணுறியா..?”

”சொல்லுண்ணா” 


“அந்த பொண்ணுகிட்ட இந்த லெட்டரை கொடுக்கிறியா”


“நானா..?”


“ம்ம் போ சீக்கிரம் அவ கிராஸ் பண்ணுறாப்பாரு”,


நவீன் அந்த பெண்ணிடம் ஓடி போயி லெட்டரை கொடுத்து அந்த அண்ணா கொடுக்க சொன்னாங்கக்கா என்று திணித்து விட்டு ஓடியே வந்துவிடுகிறான்.


இருவரும் சைக்கிளில் ஏறி பறந்து விடுகிறார்கள். 


அடுத்த நாள் நவீன் அலெக்ஸை தேடி போகும் போது அவன் சோகமாய் படுத்து இருக்கிறான் அழுது கொண்டு..”என்னண்ணா ஏன் இப்படி இருக்கீங்க.. உடம்பு சரியில்லையா..? கிளாஸ் வேண்டாவா..?”


“ம்ம் போலாம்..” அவன் சோகம் தாங்காமல் “என்னண்ணா என்கிட்ட சொல்லுங்க” “டேய் அந்த பொண்ணு கோச்சிக்கிட்டு டீச்சர் கிட்ட சொல்லிடுவேனு  சொல்லுதுடா”


“ஐயையோ அப்புறம்?!”


“சொன்னா சொல்லிக்கிட்டும் டா.. ஆனா என்ன லவ் பண்ணமாட்டேனு சொல்லிடுச்சுடா.. அதுதான் செம கடுப்பா இருக்கு.. இன்னிக்கு மூட் இல்லைடா, நாளைக்கு கோச்சிங் போலாம்.” 


“ஓகேண்ணா.”


ரூமைவிட்டு இரவு உணவுக்கு கூட வெளியே வராமல் படுத்துவிடுகிறான், ரோஸியும் அவள் வேலை பளுவின் காரணமாய் அவன் உள்லிருந்தே பதில் அளித்ததை கேட்டுவிட்டுவிடுகிறாள். 


அடுத்த நாள் சனிக்கிழமை காலையிலேயே  கோச்சிங் இருந்ததால் இருவரும் கிளம்புகிறார்கள்.


சனிக்கிழமைகளில் கோச்சிங்கில் இருக்கும் பசங்க டீமாய் பிரிந்து மேட்ச் விளாயாடுவார்கள் இதில் மேல்மட்ட பசங்க டீமை தீர்மானிப்பார்கள். தோற்ற டீம் ஜெயித்தவர்களுக்கு சின்னதாய் பார்ட்டி போல் கொடுக்க வேண்டும். ரொம்ப சின்ன பசங்களை சில நேரம் இதில் ஒதுக்கிவிடுவார்கள்.


இன்று கோச்சிங்கில் “டேய் என்னடா ஆடுறா ஸ்பின் பாலை எப்படி ஹாண்டில் செய்யணும்னு சொன்னேன்.. அறிவுகெட்ட மூதீ.. கண்ணை என்ன பிடரியிலா வச்சிருக்க.. போடா பிச்ச விட்டு வெளியே போயி உட்கார்ந்து பாரு..இரிடேட் பண்ணுறதற்குகே வருதுங்க..” மாஸ்டர் அலெக்சின் முகத்தை பாராமல் திட்டி கொண்டே கைதட்டி அடுத்தவனை கூப்பிட்டுகொண்டே போகிறார்.. எல்லோரும் அலெக்ஸையே பார்கிறார்கள். 


அவனுக்கு வெட்கமாய் போயி அழுகை வந்துவிடுகிறது. கிரவுண்டயே விட்டு ஓரமாய் போகிறான் தனியான இடத்திற்கு போயி உட்கார்ந்து அழுகிறான்.


அப்போது அங்கே  வருகிறார்கள் இரண்டு பேர், கரீம் ,கிஷன்சிங் “நல்ல தெரியுமா இங்கதான் வர சொன்னானா அந்த பையன்..? ..ம்ம்.. இது எதோ கிரவுண்டு மாதிரி இருக்கு”...


“போன்ல இங்கேதான் இருக்கானு காமிக்குது”



அப்போது அங்கெ ஓடிவருகிறன் அபிஷேக், “பாய் ரெடியா?”




தொடரும் ...
ஏற்கனவே மனசுணக்கத்தோடு இருக்கும் அலெக்ஸ் மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறானா என்பதை இனி ......


இந்த பகுதியில் நடந்த விஷயத்திற்கு  உங்கள் கருத்துக்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கிறேன்...

முடிந்தால் நேரம் ஒதுக்கி இதையும் கேளுங்கள் மிக அழகா இன்றைய நிலைமையை எடுத்துரைத்துள்ளார் 
















24 கருத்துகள்:

  1. அம்மா அப்பாவின் பொறுப்பற்ற தன்மையால் குழந்தை நாசமாக போகப் போகிறதுக்கு அறிகுறி இந்த பதிவில் தெரிய ஆரம்பித்து இருக்கிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆமாம் ஆரம்பித்துவிட்டது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  2. மன்னிக்கவும் கதைகளை அதிகம் படிப்பதில்லை முதுமை இயலாமை!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க புலவர் ஐயா மன்னிப்பு என்ற வார்த்தையெல்லாம் எதற்கு புரிந்து கொள்ளும் பக்குவத்தை வளர்த்துவிடுங்கள் அதுவே போதும் ஐயா சிரம படுத்திக்க வேண்டாம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. ஓ படிக்க படிக்க மனம் இலேசாகப் பதற வெளிக்கிடுகிறது...

    இன்னொன்று எப்பவும் பிள்ளைகளை, தம் வயதினருடன் தான் நண்பராகி சுற்றி வர விட வேண்டும்.. வயதில் மூத்த பிள்ளைகளுடன் நட்பாகி சுற்ற விடுவதும் தப்பு.. பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதனால், அவர்களுக்கு மகன் இப்படி தம்மை தொந்தரவு செய்யாமல் இருப்பது ஒரு விதத்தில் வசதி ஆகி விட்டது.... நல்ல குடும்பத்துப் பிள்ளையோடுதானே சேர்ந்து திரிகிறார் என எண்ணுகின்றனர் போலும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அதிரா இனியும் பதற்றம் தான் வரும் நீங்கள் செய்வது ஒரு விதத்தில் சரிதான் நல்ல வீட்டு பிள்ளையுடன்தானே என்பது சரிதான் ஆனாலும் இன்ரைய நிலைமைக்கு கண்ணையும் காதையும் கருத்தையும் திறந்து வைத்து கொள்ள வேண்டும் பிள்ளைகள் விஷயத்தில்

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. எல்லாம் சோம்பலே மகனின் செயலைக் கவனிக்க நேரமில்லை காரணம் வேலைப்பளு..... மேலும் டி.வி. சீரியல் காணுதல் செல்போன் நோண்டுதல்....

    தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி அதுவும் ஒரு காரணமாய் தான் இருக்கிறது இன்று வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. ம்ம்ம்.. இன்னும் என்ன நடக்கப் போகிறதோ... படிக்கக் காத்திருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ படிக்கிறீர்களா ..... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. பதில்கள்
    1. வாங்க நண்பா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  7. இப்போது அலெக்ஸுக்குத் தேவை பெற்றோரின் அரவணைப்பும், புரிதலும், கவுன்சலிங்கும். அவர்கள் அவனிடம் திட்டாமல் அன்பாய் தோழமையாய் வழி நடத்துதல் மிக அவசியமாகிப் போகிறது. நம் குழந்தைகள் மீது நம்பிக்கை வைப்பது மிகவும் நல்லதே. ஆனால் அதே சமயம் அவர்கள் தவறான பாதையில் சென்றுவிடக் கூடாது என்பதிலும் ஒரு கண் இருக்க வேண்டும். இது சந்தேகம் அல்ல. இரண்டிற்கும் மயிரிழை வித்தியாசம் தான். ஆனால் சந்தேகம் என்ற வார்த்தை குழந்தைகளின் மனதில் படிந்துவிடாமல் ஒரு சர்க்கஸ் கயிற்றின் மீது நடப்பது போல பெற்றோர் குழந்தைகளின் பருவ வயதில் நடக்க வேண்டும். அது காலத்தின் கட்டாயம். அதற்காகப் பழையகாலம் ரொம்ப நல்லாருந்துச்சு, இப்ப மோசமாகிடுச்சுனு சொல்ல மாட்டேன். என் கிராமத்தை எடுத்துக் கொண்டால் உருப்பட்டு வந்தவர் வெகு சிலரே. நான் சிறு பிள்ளையாக இருந்த போது சொல்கிறேன். அதே சமயம் இப்போது நல்ல முறையில் முன்னேறி வருபவர்களும் இருக்கின்றனர். எல்லா காலத்திலும் நடப்பதுதான் இப்போதும் நடக்கிறது. இப்போது மீடியாவின் தாக்கம் அதிகம் இருப்பதால் வெளியில் தெரிகிறது அப்போது தெரியாமல் இருந்தது....வாழ்க்கை முறை மாற்றங்கள் என்று பல சொல்லலாம்...நான் சமீபத்தில் கல்கியின் கதை ஒன்றை வாசிக்க நேர்ந்தது அந்தக் காலக்கட்டத்திலும் ஒரு வசனம் வருது...காலம் கெட்டுவிட்டது என்று....அப்படி என்றால் அதே தானே இப்போதும் சொல்கிறோம்...

    எந்தக் காலமாக இருந்தாலும் சரி பெற்றோரின் அரவணைப்பும் புரிதலும், அன்புடன் கூடிய வழிநடத்தலும் இருந்தால் பிரச்சனைகள் இல்லை..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்ககீதா சிஸ் உண்மை ஒரு கம்பி மேல் நடப்பது போல் தான் இருக்கிறது இன்று பிள்ளைகள் வளர்ப்பு பலருக்கு, எப்போதும் காலத்தை குற்றத்திற்கு ஆளாக்கி வருக்கிறோம் நல்ல விளக்கங்களோடு நீண்ட கருத்துரை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  8. உங்க பார்வையில் ஒரு தொடர்கதைபோல தொடர்கின்றேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ சிறுகதைதான் நான்தான் கருத்துக்கள் தேவையென்று பிரித்து கொடுத்துளேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  9. வயது கூடியவர்களுடன் நட்புக்கொள்ளும் போது அது பல நேரத்தில் தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்கி விடும். அடுத்த நிகழ்வு அறியும் ஆவலுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை சிலநேரம் சில பேருக்குத்தான் அப்படி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  10. நவீனனின் பேரன்ட்ஸ் பொறுப்புகளை தட்டி கழிக்கும் டைப் .நமக்கு தொல்லை இல்லேன்னா எப்படி போனாலும் ஓகே என்று இருக்காங்க ..விளைவு விபரீதமாகும் என்பதை அறியாமல் :(
    தொடர்கிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஞ்சு அதீத நம்பிக்கையும் அலட்ச்சியமும் சில நேரம் காலை வாரிவிடும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  11. இதில் சில நண்பர்கள் அரசியல் செல்வாக்கு உடையவர்கள் கூட வரும் இளைய நண்பர்களை தவறாக உபயோகப்படுதும்கதை ஒன்று நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க GMB சார் படித்தீர்களா..... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  12. பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்குமான இடைவெளி தற்சமயம் அதிகரிப்பது கவலைக்கு உரிய விசயம்

    பதிலளிநீக்கு