திங்கள், 22 ஏப்ரல், 2013

காதல் நெறி




காதல் நெறியாம்
கவிதை படைப்பது
என்னவென்று
விழைந்தால் அது
காவியமாய்
கண்ணை கட்டுது
இட்டுகட்டி நிரப்பலாம்
என்றால் ....
இலக்கணம் உதைக்குது
இடைவிடாது சிந்தித்தாலும்
இயல்பை ....
இயம்ப முடியவில்லை
இறுதியில்

காகிதசட்டியில்
எழுத்துகளை அள்ளியிட்டு
வதக்கி விட்டேன்
பதார்த்தமாய் ...
பதமாய் வந்ததா தெரியாது

பரிமாறிவிட்டேன் 
கூட குறைச்சல் இருந்தால்
ஊறுகாயாய் என்
காதலை இட்டு நிரப்பிவிடுகிறேன்
ஏற்று கொள் என் காதலை 
  
  

15 கருத்துகள்:

  1. அட அட அட ..கலக்கல் போங்க..எந்த வரியைச் சொல்வது..ஒவ்வொன்றும் அருமை..காதல் சொல்ல காத்திருப்பவர்கள் உங்கள் கவிதையைப் பயன்படுத்தி வெற்றியும் காணலாம் :) வாழ்த்துக்கள் பூவிழி!

    பதிலளிநீக்கு
  2. எனக்கு பிடித்ததுகாதல் & ஊறுகாய் . ஊறுகாய் எல்லோரும் அதை தொட்டு சாதம் சாப்பிடுவார்கள் ஆனால் நானோ சாதத்தை தொட்டு ஊறுகாய் சாபிடுவேன். அது

    பதிலளிநீக்கு
  3. காதல் வெற்றிபெற வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  4. /// காகிதசட்டியில்
    எழுத்துகளை அள்ளியிட்டு
    வதக்கி விட்டேன் ///

    பதமாக மட்டுமல்ல... இதமாகவும் வந்து விட்டது...

    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  5. கவிதைச் சமையல் சுவையாகவும்
    மணமாகவும் இருந்தது
    கருவேப்பிலையாய் மனம் சேர்த்தது
    காதல் அல்லவா
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. பூவிழி... சகோ வெங்கட் நாகராஜ் உங்களை கௌரவப்படுத்தி பூங்கொத்து தந்திருக்கின்றார்... கௌரவிக்கப்பட்டமைக்கு என் வாழ்த்துக்கள்!
    இங்கு கவிதை பிரமாதம். காகிதச்சட்டியில் வதக்கப்பட்ட வார்த்தை.
    அட அட... என்ன கற்பனை... அற்புதம்! ரொம்பவே ரசித்தேன்.
    இனிய வாழ்த்துக்கள் தோழி!

    காகிதச்சட்டியில் வதக்கிய வார்த்தை
    பூத்தது பூக்களாய் பூவிழி...
    வதக்கியது வார்த்தைகள் என்னும்
    சோளமுத்துக்களை...

    பதிலளிநீக்கு
  7. காதல் உள்ளத்தை பறை சாற்றுகிறது கவிதை.
    காதல் தூது செல்ல உகந்த கவிதை இது.

    பதிலளிநீக்கு
  8. // காகிதசட்டியில்
    எழுத்துகளை அள்ளியிட்டு
    வதக்கி விட்டேன்
    பதார்த்தமாய் ...
    பதமாய் வந்ததா தெரியாது
    //
    யதார்த்தமாய்..
    இதமாய்..!

    பதிலளிநீக்கு
  9. நான் கவிதை எழுதியது கிடையாது..ஆனால் இப்பொழுது காதல் சமைக்க எனக்கும் ஆசை வருகிறது.

    பதிலளிநீக்கு
  10. காகிதசட்டியில்
    எழுத்துகளை அள்ளியிட்டு
    வதக்கி விட்டேன்
    பதார்த்தமாய் ...
    பதமாய் வந்ததா தெரியாது//

    சூப்பர்ப்....

    பதிலளிநீக்கு
  11. ஊறும் காய் ஊறுகாயாம். இங்கே மனத்துள் ஊறும் காதல் சுவைமிக்க ஊறுகாயாய் ஆனவிதம் அருமை. சப்புக்கொட்டிக்கொண்டு காத்திருக்கிறது காதலர் உள்ளம்! அருமை. பாராட்டுகள் பூவிழி.

    பதிலளிநீக்கு
  12. காகிதச் சட்டியில் வார்த்தகளை இட்டு வருத்தீர்களா?....

    நல்ல கற்பனை. கவிதையும் அழகு!

    சமைக்கத் தெரிந்த எனக்கு காதலை சமைப்பது எப்படி எனத் தெரியவில்லை! :)

    பதிலளிநீக்கு
  13. வழியை சொல்லிடேனா! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழி கிரேஸ்
    உண்மைகள் எப்பவும் உண்மைதான்
    நன்றி கவிஞ்சரே
    தனபாலன் சார் உங்களுக்கும் பிடித்தா நன்றி
    சகோ ரமணி வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    நன்றி தோழிஇளமதி இரண்டும் பாராட்டபட்டதற்கு
    ராஜி அனைவருக்குள்ளேயும் இருப்பதுதான் வருகைக்கும் கருத்துகும் நன்றி
    ஆம் உஷா பல பேர் எழுதும் காதல் கவிதகள் பார்க்கும் போது நமக்கு என் இவ்வாறு வருவதில்லை என்று எண்ணியதுண்டு அவை இங்கு வார்த்தைகளாய் வருகைகும் கருத்துக்கும் நன்றி
    வாங்க கலியபெருமாள் சார் காதலும் சமையல் போல்தான் கவனமுடன் சமைக்கணும்
    வாங்கவாங்க மனோ சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
    நன்றி தோழி மஞ்சரி வருகைக்கு தொட்டு கொள்ளவா உன்னை தொட்டு கொள்ளவா என்றஊர்காய் விளம்பரம் போல் இருந்ததா
    வாங்க வெங்கட்ஜீ சமைப்பதே யாருகாக? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  14. காதலில் பிறக்கும் கவிதைக்கு இலக்கணமெல்லாம் வேண்டாம்.அதிலுள்ள உணர்ச்சியே போதும்!

    பதிலளிநீக்கு
  15. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    பதிலளிநீக்கு