வியாழன், 4 ஏப்ரல், 2013

அன்னம் விடு தூது


சகோ திரு வெங்கட்நாக ராஜ் அவர்கள்  March20,2013
அன்று சுதேசமித்திரனின்  ஓவியத்தை பார்த்து அதற்கு தகுந்த  கவிதைகள் எழுதி  அழைப்பு கொடுத்திருந்தார் நண்பர்களுக்கு அந்த
 ஓவியத்திற்கு ஒளியுட்ட சொன்னீர்கள்
புலம்பிவிட்டேன் கண்டவுடன்
பதுங்கிவிட்டேன் பகிர பயந்து
புலம்பல்கள் எல்லாம் புகல்வீரோ ...............
பதித்துவிட்டேன் தைரியத்துடன்
கவிதை சாம்ராஜ்யங்களின் நடுவே
சிற்றெறும்பாய் நான் கடிக்க வந்துவிட்டேன்
பொறுத்தருள்வீர் நண்பர்களே  
அழகான
ஓவிய தாரகையே
மயக்கும் மாலை   
இள வெயிலில்
மாலை தென்றல்
மடி தவழ
யாரோடு உறவாட நீ
வந்தாய் ........

பறவைகள் இன்னிசைக்க
தாமரைகள் மலர காத்திருக்க
வானுயர்ந்த மரங்களின் நடுவே
தன்னந்தனியாய் தேவமங்கையவள்
மதிவதனம் சிந்தனையின் வசமிருக்க


ஆற்றங்கரையின் பசுமைமடியினில்
அமர்ந்த நேரம்
வெண்ணிற சிறகு அடித்து  
உன்னை காண தேவதைகள் .....
இறங்கியதோ அன்னமாய் 
வான்மீதினில் இருந்து
உன்னோடு உரையாட
மான்விழியாள் மருண்டு பார்க்க

‘ஏனடி இந்த விரத கோலம்
யாருக்காக இந்த வேஷம் என்றதோ
உன் சாகாகள்

‘என் செய்வேன் தோழி ......
பேதையாய் மாறி பெரும்துயர்
அடைந்துவிட்டேனடி
இந்த பாரினில் உள்ளவன் மேல்
காதல் கொண்டு கலந்துவிட்டேன்
மாலையிட மாறன் அவன் வருகிறேன் ...
காத்திரு என்றான்
சென்றவனை காணோம்
இங்கு வருவான் இன்று வருவான்
என காத்திருக்கிறேன் ...............
தூது செல்வார்களோ என்று .......
வியப்போடு அன்னங்கள் அவள் விழி நோக்கியதே !

13 கருத்துகள்:

  1. அருமையாகவே எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் பாராட்டு உங்களிடமிருந்து கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி ஐயா மேலும் வந்து பார்வையிட்டு கருத்து சொல்லி வழி நடத்துங்கள்

      நீக்கு
  2. கவிதை நன்றாக இருக்கிறது.
    தேவதைகள் .....
    இறங்கியதோ அன்னமாய் //

    தேவதைகளாய் வந்த அன்னங்கள் உதவட்டும் தேவமங்கைக்கு.

    வாழ்த்துக்கள் கவிதைக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சகோதரி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      நீக்கு
  3. நல்ல கற்பனை. அழகிய கவிதை. ரசித்தேன். வாழ்த்துக்கள் தோழி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி தோழி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்

      நீக்கு
  4. தூது வரிகள் அருமை...

    தொடர வாழ்த்துக்கள்....

    (வியப்பபோடு - வியப்போடு)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கவனித்து வழி நடத்தலுக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. நல்ல வரிகள்
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாருங்கள் தோழி வாருங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேலும் உங்கள் கருத்தை வந்து சொல்ல விழைகிறேன்

      நீக்கு