மழை தன் இருப்பிடங்களை தேடி அலைகிறது .....
எங்கேடா??? என் குளங்கள்.......
எங்கேடா???? என் ஏரிகள் ......
தன் இருப்பிடம் கிடைக்காத சோகத்தில்.......
தெருக்களில் அலைந்து கொண்டு இருக்கிறது ........
யாரோ நம்மை போல் இதை பகிர்ந்திருந்தார் முகநூலில் கவிதையாய் பெயரை படிக்காமல் விட்டுவிட்டேன் .....எவ்வ்ளவு உண்மை இந்த வரிகளில் ....
அந்த சோகமே கோபமாய் தாக்கிடுமோ என்பது போல் கண்ணுர்றேன் இன்று
மழையின் போக்குவரத்து இன்று சென்னையில் இன்று நான் காலையில் பிராட்வே வரை செல்ல வேண்டி வந்தது போகும் போது கண்டது மழையின் தாண்டவம் என்று சொன்னால் கடவுள் இறங்கி வந்து பளாரென்று அறைந்துவிடுவார்...... மக்களின் மேம்போக்குத்தனம் ஆடுகிறது ஆடிவிட்டது எல்லா பக்கமும் இரண்டு மாதத்துக்கு முன் தண்ணீருக்கு காக்காயை போல் பறந்தது பறந்து ஆடியது கொடுமையை அனுபவித்தது ....இன்று தண்ணீரை கண்டு பயந்து நடுங்குகிறது எங்கே செல்கிறோம் சரி செய்யமுடியாத இடத்தை நோக்கி நகர்ந்துவிட்டோமோ என்று பயம் வருகிறது.
மழை நீர் சேகரிப்பு நல்ல திட்டம் ஆனால் அது முழுவதும் எல்லா இடத்திலும் சரியாக பராமரிக்க படவில்லை என்பது தான் கண்முன் பார்க்கும் உண்மை நிலவரம் இதற்கு யார் காரணம்? மக்களாகிய நாம் தான் நாமே நம்மை கவலைக்கிடமாக வைத்து கொள்கிறோம் ஆக்கிவிட்டோம். மேலும் அதில் முழுவதும்மண் சேர்ந்து அடைத்து கொள்கிறது கடலில் போயி சேர்வதற்கு பதிலாய் ஒவ்வொரு நகரிலும் பொதுவாய் ஒரு அல்லது இரு பொது இடத்தை தேர்ந்தெடுத்து பெரிய அளவில் மழை நீர் சேகரிப்பு கட்டி பராமரிக்கலாம் என்று தோன்றுகிறது .தண்ணீர் கஷ்டமும் கொஞ்சம் குறையும்
இன்னுமொன்று குப்பை அதுவும் மார்கெட் என்று ஒன்று இருக்கும் இடங்களில் நடக்கும் அடடாகாசம் தாங்கவில்லை எவ்வ்ளவு தான் இடங்களை அவர்களுக்க ஒதுக்கி வைத்தாலும் அவர்கள் அந்த இடத்தை சரிவர பயன் படுத்துவதில்லை நடை பாதையிலேயே போட்டுவிடுவதில் அவர்களுக்கு என்ன சந்தோசம் வருகிறது என்று புரியவில்லை குப்பை லாரிகள் வரவில்லையென்றால் அந்த இடத்து மக்கள் படும் அவதி சொல்லி வடிக்க முடியாதவையாக இருக்கிறது ஒழுங்கீனம் ஒழுங்கீனம் என்பதை வாசல்களாக ஆகி கொண்டோம் இதற்கு சப்பைக்கட்டாய் அரசியல் சூதாடங்கள் மேற்கோள்கள்
அடுத்து அவர் அவர்கள் வீட்டு வேலைகளுக்கு நோண்டப்படும் ரோடுகளை திரும்பவும் செப்பனிட மெனக்கெடுவதில்லை இது சுயநலம் தானே ஒவ்வொருவருக்கும் தோன்ற வேண்டும். தன் வீடு இருக்கும் ரோட் நல்ல இருக்க வேண்டுமென்று. வீட்டினுள்ளே மட்டும் சுத்தம் பத்தம் வெளியே நாற்றம் பற்றி கவலையில்லை வெறுமனே புலம்பல் நாட்டை குறை கூறி அடுத்தவரை குறை கூறி ....
மேம்பாலங்கள் கட்டி போக்குவரத்தை வழிநடத்தப்பட்டது பலன்களுக்கு பாலத்தின் அடியில் என்ன நிலை இன்று எல்லோருமே பாலத்திலே செல்ல முடியுமா ? நாம் புலம்பும் புலம்பல் எல்லாத்துக்கும் வரிகட்டுறேனே அப்புறம் திரும்பவும் நானே என்னை பார்த்து கொள்வதா ? என்ற கோபமான அலட்சியம்....... சரி இதற்கு முடிவு இப்படித்தான் ஒன்று கூடி அனுபவிப்போம்..... ஆனால் ஒன்று கூடி போராடமாட்டோம் நிற்கமாட் டோம் உண்மையாக.... யாரவது பார்த்து கொள்ளட்டும் நான் கை மட்டும் தூங்குகிறேன் எனக்கு நேரமில்லை என்று ஒதுங்கி ஓடுவோம். ஆம்உங்களுக்கு நேரமில்லை வாழ........ உன்னை நோக்கி நோயிகளின் அணிவகுப்பு உன் நேரமின்மைக்கு பரிசாய்
பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்
நானும் ஒதுக்கிட்டு வழிவிட வேண்டும்
என்ற நிலை இனி வருமா .................
சிறுவயதில் மழை வந்தால் குதித்து நனைந்து காகித கப்பல்விட்டு மகிழ்ந்த காலமெல்லாம் போய்விட்டது....... இன்று மழை வந்தால் ஐயோ! மழை நீர் வடியாதே..... அதனுடன் எந்த சாக்கடை நீர் கலக்கிறதோ பயம் ஐயோ கூரையில்லாத மக்கள் என்ன செய்கிறார்களோ...... என்ற பயம் மட்டுமே இன்று சென்னைவாசியாய் ஆகி போனதில் பலபேருடைய ஆதங்கம் ,ஏக்கம் .....மழை புலம்பலில் இருந்து விடிவு வருமா....... யார்? தரவேண்டும் என்ற கேள்வியை தாங்கி நானும்.......
உள்ளத்தில் உள்ளதை உள்ளபடி சொல்லி இருக்கிறீர்கள்! மக்கள் தான் மனம் மாற வேண்டும்! :(
பதிலளிநீக்குவாங்க சிஸ் நாமே நம் நலனை பற்றி கவலை படவில்லையென்றால் யார் படுவார்கள் நமக்காக
நீக்குசீக்கிரமே சரியாகி விடும்! ஜனவரி வரட்டும்.தண்ணீர் யாரிடம் கேட்போம்? கர்நாடகாவில் கேட்போமா? ஆந்திராவில் கேட்போமா என்று வந்து விடும்! கவலைப்படாதீர்கள்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீ ராம் அது மிக நீண்டநாள் கொடுமை இருக்குமே
நீக்குநமது கஷ்டங்களுக்கு நாமே காரணம்.
பதிலளிநீக்குவாங்க ஜி உண்மை அதுதான்
நீக்கு015 இல் பட்டும் இன்னும் விழிப்புணர்வு மக்களுக்கு வரலை :(
பதிலளிநீக்குமனசுக்கு சங்கடமா இருந்தது இன்றைய பத்திரிக்கை வலைப்பக்கங்களின் புகைப்படங்கள் ..எவ்ளோ நீர் :( பாவம் சென்னை மக்கள்
உண்மை அஞ்சு நேரில் பார்கும் போது மலைப்பாய் இருந்தது பாரிஸ் கார்னரில் பிளாட்பாரத்தில் வசிக்கும் மக்களை பார்த்து மிகுந்த வருத்தமாய் இருந்தது
நீக்குபட்டாலும் உணரவில்லை எனும் போது என்ன செய்ய முடியும்? ஆனால் மக்கள் மீது நிறைய தவறுகளும் இருக்கு பூவிழி. ஹவுசிங்க் போர்டி குடிசை மக்களுக்கு வழங்கப்பட்டால் அவர்கள் யாரும் அங்கு சென்று இருப்பதில்லை. அதை வாடகைக்கு விட்டுவிட்டு குடிசையிலேயே தான் வாழ்கிறார்கள். இது அரசு செய்யும் நல்லதை ஏமாற்றுவதுதானே...இப்ப தண்ணிய சேக்காம அப்புறம் தண்ணீர் பிச்சை கேப்போம் இதான் நடக்குது...
பதிலளிநீக்குகீதா
வாங்க சிஸ் நீங்க சொல்வது சரி தான் அவர்களின் கடன் சுமை அப்படி செய்ய வைக்கிறது புரோக்கர்களால் நெருக்கப்படுகிறார்கள் வட்டி மேல் வட்டி இதை செய்ய தூண்டுகிறது ஆசையிருந்தும் நான் நேரில் கேட்டு இருக்கிறேன்அவர்கள் மீது திணிக்கப்படும் புரோக்ராக்களின் நச்சரிப்பை
நீக்குஇன்றைய பல கஷடங்களுக்கு நாமே காரணம். வேறென்ன சொல்ல.
பதிலளிநீக்குவாங்க சகோ உண்மை
நீக்குமக்கள் மனது வைக்காத வரை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. கிழே உள்ள கருத்து இன்று நான் பேஸ்புக்கில் பதிந்தது
பதிலளிநீக்குஇங்கேயும் பதிந்து செல்கிறேன்
அரசின் மெத்தனமும் அதிகாரிகளின் மெத்தனமும்தான் சென்னையில் மழை நீரால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு காரணம் என்று மக்கள் குற்றசாட்டாம். ஆமாய்யா இவங்கதான் மிக பொறுப்போடதான் பிக்பாஸை பார்த்து கொண்டு ஒவியாவா ஜுலியா என்று விவாதித்து கொண்டு இருந்தனர். என்னமோ அவங்கதான் வந்து இந்த பிரச்சனையை தீர்த்து வைக்கப் போவது மாதிரி. போங்கடா பொறுப்பற்ற வெண்னைங்களா உங்களுக்கு எல்லாம் இந்த வெள்ளம் போதாதுடா சுனாமிதாண்டா வரணும்
வாங்க truth நெத்தியடி
நீக்குநிறையத் தகவல் அறிகிறேன்... இக்காலத்தில் கடவுள்.. மனிதருக்கு, வளர்த்தால் குடும்பி அடிச்சால் மொட்டை என்பதுபோலவே அனைத்தையும் பண்ணுகிறார்...
பதிலளிநீக்குவாங்க அதிரா வச்சா குடுமியும் பெரிசாத்தான் வளர்ப்பாங்க பேஷனா மொட்டை ப்போட்டாலும் அப்ப்டித்தான்னு
நீக்குஉங்க ஆதங்கம் மிக சரியே..
பதிலளிநீக்குதவறுகளை நாம் செய்து விட்டு இயற்கையின் மீது பழிசொல்லும் நிலை....
வாங்க சகோ ரொம்பவே எல்லாவற்றிலும் நாம செய்துவருகிறோம்
நீக்கு