ஞாயிறு, 26 நவம்பர், 2017

மனிதனின் கற்பனை சாலைகளில்.

                 எனக்கு புதியதகவல்..... இது என்னை போல் யாருக்கெல்லாம் இது புதிதோ தெரியவில்லை... அதனால் படித்ததை  பகிர்கிறேன், தெரிந்து கொள்ளுங்கள்..... இப்படியும் நம்பப்படுகிறது 
சாலைகளில் பேய்கள் நீண்ட நெடுஞ்சாலைகளில்  மனித பேய்கள்தான் தொல்லை கொடுக்கிறது என்றால் கொள்ளைகாக.... கொலை என்றெல்லாம் பார்த்தால்...... இங்கு நிஜமாகவே பேய்களின் தொல்லையாம்... சில சாலைகளில் அவை எவையென்று பார்க்கலாமா பயம்மாதான் இருக்கு ஆனா தெரிந்து கொள்ளாமல் விடலாமா ? மனிதனின் கற்பனைகளின் எல்லைகளில் பயணம் செய்வோம் வாங்க 
                                                       


பங்கார்க் கோட்டை.சாலை
பெயரை பார்த்தாலே இங்கு எதோ இருக்கிறதோ என்றபயத்தை கொடுக்கிறது அல்லவா 
பங்கார்க் கோட்டையானது அமானுஷ்ய சக்திகள் நிறைந்ததாக நம்பப்படுகிறது. இந்த சாலையில் செல்லும் போது யாருக்கும் லிபிட்  கொடுக்க கூடாதாம்  ஏனென்றால் லிப்ட் கேட்பது  பேய்யாக இருக்கலாம்   என்பது இந்த சாலையில் பயணித்தவர்கள் கூறும் தகவல்.அதுக்கு எந்த ஊருக்கு போணுமோ பாவம் ஒட்டும் போது டிஸ்ரப் செய்யலைனா பராவாயில்லை 
                                                 
     
கெசாடி காட் சாலை 
சந்தோஷமா சுற்றலா போகலாமென்று கிளம்பினால் இது என்னடா இப்படி ஒரு குண்டு என்று நினைக்காதீங்க  நினைத்தீர்கள் என்றால் எங்கேயும் போகமாடோம் கடைசிவரை  இப்ப பார்ப்போம்....
கோவாவிலிருந்து மும்பை போகணும்னா  கெசாடி காட் நெடுஞ்சாலை வழியை உபயோகிக்க வேண்டி இருக்குமாம் இரவு நேரத்தில் இந்த பக்கம் பயணத்தை தவிர்ப்பது நல்லது என்று சொல்லப்படுகிறது  அப்படி போக  வந்துவிட்டால் .வழியில் வாகனங்களை நிறுத்துவது அறிவுரைக்கத்தக்கதல்ல என்றும்  ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத இந்த பகுதி பார்ப்பதற்கு மிகப் பயங்கரமானதாக இருக்குமாம்
                                                     
டெல்லி - ஜெய்ப்பூர் தேசிய நெடுஞ்சாலை.
நீங்கள் ஆல்வார் வழியாக ஜெய்ப்பூருக்கு செல்ல திட்டமிட்டீர்கள் என்றால் எச்சரிக்கை நீங்கள் தே நெ எ 11 வழியாக செல்லுங்கள். அல்லது நீங்கள் ஆல்வார் வழியாகத்தான் செல்வீர்களென்றால் பேயுடன்தான் பயணிக்கவேண்டியிருக்குமாம் .என்று நம்புகிறார்கள் அப்படி போனா எக்ஸ்ரா ஸ்னேக்ஸ் எடுத்து கொண்டு போங்கள் பேய்க்கு பிடித்ததை கூகிளில் சர்ச் பண்ணவிட்டு 
                                       
கசாரா காட் சாலை.
சுற்றிலும் பசுமையான, இரண்டு புறங்களிலும் புற்கள் நிறைந்த ஒரு சாலை இது. மும்பை - நாசிக் இடையேயான இந்த சாலை மராட்டிய மாநில நெடுஞ்சாலைகளில்  ஒன்று. இது பேய்களின் நடமாட்டம்  இருப்பதாக நம்பப்படுகிறது அடுத்தது 
                                                   
சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலை.
தேசிய நெடுஞ்சாலை எண் 209ல் சத்தியமங்கலம் காடுகள் வழியாக பயணம் சென்றிருக்கிறீர்களா? பொதுவாக காட்டு வழிப் பயணம் என்பது மனதுக்கு ஒரு புத்துணர்ச்சியாகவும். ஒருவித சாகச உணர்வை தருவதாகவும் இருக்கும்.கூடவே திக்  திக்கையும்  கொடுக்கும்   இந்த சத்தியமங்கலம் காட்டு பாதை கேட்கவே வேண்டாம் திகைக்க வைக்கும் திக்திக் நிமிடங்களாக இருக்குமாம் . இந்த காட்டுவழி நெடுஞ்சாலை தமிழகத்தின் மிக அதிக அமானுஷ்யம் பாதிக்கப்பட்ட பகுதியாக கூறுபடுகிறது .

ஐ!! ஜாலி  நாம ஊரில் இல்லையே இப்படியெல்லாம் அப்படினு சந்தோஷ் பட முடியவில்லையே இதோ ......
                                                   

கிழக்கு கடற்கரைச் சாலை.
சென்னையிலிருந்து பாண்டிச்சேரி செல்லும்போது கிழக்கு கடற்கரைச் சாலையில் பல்லாயிரம்பேர் பயணிக்கிறார்கள். இங்கே என்னடா  பேய் வந்துவிடப் போகிறது என்று உங்களுக்கு தோன்றலாம். பேயாலதான என்று புதிர் விளங்கவில்லை . ஆனால் தமிழகத்தில் அதிக அளவில் விபத்து நடக்கும் பகுதி என்று எடுத்துக்கொண்டால், அதில் இந்த சாலை முதலிடத்தில் வந்து உட்கார்ந்துவிடும். ஏன்னென்ற மர்மம் பிடிபடவில்லையாம்  இன்னமும் பல காரணங்களை கற்பித்து கொண்டும் .

படிச்சீங்களா தோழமைகளே நீங்க  இந்த மார்கத்தில் எல்லாம்  பயணித்து இருக்கறீர்களா உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள் இவை உண்மையா ?
காத்திருக்கிறேன் உங்கள் கருத்துக்களை அறிய .....




16 கருத்துகள்:

  1. இந்த வழிகள் எதுவுமே நான் பயணித்தது இல்லை.

    இதே பேய் விடயம் அரபு நாடுகளில் இல்லையே ஏன் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யோசிக்க வேண்டியத்துதான் நம்மைவிட இவர்கள் பெரிய சாத்தான்கள் என்று போகாமல் இருக்கிறதோ

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி

      நீக்கு
  2. ரொம்பவே பயமுறுத்துகிறீர்கள். இந்திரா சௌந்தர்ராஜன் அமானுஷ்ய கதைகள் நினைவுக்கு வந்தன. எனது மாணவப் பருவத்தில் நம்ப ஊர் ஆலமரத்துப் பேய், சுடுகாட்டுப்பேய், மல்லிகை வாசம் மணக்கும் மோகினிப்பேய் கதைகள் கேள்விப்பட்டு இருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா இல்லை சகோ நானும் பயந்து தான் யாரவது இதெல்லாம் பொய் என்று சொல்லமாட்டார்களா என்று காத்திருக்கிறேன் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. மிக அழகிய சாலைகள்... பேய்களை விட்டுப்போட்டு.. :) அழகை ரசிக்கோணும் அதிராவைப்போல:)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி போடுங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அதிரா

      நீக்கு
  4. அனைத்தையும் பொய் என எண்ண முடியாது, சில அசம்பாவிதங்களும் இருக்கலாம்.. நானும் இப்படிப் பல கதைகள் ஊரில் கேள்விப்பட்டதுண்டு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹான் ! என்ன இப்படி சொல்லிட்டீங்க திரும்பவும் மீள் வருகையில் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. எனக்கும் புதிய தகவல்கள்தான். நேற்றுதான் அவள் படம் பார்த்தேன். இன்று காலை இந்த பேய்ப்பதிவு! சுவாரஸ்யம்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பரே என்ன சுவாரசியமா இருக்கா? எனக்கு பயமா இருக்கு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. கிழக்குக் கடற்கரைச் சாலையில் மட்டும் சென்றுள்ளேன். தொடர்புடைய நிகழ்வுகளைப் படிக்கும்போது ஆச்சர்யமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சார் கிழக்குக்கடற்க்கரை சாலையில் நானும் பஸ்ஸில் தான் போயிருக்கிறேன் தனியாக அல்ல வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  7. ஓ இப்படியும் கதைகளா?! கேரளா வரவில்லையா? இங்கும் ராத்திரி பயணம் என்பது ஆபத்துத்தான் மரங்கள் காடுகள் தண்ணீர் பாலங்கள் என்று இருப்பதால் விபத்துகள் அதிகம் நடக்கும்...சாலைகளும் சின்னவையாக இருக்கும். ஆனால் இப்போது தேசிய நெடுஞ்சாலை வந்தாலும்...விபத்துகள் பேயினால் அல்ல...

    கீதா: ஆமாம் பூவிழி இப்படி எல்லாம் சாலைகள் மட்டுமில்ல சில இடங்கள் பேய் உலவும் இடம் என்று சொல்லுவதுண்டு...கிக சாலையில் நான் அதிகம் பயணித்துள்ளேன். தனியாகவும், பேருந்திலும், நடு இரவில் கூட வண்டி ஓட்டிக் கொண்டு....என்று...விபத்துகள் அதிகம் நிகழும் தான் அதற்குக் காரணம் அதி வேகமான ஒட்டல், வண்டிகளை முந்திச் செல்லுதல்....எதிர்ப்புறம் வண்டிகள் வந்து கொண்டிருந்தாலும் முந்திச் செல்ல விழைதல்..அதுவும் அங்கும் சாலை அத்தனை பெரிதல்லா. இப்போது பெரிதாக்கி நடுவில் டிவைடட் போட்டுக் கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இன்னும் பல பகுதிகளில் ரோடு ஒரே ரோடுதான் டிவைடர் இல்லாமல்...

    இதுவரை இப்படியான அமானுஷ்ய சம்பவங்கள் நேரிட்டதில்லை. நம்பிக்கையும் இல்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ அண்ட் கீதா சிஸ் சகோ கேரளா 2,3 முறை வந்து தங்கி இருக்கிறேன் ஊர்களின் உள்ளே கொஞ்சம் பயமாத்தான் இருந்தது தனித்தனியாக வீடுகள் மிகவும் தள்ளி தள்ளி குளங்களுடன்
      சிஸ் தனியாக பயணம் செய்து இருக்கறீர்கள் அப்புறம் என்ன எதற்க்கு பயப்படணும் துணித்தவனுக்கு பயமில்லை பேயுமில்லை என்று சொல்லி கொள்ளலாம்

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ அண்ட் சிஸ்

      நீக்கு