படித்ததில் பிடித்தது உங்களோடயும் பகிர்ந்து கொள்கிறேன் ........
எப்படியெல்லாம் மனசை தேத்தறாங்க பாருங்க
"என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!"
"பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?"
காலத்தின் கோலம் ......
.
“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
“நந்தவனத்தி லோராண்டி”
எல்லா கணவமாரும் பூவாங்கும் ரகசியம் ......
"தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?"
"மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!"
நீங்க என்ன ஆல்டாப்பு நாங்க அதுமேல பாருங்க .......
கேர்ள்: எக்ஸாம் டைம்'ல நாங்க டி.வீ, ரேடியோ, கம்ப்யூட்டர், செல்போன் தொடவே மாட்டோம்...
பாய்: இவ்வளவு தானா? நாங்க புக்கையே தொட மாட்டோம்.
விளம்பரங்கள் செல்லாது
செய்கூலி இல்லை, சேதாரம் இல்லை, கல்கிரயம் இல்லைன்னு நகை வாங்கினது தப்பா போச்சு!"
"என்னாச்சு?"
"பேங்க்ல அடகு வைக்கப் போனப்ப இது தங்கமே இல்லைனு சொல்லிட்டாங்க"
எப்படி சொன்னாலும் நாங்க மூளையை கசக்கி பிழிவோமில்ல இந்த மாதிரி கேள்விகள்ல.........
"எங்க கடைல துணி வாங்குனா கிழியவே கிழியாது சார்!"
"அப்படியா? அப்போ எனக்கு 2 மீட்டர் வேணும்னா எப்படி கிழிச்சு குடுப்பீங்க?"
அறிவாளியாம்.......
"என்னடா விட்டத்தையே வெறிச்சுப் பார்த்துக்கிட்டிருக்கே?"
"இரண்டு ரெக்கை உள்ள பறவை எல்லாம் வானத்தைச் சுத்தி வருது! இந்த ஃபேனுக்கு மூணு ரெக்கை இருந்தும் வீட்டுக்குள்ளேயே சுத்துதே!"
கல்வி கண்ணை துறக்கும் .......
நம்ம அப்பா முட்டாளாம்மா?"
"எதுக்குடா இப்படி கேகிறே?"
"எங்க வாத்தியார் என்னை
முட்டாப் பய மவனேன்னு திட்டுறாரே"
அன்பு பொங்குது ........
மனைவி:- நேற்று நான் பார்த்து முழுக்க முழுக்க ஓர் நகைச்சுவை படம்.
சிரித்து சிரித்து பாதி உயிர் போய்விட்டது.
கணவன்:-
இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன்
அமைதிதான் இதுதான் அமைதி.........
(இதை பார்த்துவிட்டு இந்த பிளாக் பக்கமே தலைவச்சி படுக்க மாட்டேன் சொல்லிடுவாங்களோ எது வம்பு நிறுத்துடுவோம் டார்ச்சரை )

எல்லாமே ரசித்து சிரிக்க வைத்தது நன்றி
பதிலளிநீக்குஉங்களது தளம் செல்வழி ஓட்டு போட முடியாது ஆகவே தாமதமாகிறது மன்னிக்க....
நீக்குவாங்க ஜி சிரித்தீர்களா அதுதான் வேண்டும் வருகைக்கு நன்றி
நீக்குலோராண்டி நல்லா இருக்கு. முகநூலுக்காக சுட்டுக்குறேன்...
பதிலளிநீக்குவாங்க ராஜி எடுத்துக்கோங்க வருகைக்கு நன்றி
நீக்குதுணி கிழிக்கும் ஜோக் (எனக்கு) புதுசு.
பதிலளிநீக்குபடிச்ச ஜோக்ஸ் எனினும் அனைத்தையும் ரசித்துச் சிரிக்க முடிந்தது. லோராண்டி ஜோக் படித்ததும் காந்தியின் பையன் பெயர் என்ன என்னும் ஜோக் நினைவுக்கு வந்தது.
வாங்க ஸ்ரீராம்ஜி இதுதான் நமக்கு இப்பயெல்லாம் மருந்து சும்மாவாது சிரிக்கணும் லாபிங் தெரபி வருகைக்கு நன்றி
நீக்குஹாஹா :) பாதி உயிர் ஜோக் விழுந்து சிரிச்சேன் :)
பதிலளிநீக்குஷிஞ்சான் சிறுவர் கார்டூனாப்பா ..
நீக்குஏஞ்சல் இப்படி சொன்னது உங்க வீட்டுகாரார்தானே ///
இன்னும். ஒரே ஒரு தடவை அந்தப்படத்தைப் போய் பாரேன் ///
வாங்க அஞ்சு ஹா ஹா அந்த ஷின்ஸான் எல்லா எபியும் பார்த்திருக்கீங்களா செமயா இருக்கும் அதுவும் இந்த அமைதியோ அமைதி என்ற குரலை யார் கொடுத்தாங்கனு தெரியலை யப்பா நான் நிறையத்தடவை கேட்டு கேட்டவுடன் சிரிப்பு வந்துவிடும் என் மகன் இருக்காரே ஒரு எந்த நேரமும் இதை கேட்டு என்னையும் கேட்கவைப்பார்
நீக்குவாங்க truth ஹா ஹா அஞ்சு பார்த்திங்களா
நீக்குGarrrrrrrr 10000000 time's for truth
நீக்குஅந்த அமைதி voice என்னை கலாய்ச்சாரெ அவருடைய குரல் ஹா ஹா
நீக்குஜோக்குகள் தான்ரசித்துப் பார்ப்பீர்களோ
பதிலளிநீக்குவாங்க G.M.B சார் மைண்ட் ரிலாக்சேஷனுக்கு மற்ற்வர்களுடயை ஜோக்கு கற்பனை,கிரியேடிவிட்டியை ரசிப்பதில் ரொம்ப சந்தோஷமா இருக்கும் வருகைக்கு நன்றி
நீக்குஹா ஹா ஹா கிக் கிக் கீஈஈஈஈ அதிரா சிரிப்பது கேய்க்குதோ அங்குவரை???... 2,3 ஐத்தவிர எனக்கு அத்தனையும் புதுசு... அருமையான ஜோக்ஸ்ஸ்ஸ்....
பதிலளிநீக்குவாங்க அதிரா சிரிப்பு சத்தம்கேட்டது அதிரா வந்தால் டசந்தோஷமும் கூட வருமே வருகைக்கு நன்றி
நீக்குஹாஹாஹாஹாஹா செமை சகோதரி/பூவிழி ரொம்ப ரசித்தோம்...சிரித்தோம்!!
பதிலளிநீக்குகீதா: வீடியோ மட்டும் இன்னும் பார்க்கலை.
கணினி என்னவோ மூட் வந்து கொஞ்சம்வேலை செய்யுது வீடியோ ஓபன் பண்ணினா திரும்ப எங்கியாவது என் மூளைக்கு இது அதிகம்னு சொல்லி சுணங்கிடுமோனு பயம் அதான்..ஹாஹாஹா
வாங்க துளசி சகோ கீதா சிஸ் சிரிப்போடவே இருக்கனும் எப்பவும் ..... வீடியோ பாருங்க கணனி சரியானவுடன் youtube லும் வரும்அதில் அந்த குரல் அப்பா செமயா இருக்கும் மறக்கவே முடியாம......
நீக்குநான் ரசித்தது லோராண்டி ஜோக்
பதிலளிநீக்குவாங்க truth உங்களுக்கும் பிடித்ததா வருகைக்கு நன்றி
நீக்குலோராண்டி அருமை.
பதிலளிநீக்குசிரிக்க வைத்த அமைதி.
வாங்க சிஸ் ரசித்தீர்களா ....நேற்றைக்கு லீவு போட்டுட்டேன் எல்லாத்துக்கும் அதுதான் லேட் வருகைக்கு நன்றி
நீக்குநகைச்சுவை அருமை ரசித்தேன். வீடியோ பார்க்கவில்லை பின்னொரு பொழுது பார்க்கின்றேன்.
பதிலளிநீக்குவாங்க TM நேரம் கிடைக்கும் போது கண்டிப்பாய் பாருங்கள் ரசிப்பீர்கள் ....நேற்றைக்கு லீவு போட்டுட்டேன் எல்லாத்துக்கும் அதுதான் லேட் வருகைக்கு நன்றி
நீக்குதற்போதுதான் உங்களின் தளம் வருகிறேன். அனைத்தையும் ரசித்தேன். தொடர்ந்து பதிவுகள் வழியாகத் தொடர்வோம்.
பதிலளிநீக்குவாங்க சார் நல்வரவு தொடருங்கள் உங்கள வழிகாட்டுதலுக்கு நானும் காத்திருக்கிறேன் ....நேற்றைக்கு லீவு போட்டுட்டேன் எல்லாத்துக்கும் அதுதான் லேட் வருகைக்கு நன்றி
நீக்குஎனது பதிவுக்கு கருத்துரை போடாமல் ஓட்டு மட்டும் போட்டு இருக்கின்றீர்களே... ஏதும் பிரத்யேக காரணம் உண்பா ?
பதிலளிநீக்கு