சனி, 4 நவம்பர், 2017

பாரிஸ் கார்னர்

மழையின் தாக்கம் பாரிஸ் கார்னர்  பூக்கடையின் பிளாட்பாரங்களில் அவர்கள் மொழியில் கோபத்தில் என்ன நடக்குது பார்ப்போம் முகம் சுளிக்கவைக்கும் சில இடங்கள் தவிர்க்க முடியாதவை இங்கே மன்னிக்கவும் படிப்பவர்கள் என்னடா இது இப்படி எழுதபட்டு இருக்கு  நினைக்க வேண்டாம் அவர்களின் வழியில் வலியில் ஓரு கற்பனை

பாரிஸ் கார்னர்


காலை ஏழு மணி பாரிஸ் கார்னர் பூக்கடையை அருகில்.......

என்ன சோறு ஆக்கிட்டியா  ?

வாய்யா  எங்கிருதுனு வரே…..

இங்கித பக்கத்து ஸ்டேஷன்ல  இருந்தேன்……..

நேத்திக்கு வுடலைனு சொன்ன…….
 
செக் பண்ண வரும் போது போக்கிகாட்டிட்டு எப்படியோ  ராவியை ஒட்டிட்டேன்…….

அமைதியாக  தொடர்கிறாள் முத்து அவள் வேலையே, வைத்திருக்கும் ஸ்டவ்வை பம்பண்ணி கொண்டு இருக்கிறாள். அந்த பிளாட்பாரம் ஓரத்தில் உள்ள ஷீட்களால்  செய்த டெண்டுக்கள் லைனில் முதல் அந்த டெண்டுக்குள் மூன்று  பிள்ளைகள் ஒரு கிழவி ஒரு ஓரமாய் ஷீட்டை  விரித்து மேலே ஷீட்டை போர்த்தி உட்கார்ந்த நிலையில் உறங்கி கொண்டு ஒருவர்மேல் ஒருவர்  சாய்ந்து.

உள்ளே அங்கங்கே மழை நீர்  ஒழுகி கொண்டு இருக்கிறது .

என்னையா இந்த சனியன்  புடிச்ச மழை நிக்கே மாட்டேங்குது இந்த தபாவும்  மாட்டிக்குவோமா ?

என்ன புரியலமே..... பஸாண்டு கிட்டயெல்லாம் தண்ணி எரிகினே போகுதுதான் பாப்போம்.... இந்த  வளவு கொஞ்சம் மேடு  பஸாண்டு கிட்ட தண்ணி வலிக்கிட்டு போயிடுச்ச்னா இங்கே ஏறாது.....

எங்கே பஸான்டைகூட  சரி பண்ணமாட்டாங்க  களவாணி நாயிங்க …..

இப்பதிக்கு மைய வுடறமாதிரி தெரியலையா……வுடாம  கொட்டிக்கினு இருக்கு உன்னைய ஷீட்டு  வாங்கியா மேல போடுவோம் ரொம்ப ஒயிவுதுனு சொன்னேனில்ல......

க்கும் உங்க ஆத்தா கடவச்கினு இருக்கு பாரு நீயி கேட்டவுடனே குடுக்க அந்த பாயி அத்த பழசையே எழுநூறு, எட்டுநூறு  சொல்லுவான் போனதபா வாங்கின காசையே முழுசா குடுக்கல......

பாவம்யா புள்ளைங்க  கால நீட்டக்கூட முடியமா குறுகினு கிடக்குதுங்க....

பீடியை இழுத்து கொண்டே தலையில் பிளாஸ்டிக் கவரை போடு உட்க்கார்ந்து
வெறித்து பார்க்கிறான்.

முத்து ஸ்டேஷனாண்ட ஒருத்தன் சொன்னா அண்ணா நகர் ஸ்டேஷன் சும்மா காலியாதான் இருக்காங அங்கெ போய்டு நாலு நாளுனு…… என்ன சொல்லுற.....

யோவ் வியாவரத்த பார்கிளனா சோத்துக்கு என்ன பண்ணுவ அந்த பெரிய  கடையாண்ட போயி குந்திக்குவோம்  போனவாட்டி மாதிரி  அவனே எம் எல் எக்கு போனபோட்டு வழி பண்ணவுடுவான்..... நாம சொன்னாதான் கழிச்சட நாயிங்க  ஒன்னு கேக்காதுங்க....  அவனுக்கெல்லாம் கேட்ட, பிரச்சனைனா உடனே செய்யுங்க......

எங்கே அவனிங்க இந்த தடவ யாரையோ ஆளுங்களையெல்லாம் நிறுத்தவச்சு இருக்கானுங்க வரும்போது  பார்த்துட்டு வரேன்...

நீயி லோடு ஏத்த போவேனவா.....

எங்க மைய பெய்துன்னு சரக்கு நனைஞ்சிடுமுன்னு இப்பவேணா நிறுத்தி வச்சிருக்கானுங்க....

அதற்குள் அங்கு .........யக்கா………..

வா ரசியா என்னா எங்க கிளம்பிட்டா ரேஷனுக்கா இந்த தடவ போடுவான இல்ல நிறுத்தி  வச்சிட்டானுகளா
ம்க்கும் எதோ அத்வச்சி கொஞ்சம் பொழப்பு ஒடுக்கினு இருந்தது அத்தையும் பொறுக்கல இவனுங்களுக்கு என்ன இழவுக்கு அவன் வந்தான் தெரியல்ல இப்படி போட்டு சாவடிச்சிகினு இருக்கான் எதுனா ஒன்னு போயி ஒன்னு  கொண்டு வந்துகினு……….

பிளாட்பாரம்  சுவரில் பிரதமர் அழகாய் புன்னைகையுடன் கையாட்டுகிறார்.

அத்த சொல்லு......

நாங்க  எங்க ஆளுங்க கொஞ்சம் பேர மசூதிக்கு போறோம் உள்ளே இருக்க விட்டு இருக்காங்க மழவுடவரை......

அப்படியா போ...... உங்க ஆளுங்க இந்த வசதியாவது டக்குனு செய்றாங்க எங்குளுக்கு எந்த கோயில துறந்துவிடுவாங்க ஸ்கொல தான் திறக்கணும் இன்னும் எதுவும் சேதி வரல்ல…… சோறு……..

ஆங் மொத்தமா ஒரு வேளைக்கு  ஆக்கிக்க சொல்லி  இருக்காங்க இந்த மழ கொஞ்சகூட குறையாம பெஞ்சிக்கினே இருக்கே புள்ளைங்க பாவம் இப்படி சுருண்டு கிடக்கு நீயெனக்கா பண்ண போற……..

இந்தாளு என்னமோ அண்ணாநகரு ஸ்டேஷன்னு காலி அங்க போலாம் சொல்லுது

பார்த்துக்கா   போனவாட்டி மாதிரி ஆயிட்ட போது....

அதுதான் எனக்கும் பயமா இருக்கு ரசி..... போனவாட்டி மேல ஸ்டேசனு  காலி இப்பதான் கட்டினு இருக்கானுங்க தங்க போயிடலாம் வெள்ளம் போன பெறவு வரலாம் இஸ்துகினு போச்சி ஒரு புள்ளய தூக்கி கொடுத்தாச்சு லோல்பட்டு....

இப்பொது பிடியை கீழே போட்டுவிட்டு மணி ஏய்........  அங்க  வந்த போலீஸ்கார நாயிங்க இப்படி தொல்ல பண்ணுவாய்ங்கனு   நான் கண்டேனா தே......பசங்க  என்று கத்துகிறான்.

ம்ம்  இப்ப கத்து உனக்கென்னயா அந்த புள்ள எவ்வ்ளவு சீக்காயி போச்சு ஒருவேளை சோத்துக்குக்கூட வழியில்லாத இடத்தில உட்டுபுட்டு வந்து இருக்கேன் ஊருல அங்கெ வேற தண்ணியில மருந்து கலந்து போயிடுச்ச்சாம் சனங்க சீக்குஆயி செத்து போதுங்கலாம்

ஐயோ ஏன்கா?

அதென்ன இழவோ எதோ மீத்தேனு ஒன்னு எடுக்குறாங்களாம் அத்த எடுக்கும் போது நல்லதண்ணி கெட்டு  போகுதாம் மருந்து தண்ணி நல்லதண்ணியில கலக்குதாம் பேசிக்குதுங்க சனங்க  அதனால ஊருக்குள்ள தண்ணியே எடுக்க முடியாம சனங்க தவிக்குதாம் என்னமமோ போ  மனுசனுக்கு நல்லது செய்யமுடியாடியும்   இந்த கவருமெண்டு இப்படி போட்டு சாவடிக்கமலாச்சும் இருக்கலாம் பணம்தின்னி கழுங்க அவனுக்கென்ன அவன் நிம்மதியா சொகுசா வாழறான் திருட்டு கமனாட்டிங்க அவன் வீட்டு புள்ளங்களாம் வாந்தி பேதி வந்து சாவட்டும் இப்படி கஸ்டப்படறோம் ரவ யோசிச்சி பாக்கிறானா.......

 தே சும்மா கூவிக்கினு வேலைய பாரு யார்ட்டு  பக்கம் போயி கண்டுக்கினு வரேன் வேல எத்ன இருக்கானு....... பெரிசா படிச்சவனுங்களும் விஷயம் தெரிஞ்சுச்சு கத்தரவானுங்களே  பல்புவாங்கினு இருக்கானுக நாம பேசித்தான் தீர போதா ???

சரியாய் சொண்ணேனே ஆனா பார்த்து இத தடவையும்  எங்கனாச்சும் போயி மாட்டிக்கிடாதீங்க.......யக்கா எல்லோரும் கெட்டவாய்ங்களா இல்லக்கா ..... இங்கே வருவாரே ஏட்டு எவ்வ்ளவு உதவி பண்ணுவாரு நமக்கெல்லாம்.....

நான் எங்கயும் வரமாட்டேன் என்று எழுத்து கத்துகிறாள் 12 வயது ஜோதி

எல்லவரையும்  கேட்டுக்கொண்டு  இருந்திருக்க வேண்டும்
பெரியவர்கள் எல்லோரும்  அமைதியாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்கிறார்கள்.

மழை தாக்கம் அதிகரிக்கிறது.

ஏன்டி  எரும  உன்ன இந்த அரசிய நல்ல இரண்டு கவரு போடு சுத்தி வாயினு சொல்லிட்டுதானே போனேன் எப்படி நனைச்சி போச்சி பாரு இத்த  வச்சி எப்படி நாளைக்குள்லாம் ஒடடறது

சரி ரசியா நீ கிளம்பு மழலை நின்னுகினு

யம்மா நிசமாலும் சொல்லிட்டேன் நான் எங்கேயும் வரமாட்டேன் யக்காக்கு ஆனா மாதிரி எனக்கும்  ஆவணுமா நான் முதலியார் அம்மாவீட்டு கார் ஷ்ட்டுல  இடம் கேட்டு உக்கார்ந்துக்குறேன் என்னவுட்டுட்டு இந்த ஆள நம்பி நான் எங்கேயும் வரமாட்டேன் …….உன்னையும்……..  என்று வீறிட்டு கத்துகிறாள்.

இத கேட்டு மணி தலை தலையாய் அடிச்சிக்கிறான்.

யோவ்……. என்று முத்துவின் குரலடைக்க குரல்....

சோதி சரிதப்புள்ள சரி   பாரு அப்பாரு எவ்வ்ளவு கஸ்டப்படறாரு வேணுமின்னா நடந்தது அந்த சாக்கடைப்பயலுவங்க அப்படி செய்வாங்கனு தெரியாத போச்சுதேடா ஐயே யக்கா  அயிவாத நடந்து முடிஞ்சி போச்சி அல்லா  நல்ல கூலித்தரட்டும் அந்த பன்னாடைங்களுக்கு......

 என்னத்த கூலி தருவாரு போ ரசி....... எம்புள்ள நொந்தது நொந்ததுதானே அந்த ராவிலவானம் பொத்துக்கிட்டு  கொட்டுது ரவுண்டு வந்தவனுங்க ஸ்டேஷனுல இருக்க கூடாதுனு சட்டம் பேசிக்குனு  இந்தாள புடிச்சி வச்கிட்டு அடி அடின்னு போடு தள்ளனானுக …….விடுறேன்.... அந்த புள்ளையை  அனுப்புனு ரவுசு  பண்ணி  அட்டகாசம் பன்னானுங்க,  நான் வரேண்டா என்று சொன்னாலும் கெக்கலியே அந்த பிஞ்சை கேட்டானுங்களே…….  அந்த 11 வயசு  சின்ன புள்ளைகிட்ட  என்னத்த கண்டானுங்க......

ம்ம் நீயி பெத்து இறக்கி துறந்து கிடக்க அது துறக்காத பையி  வெறி நாயிங்களுக்கு பேராசை என்று கிழவி எழுந்து நீட்டி மொழக்கி புலம்புது

தே ச்சீ சும்மாகிட்ட பொணமே சின்ன புள்ளைங்க இருகோசொல்ல என்னத்த பேசற……

அடி போடி………

ரசியா கண்ணதுடைத்து கொள்கிறாள். மணி எழுந்து கொட்டும் மழையில் நடக்கிறான் .வெறுத்து போயி

அப்போ ஒரு 10 வயது சிறுவன் டேய் பலனி……… எங்கக்கா பலனி மாதா கோயில பிரட்டு, பாலு, கேக்கு த்ரங்களாம் மையைக்கு  காளி கோயிலையும் வெளியே சாம்பார்  சோறு கொடுக்க  போறாங்களாம் .....
அப்புறம் ஸுகூளையும் திறந்துவிட சொல்லிட்டாங்களாம் சோத்து பொட்டலத்தோட வந்து சொல்லிட்டு போயிக்கினு இருக்காங்க கிளம்பிடலாமா அம்மா கேக்க சொல்லிச்சி….

யா அல்லா ஸலாம்  நல்லது நடக்கட்டும்சரியக்கா  நானும் கிளம்புறேன் நீயும் கிளம்பு  தண்ணி பாரு எறிகினே போது இத தடவையும் பெரிசா ஆவம அல்லா காப்பாத்தட்டும்……… 



                                                                                                                                       by-  பூவிழி


24 கருத்துகள்:

  1. ஆக மொத்தம் ஹிந்துஸ்தான் நாட்டில் கோவில்கள் திறக்கப்படவில்லை என்பதை மறைமுகமாக சொல்லி விட்டீர்கள்.

    வேதனையான விடயங்கள் நீங்களாவது இவர்களை நினைத்துப் பார்த்தீர்களே...

    பதிலளிநீக்கு
  2. வாசித்து முடித்ததும் மனசு வலிச்சது :( எத்தனை விதமான மனுஷங்க ..ஆனா இந்த ஏழைகளை மிஸ் யூஸ் செய்யும் கொடூரங்களுக்கு அந்நியன் மாதிரி தண்டனை கொடுக்கணும் ..
    ரோட்டில் குடை இல்லாட்டி படும் ஒரு துளி மழையே சில்லிட்டு போக வைக்கும் பாவம் கடைநிலை மாந்தர் :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அஞ்சு வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  3. உயிரோட்டமான எழுத்து நடை......அவர்களின் கஷ்டங்களைப் படிக்கும் போது, rain ,rain go away
    என்று தான் சொல்ல தோன்றுகிறது.......கோவில்கள் திறக்கப்பட படவில்லை ...உங்கள் ஆதங்கம் புரிகின்றது.......smart city யை உருவாக்க திட்டமிடும்smart people,
    பிளாட்பார வாசிகளின் நிலைப் பற்றி யோசிப்பார்களா....? A million dollar doubt....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ராணிமா உண்மை டவ்ட்டுதான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  4. படிக்கும்போதே காட்சிகள் விரிகின்றன. வேதனையான வாழ்க்கை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா வேதனையே வாழ்க்கையென்றால் தாங்காது பூமி என்பது போல் ஆகிவிடும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  5. மிக மிக கனமா இருந்தது பூவிழி
    எல்லா தட்டு மக்களும் கஷ்டப்படும் மழையில்
    கஷ்டத்திலே வாழும் நடை பாதை மக்களின் வாழ்வை படம் பிடித்து காட்டி விட்டீர்கள் ..
    ஜோதி சொல்லும் நான் எங்கும் வரமாட்டேன் என்பதின் பின்னணியில் இருக்கும் அவள் அக்காவிற்கு நடந்தது மனதை உருக்குகிறது
    இப்படியும் சில மிருகங்கள் ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிந்து மனிதன் பாதி மிருகம் பாதி செய்த கலவை நான் என்று சொல்லி திரிய வேண்டியது தான் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  6. அவர்கள் படும் கஷடங்களை அப்படியே எழுத்துக்கள் மூலம் கொண்டுவந்து படிப்பவர்களும் அந்த கஷ்டத்தை ரியலாக உணரும்படி செய்து விட்டீர்கள் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  7. இந்த வர்க்கத்தினரின் படும் கஷ்டங்களைவிட மிடில் க்ளாஸ் மக்கள் படும் கஷடம் மிக அதிகம் இந்தமிடில் க்ளாஸ் வர்கத்தினரால் இவர்களை போல எங்காவது பஸ்ஸ்டாண்டில் போய் இருக்க முடியாது அதற்கு அவர்கள் பழகி இருக்க மாட்டார்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சரியாக சொன்னிர்கள் இரண்டாங்கெட்டானா தவிக்கும் வர்க்கம்

      நீக்கு
  8. பாரிஸ் கார்னர் கண் முன் பூவிழி. பார்த்திருக்கேன். ரொம்ப கஷ்டமாக இருக்கும். நீங்கள் அதை அப்படியே சொல்லிட்டீங்க.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கீதா சிஸ் வருகைக்கு கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  9. உள்ளத்தை நெருடும் பதிவு
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  10. மழை பார்த்து உதித்த கதை அருமை... மெட்ராஸ் பாஷையிலோ சொல்லியிருக்கிறீங்க? கஸ்டப்பட்டுப் படிச்சிட்டேனே:)..

    நீண்ட நாட்களின் பின் இன்றுதான் மை வச்சேன்(உண்மையைச் சொல்லிடோணும் எல்லோ:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா இல்லையே இப்பொழுது கிடைத்தது போட்டுவிட்டேன் நன்றி அதெல்லாம் முக்கியமில்லை நீங்க வாங்க பதிவை படித்து நிறை குறை சொல்லுங்க

      நீக்கு
  11. காலையிலேயே கொமெண்ட் போட்டேனே.. கிடைக்கலியோ ???

    பதிலளிநீக்கு
  12. வாங்க friend கருத்துக்கு நன்றி

    பதிலளிநீக்கு