ஞாயிறு, 12 நவம்பர், 2017

புதுமை என்பது இதுதான்

புதுமை என்பது இதுதானா .....




                    இந்தியாவின் புகழ்பெற்ற பல்கலை கழகங்களில் ஒன்று பூனே பல்கலை கழகம்  இங்கு நாட்டின் பல பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். திடிரென்று இந்த  பல்கலைக்கழக மாணவர்களுக்கு தங்க பதக்கம் வழங்க, பல்கலைக்கழக நிர்வாகம் புதிய விதிமுறைகளை கொண்டுவந்துள்ளதாம் .                     

                 

                     அது என்னவென்றால்  இங்கு படிப்பை மட்டும் அடிப்படையாக கொண்டு தங்கப்பதக்கம் இனி வழங்கப்படமாட்டாது 


பின்னர் எப்படி  தங்க பதக்கம் வாங்குவது ?

                    


                       தங்க பதக்கத்தை  விரும்பும் மாணவர்கள், படித்து அதிக மதிப்பெண்கள் பெற்றால் மட்டும் போதாதாம்...... அவர்கள்  அசைவம் சாப்பிடாதவர்களாக இருக்க வேண்டுமமாம் ...... அதுமட்டுமில்லை மிக முக்கியமான புதுமை , மாணவர்கள் மது அருந்தாமல் டீடோட்டலர்களாக இருக்க வேண்டும் என்றும் புனே பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளதாம்  இப்படித்தாங்க மாற்றத்தை கொண்டுவரனும் .ஆனா அப்படி மதுவே அருந்தவர்கள் எப்படி கண்டுபிடிப்பாங்க மருத்தவம் காண்பிக்குமோ? 


                  மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தங்கப்பதக்கம் வழங்கப்படாது என்றும் மாணவர்களின் பழக்க வழக்கங்களை பொறுத்தே வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளதால் பழக்கவழக்கம் என்பது நெறிமுறை படுத்தபடுமா? இப்பொழுதே அங்கே போயி இதை பற்றி  ஆராயவேண்டுமென்று வேகம் வருகிறதே....... எப்படி இதை கண்காணிக்க போகிறர்கள் என்று ...


                    இதுமட்டுமல்ல பதக்கம் வாங்கும் மாணவர்கள் ஷெலர் மாமா.! என்று பட்டபெயரும் கொடுக்கப்படுமாம் இந்த விதிகளுக்கு உட்படடவர்கள் இங்கு சேர்வதற்க்கான விண்ணப்பங்கள் நவம்பர் 15ஆம் தேதி வரை பெறப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்து இருக்கிறதாம்   ஏன் இப்படி திடீரென்ற முடிவு குற்றங்களை குறைக்கவா ?மாமிசம் என்பது மதுவுடன் சம்பந்த படுகிறது என்ற நோக்கத்திற்காகவே இப்படி மாமிசத்தையும் சேர்த்து தடை செய்திருக்கிறார்களா??

                     

                     இதை பெற்றோர்களே வரவேற்பார்களா என்பது சந்தேகமாகவே  இருக்கிறது ஏனென்றால் மாமிசம் மட்டுமே சாப்பிட்டு வாழும்  சமூகதினரிடமிருந்து இதற்கு  வரேவேற்பு நிச்சியம் இருக்காது.   

                    

புனே பல்கலைக்கழகத்தின் இந்த அறிவிப்பு தற்போது சமூக வலைதளங்களில் பயங்கர எதிர்ப்பை கிளப்பியிருக்கிறதாம் . மாணவர்களிடையே பிளவை ஏற்படுத்தும் செயல் என்று பல்வேறு அமைப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


உணவு என்பது பிளவை கொடுக்குமா? 
    

நீங்களும் சொல்லுங்களேன்......... 


20 கருத்துகள்:

  1. நாட்டில் நல்லது செய்யும் எண்ணம் யாருக்கும் இல்லை என்பது மட்டும் புரிகிறது. ஏதாவது பிரச்சனையை மக்களுக்கு கிளப்பி விட்டால் வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போல் மக்களை திசை திருப்பி விட்டு அரசியல்வாதிகள் தங்களது காரியங்களை சாதித்துக் கொள்கிறார்கள் இதுதான் அடிப்படை உண்மை.

    இதையும் ஆதரித்து அல்லக்கைகள் கூட்டம் முதலில் தொண்டர்களை ஒழித்தால்தான் நாடு முன்னேறும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜி உண்மை எதோ சின்ன சின்ன தாக மக்களை திசை திருப்பிவிடல் நடக்கிறது கருத்து நன்றி

      நீக்கு
  2. புதிய தகவல். எதற்காக இப்படி ஒரு அறிவிப்பு எனத் தெரிந்து கொள்ள வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ தெரிந்து பகிருங்கள் சகோ வருகைக்கும் கருத்து நன்றி

      நீக்கு
  3. இந்த செய்தி உண்மையாக இருந்தால் அது மிகவும் கண்டிக்க பட வேண்டியதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க truth ....சரிதான் அதுதான் நடக்குதாம் இப்ப கருத்துக்கு நன்றி

      நீக்கு
  4. இதென்ன இது புது முறையாக இருக்கே. ஆனால் இச்சட்டத்தை கொண்டுவந்தால், அதைக் கண்காணிகும் நடுவர்கள் மிக நல்லவர்களாக இருந்தால் மட்டுமே, சரியான மாணவருக்கு விருது போய்ச் சேரும்.. மார்க்ஸ் ஐ மட்டும் பார்க்காமல் இப்படியான விசயத்தைச் சேர்க்கும்போது, தமக்குப் பிடித்த மாணவர்களுக்கு முன்னுரிமையும், பிடிக்காதோரை.. அசைவம் சாப்பிட்டார், மது அருந்தினார் எனச் சொல்லி கீழே தள்ளி விடும் வாய்ப்பும் உண்டு..

    கள்ளமாக அசைவம் சாப்பிட்டால் எப்படிக் கண்டுபிடிப்பது..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க அதிரா அதானே அதை சொல்லுங்க நாமாயெல்லாம் யாரு எப்படியெல்லாம் யோசிப்போம்...... சூப்பர் இந்த முறை விதி மீறலையும் சாப்பிடாதவர்களை தொல்லைப்பண்ணும் மனநிலையையும் கொண்டுவரலாம் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  5. இந்தச் செய்தி எனக்குப் புதிது. உணவு விஷயத்தில் கட்டுப்பாடு விதிப்பது ஏற்புடையதாக இல்லை.

    மேலும், பதக்கம் பெறுவதற்குத்தானே இந்த விதிமுறைகள்? அங்கு சேர்ந்து படிக்கவே இப்படி இருக்க வேண்டும் என்று சொல்லவில்லையே...? எனில், வரவேற்கலாம். இதுவும் ஒரு மனக்கட்டுப்பாடு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க நண்பா ஆனா பதிக்கத்திற்க கட்டுப்பாடுடன் இருப்பவர்களை மற்றவர்கள் தொல்லை செய்ய வாய்ப்புகள் அமைய வழியும் வந்துவிடுமென்று நினைக்கிறேன் கருத்துக்கு நன்றி

      நீக்கு
  6. பூவிழி/சகோ இது சரி என்று சொல்ல முடியாது. குடியை விடுங்கள், அசைவம் சாப்பிடாமல் என்பது ஏற்க முடியாத ஒன்று. நான் சைவம் தான்..விலங்குப் பிரியைதான்..ஆனால் அதற்காக அசைவம் சாப்பிடுபவர்களைச் சாப்பிடாதே என்று எப்படிச் சொல்ல முடியும்? அது அவர்கள் சிறு வயது முதல் சாப்பிட்டுப் பழகி இருப்பார்கள். அது அவர்களது உணவு முறை. எனவே அங்கேயே இது கொஞ்சம் உதைக்கிறது. படிப்பில், விளையாட்டுகளில், நற்பணிகளில்/நிறைய களப்பணிகள் செய்யும் மாணவர்கள் இருக்கிறார்கள், வன்முறை இல்ல்லாமல் அமைதியை நிலைநாட்டும் மாணவர்கள் என்று அப்படி விளங்கும் மாணவ மாணவிகளுக்குக் கொடுக்கலாம்...நற்பணிகள் செய்வதற்கும் ஊக்கம் அளிப்பதாக இருக்கும்...என்பது எங்கள் இருவரின் தாழ்மையான கருத்து.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ நீங்கள் சொல்லிருப்பது மிகவும் சரி நீங்கள் சொல்லும் ஐடியாக்களை பின்பற்றினாலவது எதிர்காலத்தில் நாட்டுக்கு உதவும் (நானும் கூட அசைவம் என்பதற்கு மாமிசம் என்று போட்டுவிட்டேன்எழுத்தில் வார்த்தையை கோர்ப்பதில் இன்னும் கொஞ்சம் சிந்திக்க வேண்டும் ) கருத்துக்கு நன்றி

      நீக்கு
  7. உணவு என்பது பிளவை உண்டாக்க வாய்ப்புள்ளது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சார் உண்டாகிவிடுமா மாணவர்களின் சகோரத்துவதில் பிரச்னை வந்தால் நாட்டுக்குத்தான் பிரச்னையல்லவா.... வருகைக்கும் கருத்துக்கு நன்றி

      நீக்கு

  8. சாப்பாடு விஷயத்தில் அவரவர் உரிமை .உணவு விஷயத்தில் அடுத்தவர் உரிமையில் தலையிடுவது மிக தவறு .
    அப்புறம் மது அருந்துவது எல்லா மாணவர்களையும் கல்லூரியில் நுழையுமுன் Breathalyzer வச்சி சோதிப்பங்களா ???
    அப்போ வீக் என்ட் வேற இடத்தில போய் குடிச்சா என்ன செய்வாங்க ? முட்டாள்தனமா இருக்கு :(
    இன்னொரு விஷயம் தனிமனித ஒழுக்கம் தீய பழக்கங்கள் இவற்றை மாணவர்கள் தங்களா உணர்ந்து திருந்தினாலொழிய இப்படி சட்டம் கட்டுப்பாடு போட்டு பதக்கம் வாங்க வைக்க முடியாது .
    இது புதுமை இல்லைப்பா// பேதமை/

    பதிலளிநீக்கு
  9. வாங்க அஞ்சு எனக்கு தோணினமாதிரியே உங்களுக்கும் சந்தேகம் வந்ததா எப்படி இதை கண்டு பிடிக்கமுடியும் புரியவில்லை பிள்ளைகளின் குயுரியாசிட்டியை தூண்டிவிடுவார்கள் போல் செய்யாதவனையும் செய் என்று கருத்து பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. உணவை வைத்து தானே சிப்பாய் கலகம் உண்டானது.
    உணவை சிஷ்யத்தில் தலையிடுவது தவறு.

    குடி, போதை, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்களை உடலுக்கு கெடுதல் அளிக்கும் என்று தவிர்க்க சொல்லலாம்.

    அவர்கள் கல்லூரியில் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்று தான்
    பார்க்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சிஸ் மிகவும் சரியாக சொல்கிறீர்கள் கலகம் தான் வரும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு
  11. வேடிக்கை மட்டுமல் வேதனையானது!இப்படி யும் ஒரு பல்கலைக்கழகமா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்வரவு ஐயா வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

      நீக்கு