தவறு செய்துவிட்டேனா?
தோழமைகளே உங்களிடம் இப்பொழுது திணறலாய் தோன்றும் விஷயத்தை பகிர போகிறேன் உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் ....
என் மகன் கல்லூரி இப்பொது தான் முடித்தார்.... அவரின் சிறு வயதில் இருந்து அவருடன் பலவறறையும் டிஸ்கஸ் செய்வேன். நானே அவனின் முதல் தோழியாக இருக்கவேண்டுமென்ற பேராசையும் ....அவனின் குறை நிறைகளை அவனின் கஷ்ட்ட துக்கங்களை என்னிடம் அவன் பகிர வேண்டும் கலந்தாய்வு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்...... சினிமா, சமூகம், அரசியல் எல்லாவற்றையும் பற்றி குறித்து டெயிலி செய்திகளில் வருவதை விவரிப்பேன், பேசுவேன்.
அவரின் 14, 15 வயது வரை அவர் கருத்துக்களை கேட்பார் நானும் அவரின் தந்தையும் அவரின் கேள்விகளுக்கு முடிந்தவரை பதில் அளிப்போம். எப்பொழுது அவர் ஒட்டு போடும் வயது வந்ததோ அப்பொழுது முதல் எல்லாவிஷயங்களும் விவாதமாய் மாறிவிட்டது. அவரும் கருத்து சொல்ல கிளம்பி இதில் எதை பேசினாலும் நாட்டை பற்றியே போயி முடிவுற்றது. எல்லா விஷயங்களும் அவரும் அதிகம் தெரிந்து கொள்ள ஆரம்பித்தார் தனிச்சையாக சமீபமாக நடக்கும் விஷயங்கள் சூடு பரப்பும் விவாதங்களாக மாறுகிறது.
இன்றைய இளைய தலைமுறை பற்றி பேச போனால் பயங்கர விவாதம் பெரியவர்கள் நாம் தான் சரி வர வளர்க்க தெரியவில்லை என்று குற்ற சாட்டை முன் வைப்பார் இன்னறய அரசியலை பற்றி பேசினால் புலம்பினால் அவருக்கு பயங்கர கோபம் வருகிறது " நாட்டில் நடக்கும் குற்றங்களை தட்டி கேட்க நீங்கள் உங்கள் பிள்ளைகளை வளர்கிறீர்களா? ஒற்றுத்தான் கொள்கறிர்களா? இல்லை....... நல்லா படி நல்லா சம்பாதி...... எந்த பிரச்னைக்கும் போகாதே நியுண்டு உன் வேலையுண்டு என்று இரு...... இப்படித்தானே சொல்லி சொல்லி வளர்க்கறீங்க"
"இது என்ன சினிமாவா தனியொருவன் கேட்க" என்று கேட்டால்
"கும்பலாய் கேட்டாலும் போலீசை காட்டி பயம்புறுத்துகிறீகள்" போன தலைமுறையெலாம் இரண்டாங்கெட்டானாய் வாழ்ந்துவரும் தலைமுறைகள் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்று சாடுகிறார் .
"யார் சொல்லி தருகிறீர்கள்...... இது தப்பு என்ற சொல்லி தந்தவர்கள்...... அதை தட்டி கேள் என்று சொல்லி தரவில்லை..... ஒதுங்கி போ... படி படி..... நீ பெரியஆள் ஆகு பணம்.... பணம் தேடி ஓடு..... காசுகொடுத்து எல்லா வேலைகளையும் முடித்து கொள்ளலாம் இது தான் நிலைமை..... என்று தவளை போல் கத்தி கொண்டு இருக்கும் கூட்ட்மாய் இருக்கிங்க"
"நாடு இப்படித்தான் இருக்கும் அப்போ..... பக்கத்தில் தப்பு செய்யும் ஒரு பையனை கூட கேட்க முடியாமல் தான் நிறைய பேர் வெறுப்புடன்....... ஏன்னா வீட்டில் உனகெதுக்கு பிரச்னை நாளைக்கு போலிசு கேஸுன்னு வந்தா படிப்பு கெட்டுவிடும் சொந்தக்காரங்களாம் ஒருமாதிரி பார்ப்பாங்க இப்படி பயமுறுத்தியே வாழ சொல்லி கொடுக்கறீங்க...... ஏன்? நீங்க விடுவிங்களா உங்க பிள்ளையை?" கோபமாய் கேள்வி கேட்க திணறித்தான் போகிறேன்.
என் அம்மாவோ அவனது பாட்டி என்னை எப்போதும் சமீபமாய் அதிகம் திட்டுகிறார் நீதான் காரணம் எல்லாத்துக்கும் எல்லவரையும் அந்த பையனிடம் பேசி குழப்பி வச்சு இருக்க.... அவன் தோழர்களுக்கு ஏதாவது பிரச்னைனா முதல இவனை தான் கூப்பிட்டு போறானுங்க இவன்தான் பேசுவானு...... ஜல்லிக்கட்டு போராடம் நடந்த அப்ப எல்லா நாளும் பழியா கிடந்தது உனக்கு கொஞ்சம் கூட பயமே இல்லை என்னா புள்ளையை வளர்க்கற' உனக்குத்தான் இந்த மாதிரி இருந்தேனே நாளைக்கு கஷ்ட்ம் வாழக்கையில என்று சொன்னா... கல்யாணமெல்லாம் பன்னிக்கமாட்டேன் இந்தமாதிரி தட்டி கேட்க போயிட்டேனா' என்று பேசுது எல்லாம் உன்னால தான் என்று கொஞ்சி தள்ளறாங்க 2015 வெள்ளத்தில் உதவ போனபோதும் இப்படித்தான் வீட்டில் உள்ளோரிடம் திட்டு அவனுக்கு ஏதாவது ஆச்சி பாரு என்று பயமுறுத்தல்
அவனுடைய தோழர்கள் திட்டுகிறார்கள் என்ன ஆன்டி ஒரு சினிமா பார்த்த கூட இவன் அதுலயும் இப்படி இருக்கனும் இது சரியில்ல இது நொல்லைனு நுணுக்கமா ஆராயச்சி பண்ணிட்டே இருக்கான்
இதில்சமீபமாய் 2 மாதம் முன்பு ஒரு தோழனின் புல்லட் பைக் திருடு போய்விட்ட்டது விடியற்காலையில் போன் இவன் கிளம்பிவிட்டான் அப்படியே போட்டிருக்கும் பனியன் ஷார்ட்ஸோடு ...... போலீஸ் கம்பிளைன்ட் கொடுக்க இழுத்து போயிட்டான் அங்கே இவனை யாரு நீ என்று கேட்க விஷயத்தை சொல்லி இருக்கான் ஷார்ட்ஸோடு எல்லாம் போல்ஸ் ஸ்டேஷன் வரகூடாது என்று சொல்ல இவனுக்கு கோபம் வண்டி காண்வில்லையின்னு பதறி ஓடிவந்தா இப்படித்தான் வரமுடியும் என்று சொல்லி இருக்கிறான் அவங்க அஸ்யுஷ்வல் CSR போடவே இப்பவா அப்பவா என்று இழுத்து அடிச்சு இருக்காங்க அதையும் முடிச்சா மற்ற பார்மாலிட்டிஸ் முடித்து FIR போட இழு இழு என்று இழுக்க எல்லாம் காசுக்காகத்தான். இவன் கொடுக்கமுடியாது என்று முரண்டு.... 2 மாதம் ஆகிவிட்டது அவன் தோழன் புலம்புகிறான் இன்னும் அந்த வண்டிக்கு டியூவே (கடன்) முடியலை இன்ஷுரன்ஸ் கிளைம் பண்ணாலும் எனக்குதான் நஷ்டம் FIR போட்ட பிறகுதான் எதுவும் முடியும் சொல்றாங்க காச கொடுத்து முடிக்கலாம்டான்னு சொல்றேன் இவன் விடமாட்டேங்கிறான் ஆண்டி.... என்று இப்பொழுதும் வீட்டில் திட்டு......
என்ன செய்யட்டும்?
எப்படி வளர்த்திருக்கணும்?
நான் தவறு செய்துவிட்டேனா?
அவனின் கேள்விகள் தவறாய் இல்லையென்போது முன்னுக்கு முரணாய் நான் பேச தயக்கமாய் இருக்கிறது .
சற்று குழப்பமான கேள்வியை முனஅ வைத்து விட்டீர்கள்.
பதிலளிநீக்குஇன்றைய வாழ்க்கைச் சூழலில் தனி மனிதனாக போராடுவது நிச்சயமாக அவன//ளது வாழ்க்கையை பாதிக்கிறது இருப்பினும் மனம் சஞ்சலப்படுபவர்களின் நிலைப்பாடு கஷ்டமாகத்தான் இருக்கிறது.
காரணம் இந்த சமூகத்தை நம்பி எப்பொழுதுமே கால் வைப்பது தவறு நமது உயிர் போனாலும் பரவாயில்லை என்ற கொள்கையோடு இறங்கினால் சில நேரங்களில் காரியம் கை கூடலாம் ?
அவன் சொல்லும் வார்த்தைகளை நீங்கள் சொல்லியிற்கறீர்கள் ஜி அவனும் உயிரை பற்றி கவலை படக்கூடாது என்று சொல்வது மட்டுமே என்னை கவலை கொள்ள வைக்கிறது இப்பொழுது மிக அமைதியாக போகிறேன் என்னிடம் எதை பற்றியாவது டிஸ்கஸ் பண்ணவந்தாலும் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜி
நீக்குநான் குறிப்பிட்டது நாட்டுக்காக வாழ நினைக்கும் போராளிகளுக்கு.....
நீக்குசாதாரண குடும்பபொருப்பு உள்ள பிள்ளைகளுக்கு இந்த எண்ணம் வரக்கூடாது எந்த பெற்றோர்தான் இதை ஏற்றுக்கொள்ள இயலும் ?
பக்குவமாக கையாளுங்கள் உங்கள் வீட்டுப்பிள்ளை மட்டும் இப்படி என்று நினைக்க வேண்டாம் எல்லோர் வீட்டிலும் இதே நிலைப்பாடுதான்
இன்றைய சூழலில் குழந்தைகளை கண்டிக்க யாருமே இல்லை ஆசிரியரும் இல்லை தவறுகளின் தொடக்கம் எங்கே ?
இதனைக் குறித்து விரிவாக பதிவு எழுதுகிறேன்.
மீள் வருகைக்கு கருத்துக்கும் நன்றி ஜி எழுதுங்கள் நீங்கள் தெளிவாக சொல்வீர்கள்
நீக்குஎவ்வளவுதான் தோழமையுடன் வளர்த்தாலும் அந்த வயசுக்குரிய வேகம் இருக்கத்தான் செய்யும்...
பதிலளிநீக்குவளர்ப்பில் தவறில்லை... இப்படித்தான் இருக்க வேண்டும் எனச் சொல்லிக் கொடுத்து பின் இப்படி இருக்கானே என வருந்துதல் பெற்றோர்களின் செயல்.
எல்லாம் சரியாகும்... காலங்கள் மாறும் போது காட்சிகள் மாறும்.
வாங்க தோழரே உண்மை அவனும் தனிமையில் என்னை அதுதான் கேட்கிறான்.... நான் இப்பொழு அவனுடன் அதிகம் எதையும் விவாதிப்பதில்லை..... முன்னாடி வேற சொல்லிகுடுத்துட்டு இப்ப ஏன் மாறுறீங்க .....காலம் இப்ப ரொம்ப மாறிடுச்சு இப்ப வேகம் நம்மையே பாதிக்கும் என்றுதான் சொல்கிறேன் நானும் வருகைக்கும் கருத்து பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குஹ்ம்ம் .ரொம்ப அதிகமா யோசிக்கறீங்களோன்னு தோணுது ..புறாவைப்போல் கள்ளமில்லாமலும் அதே சமயம் பாம்பைப்போல் சாதுர்யமாகவும் இருக்கணும் .அதை இப்ப சொன்னால் இந்த வயது பிள்ளைக்கு ஏற்றுக்கொள்வது கடினம் .பொறுமையாக விட்டுப்பிடிங்க .சமுதாயத்தில் நல்லவங்க அப்புறம் கெட்டவங்க இந்த இரண்டு வகை மட்டுமில்லை இவர்களையும் தாண்டி நரி புழு பாம்பு ,புலி இன்னும் பல்வகை குணாதிசயம் உள்ள மக்களும் இருக்காங்க என்பதை மகன் புரிந்துக்கொண்டால் அவரே சரியாகிடுவார்
பதிலளிநீக்குஅருமையான எடுத்துக்காட்டு சொல்லி இருக்கீங்க இந்த விதத்தை நானும் உபோயோகிறேன் வருகை கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி அஞ்சு
நீக்குஅப்புறம் இன்னொன்றும் சொல்லணும் .எந்த விஷயமாகட்டும் எல்லாவற்றையும் மேம்போக்காக சொல்லிவைங்க ,எல்லாமே ஒரு அளவுடன் இருக்கட்டும் .
பதிலளிநீக்குஇது இதுக்குதான் திட்டே மீள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அஞ்சு
நீக்குநீங்கள் வளர்த்த்து எல்லாம் மிக சரிதான் அவன் நடந்து கொள்வதும் சரிதான் ஆனாலு ஊரில் மற்றவர்கள் அப்ப்டி வளர்க்காமல் இருப்பதால்தான் இவன் செய்வது தவறோ என்று உங்களுக்கு நினைக்க தோன்றுகிறது.. மீதி கருத்து ஆபிஸ்க்கு போய்ட்டு வந்துவிட்டு போடுகிறேன்
பதிலளிநீக்குவாங்க truth சரி வாங்க எங்க பாட்டி எப்பவும் திட்டுவாங்க என்னை எல்லோரும் அம்மணமா இருக்கும் போது நீ மட்டும் கோமணம் காட்டுனா தப்புதான்னு அப்படி தான் இல்லையா
நீக்குடீன் ஏஜ் தாண்டினால் வேகம் குறைந்து, விவேகம் கூடி வரும்.
பதிலளிநீக்குவாங்க ஸ்ரீராம் ஆம் எனக்கும் நம்பிக்கை வருகிறது வருகையும் கருத்து பகிர்ந்தர்கும் நன்றி
நீக்குஎந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கயிலே..
பதிலளிநீக்குஅது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்பினிலே:)... ஆகவே தப்பு முழுக்க பூவிழியில்தான் எனத் தீர்ப்புக் கூறிப் பேனாவை உடைக்கிறேன்ன் டய்ங்ங்ங்:)..
ஹா ஹா ஹா யாரோ சிவனே எனப் பாடிட்டுப் போயிட்டாங்க.. இப்போ எதுக்கு நீங்க திட்டு வாங்குறீங்க?:) உங்க அம்மாவின் ஃபோன் நம்பர் குடுங்கோ நான் புரியவைக்கிறேன் அவவின் பேரன் எவ்ளோ அழகாக வளர்க்கப் பட்டிருக்கிறார் என.
இதில் குறை என்ன இருக்கு..? தன் நண்பனுக்கு ஒரு பிரச்சனை என வரும்போது, எனக்கெதுக்கு வம்பு என ஒதுங்கும் பிள்ளையின் வளர்ப்புத்தான் சரியில்லை.... இது நண்பனுக்காக ஓடும் பிள்ளை, நாளைக்கு இப்படித்தான் பெற்றோரை, தன் மனைவியை, குழந்தையை நல்லபடி கவனிப்பார் தெரியுமோ.
அது இப்போ காளை வயசு.. இளங்கன்று பயமறியாது, கொஞ்சம் கொஞ்சமாக எந்த லிமிட் வரை ஓட வேண்டும் என்பதை அவரே புரிஞ்சு கொள்வார்...
நீங்க ஒரு நல்ல அம்மா எனில்.. தொடர்ந்து நல்ல பிரெண்ட்டாக இருந்து தட்டிக் கொடுங்கோ... எதிர்த்தீங்கள் என்றால்தான் அவர்களுக்கு கோபம் வரும், கோபத்தில் என்ன முடிவெடுப்பது எனத்தெரியாமல் தப்புத்தப்பா முடிவெடுப்பினம்....
தட்டிக் கொடுங்கோ, நல்லது இப்படித்தான் இருக்கோணும் ஆனா கொஞ்சம் ஜாக்கிரதையாகவும் இருங்கோ.. நம்மிடம் எதுவும் மறைக்காமல் சொல்லுங்கோ, நாம் எப்பவும் உங்களுக்கு துணையாக இருப்போம் என.. சேர்ந்து பேசியே நேர்படுத்த முடியும்..
இன்னொன்று , நமக்கும் நாளைக்கு ஒரு துன்பம் வரலாம், அப்போது எதிர்பாரா விதமாக 10 பேர் ஓடி வருவினம் உங்கள் மகனுக்காக...
என்னைப்பொறுத்து, இதில் நீங்கள் கவலைப்பட ஏதுமில்லை..
வாங்க அதிரா ஆரம்பம் அதிரடியா ஆரம்பித்து அழகாய் மனக்கவையை குறைதீர் வருகையும் கருத்து பகிர்ந்தர்கும் நன்றி நான் தட்டித்தான் கொடுத்து வருகிறேன் வீட்டில் உள்ளோர் தான் என்னை குழப்புகிறார்கள்
நீக்குஉண்மையான மனகுமறல்கள்.
பதிலளிநீக்குபெற்றோர்களின் மனதை அப்படியே சொல்லிவிட்டீர்கள்.
குமார் சொல்வது போல் மாறும் கவலை படாமல் இருங்கள்.
இளமையில் உள்ள வேகம் வயது வரும் போது
விவேகமாய் செயல்பட வைக்கும்.
வாங்க சிஸ் விவேகம் வந்துவிட வேண்டும் என்றே பிராத்திக்கிறேன் வருகைக்கும் கருத்தை பகிர்ந்தமைக்கு நன்றி
நீக்குகடினமான கேள்வி பூவிழி. என்னதான் தோழமையுடன் நீங்கள் வளர்த்தாலும், பருவ வயது என்று வரும் போது அவர்கள் சுயமாகச் சிந்திக்கத் தொடங்குவார்கள். நானும் வளர்ந்துட்டேன் என்று. அப்போது அவர்களின் சிந்தனைகள் மாறும். நமக்கே பாடம் கற்பிப்பார்கள். நிச்சயமாக நாம் அவர்களிடம் கற்க நிறைய இருக்கிறது. நாம் சொல்வதைத்தான் கேட்க வேண்டும் என்றும் நினைப்பது தவறு. அவர்களுக்குச் சிறு வயதில் நாம் எல்லாம் சொல்லிக் கொடுத்துவிட்டு சுயமாகச் சிந்திக்கும் போது நாம் அப்படிச் செய்யாதே என்றால் அவர்களுக்குக் கோபம் வரத்தான் செய்யும்...இப்போதைய சமூகத்தில் நாம் நேர்மையாக இருந்தால் எந்தக்காரியமும் நடப்பதில்லை. இதுதான் யதார்த்தம். உங்கள் மகனின் மீது தவறில்லை. தனியாகப் போராட முடியாது. ஆள் பலம் வேண்டும்...அவருக்கும் அனுபவங்கள் ஏற்படும் போது எல்லாம் மாறும் பூவிழி.
பதிலளிநீக்குமர்றொன்று பெரும்பான்மையான பெற்றோர் குழந்தைகளுக்கு நல்ல பக்கத்தை மட்டும் சொல்லிக் கொடுக்கிறோம். அப்படிச் சொல்லிக் கொடுக்கும் போது அதன் இருட்டுப் பக்கத்தையும் காட்டிக் கொடுத்து எப்படி அதைக் கையாள்வது அல்லது எதிர்கொள்வது என்று சொல்லிக்கொடுக்க வேண்ரும்.சிறு வயதிலிருந்தே. நாம் நினைப்பது போலல்ல உலகம் என்பதையும்...
கீதா
வாங்க கீதா சிஸ் உண்மைதான் இருட்டு பக்கத்தையும் காண்பிக்க வேண்டும் நானும் அதுதான் நினைக்கிறன் அனுப்பவே சிறந்த படம் என்று ஆனாலும் வேகம் ஒரு பயம் கொடுக்கிறது
நீக்குவருகைக்கும் கருத்துக்கும் நன்றி கீதா சிஸ் தோழமைகள் அனைவரும்ஒருமித்த கருத்தையே சொல்லியிருக்கிறீர்கள் அவனுக்கும் புரிய வைக்கிறேன்
நீக்குஒரு அம்மாவாக உங்கள் மனக்குமுறல் சரி தான். எல்லாம் சரியாகும். கவலை வேண்டாம்.
பதிலளிநீக்குவருகைக்கு கருத்துக்கும் நன்றி சகோ
நீக்குஅனைத்து பெற்றோர்களும் எதிர்கொள்வதுதான். சற்றே நிதானமாக பொறுமையாக மாற்றுக் கருத்துக்களையும் எடுத்துக் கூறி பக்குவப்படுத்தவேண்டும். முடியும்.
பதிலளிநீக்குவாங்க சார் வருகைக்கு கருத்துக்கும் நம்பிக்கை அளித்தார்ககும் நன்றி
நீக்குபூவிழி அக்கா
பதிலளிநீக்குஇங்க உங்க தவறு எதுவுமேயில்லை...
ரொம்ப பெருமையா இருக்கு தம்பியை நினைக்கும் போது....
பொதுவா எல்லா பெற்றோரும் தம் குழந்தையை நல்லவனாக ...வல்லவனாக வளர்க்கவே ஆசைப்படுகிறோம்...
சிலர் இன்னும் அதிகமாக (சமுதாயத்திற்கு ஒத்து வராத) நேர்மையாகவும் நம் மகன் இருக்க வேண்டும் என நினைத்து பல பல அனுபவங்களோடு வளர்கிறோம்...
அதன்படியே நீங்களும் செய்து உள்ளீர்கள்....
ஆனால் சில பல அனுபவங்கள் அவர்கள் பெரும் போது அதற்கு ஏற்றப்ப தங்களின் எண்ணங்களையும் மாற்றி கொள்வார்கள்...
அதுவரை பொறுத்து இருங்கள்...அவர் செய்வதிலும் சிந்திப்பதிலும் ஏதும் தவறு இல்லை...
வழக்கம் போல் அவருடன் மகிழ்வாக நேரத்தை கழிக்க பாருங்கள்...
மேலும் அவரின் எண்ணத்திற்கு தக்க வேலை விசயங்களிலும் ஊக்குவியுங்கள்...
விரைவில் அனைத்தும் மகிழ்வாக மாறும்...