செவ்வாய், 14 நவம்பர், 2017

கேட்டிங்களா கேட்டிங்களா கதையை


                        மகாத்மா காந்தினாலே  அவர் கண்ணாடியை  தாம் முதலில் நினைவு கொள்வோம் ஏதாவது புதிர் காம்படீஷன் வந்தால் கூட  அந்த கண்ணாடியை வைத்தே கண்டுபிடித்துவிடும் அளவுக்கு மகத்துவம் பெற்ற அவர் கண்ணாடி அடையாள சின்னம்- இது தூய்மை இந்தியாவின் அடையாள சின்னமாக உள்ளது.                          சரித்திரம் படைத்த இந்த கண்ணாடியை மாற்ற சொல்லி இந்தியாவிற்கு பயணம்  வந்த ஐ.நா. சிறப்புப் பிரதிநிதி லியோ ஹெல்லர்   சொல்லிட்டார் எப்படின்னா  "தூய்மை இந்தியா திட்டத்தின் சின்னமான மகாத்மா காந்தியின் கண்ணாடியைப் பார்த்தேன். இது மோசமான நிலைமை. விரைவில் காந்தியின் கண்ணாடியில் மனித நேயத்தின் லென்ஸை மாட்ட வேண்டும்" 

                           தூய்மை படுத்த ஐடியா கொடுப்பாங்கனு பார்த்தா இவங்க கண்ணாடியை மாற்று வேஷ்டியை மாற்று என்று டிரெஸ் சென்ஸ்க்கு  சொல்விட்டு போயிருக்காரு ...                           இது பயங்கர சர்ச்சையை கிளப்பியுள்ளது  நாமதான் சர்ச்சயை கொண்டாடுவதில் வல்லவர்கள்  ஆச்சே                           அரசு தரப்பில் இருந்து "மகாத்மா காந்தி மனித உரிமைகளுக்கு(இதபாருங்க ஜோக்கு மனித உரிமையாம் இதுதான் புரியமாட்டேங்குது இதெல்லாம் நல்ல சொல்றாங்க ஆனா பின்பற்றுகிறார்களா  இதைமட்டும் கேட்க கூடாது )  முன்னுரிமை அளித்தவர் என்பது உலகத்தில் அனைவருக்கும் தெரியும். சுகாதாரதைப் பேண தனி கவனம் செலுத்தினார். தூய்மை இந்தியா திட்டத்திற்கு அவரது கண்ணாடி மிகவும் பொருத்தமானது" என்று பதிலை கொடுத்து இருக்கிறது. இதுமாதிரி ஒண்ணுமில்லாத விஷயத்திற்கு தீர்ப்பு சொல்லனும்னா தெளிவா உடனே சொல்லுவோமில்ல  


20 கருத்துகள்:

 1. நமது மன்னர்கள் வாய்ச்சொல்லில் வீரர்களே
  வாழ்க பாரதம்.

  பதிலளிநீக்கு
 2. நல்லவேளை காந்திய மாத்த சொல்லாம போனாங்களேன்னு சந்தோசப்படுங்க

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா ஹா ராஜி ஏன்பா வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 3. புதிய செய்தி...

  அது சரி நம்ம நாட்டு திட்டத்துக்கு எந்த படம் போட்டா அவங்களுக்கு என்ன...//?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வா அனு ஏதாவது சொல்லணும் சொல்லிட்டு போயிட்டாரோ நம்ம அரசியல் தெரிந்து வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 4. அவர் சொன்னது தவறான இன்டெர்ப்ரிட்டேஷனோ?!!! ஏனென்றால் தூய்மைக்குக் கண்ணாடி சிம்பல் என்றால் அதை விட முக்கியம் மனித நேயம் இந்தியாவிற்கு அதனால் அதையும் மாட்டுங்கள் என்று சொல்லியிருப்பாரோ?!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ அப்படித்தான் எனக்கும் தோன்றியது பேச்சின் சாராம்சத்தை புரிந்து கொள்ளாமல் விடப்பட்டுவிட்டதோ

   நீக்கு
 5. மனிதனேயம் என்று தெரியாமல் வந்துவிட்டது மனித உரிமைகள்...

  சரி இல்லையோ. அது மிகவும் முக்கியம் ஆயிற்றே!! பொதுசுகாதாரம் என்பதே இல்லையே அப்புறம் இல்லையா சுத்தம்!!

  உங்களுக்கே தெரியும் சுத்தம் என்பதற்கும், சுகாதாரம் என்பதற்கும் உள்ள சிறு வித்தியாசம். ஒரு இடம் சுத்தமாக இருந்தால் சுகாதாரம் இருக்கு என்று சொல்ல முடியாதுதானே!!! சுகாதாரம் இருந்தால் கண்டிப்பாகச் சுத்தம் இருந்தே ஆகணும் இல்லையா...அப்படி எடுத்துக் கொள்ளலாம் இல்லையா...

  //Mr Leo Heller, the United Nations Special Rapporteur (UNSR) on human rights to safe drinking water and sanitation. //

  சரி இவங்க அதை எதிர்த்துச் சொல்லறாங்க சரிதான்...//The world knows that the Mahatma was the foremost proponent of human rights, including for sanitation, his unique and special focus. Gandhiji’s glasses, the unique logo of the Swachh Bharat Mission, epitomise core human rights principles.// ஆனா நாம் காந்தி சொன்னதையும் ஃபாலோ செய்யலையே!!!! வாய்ச்சொல்லில் வீரார் நாம்!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சுகாதாரம் என்பது கிலோ என்ன விலை ? நமக்கு சரியா சொல்லியிருக்கீங்க கீதா சிஸ் நாம எதையுமே சரியா பாலோபண்ணவில்லை உணவுமுறையும் அதில் அடக்கம் சரிவர புரிந்து கொள்ளும் பக்குவமற்று வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 6. என்னாதூஊஊஉ கண்ணாடியை மாத்தச் ஜொள்ளிட்டாய்ங்களா??? நல்ல வேளை கண்ணை மாத்தச் சொல்லல்லே:)..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா வாங்க அதிரா சிரிக்கமால் இருக்க முடியாதே நன்றி

   நீக்கு
 7. பவர் மாறி விட்டது இல்லையா?அதுதான் கண்ணாடியை மாற்றச் சொல்றாங்க!!!!

  ராஜி மற்றும் அனுராதா கமெண்ட்டை ஆதரிக்கிறேன், வழிமொழிகிறேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா ஹா நீங்களுமா வாங்க ஸ்ரீராம் எந்த பவர்........ வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 8. எதைச் செய்தாலும் குறை சொல்வது சுலபம்..... வேறென்ன சொல்ல.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க சகோ நாமென்றால் உற்று நோக்கப்படுகிறோம் போல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 9. பதில்கள்
  1. வாங்க சார் சரியா சொன்னீங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 10. இவர்கள் காந்தியையும் சுகாதாரம் ஸ்வட்ச் பாரத் போன்றவற்றுக்கே உபயோகமென்று நினைக்கிறார்கள் அவரது கொள்ககளை காற்றில் பறக்க விடுகிறார்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஐயா ஆம் அடையாளம் மட்டுமே தேவையாக இருக்கிறது இப்போது நிலைமை வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு