ஞாயிறு, 6 ஜனவரி, 2013

உடல் சூடாகி


உடல் சூடாகி  வாய்புண் வருகிறதா ?


மாத்திரை ,மருந்துகளை நிறைய சாப்பிடால் உடல் சூடாகி வாயில் புண் வந்து விடும் என்று கூறிகிறார்களே இது சரியா?

இல்லை.    
மாத்திரை மருந்து சாப்பிடுவதால் உடம்பு சூடாவதில்லை.
ஆண்டிபயாடிக்ஸ்(Antibiotics) என்று அழ்க்கப்படுகிற நுண்ணயிர் கொல்லி மருந்துகளை அளவுக்கதிகமாக சாப்பிடும் போது நம் குடலிலும்,வாயிலும் புண் ஏற்பட வாய்ப்பு இருகிறது.

ஏனென்றால் ஆண்டிபயாடிக்ஸ் மருந்துகளை தொடர்ந்து சாப்பிடும் போது குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழிக்கபடுவதால் அந்த இடத்தில் வைட்டமின் –பி தொகுப்பு(Vitamin-B-Complex) உண்டாவது பாதிக்கப்படுகிறது .இது வாய்புண்ணை  ஏற்படுத்துகிறது .

மருந்துகளை சாப்பிடும் போது வாய்புண் ஏற்படுவதை தடுக்க வைட்டமின் பி தொகுப்பு மற்றும் லேக்டோ பேசில்லஸ்(Lactobacillus) உள்ள மாத்திரையை தினமும் ஒன்று வீதம் எடுத்து கொள்ளவேண்டும் .இப்பொது உடல் சூடு என்ற பேச்சுக்கே இடமில்லை .

1 கருத்து:

  1. அன்பரே உங்கள் பதிவை வலைச்சரத்தில் இன்று பெருமையுடன் அறிமுகம் செய்து இருக்கிறோம்.தொடரட்டும் உங்கள் சேவை நன்றி ...

    நேரம் இருந்தால் இங்கே வந்து பாருங்கள் http://blogintamil.blogspot.com/2013/01/2516.html

    பதிலளிநீக்கு