வெண்டைக்காய்
சாப்பிட்டால் அறிவு வளருமா ?
இது இன்னைக்கு
நேத்திக்கு குழப்பமில்ல ரொம்பநாளா தாய்மாருங்க தகப்பன்மாருங்க நம்மளோட 5வயசிலேயே எத்திவிட
குழப்பங்க
பார்த்துபிடுவோம்ங்க
அது என்னான்னு .............
வெண்டைக்காய்
சாப்பிட்டால் அறிவு வளரும் சொல்லுவது உண்மையா ?
இல்லை.இது
உண்மை இல்லை (அட மக்கா என்னா இப்படி குண்ட தூக்கி
போட்டுடாங்க )
வெண்டைக்காயில்
வைட்டமின் மற்றும் தாதுச்ச்த்துகள் மிகுந்துள்ளன. இதனால் வெண்டைக்காய் உடல்
நலனுக்கு நல்லது .மற்றபடி வெண்டைக்காய்க்கும் அறிவு வளர்வதற்கும் அறிவியல்
நியதிப்படி எந்த தொடர்பும் இல்லை (அட ராமா நம்ம பயபுள்ளைங்க பரிட்சை சமயத்தில் ஒரு
மாசத்துக்கு வெண்டைக்காயா தின்னு மூளையை கொழகொழன்னு பசைபோட்டு வச்சிருப்பாங்க
படிச்சதெல்லாம் ஓட்டிக்கனுமுனு ம்ம்ம்ம் இப்போ என்னத்த சொல்ல )
நம் அறிவு
வளர்வதற்கு நாம் செய்ய வேண்டிய முதல் வேலை, மூளைக்குள் நிறைய செய்திகளைப் பதிவு
செய்வது தான் (க்..ம் கேட்டுகிட்டீங்களா இனிமே தினமும் என் ப்ளாக்கு வந்து நான்
போடற பதிவை படிச்சி பதிய வச்சிங்கனா மூளை வளரும்
சரியா )
பிறகு ,அவற்றை
அடிக்கடி நினைவு படுத்திக்கொள்ள வேண்டும் நம்ம (அட இது லவர்ஸ்ங்க வேலை ) இவ்வாறு
மூளையை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் போதுதான் அறிவு அலறும் ஐயையோ டங்கு சிலிப் ........ப்பாயிடுச்சிங்க ...... வளரும் .
மீண்டும்
மீண்டும் .......வா
வேண்டும் வேண்டும்......
வா பாட்டை பாடி கொண்டே நிறைய படிங்க .
டெய்லி இங்கே வாரேன் சகோ ....ஆனா எனக்கு எல்லோரும் மூளையே இல்லைன்னு சொல்லுறாங்க நீங்க எப்படி வளர்த்து விடுறீங்கன்னு பாப்போம் ....சரியா சவாலா ?
பதிலளிநீக்குநண்பா அதான் சொல்லியிருகேனே படிச்சதைஎல்லாம் நினைவு படுத்தி கொண்டே இருக்கனுமாம் அதுகுள்ள நான் மூளைக்கு ஏற்ற விஷயங்களை கண்டுபிடித்து தர முயற்சிகிறேன்
நீக்குநல்ல பதிவு நன்றி...தமிழ் மனம் முதல் ஒட்டு
பதிலளிநீக்குநன்றி நண்பா
நீக்கு