புதன், 30 ஜனவரி, 2013

.மழைVs பயம்


மேகம் கருக்குது, மழ வர பாக்குது
வீசி அடிக்குது காத்து........... ,மழை காத்து
எதோ காத்து கருப்பு வந்திட்டாபோல பயப்படுவோம்
மழைனா  என்ன தெரியுங்களா ?
வானம் என்ற ஆண்
பூமி என்ற பெண்ணிடம்
நடத்தும் காதல் தாங்க நாம் காண
இந்த மழை ,
தூறலாக வரும்போது காதல் விளையாட்டு ,
தேவையாக பெய்யும் போது அது கூடலாக இருக்கலாம்
காட்டாற்று வெள்ளமாகும் போது அது ஊடலாக இருக்குமோ ?

எப்படி நம்ம கண்டு பிடிப்பு ?

நமக்கும்  மழை தேவைபடுத்து தான் ஆனா சில நேரம் அதை பார்த்து பரவசபடுகிறோம் சில நேரம் அதை பார்த்து பயப்படுகிறோம் ஏன்?
எதுக்கு சந்தேகம் அத பார்த்து இப்ப பார்த்திடுவோம்

மழையில் நனைந்தால் சளி பிடிக்குமா ?


மழையில் நனைத்தால் சளி பிடிக்கும் என்று சொல்லபடுவது சரியா ?

மழையில் நனைவதால் ஒருவருக்கு ஜலதோஷம் பிடித்து விடாது மண்ணில் விழும் வரை மழை தண்ணீர் போல் சுத்தமான தண்ணீர் வேறெதுவுமில்லை .

ஜலதோஷம் வைரஸ் என்கிற நுண்கிருமிகளை வருகிறது 1 அல்ல 2 அல்ல ,300 வகை வைரஸ்கள் சளியை உண்டுபண்ணும் .

இந்த வைரஸ்கள் மூக்கிலும் தொண்டையிலும் ஏற்படுத்துகின்ற ஒருவித ஒவ்வாமையின் விளைவு தான் தும்மல் ,மூக்கொழுதல், தொண்டைக்கரகரப்பு எல்லாம்.

ஒவ்வொருமுறை தும்மும்  போதும் சுமார் 80000  வைரஸ்களும் இருமும் போது இதைவிட அதிகமான வைரஸ்கள் வெளிவருகின்றன(பார்தீங்களா நாம தாங்க பிரச்சனை மழை இல்ல ) .இவைகள் காற்று மூலம் பரவி ஜலததோஷத்தை ஏற்படுத்துகின்றன .

மழைகாலங்களில் குளிர்ச்சியினால் ஒருவகை ஒவ்வாமை விளைவு வந்து பரவி விடும் வைரச கிருமிகளும் தோற்றி கொள்வதால் மழை காலங்களில் அதிகம் பேருக்கு ஜலதோஷம் பிடிப்பதற்கு  வாய்ப்பாக  அமைந்துவிடுகிறது .

இனிமே மழை வந்தா
மழை வருது ,மழை வருது குடை கொண்டுவா >..................என்று பாடுவீங்க ?

4 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. நண்பர் ப்ளாக் தனபால்,
      என்று தான் உங்களு சொல் வேண்டும் என்று நினைகிறேன் ஏனெறால் நீங்கள் இல்லாத ப்ளாக் -கே இல்லை நான் பார்த்த வரை நானும் உங்க ப்ளாக்கு வந்து போகனும் என்று நினைத்து இருந்தேன் அதற்க்குள் நீங்கள் என் ப்ளாக் கில் நனைய வந்தமைக்கு
      நன்றி நன்றி

      நீக்கு
  2. மழையினால் ஜலதோஷம் இல்லை என்கிறீர்கள்.இந்த வருடம் நம்மை ஏமாற்றி விட்ட மழைக்கு இனிமேல் ஐஸ் வைத்து ஆகப் போவது என்ன?

    ஆனால் மிக அருமையான் பதிவு. இத்தனை புள்ளி விவரங்களை அளித்து அசத்தி விட்டீர்கள்.

    ராஜி

    பதிலளிநீக்கு